Monday, June 28
உலக நாயகன் யார் ?
இதற்க்கு முந்தைய என் பதிவுகளில் ரஹ்மானை பற்றி எழுதுகையில் ஆஸ்கர் நாயகன் உலக நாயகன் என்று எழுதுவேன் .இருந்த போதும் அதில் ஒரு நெருடல் இருக்கும் நாம் எழுதும் போது உலக நாயகன் என்று எழுதுகிறோம் இதை மற்றவர்கள் எப்படி எடுத்துகொள்வார்கள் என்ற சந்தேகம்
ரஹ்மான் ஆஸ்கர் ,கிராமி பாப்ட உட்பட உலக விருதுகள், உலக தரத்தில் பாடல்கள் என்று அவர்களின் இடத்தில் சென்று சாதனை செய்து இருக்கும் அவரை நான் உலக நாயகன் ரஹ்மான் என்று அழைப்பது சிறந்த்தது என்று சொல்கிறேன்.
இதில் ஏதும் தவறு இருந்தால் மறக்காமல் பின்னுட்டம் போடவும் அல்லது வாக்களித்து உங்கள் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கவும்
நான் ரஹ்மான் ரசிகன் அதனால் இப்படி சொல்கிறேன் உங்கள் கருத்து என்னவோ நாகரிகமான முறையில் உங்கள் ஆதரவை தெரிவிக்கவும்
ஒரு வாரத்திற்கு நடைபெறும் வாக்கெடுப்பில் உங்கள் மனதில் உள்ளதை தெரிவிக்கவும் அன்புடன்
ஒரு வாரத்தில் இதை பற்றி மட்டும் அடிக்கடி பதிவு போடுவேன் திட்டாமல் ஆதரவு தரவும்
ஒரு நபர் ஒரு முறை மட்டுமே வாக்களிக்கவும்
முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும்
உங்கள் ஆதரவை நாடி ஹாய் அரும்பாவூர்
Friday, June 25
தேவையற்ற மெயில் / திறந்தது பார்த்தது யாரோ ?
இந்த விவரங்கள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் இருந்தாலும் எனக்கு தெரிந்த அளவில்
நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை எப்போதோ தெரியாத வெப் சைட் சென்று நம் மெயில் விலாசம் கொடுத்து இருப்போம் (ஹாய் அரும்பாவூர் இல்லை )
அதில் இருந்த தேவையற்ற மெயில் வந்து நமக்கு தேவையான மெயில் கூட பார்க்க முடியாத அளவில் மெயில் வரும் அந்த கொடுமையில் இருந்து தப்ப எளிதான வழி இருக்கும் அது தெரியாமல் இருப்போம் எனக்கு கூட லேட் ஆகா தான் தெரிந்த்தது அதை பற்றி
முதலில் நமக்கு தொல்லை தரும் மெயில் முகவரி எதுவோ அதை திறந்து கொள்ளுங்கள்
எப்படி எல்லா மெயில் சந்த்தாதரர் ஆகா வழி இருக்கோ அதை போல இ மெயில் வராமல் தடுக்க அந்த மெயில் வந்த பகுதியில் கடைசியில் UN SUBSCRIBE என்று ஒரு பகுதி இருக்கும் அதில் சென்று அவர்கள் கேட்க்கும் விவரம் தந்தாள் மேற்கொண்டு நமக்கு தேவை இல்லாத மெயில் வராது
திறந்தது பார்த்தது யாரோ ?
நாம் என்னதான் நம் மெயில் பாஸ்வோர்ட் போட்டு வைத்தாலும் அதை திறந்தது பார்க்க நமக்கு அப்பன் சுப்பன் எல்லாம் இருப்பார்கள் நீங்கள் ஜி மெயில் பயன்படுத்தினால் அதில் நம் மெயில் எப்போ எப்போ திறந்து பார்த்தோம் வேறு பகுதியில் யார் பார்த்தார்கள் போன்ற வசதி இருக்கும் அதை கொண்டு நம் மெயில் பாஸ்வோர்டை அடிக்கடி மாற்றி கொள்ளலாம்
முதலில் deatail என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்
நம் மெயில் எப்போ எப்போ திறந்தோம் எந்த பகுதியில் திறந்து என்ற பார்த்தார்கள் விவரம் வரும்
sign out all other sesson என்ற பகுதியை கிளிக் செய்யவும்
நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை எப்போதோ தெரியாத வெப் சைட் சென்று நம் மெயில் விலாசம் கொடுத்து இருப்போம் (ஹாய் அரும்பாவூர் இல்லை )
அதில் இருந்த தேவையற்ற மெயில் வந்து நமக்கு தேவையான மெயில் கூட பார்க்க முடியாத அளவில் மெயில் வரும் அந்த கொடுமையில் இருந்து தப்ப எளிதான வழி இருக்கும் அது தெரியாமல் இருப்போம் எனக்கு கூட லேட் ஆகா தான் தெரிந்த்தது அதை பற்றி
முதலில் நமக்கு தொல்லை தரும் மெயில் முகவரி எதுவோ அதை திறந்து கொள்ளுங்கள்
எப்படி எல்லா மெயில் சந்த்தாதரர் ஆகா வழி இருக்கோ அதை போல இ மெயில் வராமல் தடுக்க அந்த மெயில் வந்த பகுதியில் கடைசியில் UN SUBSCRIBE என்று ஒரு பகுதி இருக்கும் அதில் சென்று அவர்கள் கேட்க்கும் விவரம் தந்தாள் மேற்கொண்டு நமக்கு தேவை இல்லாத மெயில் வராது
திறந்தது பார்த்தது யாரோ ?
நாம் என்னதான் நம் மெயில் பாஸ்வோர்ட் போட்டு வைத்தாலும் அதை திறந்தது பார்க்க நமக்கு அப்பன் சுப்பன் எல்லாம் இருப்பார்கள் நீங்கள் ஜி மெயில் பயன்படுத்தினால் அதில் நம் மெயில் எப்போ எப்போ திறந்து பார்த்தோம் வேறு பகுதியில் யார் பார்த்தார்கள் போன்ற வசதி இருக்கும் அதை கொண்டு நம் மெயில் பாஸ்வோர்டை அடிக்கடி மாற்றி கொள்ளலாம்
முதலில் deatail என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்
நம் மெயில் எப்போ எப்போ திறந்தோம் எந்த பகுதியில் திறந்து என்ற பார்த்தார்கள் விவரம் வரும்
sign out all other sesson என்ற பகுதியை கிளிக் செய்யவும்
Thursday, June 24
உழுதவன் கணக்கு
அந்த மிக பெரும் சூப்பர் மார்கெட் அஸ்வின் ரம்யா சென்ற நேரம் மிகவும் குறைவான அளவில் கும்பலுடன் இருந்தது .முழுவதும் குளிருட்டப்பட்ட அந்த அங்காடி ஒரு மேட்டுகூடி மக்களுக்கு ஏற்ற அளவில் ஆடம்பரமாக இருந்தது
" என்னங்க எனக்கு தாகமா இருக்கு கூல்ட்ரிங்க்ஸ் வேண்டும்" என்று தன் கணவன்இடம் கேட்டால் ரம்யா
" என்னங்க எனக்கு தாகமா இருக்கு கூல்ட்ரிங்க்ஸ் வேண்டும்" என்று தன் கணவன்இடம் கேட்டால் ரம்யா
ஏன் இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட்ல கூல்ட்ரிங்க்ஸ் இருக்காதா"
போய் பாரு என்று சொல்லிக் கொண்டு அஸ்வின் தனக்கு தேவையான அழகு சாதன பொருட்கள் வாங்க அழகுசாதன பொருட்கள் இருக்கும் பகுதிக்கு சென்றான்.
இருபது நிமடங்கள் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு அஸ்வின் ரம்யா தங்கள் காரை நிறுத்தி இருக்கும் பகுதிக்கு சென்றனர்
காரில் சென்று கொண்டு இருக்கும் போது ரம்யா தன் கணவனை பார்த்து கேட்டால் "என்னங்க உள்ளே எல்லா பொருளும் விலை அதிகமா இருக்கு நீங்கள் அதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமா பணத்தை அள்ளி தர்றிங்க இதே பொருட்கள் வெளியே விலை குறைவா இருக்கு ஆனா நீங்க அங்கே பணம் தர ரொம்ப யோசனை செய்றிங்க " என்று தன் மனத்தில் இருந்தததை கணவன் இடம் கேட்டால் ரம்யா
இங்க பாரு இப்படி எல்லாம் நாம் செலவு செய்த தான் நமக்கு மரியாதை. மாதம் 10 ஆயிரம் சம்பளம் கிடைத்த போதும் என்று நினைதேன்.
இன்று நம் நிலைமை அப்படியா லட்சம் ருபாய் சம்பளம். காரணம் என்ன
இதே மாதிரி மற்றவர்கள் செலவு செய்ததால் தான் அதிக அளவில் வருமானம் வந்து நமக்கு இந்த சம்பளம் கிடைக்கிறது
அதனாலதான் இது மாதிரி ஆடம்பரமான இடங்களில் அதிகமா எதுவும் கேட்க்காம செலவு செய்கிறேன் என்று சொல்லி தன் மனைவி வாயை மூடினான்
.
கொஞ்சம் நேரம் அமைதியாக இருவரும் அமைதியாக சென்று கொண்டு இருந்தனர் ரோட்டோரடில் ஒரு வயாதான பெண்மணி வெள்ளரி காய்களை விற்று கொண்டு இருந்தால்
எங்க கொஞ்சம் நிப்பாட்டுங்க வெள்ளரி பிஞ்சு வாங்கணும் என்று கணவனிடம் கூறினால்
“ஏண்டி உனக்கு புத்தியே இல்லையா அங்கே எவ்வளவு ஹைஜீனிக் காய் கறி அதை எல்லாம் விட்டு ரோட்டோரத்தில் இந்த “ச்சே உன்னை திருத்தவே முடியாது”
கொஞ்சம் நேரம் அமைதியாக இருவரும் அமைதியாக சென்று கொண்டு இருந்தனர் ரோட்டோரடில் ஒரு வயாதான பெண்மணி வெள்ளரி காய்களை விற்று கொண்டு இருந்தால்
எங்க கொஞ்சம் நிப்பாட்டுங்க வெள்ளரி பிஞ்சு வாங்கணும் என்று கணவனிடம் கூறினால்
“ஏண்டி உனக்கு புத்தியே இல்லையா அங்கே எவ்வளவு ஹைஜீனிக் காய் கறி அதை எல்லாம் விட்டு ரோட்டோரத்தில் இந்த “ச்சே உன்னை திருத்தவே முடியாது”
என்று புலம்பி கொண்டு வண்டியை ஓரமாக நிறுத்தினான்
"ஏம்மா இந்த வெள்ளரி காய் விலை எவ்வளவு"
"கூறு இருபது ருபாய் மட்டும் தான் தாய் !
அந்த சூப்பர் மார்க்கெட்டை விட விலை குறைவாக நன்றாக இருப்பது அவளுக்கு தெரிந்தாலும் அஸ்வின் அதை எல்லாம் சட்டை செய்யாமல்
வேண்டா வெறுப்பாக இருபது ரூபாயை நீட்டினான்
அவர்களுக்கு மிக அருகில் மற்றும் ஒரு குளிர்சாதன விலை உயர்ந்த கார் நின்றது
அதில் இருந்து பார்பதற்கு மிகவும் ஆடம்பரமான ஒரு தம்பதி தங்கள் குழந்தைகளுடன் இறங்கி வெள்ளரி விற்ற அந்தவயாதான பெண்மணி இடம் “பாட்டி அந்த வெள்ளரி பிஞ்சை கொடு என்று வாங்கி கொண்டு அவர்களிடம் இருந்த துணி பையில் போட்டனர் “
அப்போது அதை திங்க எடுத்த அந்த அவர் மகனிடம் “டேய் இப்போ வேணாம் வீட்டில் போய் நல்ல கழுவி அப்புறம் சாப்பிடு ஏன்னா ரோட்டோரம் தூசி எல்லாம் இருக்கும் கழுவி சாப்பிடனும் “
பாட்டி எவ்வளவு என்று கேட்ட அவனிடம் இருபது ருபாய்தான்
என்று சொன்ன கிழவியிடம் ஐம்பது ருபாய் கொடுத்து மீதியை நீயே வச்சிக்க என்று சொன்ன அவனை ஒரு மாதிரியாக பார்த்தன் அஸ்வின்
“எங்க எதற்கு அந்த கிழவிக்கு முப்பது ருபாய் கொடுத்திங்க என்று கேட்ட அவன் மனைவியை நோக்கி சொன்னான்
“நீ ஏன் கேட்க்கிறாய் அப்படின்னு எனக்கு தெரியும் அந்த விரைவு உணவு கடையில் டிப்ஸ் கொடுக்க சொன்னே நான் தரவில்லை இங்கே ஏன் தர்றேன்னு கேட்க்கிறே
நாம அங்கே சாப்பிட்டது ஆடம்பரத்திற்கு அதனால் ஒரு பயன் இல்லை அது மட்டும் இல்லாமல் அங்கே இருப்பவனுக்கு நிலையான சம்பளம் இருக்கு
ஆனா இந்த பாட்டி இயற்கையை காப்பாத்துறது மட்டும் இல்லாம நம்ம எதிர்கால சந்ததிக்கு உதவி செய்றது இந்த விவசாயம் மட்டுமே
ஆடம்பரம் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு ஆடம்பர விசயங்களை வேண்டும் என்றால் வளர்க்கலாம்
எதிர்காலத்தில் கணக்கு இல்லாம நாம் சம்பாதிக்கிறே பணத்தை கொண்டு எதை சாப்பிட முடியும், பணத்தை சாப்பிட்டு உயிர் வாழ முடியாது ஆடம்பரத்திற்கு செய்யும் பத்து ருபாய் செலவை கணக்கு பார்க்காத நாம .
இந்த இயற்கை சார்ந்த விசயத்தில் ஒரு ருபாய் கூட கணக்கு பார்ப்பதால் நமக்கு நாமே காங்க்ரிட் சமாதி கட்டி கொள்கிறோம்
இந்த இயற்கை சார்ந்த விசயத்தில் ஒரு ருபாய் கூட கணக்கு பார்ப்பதால் நமக்கு நாமே காங்க்ரிட் சமாதி கட்டி கொள்கிறோம்
எதிர் பார்க்காம கிடைக்கிற ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமை ஆகாமல் கொஞ்சம் பழசையும் மறக்காம இருந்தா நம்மை நாமே காப்பாத்துறது மட்டும் இல்லாம இயற்கையும் காப்பத்துலாம் “
முன் பின் தெரியாத அவன் பேச்சு அஸ்வின் கன்னத்தில் அறைந்து சொன்னது போல இருந்ததது
Wednesday, June 23
விமர்சனம் செய்யும் முன்
ஒரு படம் வந்து முழு வெற்றி அடைவது என்பது குதிரை கொம்பாக மாறி விட்ட இந்த காலத்தில் .எங்கேயோ ஒரு ஓரமா உட்கார்ந்து நூறு இருநூறு ருபாய் செலவு செய்து நோகாம வீட்டிற்கு வந்தோமா படத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும் ஓரமா இருக்கும் ஒரு இருக்கும் ஒரு அழுக்கை மட்டும் பார்த்து நல்ல படங்களை நோகாம அது நொள்ளை இதுல நொள்ளை என்று பதிவை போட்டு ஹிட் ஆகா மட்டும் பார்க்க துடிக்கிறோம்
இப்படி நாம் செய்யும் சில அரை குறை விமர்சனத்தால் புதுமை கொண்டு வர துடிக்கும் நல்ல படத்தை நல்ல திறமை சாலிகளின் உழைப்பை ஓர் நொடியில் கேவலப்படுத்தி நல்ல பெயர் வாங்க பார்க்கிறோம்
நாம் செய்யும் பதிவு பணியால் சில அரை குறை பந்தாவை குறைத்தோம் அதை ஒப்பு கொள்கிறோம்
ஆனால் சிலரோ எப்படி பட்ட படமாக இருந்தாலும் குறை சொல்வதை மட்டுமே குறிகோளாக இருப்பதை என்னவென்று சொல்வது
குறை சொல்வதை மட்டுமே குறிகோளாக இருப்பவர் அந்த விசயத்தில் உண்மையாக இருந்தால் தான் குறை சொல்லும் படத்தை திருட்டு தனமான டி வி டியில் கூட பார்க்க கூடாது .இணையத்தில் கூட பார்க்க கூடாது அப்படி இருந்தால் நீங்கள் சொல்லும் கருத்துக்கு ஒரு மரியாதை உள்ளது
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாத தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான அரைத்த மாவை அரைக்கும் சில இயக்குனர்களை குறை சொல்லுங்கள்
தன்னால் நடிக்க முடியாமல் ஒரே கதையை மட்டும் நடித்து தனக்கேனே ஒரு அரை குறை ரசிகர் வட்டத்தை வைத்து கொண்டு தமிழ் சினிமாவி கேவலப்படுத்தும் சில நடிகரை குறை சொல்லுங்கள் அதை விட்டு விட்டு
இப்போது இருக்கும் காலகட்டத்தில் நூறு சதம் அனைவரும் விரும்பும் படத்தை எப்படி பட்ட கொம்பனாலும் தர முடியாது .இப்போது இருக்கும் தொழினுட்ப முன்னேற்றம் காரணாமாக அயர்லாந்து படத்தை பற்றி ஆயக்குடி காரன் கூட தெரிந்து வைத்து இருக்கும் இந்த காலத்தில்
" விமர்சனாம் எழுதுகிறேன் பேர்வழி என்று நல்ல உழைப்பு உள்ள படங்கல்லை ஒரு நொடியில் கேவலப்படுத்த வேண்டாம் "
அப்படி இல்லை என்றால் உங்களிடம் இருக்கும் நல்லள சிந்தனைகளை நல்ல கதையை பதிவாக போடவும்
நீங்கள் பதிவை போட்டு கேவலப்படுத்த என்று தனி தகுதி உள்ள ஆட்கள் உள்ளார்கள் அவர்களை உங்கள் பதிவு மூலம் சொல்லவும்
ஒரே மாதிரி நடிக்கும் நடிகர் அதையும் பெருமையாக பேசும் நடிகர் வித்தியாசமாக நடிக்க தெரியாத நடிகர் என்று பல பேர் உள்ளார்கள் அவர்களை மட்டும் குறை சொல்லவும்
" ஒரு பொருளால் கிடைக்கும் லாபமும் நஷ்டமும் அந்த பொருளை உரிமையாக கொண்டு இருக்கும் நபருக்கு தான் தெரியும் "
யாருடைய படத்தையும் குறை சொல்லி அவரின் உழைப்பை நஷ்டப்பத்த வேண்டாம்
அடுத்தவனின் பணம் நஷ்டம் அடைந்தால் அது நமக்கு செய்தியாக தெரியும் "
அதே பணம் நம் பாக்கெட்டில் இருந்து காணாமல் போனால் அப்போது அது நமக்கு வலியாக தெரியும்
வலியும் இன்பமும் அனுபவித்தால் தெரியும்
அன்புடன் ஹாய் அரும்பாவூர்
இப்போது இருக்கும் கால கட்டத்தில் நல்ல படமே ஓடாத போது ,நாம் ஏன் சார் இன்னும் ஓடாமல் செய்ய வேண்டும்
Tuesday, June 22
ராவணன் படமும் ராம் திரை அரங்கமும்
முன்னே மாதிரி இப்போ எல்லாம் இல்லை திருச்சி போய் தான் புது படம் பார்க்க வேண்டும் என்று இல்லை அதை விட குறைந்த செலவில் அதே ஒலி/ஒளி தரத்தில் பெரம்பலூரில் நல்ல திரை அரங்குகள் உள்ளன
என்ன ஒரு கொடுமை வெயில் நேரத்தில் மதிய நேரத்தில் தியேட்டர் உள்ளே போன கொஞ்சம் கஷ்டம் . திரை அரங்கில் புகை ,எச்சில் துப்புதல் ,முன் இருக்கும் இருக்கையில் கால் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னாலும் யாரும் அதை செய்வோம் என்று ஒரு குரூப் கத்தியது
" திரை படங்கள் பார்க்க போவதே ஒரு ஜஸ்ட் டைம் பாஸ் வேறு எதற்கும் இல்லை . இன்னும் சிலர் அவர்கள் குடும்பம் குழந்தைகள் உடன் வந்து இருப்பார்கள் ஆனால் இதை எல்லாம் மனதில் வைக்காமல் கேவலமாக மோசமான முறையில் கத்தும் சில பிறவிகளை என்னவென்று சொல்வது ,
"மிருகத்திற்கும் மனிதனுக்கும் இருக்கம் ஒரே வித்தியாசம் ஆறாவது அறிவு மட்டுமே அதையும் மறந்து மிருகம் போல கத்தும் சில பேரை வைத்து இதை எழுதினேன்.இது போன்ற ஆட்கள் நீங்கள் படம் பார்க்க விரும்ப வில்லை என்றால் தனியாக வீட்டில் பார்த்து கொள்ளவும் "
இது பற்றி நமக்கு எதற்கு திரை அரங்கு சென்று படம் பார்க்கும் போது இரண்டு விதமான படங்கள் பார்க்கலாம் என்று சொல்ல தோன்றும்
முதல் படம் பார்த்த கதை பழகிய முடிவு என்று இருந்தாலும் நம்மை கட்டி போடும் சிறப்பான திரை கதை மூலம் வெற்றி பெரும் சிங்கம் போன்ற படங்கள்
மற்றது திரை படத்திற்கு என சிறப்பான முறையில் உழைத்து நம்மை அந்த படம் பார்க்கும் போது அந்த திரை படம் நிகழும் காலத்திற்கு அந்த உலகத்திற்கு அழைத்து திரை படங்கள்
சிறந்த என்று என்று சொல்லலாம்
அந்த வகையில் திரை அரங்கில் மட்டுமே பார்க்க தகுந்த ஒரு நல்ல படம் என்று சொல்வதை விட. சிறந்த கலைஞர்களின் உழைப்பின் மூலம் வந்த சிறந்த படம் ராவணன்
சந்தோஷ் சிவன், மணிகண்டன், சுகாசினி ,ரஹ்மான், மணி ரத்னம் என்று சொல்லி கொண்டு போகலாம் .
படத்தை திரை அரங்கில் பார்க்கும் போது இந்த படத்தை எப்படி மணி சார் எடுத்தார் என்று கேட்க்க வைக்கும் படபிடிப்பு இடங்கள் மாயஜாலம் காட்டும் கேமரா .சிறப்பான இசை நிச்சயமாக ஐஸ்வர்யா விக்ரம் இந்த படத்திற்கென தனியாக உழைத்து உள்ளது தெரிகிறது
பிரபு கார்த்திக் ப்ரியாமணி ப்ரித்வி ராஜ்
படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞரை பற்றியும் சொல்ல வேண்டும் என்றால் பெரிய பதிவு தேவை
இந்த படத்தை பற்றி சிக்கனமாக சிறப்பாக சொல்ல வேண்டும் என்றால்
" இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் மறக்காமல் திரை அரங்கு சென்று மட்டும் பாருங்கள் அப்படி முடிய வில்லை என்றால் திருட்டு கேசட்டில் நிச்சயம் பார்க்க வேண்டாம் "
அது இது போன்ற நல்ல உழைப்பு உள்ள படங்கள் வருவதை தடுத்து மீண்டும் "வௌவால் ,நண்டு ,போலி ,போன்ற குப்பை படங்கள் வருவதற்கு நாமே வழி தருவது போன்றது
வாழ்துக்கள் மணி சார்
படத்திற்கு என்னோட ரேட்டிங் 8 .5 /10
" ராம் திரை அரங்கு நல்ல சிறப்பான ஒளி ஒலி வசதியுடன் குறைந்த செலவில் பார்க்க பெரம்பலூரில் சிறந்த திரை அரங்கம் ராம் திரை அரங்கம்"
Saturday, June 19
படிப்பு மட்டும் போதுமா ?
இப்போது உள்ள இளைய தலைமுறை எல்லா விஷயத்திலும் சிறப்பாக இருக்கின்றன்னர் அவர்களுக்கு நாம் படிப்பை பற்றியோ மற்ற விசயங்களை பற்றியோ சொல்ல தேவை இல்லை
வெறும் படிப்பு மட்டும் வெற்றி தராது படிப்புடன் கூடிய தேடல் தான் உண்மையான வெற்றி தரும் அப்படி பட்ட வேலை வாய்ப்புக்கு உதவும் சில வேலைவாய்ப்பு உதவும் இணைய தளங்கள்
உங்களை பற்றி விவரங்களை பதிவு செய்யுங்கள்
பல கற்களை எறிந்தால் ஒரு கல்லிலாவது பழம் விழாதா
முயற்சி இல்லாத வெற்றி வெற்றி பயன் அற்றது
1.www.jobsviewer.com 3.www.goldenjobs.com
2.www.gladoo.com 4.www.recruitersindia.net
5.www.cnewjobs.com 6.www.majesticjob.com
7.www.jobsitesindia.com 8.www.careerage.com
9.www.bpojobsite.com 9.www.bangalorebpoobs.com
10.www.indiaretailjobs.com 11.www.carreinda.com
12.www.oneclickjob.com 13.www.clickjobs.com
14.www.engineeringvacancy.com 15.www.naukrihub.com
16.www.goldenjobs.com 17.www.monsterindia.com
18.www.naukri.com 19.www.faayda.com
20.www. careerkhazana.com
Thursday, June 17
"அகரம்" அறம் செய விரும்பு
வருங்கால விடி வெள்ளி நாளைய தமிழகம் என்று பத்து ருபாய் நோட் புக்கை கொடுத்து விட்டு .செய்தி தாள்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து விட்டு லட்சம் லட்சமாக லாபம் பார்க்க விரும்பும் வியாபார மனிதர்களுக்கு முன் .
தன் தந்தை வழியில் ஆர்பாட்டம் இல்லாமல் பொது சேவை செய்வதில் சூர்யா இன்னுமொரு சிவகுமார் என்று அமைதியாக பெயர் எடுத்து உள்ளார்
தான் செய்யும் நல்ல விசயங்களை ஊருக்கு விளம்பரம் செய்து ரசிகர்களை ஏமாற்றும் சில நடிகர்கள் முன் விளம்பரம் செய்யாமல்
" சாப்பிட மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பதே சிறந்தது "
அந்த வகையில் அழிய செல்வம் என்று சொல்லப்படும் கல்வி செல்வதை வழங்கும் சூர்யாவின் அகரம் அமைப்புக்கு உதவி செய்வோம்
தன்னை நம்பி படம் பார்க்க வரும் ரசிகனை போஸ்டர் ஓட்டும் துதி பாடும் அடிமையாக மாற்றாமல் படம் பார்க்கும் ரசிகனாக மட்டும் வைக்கும் சூர்யாவிற்கு ஒரு
ஜெய் ஹோ
ஏழை மாணவர்களுக்கு என்று கல்வி வழங்க அகரம் என்று பௌண்டேசன் ஆரம்பித்து ஏழை மாணவர்களுக்கு, கல்வி கற்க இயலாத மாணவர்களுக்கு என்று அமைதியான முறையில் சேவை செய்து வரும் நடிகர் சூர்யா உண்மையிலே சிறந்த மனிதர்
மதத்திற்கு செய்யும் உதவியை விட மனிதனுக்கு செய்யும் உதவி சிறந்தது
Wednesday, June 16
டிஸ்கவரி என்னும் அறிவு தொலைக்கட்சி
டிஸ்கவரி தொலைக்கட்சி பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி அதில் எந்த வித மாற்றம் இல்லை
அதிலும் டிஸ்கவரி தொலைக்காட்சி இப்போது வழங்கி வரும் 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பு உண்மையாகவே சிறந்த ஒலிபரப்பு என்னபதில் எள்ளளவும் மாற்றம் இல்லை
இது போன்ற தொலைக்கட்சிகள் சராசரியாக பார்க்கும் மக்களுக்கு அதில் காட்டப்படும் அதிசயாமான காட்சிகளை பார்க்கும் மக்கள் அதில் கூறப்படும் கருத்து விரைவில் புரிய வாய்ப்பு இல்லை (இந்தகருத்து எல்லோருக்கும் பொருந்தாது )
அனால் இப்போது டிஸ்கவரி தமிழில் வழங்கி வரும் நிகழ்சிகள் அதன் தமிழ் ஆக்கம் உண்மையிலே சிறப்பானது.
இந்திய மொழிகளில் ஹிந்தி மொழிக்கு அடுத்து தமிழ் மொழியில் டிஸ்கவரி தன தமிழ் ஒளிபரப்பை வழங்குவது தமிழ் மக்கள் உண்மையிலே புதுமையை கரம் கொடுத்து வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்
மென் வேசாஸ் வைல்ட் , டெஸ்ட்ராயாட் செகண்ட்ஸ் ,வைல்ட் டிஸ்கவரி ,சர்வையர் மென் ,
இன்னும் பல நிகழ்சிகள் சொல்லி கொண்டு போகலாம்
தேவையற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு தொலைக்கட்சிக்கு கொடுக்கம் பணத்தை விட குறைவான அளவில் கொடுக்கும் பணத்தால் நம் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதுடன் நல்ல அறிவு சார்ந்த விஷயங்கள் எளிதாக புரிய சிறந்த தொலைக்காட்சி டிஸ்கவரி தொலைக்காட்சி என்று சொல்லலாம்
உங்களிடம் டி டி ஹெச் இருந்தால் மறக்காமல் டிஸ்கவரி தொலைக்கட்ச்யை சேர்த்து கொள்ளவும்
எளிய முறையில் லாங்குவேஜ் (மொழி மாற்ற பட்டனை அழுத்தி தமிழ் ஒளிபரப்பை மாற்றலாம் )
சன் டைரக்ட் என்றால் மாதம் ருபாய் 18 மட்டும் செலுத்தி இந்த ஒளிபரப்பை பெறலாம்
DTHஇல்லை என்றால் கேபிள் டிவி என்றால் மறக்காமல் உங்கள் கேபிள் ஆப்ரட்டர் இடம் கேட்டு டிஸ்கவரி தமிழ் ஒளிபரப்பை பெற்று பயன் பெறவும்
உருப்படாத நிகழ்சிகளுக்கு முன் டிஸ்கவரி தமிழ் ஒலிபரப்பு உண்மையிலே சிறந்த ஒன்று
ஒவ்வொவொரு வீட்டின் முன் நாம் வைக்கும் சிறிய மரமும் (பெரிய மரங்கள் வேண்டாம் சிறு செடிகள் )
ஒரு வீதிக்கு 50 வீடுகள் என்றால் இருபது வீதிக்கு 1000 மரங்கள் அல்லது செடிகள் இதற்காக நாம் தனியாக செலவு செய்ய போவது இல்லை
அந்த சிறு சிறு செடிகள் வரும் காலத்தில் நமக்கு எப்படி உதவி புரியும் என்று தெரிய வெயில் காலம் வரை காத்து கொண்டு இருக்க வேண்டும்
"நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் "
இயற்கை காக்க உதவி செய்வோம்
பணத்தை சட்டியில் போட்டு சோறு வடிக்க முடியாது
JUST DIAL பெஸ்ட் வெப் சைட்
இப்போ ஊரில் சிறந்த வெப்சைட் என்றால் அதை JUST DIAL வெப் சைட் என்று சொல்லலாம் இந்தியாவில் இருக்கும் பொது நமக்கு என்ன மாதிரியான விஷயம் தேவை நமக்கு தேவையான பொருள்கள் எங்கே கிடைக்கும் என்று கடை கடையாக தேடி அலையாமல் நமக்கு தேவையான் விஷயம் என்ன நாம் இருக்கும் பகுதி போன்றவைகளை கொடுத்தால் (நம் மெயில் முகவரி ,தொலை பேசி எண்கள் கொடுத்தால்
எண்ணி ஐந்து வினாடிகளுக்குள் நம் தேடும் பொருட்களை கொடுக்கும் நிறுவனத்தில் இருந்து தொலை பேசி வருகிறது. அவர்களின் விலை நிறுவனத்தின் முகவரி எல்லாம் தருகின்றனர்
ஒரே நேரத்தில் பல இடத்தில இருந்து பல விலைகள் பல சேவைகள் பற்றி தொலைபேசி வருவதால் நமக்கு தேவையான விலையில் தேவையான இடத்தில பொருள்களை வாங்கலாம்
எனக்கு எல்சிடி செட் செய்ய நல்ல ஆட்கள் தேவை என்று என் மெயில் முகவரி மற்றும் தொலை பேசி எண் கொடுத்தவுடன் சற்று நேரத்தில் திருச்சியில் இருந்து சிறந்த நிறுவனங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் உடனே கிடைத்தது
just dial இந்தியாவின் பெஸ்ட் வியாபார சர்ச் எஞ்சின் என்பது மிகை இல்லை
உங்களுக்கு நல்ல கம்ப்யூட்டர், மொபைல், கார் ,இடம் ,வீடு ,எது தேவையோ உங்கள் பகுதியில் சென்று சரியான விவரங்கள் கொடுத்தால் விரல் நுனியில் வேலை முடியும்
இந்த வசதி இந்தியாவில் மட்டுமே
ஜஸ்ட் டயல் பார்க்க பயன் பெற இதை அழுத்தவும்
பசுமை நிறைந்த இடங்களை அழித்து
செயற்க்கையான சொர்க்கத்தை உருவாக்கி
தனக்கு தானே சமாதி கட்டும்
மானிட விட்டில பூச்சிகள்
Tuesday, June 15
ஹாய் அரும்பாவூர் அரும்பாவூரில்
என்னடா தலைப்பே வித்தியாசமா இருக்கேன்னு நீங்க நினைப்பது எனக்கு தெரியும்
ஹாய் அரும்பாவூர் ஆரம்பித்த போது நான் அரும்பாவூரில் இல்லை வேலை துபையில். வேலையில் இருக்கும் போது விளையாட்ட ஆரம்பித்த வலை பதிவு எத்தனயோ சிறப்பான வலைப்பதிவுக்கு முன் என் வலைப்பதிவை ஆதரிது ஆதரவு தந்த உள்ளங்களுக்கு நன்றி
என்னடா இவன் இப்போ என்னதான் சொல்ல வர்றான் என்று நீங்கள் குழம்பும் முன் நானே நேரிடையாக விசயத்திற்கு வர்றேன்
ஹாய் அரும்பாவூர் என்று ஒரு ப்ளாக் இருபதே என் நண்பர்களுக்கும் சரி ஊரில் யாருக்கும் தெரிய வில்லை என்ன கொடுமை சார்? அதனால்தான் சொல்றேன்
எங்கு எங்கோ இருந்தோ நீங்கள் கொடுத்த ஆதரவால்தான் என் வலை பதிவு சுமாரான வெற்றி பெற்றது
சரியான வேகத்தில் இணைய வசதி கிடைக்கமால் தமிழ் டைப் அடிக்க முடியாமல் என்ன கொடுமை சார் !
இப்போ அண்ணன் அவர்களின் கடையில் இருக்கும் ரிலையன்ஸ் இணைய உதவியுடன் உங்களுடன் மீண்டும் மொக்கை பதிவு புகழ் ஹாய் அரும்பாவூர்
இப்போ நான் ஊருக்கு வந்த நேரம் ராவண் படம் ரிலிஸ் .திருச்சியில் சோனா திரை அரங்கு மற்றும் ரம்பா திரை அரங்கில் படம் போடுகின்றனர் எப்படியும் என் சாயிஸ் சோனா நல்ல சவுண்ட் வசதி இருக்கும்
ஊரில் என்ன வெயில் சார் அப்படின்னு பந்த காட்ட விரும்ப வில்லை.
எப்படி இருந்த ஊர் இப்போ மரம் இல்லை சரியான மழை இல்லை ஏரி குளம் எல்லாம் தண்ணிர் இல்லாமல் மேடு தட்டி ஒரு காலத்தில் நீர் வறட்சியை போக்கிய எல்லாம் வறண்டு போய் இருக்கு
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று சொல்லில் இருக்காமல் செயலில் காட்டுவோம்
ரஹ்மானின் ஜெய் ஹோ இசை விருந்து அமெரிக்காவில் களைகட்டி இருக்கும் என்று நினைக்கிறேன்
இதை பற்றி ஒரு தனி பதிவு விரவில்
எப்படியோ ராவண் படம் பார்த்து முதல் விமர்சனம் எழுத முயற்சி செய்கிறேன்
நீண்ட நாட்கள் சென்று எழுதும் பதிவிருக்கு உங்கள் ஆதரவு தேவை.
மறக்காமல் வோட்டு போடுங்க
.
Wednesday, June 9
சரியான மொக்கை பதிவு
மணி ரத்னம் படம் பாத்தால் எப்படி ஒரு பீலிங்கோ அப்படி ஒரு பீலிங் எனக்கு தமிழின் முதல் வீடியோ ஆன் டிமாண்ட் பற்றி பதிவுக்கு மதிப்பிர்க்குரியவர்கள்
என்ன அழகா ரத்ன சுருக்கமா ஒரு வரியில் சொல்லி வச்ச மாதிரி எல்லோரும் பின்னுட்டம் இட்டு உள்ளார்கள் என்று பார்க்கவும்
இன்னைக்கு பதிவு போடா வேற விஷயம் கிடைக்க வில்லை அதனால் தான் இந்த மொக்கை பதிவு மீண்டும் சொல்கிறேன் திட்டாமல் படிக்கவும்
சோம்பேறி கேள்வி பட்டு இருப்பிர்கள் நான் எப்படி பட்ட சோம்பேறி என்று தெரிய வில்லை பின்னுட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் பதில் பின்னுட்டம் போடாமல் இருப்பதில் ஐயா ஒரு பெரிய சோம்பேறி
என்னை மன்னித்து உங்கள் ஆதரவை மறக்காமல் தரவும் நன்றியுடன்
ட்விட்டரில் நமிதா இணைந்து உள்ளார் என்ற நல்ல செய்தியுடன்
தனுஷ் மாதவன் த்விட்டேர் விலாசம் கீழே
http://twitter.com/dhanushkraja
http://twitter.com/ACTORMADHAVAN
ஹரிஷ் ஜெயராஜ் த்விட்டேர்
http://twitter.com/harrisjayaraj
Tuesday, June 8
தமிழின் முதல் வீடியோ ஆன் டிமான்ட்
இது வரை ஹிந்தி திரை படங்களும் தெலுங்கு மொழி படங்களிலும் இருந்து வந்த பணம் கட்டி DTH இல் படம் பார்க்கும் வசதி
சன் டைரக்டில் வரும் வாரம் முதல் ஆரம்பம்.
முதல் படமே சென்ற ஆண்டின் சூப்பர் டுப்பார் ஹிட் அயன்
வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் படம் ஒளிபரப்பப்படும்
படம் பார்க்க கட்டணம் ருபாய் 50 மட்டுமே
காட்சி நேரம் கலை 10 மணி ,மதியம் 3 மணி , மற்றும் இரவு 9 மணி தமிழின் சிறப்பான சூப்பர் ஹிட் திரைப்படம் துல்லிய தரத்தில் பார்க்க
மறக்காமல் பார்க்கவும் SUN DIRECT DTH
என்னதான் சன் டிவி அரசியலை பயன்படுத்தி முன்னேறியது என்று பலரும் சொன்னாலும் .பரவலான முறையில் மக்கள் மனதை கவர நல்ல திறமை தேவை அந்த வகையில் சன் டிவி சிறந்த தொலைக்காட்சி என்பேன்
சன் டிவி கலாநிதி மாறன் பற்றி பதிவிற்கு
அபிராமி பேஷன் அவர்கள் எழுதிய பின்னுட்டம் கீழே
Kalanithi Maran is a great business magnet from Tamil nadu.Even on their family problem time they maintain SUN TV as NO:1 in Tamilnadu. Past of the years cine field peoples cry because of SUN TV they can't earn in film producing .Now SUN buying the films and distributing by own they not failure.Rajinikanth recommend for ENTHIRAN problem to approach SUN groups. They immediately inversed and continue the shooting apart from that Kalanithi maran giving a big amount for poor peoples every year through MARAN TRUST they not advertise this .They silently selecting the peoples who is poor for medical,education etc .They grow support of DMK in begining stage but SUN BRAINS help to win DMK in lok sabha and state elections.Mr.Stalin observed the SUN brains strength so that he not leave maran brothers
Monday, June 7
அமெரிக்கா ரஹ்மான் ரசிகர்கள் இசை நிகழ்ச்சி பார்க்க ஒரு சான்ஸ்
எதோச்சையா இணையத்தில் ஒரு விளம்பரம் பார்த்தேன் .இது நமக்கு இல்லை அமெரிக்காவில் வாழும் ரஹ்மான் ரசிகர்களுக்கு mtv இசை நிறுவனம் அமெரிக்காவில் ஐந்து நகரத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சி ஒவ்வொன்றுக்கும் இரண்டு ரசிகர்களுக்கு சாதாரண சான்ஸ் இல்ல விஐபி (VIP) டிக்கெட் தருகிறது
நிகழ்ச்சிக்கு முன் ரஹ்மானை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும்
இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த இணைய தளத்தில் சென்று விரிவான விவரங்களை பார்த்து கொள்ளவும்
போட்டியில் கலந்து கொண்டு ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு சான்ஸ் கிடைக்க வாழ்துக்கள்
அமெரிக்காவில் நடைப்பெறும் ஐந்து நிகழ்ச்சிக்கு இந்த போட்டி கேள்விகள் இல்லை வெறும் விவரம் மட்டுமே. அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடைப்பெறும் பகுதியில் வாழ்பவர்கள் மறக்காமல் கலந்து கொள்ளவும்
mtv ரஹ்மான் இசை நிகழ்ச்சி கலந்து கொள்ள பதிவு செய்ய இந்த இணைய தளம் சென்று பார்க்கவும்
பதிவு செய்ய இங்கே அழுத்தவும்
மற்ற பகுதியில் வாழ்பவர்கள் பார்த்தவர்கள் எழுதும் பதிவை படிக்கலாம்
ஜெய் ஹோ ரஹ்மான்
அமெரிக்கா இருக்கும் ரஹ்மான் ரசிகர்களே கலக்குங்க
Saturday, June 5
சனியன்கள் ஒழிந்தன ?
இந்த பதிவில் தமிழ் திரை உலகை கேவலமான நிலைக்கு கொண்டு செல்ல இருந்த சில நடிகர்களின் தொடர் தோல்வி பற்றி
நிச்சயம் இந்த நடிகர்களின் தோல்வி மூலம் நஷ்டம் அடைந்த திரை அரங்க உரிமையாளர்கள் வேறு நல்ல நடிகர்கள் மூலம் லாபம் பார்க்க வாழ்த்துக்கள்
நிச்சயம் படம் என்னும் ஒரு விஷயம் ஒரு பொழுது போக்கு மட்டுமே ஆனால் அதை ஒவ்வொரு சராசரி ரசிகனின் ரசிக்கும் விதத்தை மாற்றி அவனை மேலும் முட்டாள் ஆக்கும் கதை மட்டுமே தேர்ந்த்தெடுத்து .
ரசிகன் என்பவனை தன படம் மட்டுமே பார்க்க வைக்கும் ஒரு விளங்காத மனிதனாக மாற்றி .நடக்க முடியாத நடக்காத தன்னால் முடியாத விசயங்களை தன்னால் முடியும் என்று அவனை ஏமாற்றி .
குளிர் காய்ந்த இது போன்ற உருப்படாத நடிகர்கள் எவன் பெத்த பிள்ளைகளை தன் அடியாளாக தன் அடிமை போன்று சித்தரித்து வசனம் பேசி
(நான் உம்முன்னு ஒரு வார்த்தை சொன்ன எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு ,இவனுங்க எல்லாம் எனக்காக உயிரை கூட கொடுப்பானுங்க இன்னும் இருக்கு )
என்ன கொடுமை சார் இவர் மட்டும் தன் தாய் தந்தைக்கு நல்ல மகனாக சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் தன் குழந்தைக்கு ஒரு நல்ல அப்பனாக இருக்க வேண்டும் ,தன் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக இருக்க வேண்டும் அவரி நம்பி படம் பார்க்கும் ரசிகன் மட்டும் குடும்பம் இல்லாத அனாதை என்று ஒரு நினைப்பு .
தன் படத்திற்கு போஸ்டர் ஒட்டவும் ,படபெட்டியை எடுத்து வரும் பொதி மாடு போல நடத்தும் இவர்கள் போன்ற நடிகர்களை சொல்வதா அல்லது இவர்களை நம்பும் நாளைய உண்மையான் இந்திய நாயகர்களை சொல்வதா
ஜாக்கிசான் காட்டாத ஆக்சன் காட்சியா ?மிஷன் இம்பாசிபிள் படத்தில் டாம் க்ருஸ் காட்டாத ஆக்சனா ?இப்படி எதனையோ சொல்லி செல்லலாம் ஆனால் இங்கு மட்டும் இந்த அரை குறை நடிகர்கள் தங்களுக்கு ஒரு பட்டம் சூட்டி இன்னும் எதனை நாட்கள் மோசம் செய்வார்கள்
கதையில் வரும் கதாபாத்திரம் பற்றி வசனம் இருந்தால் சரி ஒவ்வொரு படத்திலும் தன்னை பற்றி நான்கு கைத்தடிகளை பேச வைத்து தன் போட்டி நடிகரை மறை முகமாக திட்டி
அண்ணன் தம்பியாக பழகி வரும் நண்பர்களுக்குள் சண்டை மூட்டி தன் படத்தின் வெற்றி பற்றி யோசிக்கும் இந்த மாதிரி அரை குறை நடிகர்கள் படங்கள் தொடர் தோல்வி அடைய வாழ்துவோம்
முடிந்த வரை இது போன்ற நடிகர்கள் படத்தை பற்றி நல்ல விதமாக எழுதாமல் இருப்போம்
சரி யார் அந்த நாயகர்கள் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது
அவனுங்க பேரு எதுக்கு சார் நமக்கு தேவை நல்ல டைம் பாஸ் உள்ள நல்ல படங்கள் மட்டுமே
Friday, June 4
ரஹ்மானின் உலக இசை பயணம்
ஜூன் 11 முதல் ரஹ்மான் உலக தர இசை பயணம் "எ ஆர் ரஹ்மான் ஜெய் ஹோ கான்சர்ட் "
சில இசை துளிகள்
ஜூன் 11 முதல் நியூ யார்க் நாசாவு கலோசின் அரங்கில் தொடங்குகிறது
ஜூலை 5 லண்டன் வெம்ப்ளி அரங்கில் முடிகிறது
நியூ யார்க் இசை நிகழ்ச்சயில் ஜெய் ஹோ சர்கிள் பகுதியில் இசை கேட்க்க ரூ .50 ,000
புகழ் பெற்ற ஆடை அலங்கார நிபுணர் ரிட்டு பெரி இந்த இசை நிகழ்ச்சிக்கு 300 விதமான ஆடைகள் வடிவைமைத்து
உள்ளார்
ஒரு இந்திய இசை அமைப்பாளர் இசை நிகழ்ச்சி இந்திய தாண்டி உலக அளவில் இந்த அளவில் பிரமாண்ட அளவில் நடை பெறுவது ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு மட்டுமே
நல்ல இசை கேட்க்க மொழி தேவை இல்லை என்று நிறுபித்தது ரஹ்மானின் இசை உலக அளவில் இந்த அளவிற்கு புகழ் பெற்றது ஒரு சான்று
ரஹ்மானின் இசையில் ஒரு குஜராத் தீம் சாங்
IPL SONGS
சின்ன கவிதை
தாய்மைக்கு மாறும் மாற்றங்களை
காமத்திற்கு மாற்றும்
(அ)நாகரிகக உடைகள்
Wednesday, June 2
தனியார் பள்ளிகளும் அப்பாவி மக்களும்
"என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில் "
பள்ளி கல்வி பற்றிய பதிவிற்கு ஏன் இந்த வசனம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது
நம் மக்களுக்கும் இருக்கும் இந்த தனியார் பள்ளி மோகம் வர காரணம் ஏன் .அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளியில் சேர்த்தால் தன் குழந்தைகள் எதிர் காலம் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வர காரணம் என்ன
அரசு பள்ளிகளில் இலவச கல்வி இருந்தும் .அதை கூட நம்பாமல் மக்கள் தனியார் பள்ளியில் சேர்த்தால் தான் குழந்தையின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும் எண்ணம் ஒரு பலமான அஸ்திவாரம் போல் மாறி பல காலம் ஆகி விட்டது
அப்படி என்றால் அரசு பள்ளிகளில் சரியான கல்வி இல்லையா ?
தன்னுடைய வருமானத்திற்கும் மீறி அதிக படியான செலவு செய்து தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் இந்த விஷயம் இப்போது மிகவும் நாகரிகமாக மாறி விட்டது
என்னை பொறுத்த வரை மிகவும் அதிகமான பெற்றோர் தன் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க காரணம் வீட்டில் தன் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க நேரம் இல்லாதது
மற்றும் தனியார் பள்ளிகள் என்றால் தங்கள் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மிகவும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றால் .தங்கள் பள்ளிக்கு நல்ல பெயர் கிடைப்பதுடன் வரும் காலங்களில் இந்த தேர்வு முடிவுகளை காட்டி அதிகப்படியான விளம்பரம் செய்து இன்னும் வருமானம் பார்க்கலாம்
இந்த விசயத்தில் தனியார் பள்ளிகளை குறை சொல்ல முடியாது .ஏன் என்றால் இலவசமாக தர இது ஒன்றும் அரசு பள்ளி இல்லை பள்ளியில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் தர வேண்டும் வாகன செலவு பள்ளி பராமரிப்பு செலவு என பல செலவுக்கு பின் தான் அவர்கள் தேர்வு நேரத்தில் நல்ல தேர்வு முடிவுகளை காட்டி ஒரு நிலையான இடத்தை அடைய முடியும் .
அதாவது குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களின் அதிகப்படியான உழைப்பில் சிறப்பான தேர்வு முடிவுகள் வரும் போது
அதை விட அதிக சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் சொல்லி கொடுக்கும் மாணவர்கள் குறைந்த தேர்வு முடிவுகள் பெற காரணம் என்ன ?
இப்போது வந்த தேர்வு முடிவுகள் அதிக அளவில் அரசு பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி விகிதம் காட்டி வருகிறது .ஆனால் இதே போல் எல்லா அரசு பள்ளிகளிலும் வராமல் போவதிற்கு யார் காரணம் ?
ஒரு நல்ல தலைமை அமைந்தால் வெற்றி எல்லோருக்கும் கிடைக்கும் அரசு பள்ளிகள் பற்றி மக்கள் இடம் இருக்கம் தவறான கருத்தை மாற்றி தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்தது என்று மாற்ற அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களால் மட்டுமே முடியும்
மீண்டும் படியுங்கள் " என்ன தகுதிகள் இல்லை அரசு பள்ளியில் ஏன் அலைய வேண்டும் தனியார் பள்ளிகளில் "
- அரசு பள்ளிகளில் மாதம் ஒரு முறை கண்டிப்பாக பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு நடத்த வேண்டும்
- கற்றல் திறமை குறைவாக உள்ள மாணவர்களை தனிய தனி பயிற்சி கொடுத்து அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய சிறப்பு பயிற்சி கொடுத்தல் மற்றம் பெற்றோர்களிடம் குழந்தைகள் எதிர்காலம் பற்றி பேச வேண்டும்
- மாணவர்களுக்கு கல்வி பற்றி விஷயத்துடன். அவர்களுக்கு எதிர்காலத்திற்கு உதவும் மன தைரியம் பற்றி பயிற்சிகள் அளிக்க வேண்டும்
- தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்களுக்கு தேர்வு பற்றிய பயம் போக்க தனி பயிற்சிகள் அழைக்க வேண்டும்
- தேர்வுக்கு பின் எந்த விதமான படிப்பு படிப்பது பற்றி பல் துறை வல்லுனர்களை அழைத்து கலந்தாய்வு நடத்த வேண்டும்
எது எப்படியோ தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்ததுதான் .ந ஆசிரியர்கள் படிக்கும் மாணவர்கள் தங்கள் குழந்தைகள் போல நினைத்து அவர்கள் எதிர்காலத்திற்கு சிறப்பான முறையில் உழைத்தால் .
அரசு பள்ளிகள் பற்றி மக்கள் இடம் இருக்கும் தவறான எண்ணம் மாறும்
எது எப்படியோ இந்த கருத்தில் உங்கள் நிலை என்ன மறக்காமல் பின்னுட்டம் இடவும்
"மழை வருது மழை வருது" பதிவை படிக்க இதை அழுத்தவும் "
Subscribe to:
Posts (Atom)