இளைய ராஜா நிச்சயம் தமிழ் இசை உலகில் ஒரு ராஜா
30 வருட திரை உலக உழைப்பு 800 மேற்பட்ட படங்கள் இன்னும் திரை உலகில் தாக்குப்பிடிக்கும் திறமை என பல சொல்லலாம் ஆனால் இவை எல்லாம் விட நீங்கள் லண்டன் சென்று சிம்பொனி இசை அமைத்த சிம்பொனி இசை இன்னும் சராசரி ரசிகனை சென்று அடையவில்லை என்பதுதான்
இத்தனை வருடம் உங்களை மேஸ்ட்ரோ என்று அழைத்து அதை பெரும் பெருமையாக எல்லோரிடமும் பெருமை பேசிய ரசிகர்களுக்கு அந்த இசை அடைய என்ன செய்தீர்கள் ராஜா அவர்களே
திரும்பவும் சொல்கிறேன் இது நிச்சயம் உங்களை நம்பி உள்ள ரசிகர்களுக்கு நீங்கள் தரும் சிம்பொனி இசை எப்போது !?
ஆனால் இன்னும் உங்கள் சிம்பொனி இசை வெளிவிட நீங்கள் ஏன் இன்னும் முயற்சி செய்யவில்லை .நீங்கள் நினைதால் சிம்பொனி போன்ற ஒரு இசை தொகுப்பை கூட தரலாம்
உங்கள் சாதனைகள் சொல்லி மாளாது 800 படம் சாதாரண விசயம் இல்லை ..ஆனால் உங்கள் பேருக்கு பின் மேஸ்ட்ரோ பட்டம் உள்ளதிர்க்கு ஒரு சிம்பொனி இசை தொகுப்பை வெளிவர முயற்சி செய்விர்களா ?
அல்லது அதை போன்று ஒரு இசை தொகுப்பை பிரத்யோகமாக வெளி
வர முயற்சி செய்வீர்கள் என்று
நான் முழு ராஜா ரசிகன் இல்லை ஆனால் 77 முதல் 85 வரை உங்கள் இசையில் எல்லா திரை பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தவை என்ற காரணத்தால்
உங்களின் விரைவில் வர இருக்கும் அழகர்சாமியின் குதிரை இசைக்கு காத்திருக்கும்
நண்பரே, நான் ராஜாவின் வெறியனாக இருபபதால் எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்
ReplyDeleteசிம்பொனி இசைத்தொகுப்பின் உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் இருப்பதாக தகவல்...
மேஸ்ட்ரோ பட்டம் வேறு இசைக்காக வாங்கியது நண்பரே இதற்கும் சிம்பொனிக்கும் சம்மந்தமில்லை
ராஜா என்றுமே ராஜாதான் அவரின் சாதனைகளை பட்டியலிடமுடியாது ஏனென்றால் அவர் செய்த அனைத்து பாடல்களுமே சாதனைதான்....
இதை ராஜாவின் வெறியனாக இருப்பதால் சொல்லவில்லை அவரை விட அவரின் இசைதான் அதிகம் பேசியிருக்கும் என்பதை அவரின் இசையை கேட்டாலே புரியும்...
1976 அன்னக்கிளி திரைப்படம் மூலம் தனது இசை வாழ்வை தொடங்கி இன்று வரை இசைக்காகவே தன்னை அர்ப்பனித்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன்
அவரின் தமிழிசை உள்ளவரை ராஜா வாழ்ந்துகொண்டிருப்பார் இசை வேறு ராஜா வேறு இல்லை இரண்டுமே ஒன்றுதான்..
“நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே ராஜா ராஜாதான்”
வாய்ப்பிற்கு நன்றி
என்றும் நட்புடன்
மாணவன் (மேஸ்ட்ரோஸ் பேன்ஸ் கிளப்)