அமீரின் யோகி படத்தை சன் டிவி வாங்கிவிட்டது என்றவுடன் சரி இந்த படம் ஏதோ விசயம் உள்ளது என்ற எதிர்பார்ப்பு உண்டாக்கிவிட்டது.
அமீர் இந்த படத்தை சன் டிவிக்கு விற்று விட்டார் என்றார் என்ற செய்தி மட்டும் இல்லாமல், சன் டிவி விலைக்கு கேட்ட படம் என்ற செய்தி கூட இப்படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டது
ஆனால் படத்தை சன் டிவி க்கு விற்காமல் சொந்தமாக அமீர் வெளியுட்டது .அது மட்டும் இல்லாமல் பருத்தி வீரன் படம் அமீர் மீது ஒரு மதிப்பை உண்டாக்கி இருந்தது .இவை எல்லாம் சேர்த்து யோகி படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது
இப்படம் வந்த உடன் மொத்தமாக எல்லா எதிர்பார்ப்புக்கும் ஆப்பு வைத்தது .
TSOTSI என்ற ஆங்கில படத்தின் அப்பட்ட காப்பிக்கு எதற்க்கு இத்தனை எதிர்பார்ப்பை உண்டாக்கி ரசிகர்களை முட்டாள் ஆக்கும் இவர்கள் போன்றவர்களால் தான் நல்ல படம் எது என்று ரசிகன் சொல்லும் முன் இவர்கள் உண்டாக்கும் வீண் விளம்பரம் மற்றும் தேவையற்ற பொய்யான செய்திகளை பரப்பி ரசிகனை முட்டாள் ஆக்க வேண்டாம் .
மற்றும் ஒரு மாபெரும் ஏமாற்று வேலை என்னவென்றால் இந்த படம் துபையில் நடைபெறும் திரைப்பட விழாவிற்கு இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற விஷயம்
இவர்கள் என்ன நினைத்தார்கள் உலக திரை பட விழாவிற்கு தமிழ் பட உலகை சேர்ந்தவர்கள் மட்டும் வருவார்கள் என்ற நினைப்பா ?
அவர்கள் இந்த படத்தின் ஒரிஜினல் படத்தை பார்த்து இருக்க மாட்டார்கள் என்ற நினைப்ப?
இந்த படத்தை உலக திரைப்பட விழாவில் வெளிவிட்டால் வெளிநாட்டவர்கள் நம் திரையுலகை பற்றி என்ன நினப்பார்கள் ?
அமீர் மீண்டும் உங்களிடம் இருந்து வர வேண்டியது பருத்தி வீரன் போன்ற ஒரு உண்மையான உலக தர படம் மட்டுமே
தருவிர்கள் என்ற நம்பிகையில்
எது எப்படியோ இந்த விவகாரத்தில் சன் டிவி தப்பிவிட்டது
*************************************************************************
இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!
*************************************************************************
முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!
*************************************************************************
ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!
**************************************************************************
அது அந்த படத்தின் காப்பி என்று உங்களுக்குத் தெரிந்தது. இப்போது எனக்கு.
ReplyDeleteஆனால் அது பருத்திவீரனை ஒரு ஆண்டுகாலம் தொடர்ந்து பார்த்த கடைக்கோடி சாமானியனுக்குத் தெரியுமா?
அவன் வலைப்பூவைப் படிப்பானா? படித்து அமீரின் இந்தப் படம் பற்றிய காப்பி என்கிற தகவலைத் தெரிந்துகொள்வானா?
வலைப்பூ உலகில் கடந்த தேர்தலின் போது அனைவரும் காங்கிரஸை எதிர்த்தோம். என்ன நடந்தது?
அது போலத்தான் இதுவும். நமக்கும், அந்த சாமான்யனுக்கும் உள்ள வித்தியாசத்தால் நமக்குப் பிடித்தது அவனுக்கும் பிடித்தே தீர வேண்டும் என எதிர்பார்த்திடலாகாது.
நான் கடவுள் படத்தை வலைப்பூவில் பலரும் ஆஹா,ஓஹோ என்றோம். ஆனால்.. (:-)
அதுபோலத்தான்...
இது ஒரு தொடர்கதை.
சன் டிவி இதைவிட மொக்கைப் படத்தை எல்லாம் வருங்காலத்தில் வெளியிடும் அதில் சந்தேகமே வேண்டாம்