Tuesday, June 22

ராவணன் படமும் ராம் திரை அரங்கமும்


          முன்னே மாதிரி இப்போ எல்லாம்
இல்லை  திருச்சி போய் தான் புது படம் பார்க்க வேண்டும் என்று இல்லை அதை விட குறைந்த செலவில் அதே ஒலி/ஒளி  தரத்தில் பெரம்பலூரில் நல்ல திரை அரங்குகள் உள்ளன
    என்ன ஒரு கொடுமை வெயில் நேரத்தில் மதிய நேரத்தில் தியேட்டர் உள்ளே போன கொஞ்சம் கஷ்டம் . திரை அரங்கில் புகை ,எச்சில் துப்புதல் ,முன் இருக்கும் இருக்கையில் கால் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னாலும் யாரும் அதை செய்வோம் என்று ஒரு குரூப் கத்தியது

   " திரை படங்கள் பார்க்க போவதே ஒரு ஜஸ்ட் டைம் பாஸ் வேறு எதற்கும் இல்லை . இன்னும் சிலர் அவர்கள் குடும்பம் குழந்தைகள் உடன்  வந்து இருப்பார்கள்  ஆனால் இதை எல்லாம் மனதில் வைக்காமல் கேவலமாக மோசமான முறையில் கத்தும் சில பிறவிகளை என்னவென்று சொல்வது ,
      "மிருகத்திற்கும் மனிதனுக்கும் இருக்கம் ஒரே வித்தியாசம் ஆறாவது அறிவு மட்டுமே அதையும் மறந்து மிருகம் போல கத்தும் சில பேரை வைத்து இதை எழுதினேன்.
இது போன்ற ஆட்கள்  நீங்கள் படம் பார்க்க விரும்ப வில்லை என்றால் தனியாக வீட்டில் பார்த்து கொள்ளவும்  "           

        இது பற்றி நமக்கு எதற்கு திரை அரங்கு சென்று படம் பார்க்கும் போது இரண்டு விதமான படங்கள்  பார்க்கலாம் என்று சொல்ல தோன்றும்
முதல் படம்  பார்த்த கதை பழகிய  முடிவு என்று இருந்தாலும் நம்மை கட்டி போடும் சிறப்பான திரை கதை மூலம் வெற்றி பெரும் சிங்கம் போன்ற படங்கள்
மற்றது திரை படத்திற்கு என சிறப்பான முறையில் உழைத்து நம்மை அந்த படம் பார்க்கும் போது அந்த திரை படம் நிகழும் காலத்திற்கு அந்த உலகத்திற்கு அழைத்து
திரை படங்கள்
  சிறந்த என்று  என்று சொல்லலாம்
             
           அந்த வகையில் திரை அரங்கில் மட்டுமே பார்க்க தகுந்த ஒரு
நல்ல படம் என்று சொல்வதை விட. சிறந்த கலைஞர்களின் உழைப்பின் மூலம் வந்த சிறந்த படம் ராவணன் 

             சந்தோஷ் சிவன், மணிகண்டன், சுகாசினி ,ரஹ்மான், மணி ரத்னம் 
என்று சொல்லி கொண்டு போகலாம் .
  படத்தை திரை அரங்கில் பார்க்கும் போது இந்த படத்தை எப்படி மணி சார் எடுத்தார் என்று கேட்க்க வைக்கும் படபிடிப்பு இடங்கள் மாயஜாலம் காட்டும் கேமரா .சிறப்பான இசை நிச்சயமாக ஐஸ்வர்யா விக்ரம் இந்த படத்திற்கென  தனியாக உழைத்து உள்ளது தெரிகிறது
பிரபு கார்த்திக் ப்ரியாமணி ப்ரித்வி ராஜ்
படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞரை பற்றியும் சொல்ல வேண்டும் என்றால் பெரிய  பதிவு  தேவை

   இந்த படத்தை பற்றி சிக்கனமாக சிறப்பாக சொல்ல வேண்டும் என்றால்
                    " இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் மறக்காமல் திரை அரங்கு சென்று மட்டும் பாருங்கள் அப்படி முடிய வில்லை என்றால் திருட்டு கேசட்டில் நிச்சயம் பார்க்க வேண்டாம் "
  அது இது போன்ற நல்ல உழைப்பு உள்ள படங்கள் வருவதை தடுத்து மீண்டும் "வௌவால் ,நண்டு ,போலி ,போன்ற குப்பை படங்கள் வருவதற்கு நாமே வழி  தருவது போன்றது


          வாழ்துக்கள் மணி சார்

படத்திற்கு என்னோட ரேட்டிங்   8 .5 /10 
                "
ராம் திரை அரங்கு நல்ல சிறப்பான ஒளி ஒலி வசதியுடன் குறைந்த செலவில் பார்க்க பெரம்பலூரில் சிறந்த திரை அரங்கம் ராம் திரை அரங்கம்"

4 comments:

 1. படம் மொக்கை. DVD யில் பார்க்கலாம். தியேட்டர் போக தேவையில்லை

  ReplyDelete
 2. எனக்கும் படம் பிடித்திருக்கு, ஆனால் குறை சொல்லவேண்டுமென்று சொல்பவர்களை என்ன செய்வது?

  ReplyDelete
 3. Why DVD? Just watch in net.. In few days good print will be available, but i do not think we will have patience to watch..

  Mani Ratnam is like a good copier machine (Xerox) copies from HW...

  ReplyDelete
 4. hai i study in rover(96-99), i go raja,samy&ram theater. now ram theater OKva

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை