Sunday, March 14

மாடிப்படி மாது "எதிர் நீச்சல்"

பாமா விஜயம் படத்தில் வந்த அதே கூட்டணி
ஆனால் அதை விட நகைச்சுவை அதிகம் உள்ள படம்


பாடல்களும் சரி படம் ஆக்கப்பட்ட விதமும் சரி உங்களை சிரிப்பு கடலில் ஆழ்த்துவது மட்டும் இல்லாமல் சிந்திக்க வைக்கும் மாடிப்படி மாதுவின் கதைதான் இந்த எதிர் நீச்சல்

கே பாலசந்தருக்கு சிறப்பாக வரும் நகைசுவை திரைக்கதையில் சிந்திக்க வைத்து இருப்பார்

படத்தின் ஆரம்பத்தில் வரும் சீர்காழி சிதம்பரம் பாடிய 'வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் " பாடலாக இருக்கட்டும் அதில் வரும் ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்கும் வாலி வரிகள்

இப்படத்தில் நாகேஷ் ஒரு தனி ஆவர்த்தனம் செய்து இருப்பார்
நகைச்சுவை துக்கம் சோகம் காதால் இயலாமை வெற்றி என ஒரு நகைச்சுவை நடிகன் ஒரு நவரச நடிகனாக மாறி இருப்பார்

படத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் அறிமுகம் செய்யும் காட்சியாக இருக்கட்டும்
மாது என்னும் அப்பாவி தன படிப்பிற்காக அவமானங்களை தாங்கி கொண்டு அவர் செய்யும் வேலைகளை பார்க்கும் போது நமக்கு அந்த பாத்திரம் மீது பரிதாபம் வரும் அதையும் மீறி அந்த பாத்திரம் அவமானங்களை வெற்றி கள்ளகாக மாற்றி வெற்றி அடையும் போது நாமும் நமை அறியாமல் அந்த மாது கிரேட் என சொல்ல சொல்லும்


ஸ்ரீ காந்த் சௌகர் ஜானகி ஜோடி படத்தில் அடிக்கும் லூட்டி தனி காமடி ஆகா இருக்கும் காட்சிகள் ஒவ்வொரு விசயத்தையும் சினிமா உடன் சம்பந்தபடுத்தி பேசும் அவரின் காட்சிகள் கல கல
இப்போது உள்ள சீரியல் பத்தி பெண்கள் பேசுவது போல் அப்போது சௌகார் பேசி இருப்பர் அவர்க்கு சரியான வேகத்தில் செல்லும் கதாபாத்திரம் ஸ்ரீ காந்த் ஒரு அப்பாவி கணவனாக கலக்கி இருப்பார்
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேள பாடல் மூலம் பெண்கள் போராமி கொள்ளும் விஷத்தை நகைச்சுவையாக சொல்லி இருப்பர்
பட்டு மாமியாக வாழ்ந்து இருப்பார் சௌகார்
கடைசி வரை படத்தில் முகத்தை காட்டாமல் ஆனால் படத்தில் முக்கிய பாத்திரமாக இருமல் தாத்தா கேரக்டர் இயக்குனர் சாமர்த்தியம்


இடையில் கட்டப்படும் திருட்டு பட்டதை அந்த நேரத்தில் நாகேஷ் முகத்தில் காட்டும் அந்த இயற்கையான அப்பாவி முகம் வாவ் எப்பேர்ப்பட்ட மேதை அவர்
காதல் காட்சியில் என்ன பேசுவது என்று தெரியாமல் ஔரகசிப் அக்பர் என்று காதலிஇடம் பாடங்கள் பற்றி பேசி எனக்கு இவ்வளவு தான் தெரியும் என்று சொல்லும் போது ஆகட்டும்
ஒவ்வொரு காட்சியும் நகைச்சுவை தோரணத்தை கட்டி இருப்பார் இயக்குனர்

எம் எஸ் விஸ்வநாதன் ஒரே பாடல் மட்டும் இசை அமைத்து இருப்பார்
இப்படத்தின் முக்கியமாக சொல்ல கூடிய கதாபாத்திரங்கள் சுந்தர் ராஜன் நாயராக வரும் முத்துராமன் படம் முழுவதும் மாது என்ற ஒரு அப்பாவிக்கு உதவு புரியும் நல்ல மனிதர்களாக வாழ்ந்து இருப்பார்கள்
ஒரு ஏழை அப்பாவி மாணவன் எப்படி தன்னம்பிக்கை கொண்டு படித்து சிறந்த நிலை அடைகிறான் என்பதை
கே பாலச்சந்தர் தன்னுடைய சிறப்பான இயக்கம் மூலம் ஒவ்வொரு நடிகரையும் வாழ வைத்து இருப்பார்
முத்து ராமன் இடம் பேசும் போது "நாயர் நண்பனின் மரணத்தை கூட தாங்கலாம் ஆனால் நட்பின் மரணத்தை தாங்க முடியாது "என்ன வரிகள்

(இப்போதும் பேசுறாங்க வசனம்? கேட்க்க முடியல சாமி )

முடிந்தால் மாடிப்படி மாதுவை ஒரு முறை பாருங்கள் மீண்டும் ஒரு முறை பார்ப்பிங்க அப்பாவி மாதுவுக்காக


காலத்தால் அழிக்க முடியாத சிறந்த நகைசுவை கலந்த சிறந்த காவியம் எதிர் நீச்சல்


நாகேஷ் என்ற ஒரு உண்மையான சிறந்த நடிகன் ஒருவரின் சிறந்த நடிப்பிற்காக பல முறை பார்க்கலாம்
படம் போரடித்தால் அது உங்கள் தவறாக இருக்குமே தவிர படத்தில் இல்லை




மாது என்ற கதாபாத்திரத்தில்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் பின்னுட்டத்தையும் வாக்கையும் மறக்காமல் இடவும்

உங்கள் ஆதரவை  வேண்டி  ஹாய் அரும்பாவூர் 

                                   buy original edhir neechal cd/dvd

3 comments:

  1. இந்த படமும் என்னை கவர்ந்த ஒரு படம்
    நீங்கள் பழைய படங்களின் பதிவு எழுதுவது ஒரு வித்தியாசமான முயற்சி தொடரட்டும்

    எதிர் நீச்சல் பட பதிவில் நீங்கள் இணைத்திருக்கும் நாகேஷ் ஸ்டில் சர்வர் சுந்தரம் ஸ்டில் அல்லவோ

    ReplyDelete
  2. ஒரு தேர்தல் அறிவிப்புக்கு இடையில் இலங்கை ரூபவாகினியில்(டிவி சனல் ) பார்த்த படம், இப்போது பார்த்தாலும் சலிக்காது. பாலச்சந்தர், நாகேசின் கலக்கல்கூட்டணிக்காலம்.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு அரும்பாவூர்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை