
ஏ ஆர் ரஹ்மான் பற்றி தமிழ் மொழியில் மிக குறைவான அளவில் மட்டுமே புத்தகம் வந்திருக்கு
அந்த வகையில் சிறந்த புத்தகம்
ரஹ்மானின் ஆரம்ப காலம் முதல் அவர் தந்தை ஆர். கே. குலசேகர் பற்றி அதிகம் யாருக்கும் தெரியாத தகவல்கள் மற்றும் அவர் மலையாள திரை உலகில் சாதித்த சாதனைகள் மற்றும் சோதனைகளை ஆசிரியர் கிருஷ்ணா டாவின்சி மிக தெளிவாக விவரங்களை சேகரித்து இந்த புத்தகத்தில் எழுதி உள்ளார்
ரஹ்மான் பற்றி நமக்கு தெரியாத மிக தகவல்களை சேகரித்து இதில் எழுதி உள்ளார்
ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு பின் வந்த புத்தகம் என்பது இதன் சிறப்பு
நல்ல தரமான காகிதம் சிறப்பான படம் ரஹ்மான் பற்றி ரஹ்மான் ரசிகர் மற்றும் இல்லாமல் திரை இசை ரசிகர் எல்லாம் படிக்க வேண்டிய புத்தகம்
எல்லா புத்தக கடைகளில் கிடைகும்
ரஹ்மான் ரசிகர்கள் அவர் பாடல் கேசட் உடன் மறக்காமல் வைக்க வேண்டிய புத்தகம் நூலின் பெயர் : ஒரு கனவின் இசை
ஆசிரியர் : கிருஷ்ணா டாவின்சி
நூல் வெளியிடு :விகடன்
பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteவிகடனில் இதை தொடராக படித்த ஞாபகம்...
ReplyDeleteநல்ல எழுத்து நடையில், விரிவான தகவல்களுடன் எழுதி இருப்பார் கிருஷ்ணா டாவின்ஸி...