Thursday, June 2

மங்காத்தா & ஏழாம் அறிவு எப்படி இருக்கும் ? summaa



           இது இந்த படங்கள் பற்றிய செய்திகள் இல்லை இந்த படங்கள் தாத்தா முதலமைச்சர் ஆகா இருக்கும்போது ஆர்பாட்டதுடன்  தொடங்கிய படங்கள்
   கட்சிகள் மாறினால் காட்சிகள் மாறுவது இயல்பு அந்த வகையில் இந்த படங்களின் வெளியிட்டின் போது பழைய ஆர்பாட்டம் இருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகமே

   ஆட்சியில் இருக்கும்போதே உதயநிதி ஸ்டாலின் செய்த ஒரு புத்திசாலிதனமான காரியம் தன்னுடைய மைனா படத்தை விஜய் டிவிக்கு விற்றது மற்றும் தன்னுடைய புது படங்கள் பற்றிய நிகழ்ச்சிகளுக்கு விஜய் டிவியை அதிகம் நம்பியது போன்றது

  இப்போது கட்சி மாறிவிட்டது காட்சிகளும் மாறிவிட்டது இனி மங்காத்தா மற்றும் ஏழாம் அறிவு எப்படி இருக்கும்

 இப்போது வர இருக்கும் இரண்டு படங்களும் அரசியல் தவிர்த்து பார்த்தல் பெரும் எதிர்பார்ப்பு  படங்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை
 

 ஒன்று அஜீத் அவர்களின் ஐம்பதாவது படம் மற்றும் அஜித் ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ள  படம்.

மற்ற  ஒரு விஷயம் அஜித் எப்போதும் ஒரு கட்சிக்கு ஆதரவாக  இருந்தது இல்லை
என்பது ஒரு முக்கிய காரணம் என்றாலும்  கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதே அவர் இருக்கும் மேடையிலே பாராட்டு விழாக்கள் பற்றிய அவரின் பேச்சு ஒரு புயலை கிளப்பியது 


 இப்போது ஆட்சி மாறி இருக்கும் இந்த நேரத்தில் மங்காத்தா படத்திற்கு அந்த அளவிற்கு தொல்லைகள் இருக்காது என்பது நிச்சயம்
     தன் ரசிகர்கள் வேண்டாத அரசியல் விசயங்களில் ஈடுபடுவதால் அவர்களின் பிழைப்பு வீணாக போகும் என்ற காரணத்தால் மட்டுமே தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்த பின்பு வரும் படம் என்பதால் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு இருக்குமா என்ற விசயத்தை பொய்யாக்கினர் அவரின் ரசிகர்கள் மங்காத்தா ஒரு பாடல் ஆல்பம் வெளியான அன்று கடைகளில் கூடி இசை கேசட்டை வாங்க நின்ற எதிர்பார்ப்பு

  தயாநிதி அழகிரி என்ற படத்தையும் மீறி மங்காத்தா பெரும் எதிர்பார்ப்பை உண்டாகக் முக்கிய காரணம்  அஜீத்  மட்டுமே

 முன்பு போல திரை அரங்குகள் அவர்களின் கையில் அதிகம் இருக்காது என்பது ஒரு மைனஸ் பாயிண்ட்


 

உதயநிதி ஸ்டாலின் வழங்கும் ஏழாம் அறிவு கூட ஒரு வகையில் இந்த அரசியல் விளையாட்டை மீறி ஜெய்க்கும் என சொல்லலாம்
 முக்கிய காரணம்  எ ஆ
ர் முருகதாஸ் , சூர்யா ,மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ்  
தமிழ் படங்களில் பிரமாண்ட படங்கள் வரிசையில் சேரும் எல்லா சாத்திய கூறுகளும் உள்ள படம் இது
இந்த படத்திற்கு இருக்கும் ஒரு பிரச்சினை முன்பு போல திரை அரங்கு அதிகம் கிடைப்பது சாத்தியம் குறைவே
சூர்யா எந்த கட்சியையும் சேராதவர் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்  மற்று இந்த படங்கள் பற்றிய விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் எந்த தொலைக்காட்சியில் அதிகம் ஒளிபரப்பாகும் என்பதை வைத்து இதன் வெற்றி சதவிகிதம் கூடும்
  ஆட்சி மாறிய முதல் இன்று வரை திரை உலகம் சம்பந்தப்பட்ட விசயங்களில் அதிகம் புது அரசு ஈடுபடாதது பாராட்ட வேண்டிய விஷயம்
மக்கள் பணி சம்பந்தமான விஷயங்கள் பார்ப்பதே  தன்னுடைய  முக்கிய வேலை என்று புது அரசின் செயல்பாடு

 முந்தைய அரசியல் போல ஒரே திரை உலகம் சம்பந்தப்பட்ட விசயங்களில் கலந்து கொள்வது பாராட்டு விழாக்களில் நேர விரயம் செய்வது விளம்பரம் ஒன்றே ஓட்டுக்கள் அளிக்கும் என்ற தவறான செயல்களில் ஈடுபடாமல் இந்த புது அரசு ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவது கூட  இந்த இரண்டு படங்களுக்கு அந்த அளவிற்கு தொல்லைகள் இருக்காது என்று தெரிகிறது

 ஆகவே மங்காத்தா மற்றும் ஏழாம் அறிவு பெரும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்


No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை