Friday, March 26

செய்தியும் கோணமும் கல்வி செய்திகள்

நீங்கள் கொடுக்கும் தானத்திலே சிறந்த தானம் கல்வி தானம் என்பேன்

அதுதான் மனிதன் உள்ளே இருக்கும் மிருகத்தை அழித்து மனிதனை மனிதனாக வாழ வைக்கும்

ஒரு கல்வியின் அருமை அதை கற்றவனை விட கற்க வாய்ப்பு இல்லதவனுக்குதான் அதிகமாக தெரியும்


செய்தி 1
ஸ்ரீ வைகுண்டம் அருகே பேட்துரைச்சாமிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய காமராஜர் தொடக்கப்பள்ளி கட்டிட மேற்கூரை உத்திரம் இடிந்தது விழுந்து சுவர் கீறியது .நள்ளிரவில் நடந்ததால் மாணவர்கள் தப்பினர்
முழு செய்தி படிக்க இதை அழுத்தவும்


சராசரி குடும்பங்கள் நம்பி இருப்பது அரசு பள்ளிக்கூடங்களை நம் வருங்கால இந்தியாவை வழி நடத்தும் மாணவர்களின் கல்வியை சரியான முறையில் மட்டும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் இது போன்ற சிறு சிறு தவறுகள் இல்லாமல் பார்த்து கொள்வது அரசின் கடமை


செய்தி 2



கும்மிடிபூண்டிர் அருகே தங்குவதற்கு வீடில்லாமல் மேம்பாலத்தில் அடியில் படிக்கும் மாணவர்கள்

ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி காரணமாக அகற்றப்பட 50 குடும்பதினர் வேறு எங்கும் வீடு இல்லாத காரனத்தால் பெரியபாளையம் மேம்பாலத்தின் அடியில் தங்கி உள்ளனர்


அதுவும் தேர்வு நேர காலத்தில் அந்த மாணவர்கள் படிப்புக்கு என்ன செய்வார்கள் அவர்களின் வாழ்க்கை முடிவை மாற்றும் இறுதி தேர்வு வரும் இந்த நேரத்தில் அரசு இதற்க்கு உடனடி தீர்வு காண வேண்டும் பணம் இருப்பவர்கள் அவர்கள் குழந்தைகளை தனியார் பல்லில் சேர்த்து விடுவார்கள் ஆனால் ஆதற்கு வசதி இல்லாத இந்த ஏழை மாணவர்கள் நிலை அரசு என்ன செய்யும்

செய்தி 3


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் தேர்வில் கேள்வி தாள் மாற்றி கொடுக்கப்பட்டது

இதை என்னவென்று சொல்வது முன்பு சம்பளம் போதவில்லை என்று சொன்னவர்கள் இன்று
எல்லா வசதியும் பெற்று இருக்கும் போது ,இப்படி ஒரு குளறுபடி யாரோ ஒருவர் செய்யும் தவறு அந்த மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்று நினைத்து பார்க்க வேண்டும்
உலகத்திலே மிகவும் புனிதமான வேலை என்றால் கல்வி கற்று கொடுப்பது  ஒரு மனிதனை குடும்பத்தை ஊரை தேசத்தை மாற்றும் சக்தி கல்விக்கு மட்டும் உண்டு அப்படிப்பட்ட கல்வி துறையில் இது போன்ற சிறு சிறு தவறுகள் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை

இலவசமாக கொடுக்கும் எந்த பொருளுக்கும் ஒரு வரை முறை மட்டுமே மரியாதை ஆனால் கல்வி பல தலைமுறை தாண்டி நிற்கும்

எனவேகல்வி சம்பந்த பட்ட இந்த் விசயங்களில் தவறு இல்லாமல் பார்ப்பது அரசின் முக்கிய கடமை

2 comments:

  1. எனவேகல்வி சம்பந்த பட்ட இந்த் விசயங்களில் தவறு இல்லாமல் பார்ப்பது அரசின் முக்கிய கடமை.

    ........... Present sir!

    ReplyDelete
  2. {{{{{இலவசமாக கொடுக்கும் எந்த பொருளுக்கும் ஒரு வரை முறை மட்டுமே மரியாதை ஆனால் கல்வி பல தலைமுறை தாண்டி நிற்கும்}}}}}

    நிதர்சனமான வரிகள்!!!
    எல்லோருக்கும் புரிந்தால் சரி !!!
    எல்லோருக்கும் புரிந்தால் சரி

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை