Tuesday, November 17

என் பார்வையில் A.R.ரஹ்மான் TOP.10 படம்









எ ஆர் ரஹ்மான் இசையில் எனக்கு எல்லா பட பாடல்களும் படங்களும் எனக்கு பிடித்தவைதான் அதிலும் சில பட பாடல்களும் படங்களும் எனக்கு மிகவும் பிடித்தவை அதை பற்றி இவை தமிழ் பட பாடல்கள் மட்டுமே ஹிந்தி கணக்கில் சேர்க்க வில்லை

10 கிழக்கு சீமையிலே
எ ஆர் ரஹ்மான் முதல் முதலாக கிராமத்து இசையில் தன் முழு வீச்சை காட்டிய படம் ஆனால் அதன் பின் அவர் கிராமத்து இசையில் தன் முழு பரினாமத்தை காட்ட விட்டாலும் கிழக்கு சீமையிலே எனக்கு பிடித்த ரஹ்மான் படங்களில் ஒன்று ஆத்தங்கரை மரமே மானுத்து சோலையிலே என எல்லா பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி எனக்கு மிகவும் பிடித்த டாப் 10 இல் ஒன்று

9 முத்து
முதலில் இது எப்படிடா ரஜினி படத்திற்கு பொருந்தும் என்று நினைத்த பாடல்கள் இன்று ரஜினி பாடல்கள் என்றால் முதலில் வரும் அளவிற்கு மிகவும் புகழ் பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி
ரஜினி படத்திற்கு ஏற்ற பின்னணி இசை என எல்லா தரப்பு ரசிகரும் ஏற்று கொள்ளும் பாடல்கள் தில்லான தில்லான
விடுகதையா பாடல்கள் எனக்கு பிடித்த ரஹ்மான் டாப் 10 முத்து 9 இடம்

8 ஜென்டில் மேன்
ரஹ்மான் ஷங்கர் கூட்டணி முதல் அடித்தளம் அமைத்த படம் ஜென்டில் மேன் சிக்கு புக்கு ரயிலே உசிலம் பட்டி பெண்குட்டி என்வீட்டு தோட்டத்தில் என ஒரு ஜனரஞ்சக ஜுகல் பந்தி பாடல்கள் எல்லா தரப்பு ரசிகர் கவர்ந்த பாடல்கள் என எ ஆர் ரஹ்மான் டாப் டென் லிஸ்ட் இது 8 இடம்

7 காதலன்
ரஹ்மான் ஷங்கர் பிரபுதேவா என ஒரு இசை மாநாடு நடத்தின படம் கல்லுரி மாணவர் முதல் பல் போன தாத்தா வரை ஆடி படிய பாடல்கள் இதன் பாடல்கள் முக்கியமாக ஊர்வசி ஊர்வசி , முககளா முக்கபுல என எல்லா பாடல்களும் இந்திய முழுவதும் ஆடி பாடிய பாடல்கள் என்றால் மிகை இல்லை

6 இந்தியன்
ரஹ்மான் ஷங்கர் கமல் ஹாசன் என இந்திய முழுவதும் படமும் சரி பாடல்களும் சரி ஹிமாலய வெற்றி பெற்றது அதிலும் அக்கடான்னு நாங்க ,கப்பலேறி போயாச்சு ,பச்சை கிளிகள் ,என பாடல்களும் சரி பிரமாண்டமான பின்னணி இசையும் சரி சரியான தேர்வாக அமைந்த பாடல்


5 காதலர் தினம்
எ ஆர் ரஹ்மான் இசையால் மட்டுமே ஓடிய படம் என்றால் அது மிக பெரும் உண்மை .ஒ மரியா ,காதலென்னும் தேர்வெழுதி ,நினைச்சபடி ,தாண்டிய ஆட்டம் என ரஹ்மான் இசை எல்லா தரப்பு ரசிகர்களும் கேட்ட பாடல்கள் .
அதிலும் மரியா பாடல் திரை அரங்கில் ஒரு டான்ஸ் அடிய ரசிகர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள் ரஹ்மான் ரசிகர்ளுக்கு பிடித்த படம் என்றால் அது உண்மை

4 மின்சார கனவு
ரஹ்மானின் ஊ ல ல என்றால் மின்சார கனவு என பெயரும் சரி ரஹ்மானுக்கு தேசிய விருது மற்றும் எ வி எம் நிறுவனத்தில் ரஹ்மானுக்கு முதல் படம் அவர் நண்பர் ராஜீவ் மேனன் இயக்கிய படம்
பூ பூக்கும் ஓசை ,வெண்ணிலவே ,ஸ்ட்ராபெர்ரி கண்ணே .தங்க தாமரை பெண்ணே ,அன்பென்ற மழை
ரஹ்மான் வித விதமான் இசை ஜாலம் காட்டிய படம்

3 பம்பாய்
ரஹ்மான் மணிரத்னம் கூட்டணி என்றால் ஒரு எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கும் அதை சரி செய்த படம் . படம் சொல்ல வந்த கருத்து சிலருக்கு பிடிக்காமல் போனாலும் ரஹ்மான் ரசிகர்களுக்கு தீபாவளி படம் என்றால் இதுவும் ஒன்று அந்த அரபி கடலோரம் ,கண்ணாலனே, பூவுக்கென பூட்டு , என பாடல்களும் சரி படத்திற்கு ஏற்ற பின்னணி இசை இந்த படத்தின் தீம் மியுசிக் ஆங்கில படங்களில் சேர்க்க பட்டது இதன் இசை மீது உலக மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தை காட்டுகிறது


2 அலை பாயுதே
ரஹ்மான் மணிரத்னம் கூட்டணி இளமை கொண்டாட்டம் கட்டிய படம் பச்சை நிறமே, சிநேகிதனே .,யாரோ யாரோடி ,செப்டம்பர் மாதம்,ரஹ்மான் புது முறை இசையில் காட்டிய மாங்கல்யம் தந்துனானே வித்தியாசமான ரி மிக்ஸ் சிறப்பாக இருந்தது
ரஹ்மான் படங்களில் அலை பாயுதே சிறப்பான படம் என்றால் அது மாற்ற முடியாத உண்மை


1 ரோஜா
ரஹ்மான் படங்களில் முதல் படமும் சரி முதன்மையான படமும் என்றால் சரி இந்திய முழுவதும் ஒரு மிக பெரும் தாக்கம் உண்டாக்கிய சின்ன சின்ன ஆசை ,தமிழா தமிழா ,புது வெள்ளை மழை ,காதல் ரோஜாவே ,முதல் படத்தில் சிக்ஸர் அடித்த ரஹ்மான் இந்த படத்திற்கு இந்திய திரைப்பட தேசிய விருது என எல்லா விருதுகளும் பெற்ற படம்

இது என் பார்வை மட்டுமே ரஹ்மான் இசை அமைத்த பாடல்கள் எல்லாமே டாப் 1.

சில படங்கள் தவிர பரசுராம் ,அல்லி அர்ஜுன தவிர, ஏனோ இந்த படம் ரஹ்மான் இசை என்றால் என்னால் நம்பமுடிய வில்லை

No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை