இந்த ஆண்டு ஆரம்பத்தில் வந்த பாடல்கள் படம் இப்போது சன் பிக்சர்ஸ் கையில் வந்து உள்ளது
பாடல்கள் ஏற்கனவே எப் எம் களில் கொடி பறக்கிறது அது போதாது என்று இப்போது படம் சன் டிவி கையில் வந்து உள்ளது பாடல்கள் இன்னும் சிறப்பான முறையில் அனைவரையும் சென்றடையும்
சிறப்பான பாடல்கள் பற்றி இந்த படத்தில் முதல் ஹீரோ ஹாரிஸ் என்றால் அது மிகை இல்லை குறைவான படங்களில் இசை அமைத்தாலும் ஆடியோ விற்பனை ஆகட்டும் படத்தின் வெற்றிக்கு உதவுவது ஆகட்டும் ஹாரிஸ் சிறப்பாக செயல்படுகிறார்
1: தீ இல்லை
(பாடல் கேட்க்கும்போது என மனம் என்னிடம் இல்லை)
பாடியவர் : நரேஷ் ஐயர் ,முகேஷ் ,கோபால் ,மஹதி
பாடல் : வாலி
பாடல் கேட்க்கும் நேரம் :எல்லா நேரமும் கேட்கலாம் முக்கியமாக இரவு நேரங்களில்
பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹாரிஸ் அவர்களின் பெப்பி இசை வாவ் ! நரேஷ் ஐயர் குரலில் இந்த பாடல் கேட்க்கும்போது நம்மை அறியாமல் நம்மை இந்த பாடலின் உள்ளே அழைத்து செல்லும்
ஹாரிஸ் அவர்களின் தீ இல்லை நரேஷ் மற்றும் கோபால் அவர்களின் ஹம்மிங் மற்றும் மஹதி அவர்களின் குரல் கலக்கல் கூட்டணி இந்த பாடலில்
2:எங்கயும் காதல் (மனம் எங்கும் காதல் )
பாடியவர் :ஆளப் ராஜூ ,தேவன்,ரைனா ரெட்டி
பாடல் :தாமரை
பாடல் கேட்க்கும் நேரம் :இரவு படுக்கும் முன்
ஆளப் ராஜூ இந்த பாடலின் ஒரு தனி ஆவர்த்தனம் நடத்தி உள்ளார் ஹாரிஸ் அவர்களின் உறுத்தாத இசை மனதோடு நடனமிடும் சொக்லேட் குரலில் பின்னணியில் வரும் ரைனா ரெட்டி ஹம்மிங் ஒரே தாளக்ட்டுடன் வரும் இசை எங்கயும் காதல் பாடல் மனதோடு பாடல் என்று சொல்லலாம்
3:நங்காய் (தாளமிடும் கால்கள் )
பாடியவர் :ரிச்சர்ட் ,ராகுல் நம்பியார்
பாடல் :வாலி
வாலி அவர்களின் குறும்பு வரிகளுக்கு ஹாரிஸ் அவர்களின் இசை நம்மை அறியாமல் கால்கள் நடனமிடும் (மைக்கேல் ஜாக்சன் அவர்களின் இசை பின்னணியில் வருவது மட்டும் நெருடல் )
மற்றபடி திரை அரங்கில் நடனமிடும் பாடல் இது
4 :லாலிட்டா (லவ்லியான பாடல் )
பாடியவர் :கார்த்திக் ,பிரசாந்தி
பாடல் :தாமரை
மற்றும் ஒரு ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பெயர் சொல்லும் பாடல் கிடார் பின்னணியில் வரும் பாடல் சில பழைய பாடல்களை நினைவு படுத்தினாலும் புதுசாக மாறும் பாடல் இது கார்த்திக் பாடலோடு ஒன்று போய் பாடி இருக்கும் பாடல்
5:பாதிங் அட் கேன்ஸ் (ராக் அன் ராக் பாடல் )
பாடியவர் :எம்சி ஜாஸ் ,காஷ் அண்ட் கிருஷி
பாடல் :எம்சி ஜாஷ்
எந்திரன் பாடல் புகழ் காஷ் அண்ட் கிருஷி பாடி இருக்கும் ஸ்டைலிஷ் பாடல் இது மாடர்ன் யூத் ஏற்ற குத்து பாடல்
6 :நெஞ்சில் நெஞ்சில் (நெஞ்சோடு ஒரு பாடல் )
பாடியவர் :ஹாரிஸ் ராகவேந்திரா ,சின்மை
பாடல் :கார்கி
ஹாரிஸ் இசையில் கார்கி எழுதிய பாடல் நெஞ்சில் நெஞ்சில் ராகவேந்திரா சின்மாயி இருவரும் ஒரு தாளகட்டுடன் உருகி பாடி உள்ளனர் .இந்த பாடலில் ஹாரிஸ் அவர்களின் கர்நாடிக் இசை கலந்த இசை தொகுப்பு சிறப்பு
7:திமு திமு (மனம் எங்கும் தம் தம் )
பாடியவர் :கார்த்திக்
பாடல் :நா முத்துகுமார்
ஹாரிஸ் அவர்களின் ட்ரேட் மார்க் பாடல் பாடல் கேட்க்கும்போது மனதில் தம் தம் என தனியாக இடம் போட்டு உட்காரும்
மொத்தத்தில் தமிழ் திரை உலகில் இப்போது ஹாரிஸ் இசையில் முதல் இடம் இருப்பதற்கு சான்று அவர் இசையில் காட்டும் நுணுக்கம் மற்றும் இசை கோர்ப்பு பணிகள் என்பபதை நிருப்பிக்கும் பாடல் தொகுப்பு இது
பாடல் ரேட்டிங் : 9/10