
ஒரு நிமிடம் கண்ணை மூடி உங்கள் ஊரின் மழை கால இயற்கை நினைத்து பாருங்கள்
ஊரின் ஆறு ஓடை நீர் நிரம்பி அழகான அந்த காலம் இன்று இல்லை என்ன காரணம் ?
சரியான நேர மழை இல்லாதது ஒரு காரணம் இதற்க்கு முக்கிய காரணம் மரம் இல்லாமல் நம் ஊர் போட்டால் காடாக மாறி வருவது ஒரு காரணம்!
நாம் படித்து இன்று அமெரிக்கா லண்டன் துபாய் சிங்கப்பூர் என்று நம் வாழ்க்கை நிலை மாறி விட்டது ஏன் நம் நம் ஊரை பற்றி நினைக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதால் தான்
நம் ஊருக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய முடியாமல் இருக்கிறோம்
அதிகம் வேண்டம் நம் ஊரில் நம் படித்த பள்ளிகள்உள்ளன அதை சுற்றி மற்றும் பள்ளிகூட உள்பகுதிகளில் மரம் நட்டு நம்மால் முடிந்தசெய்யலாம்
அரசியல்வாதி போல் ஒரு நாள் மரம் நட்டு மறு நாள் ஆட்டுக்கு இரையாகமல் அந்த மரம் ஒரு நல்ல பருவம் வரும் வரை அதை பாதுகாக்க மாதம் ரூ 300 அல்லது ரூ 400 க்கு ஒரு ஆளை நியமித்து ஒரு வேலை நீர் ஊற்றினால் நிச்சயமாக ஒரு வருடத்தில் மரம் பெரியதாக வளரும்
நிச்சயமக இது ஒரு ஆள் செய்ய இயலாது நம் பள்ளி நண்பர்கள் ஊர் நண்பர்கள் சேர்ந்து செய்ய இயலும்
நல்ல வசதி உள்ள அயல் நாடு நண்பர்கள் உள்ளூர் நண்பர்கள் சேர்ந்து ஆண்டின் ஏதும் ஒரு நாள் பிளான் செய்தால் நிச்சயமாக செய்யலாம்
இருபது அல்லது முப்பது மரம் ஒரு ஆண்டில் நடுவது என்று முடிவு செய்தல் மரத்திற்கு ஆயிரம் ருபாய் மற்றும் மாதம் ரூ 400 என்றால் வருடதிற்கு ரூ 4800
செலவாகும் ஒரு ஆண்டில் நாற்பது மரம் என்றால் பெரிய விஷயம்தான் . இது மட்டும் நிச்சயமாக வெற்றி அடைந்தால் நீங்கள் மீண்டும் கண்ணை மூடி உங்கள் ஊரின் அழகை மீண்டும் நேரில் பார்க்கலாம்
நாம் அன்னதானம் செய்வது போல் ஏன் இதை செய்ய இயலாது
ஒரு நபருக்கு வேலை கொடுத்தது போலும் நம் ஊரை இயற்க்கை நம் காப்பற்ற நம்மால் முடிந்த ஒரு சின்ன முயற்சியாக இது அமையும்
உங்கள் ஊரின் படித்த நண்பர்கள் நீங்கள் இன்டர்நெட் மூலம் தொலை பேசி
சிறு குழுக்கள் மூலம் வசூல் செய்து ஒரு நாள் குறிப்பிட்டு அந்த நாளில் மரம் நடலாம்
மிக முக்கியமான ஒரு விஷயம் மரம் நடுவது மட்டும் இது குறிக்கோள் அல்ல
அந்த செடி மரம் ஆகும் வரை காப்பற்ற நாம் செயும் செலவு மாதம் ரூ 400or500 வருடத்திற்கு ரூ4800 or 6000
மனம் இருந்தால் நிச்சயம் செய்யலாம் தமிழ் நாட்டில் 100 கிராமம் 10 நகரத்தில் இது வெற்றி அடைந்தால்
மீண்டும் கண்ணை மூடி உங்கள் ஊரின் அழகை பாருங்கள்
மறக்காமல் எனக்கு ஒரு ஒட்டு போடுங்க சார்
அப்படியே சிறந்த தொலைக்காட்சி எது என்று ஒரு வோட்டும் போடுங்க எட்டு நாள் தான் உள்ளது
நல்ல விஷயம். செய்யனும்.
ReplyDelete//அதிகம் வேண்டம் நம் ஊரில் நம் படித்த பள்ளிகள்உள்ளன அதை சுற்றி மற்றும் பள்ளிகூட உள்பகுதிகளில் மரம் நட்டு நம்மால் முடிந்தசெய்யலாம்
ReplyDelete//
செய்யலாமே ....மரம் இல்லை என்றால் தண்ணீர் இல்லை