"என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில் "
பள்ளி கல்வி பற்றிய பதிவிற்கு ஏன் இந்த வசனம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது
நம் மக்களுக்கும் இருக்கும் இந்த தனியார் பள்ளி மோகம் வர காரணம் ஏன் .அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளியில் சேர்த்தால் தன் குழந்தைகள் எதிர் காலம் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வர காரணம் என்ன
அரசு பள்ளிகளில் இலவச கல்வி இருந்தும் .அதை கூட நம்பாமல் மக்கள் தனியார் பள்ளியில் சேர்த்தால் தான் குழந்தையின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும் எண்ணம் ஒரு பலமான அஸ்திவாரம் போல் மாறி பல காலம் ஆகி விட்டது
அப்படி என்றால் அரசு பள்ளிகளில் சரியான கல்வி இல்லையா ?
தன்னுடைய வருமானத்திற்கும் மீறி அதிக படியான செலவு செய்து தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் இந்த விஷயம் இப்போது மிகவும் நாகரிகமாக மாறி விட்டது
என்னை பொறுத்த வரை மிகவும் அதிகமான பெற்றோர் தன் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க காரணம் வீட்டில் தன் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க நேரம் இல்லாதது
மற்றும் தனியார் பள்ளிகள் என்றால் தங்கள் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மிகவும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றால் .தங்கள் பள்ளிக்கு நல்ல பெயர் கிடைப்பதுடன் வரும் காலங்களில் இந்த தேர்வு முடிவுகளை காட்டி அதிகப்படியான விளம்பரம் செய்து இன்னும் வருமானம் பார்க்கலாம்
இந்த விசயத்தில் தனியார் பள்ளிகளை குறை சொல்ல முடியாது .ஏன் என்றால் இலவசமாக தர இது ஒன்றும் அரசு பள்ளி இல்லை பள்ளியில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் தர வேண்டும் வாகன செலவு பள்ளி பராமரிப்பு செலவு என பல செலவுக்கு பின் தான் அவர்கள் தேர்வு நேரத்தில் நல்ல தேர்வு முடிவுகளை காட்டி ஒரு நிலையான இடத்தை அடைய முடியும் .
அதாவது குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களின் அதிகப்படியான உழைப்பில் சிறப்பான தேர்வு முடிவுகள் வரும் போது
அதை விட அதிக சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் சொல்லி கொடுக்கும் மாணவர்கள் குறைந்த தேர்வு முடிவுகள் பெற காரணம் என்ன ?
இப்போது வந்த தேர்வு முடிவுகள் அதிக அளவில் அரசு பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி விகிதம் காட்டி வருகிறது .ஆனால் இதே போல் எல்லா அரசு பள்ளிகளிலும் வராமல் போவதிற்கு யார் காரணம் ?
ஒரு நல்ல தலைமை அமைந்தால் வெற்றி எல்லோருக்கும் கிடைக்கும் அரசு பள்ளிகள் பற்றி மக்கள் இடம் இருக்கம் தவறான கருத்தை மாற்றி தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்தது என்று மாற்ற அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களால் மட்டுமே முடியும்
மீண்டும் படியுங்கள் " என்ன தகுதிகள் இல்லை அரசு பள்ளியில் ஏன் அலைய வேண்டும் தனியார் பள்ளிகளில் "
- அரசு பள்ளிகளில் மாதம் ஒரு முறை கண்டிப்பாக பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு நடத்த வேண்டும்
- கற்றல் திறமை குறைவாக உள்ள மாணவர்களை தனிய தனி பயிற்சி கொடுத்து அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய சிறப்பு பயிற்சி கொடுத்தல் மற்றம் பெற்றோர்களிடம் குழந்தைகள் எதிர்காலம் பற்றி பேச வேண்டும்
- மாணவர்களுக்கு கல்வி பற்றி விஷயத்துடன். அவர்களுக்கு எதிர்காலத்திற்கு உதவும் மன தைரியம் பற்றி பயிற்சிகள் அளிக்க வேண்டும்
- தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்களுக்கு தேர்வு பற்றிய பயம் போக்க தனி பயிற்சிகள் அழைக்க வேண்டும்
- தேர்வுக்கு பின் எந்த விதமான படிப்பு படிப்பது பற்றி பல் துறை வல்லுனர்களை அழைத்து கலந்தாய்வு நடத்த வேண்டும்
எது எப்படியோ தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்ததுதான் .ந ஆசிரியர்கள் படிக்கும் மாணவர்கள் தங்கள் குழந்தைகள் போல நினைத்து அவர்கள் எதிர்காலத்திற்கு சிறப்பான முறையில் உழைத்தால் .
அரசு பள்ளிகள் பற்றி மக்கள் இடம் இருக்கும் தவறான எண்ணம் மாறும்
எது எப்படியோ இந்த கருத்தில் உங்கள் நிலை என்ன மறக்காமல் பின்னுட்டம் இடவும்
"மழை வருது மழை வருது" பதிவை படிக்க இதை அழுத்தவும் "
நல்ல விஷயம் .தற்போது தேவையான தகவல் ..
ReplyDeleteஇப்பதாங்க அழுதுட்டு வந்தேன்.... அவர்களை ஒண்ணுமே பண்ண முடியாது தல..
ReplyDeleteநல்லா சொல்லிரிக்கிங்க.. நல்ல பதிவு
ReplyDeleteஆரம்ப வகுப்புகளில் நிச்சயம் ஆசிரியர்கள் தயவு தேவை என்பதால் மாணவர்களிடம் அதிக சிரத்தை எடுக்கும் தனியார் கல்லூரியை நாடுகின்றனர். அதற்காக தனியார் கல்லூரியை ஆதரிக்கின்றேன் என்று அர்த்தமில்லை.
ReplyDeleteநல்ல சொன்னிங்க தலைவா...
ReplyDeleteஸ்ரீ.கிருஷ்ணா
ReplyDeleteநன்றி கிருஷ்ணா
கே.ஆர்.பி.செந்தில்
உங்கள் வருகைக்கு நன்றி செந்தில்
Riyas
அப்புறம் எப்படி அபுதாபி வாழ்க்கை
முடிந்தால் அபுதாபி வந்தால் பார்க்கிறேன்
ஜீவதர்ஷன்
நண்பன் வருகைக்கு நன்றி அதிரடி எப்பூடி
soundar
சௌந்தர் வருகைக்கு வந்தனம்
Hai Arumbavur...........?
ReplyDeleteAre You the Arumbavur..which is nearby to poolaambadi!? in Perambalur Dist....
?