Monday, November 9
தரமான திரைப்படங்களுக்கு அரசே நிதி உதவி அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்
தரமான திரைப்படங்களுக்கு அரசே நிதி உதவி அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்
தரமான படங்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்ன கொடுமை சார் இது .மக்கள் பணம் எப்படி எல்லாம் வீணாக போக வேண்டும் ஒவ்வொருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு நடகின்றனரோ என தோன்றுகிறது
தமிழ் பெயர் வைத்தால் போதும் வரி இல்லை என்ற ஒரு சலுகைகள் அளித்து மக்களின் சேவைக்கு பயன் படும் பணம் வீணாக போகிறது
இதனால் தமிழ் மக்கள் என்ன பயன் அடைந்தனர் என்று யாருக்கும் தெரியாத இந்த நேரத்தில் தரமான படம் தரமற்ற படம் என்ன சார் ?உள்ளது மக்களுக்கு நல்ல உணவு கிடைக்கிறதா நல்ல சுகதரமான இட வசதி உள்ளத என்பதை விட்டு விட்டு சினிமாகாரக்கு
வரி விலக்கு மக்களுக்கு இலவச கலர் டிவி இது தேவையா
ஏன் மக்கள் வரி பணத்தில் ஊருக்கு ஒரு பூங்கா அமைக்கலாம் ,தூர்த்து போய் உள்ள குளம் குட்டை ஏரி ஆழபடுதலாம்
மழை காலம் வந்தால் வெள்ளம் போன்றவை ஏற்பட காரணம் தண்ணிர் செல்ல வசதி இல்லாமல் பாலங்களின் கீழ் பழைய குப்பைகள் மற்றும் ஆறு ஓரங்களில் உள்ள தடுப்புகளை மழை வரும் முன் சரி செய்யும் அமைப்பை ஏற்படுத்தலாம்
மழை வந்து முடிந்த பின் விரைவில் தண்ணிர் பஞ்சம் வர காரணம் மழை நீர் சேகரிப்பு போன்ற வசதிகளை அரசு செய்யாததும் ஒரு காரணம்
இப்படி மக்களுக்கு பயன்படும் எத்தனயோ திட்டத்திற்கு குரல் கொடுப்பதை விட்டு விட்டு நல்ல சினிமா கெட்ட சினிமா என்ன பாகுபாடு உள்ளது
சினிமாவை எதிர்க்கும் எதிர்க்கும் ராமதாஸ் இதற்கு குரல் கொடுப்பது வேதனையாக உள்ளது
எந்த சினிமாகாரனும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சினிமா எடுப்பதில்லை இது அவரின் வியாபாரம் இதில் அவர் லாபம் அடைந்தால் மக்களுக்கு என்று வருடம் வருடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு பங்கு தருகிறேன் என்று சொன்னாரா ?
படம் ஓட வில்லை என்றால் அதற்க்கு நூறு காரணம் உள்ளது
இப்போது தியேட்டர் செல்ல மக்கள் யோசிக்க காரணம் என்ன நல்ல ஒலி ஒளி அமைப்பு எத்தனை திரை அரங்கில் உள்ளது சொல்லுங்கள். நல்ல தரமான ஒலி ஒளி குளிர்சாதன வசதி இருக்கை வசதி எத்தனயோ காரணம் உள்ளது
மக்கள் திரை அரங்கிற்கு வரவழைக்க மக்கள் பணம் வீணாக்க வேண்டாம்
அது எப்படி பட்ட படமாக இருந்தாலும்
இந்த கருத்து ஏதும் தவறு இருந்தால் எழுதவும்
நன்றாக இருந்தாலும் பாராட்டவும்
கீழே என் மற்றொரு கருத்தின் லிங்க்
Visit மரம் ஒரு வரம் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை