Thursday, June 24

உழுதவன் கணக்கு


அந்த மிக பெரும் சூப்பர் மார்கெட் அஸ்வின் ரம்யா சென்ற நேரம் மிகவும் குறைவான அளவில் கும்பலுடன் இருந்தது .முழுவதும்  குளிருட்டப்பட்ட அந்த அங்காடி ஒரு மேட்டுகூடி  மக்களுக்கு ஏற்ற அளவில்  ஆடம்பரமாக இருந்தது
  " என்னங்க எனக்கு தாகமா இருக்கு கூல்ட்ரிங்க்ஸ் வேண்டும்" என்று  தன் கணவன்இடம் கேட்டால்  ரம்யா

ஏன் இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட்ல கூல்ட்ரிங்க்ஸ் இருக்காதா"
போய்  பாரு  என்று சொல்லிக் கொண்டு அஸ்வின் தனக்கு தேவையான அழகு சாதன பொருட்கள் வாங்க அழகுசாதன  பொருட்கள் இருக்கும் பகுதிக்கு சென்றான்.
    இருபது நிமடங்கள் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு அஸ்வின் ரம்யா  தங்கள் காரை நிறுத்தி இருக்கும் பகுதிக்கு சென்றனர்


காரில் சென்று கொண்டு இருக்கும் போது ரம்யா தன் கணவனை பார்த்து  கேட்டால் "என்னங்க உள்ளே எல்லா பொருளும் விலை அதிகமா இருக்கு நீங்கள் அதை பற்றி கொஞ்சம்  கூட யோசிக்காமா பணத்தை அள்ளி தர்றிங்க இதே பொருட்கள் வெளியே விலை குறைவா இருக்கு ஆனா நீங்க அங்கே பணம் தர ரொம்ப யோசனை செய்றிங்க " என்று தன் மனத்தில் இருந்தததை கணவன் இடம் கேட்டால் ரம்யா
 
இங்க பாரு இப்படி எல்லாம் நாம் செலவு செய்த தான் நமக்கு மரியாதை. மாதம் 10 ஆயிரம்  சம்பளம் கிடைத்த போதும் என்று நினைதேன்.
இன்று நம் நிலைமை அப்படியா லட்சம் ருபாய் சம்பளம். காரணம் என்ன
இதே மாதிரி மற்றவர்கள் செலவு செய்ததால் தான் அதிக அளவில் வருமானம் வந்து நமக்கு இந்த சம்பளம் கிடைக்கிறது 

அதனாலதான் இது மாதிரி ஆடம்பரமான இடங்களில் அதிகமா எதுவும் கேட்க்காம  செலவு செய்கிறேன் என்று சொல்லி தன் மனைவி வாயை  மூடினான்
.

     கொஞ்சம் நேரம் அமைதியாக இருவரும் அமைதியாக சென்று கொண்டு இருந்தனர் ரோட்டோரடில் ஒரு வயாதான பெண்மணி  வெள்ளரி காய்களை விற்று கொண்டு இருந்தால்
 
   எங்க  கொஞ்சம் நிப்பாட்டுங்க வெள்ளரி பிஞ்சு வாங்கணும் என்று கணவனிடம் கூறினால்

 
“ஏண்டி உனக்கு புத்தியே இல்லையா அங்கே  எவ்வளவு ஹைஜீனிக்  காய் கறி அதை எல்லாம் விட்டு ரோட்டோரத்தில் இந்த “ச்சே உன்னை திருத்தவே முடியாது”


    என்று புலம்பி கொண்டு வண்டியை  ஓரமாக நிறுத்தினான்
"ஏம்மா  இந்த வெள்ளரி காய் விலை எவ்வளவு"
"கூறு  இருபது ருபாய் மட்டும் தான் தாய் !
அந்த சூப்பர் மார்க்கெட்டை விட விலை குறைவாக  நன்றாக இருப்பது அவளுக்கு தெரிந்தாலும் அஸ்வின் அதை எல்லாம் சட்டை செய்யாமல்
வேண்டா வெறுப்பாக இருபது ரூபாயை நீட்டினான்

         அவர்களுக்கு மிக அருகில் மற்றும் ஒரு குளிர்சாதன விலை உயர்ந்த கார் நின்றது
அதில் இருந்து பார்பதற்கு மிகவும் ஆடம்பரமான ஒரு தம்பதி தங்கள் குழந்தைகளுடன் இறங்கி வெள்ளரி விற்ற அந்தவயாதான பெண்மணி இடம் “பாட்டி அந்த வெள்ளரி பிஞ்சை கொடு என்று வாங்கி கொண்டு அவர்களிடம் இருந்த துணி பையில் போட்டனர் “
அப்போது அதை திங்க எடுத்த அந்த அவர் மகனிடம்  “டேய் இப்போ வேணாம் வீட்டில் போய் நல்ல கழுவி அப்புறம் சாப்பிடு ஏன்னா ரோட்டோரம் தூசி எல்லாம் இருக்கும் கழுவி சாப்பிடனும் “
பாட்டி எவ்வளவு என்று கேட்ட அவனிடம் இருபது ருபாய்தான்

என்று சொன்ன கிழவியிடம் ஐம்பது ருபாய் கொடுத்து மீதியை நீயே வச்சிக்க என்று சொன்ன அவனை ஒரு மாதிரியாக பார்த்தன் அஸ்வின்

     “எங்க எதற்கு அந்த கிழவிக்கு முப்பது ருபாய் கொடுத்திங்க என்று கேட்ட அவன் மனைவியை நோக்கி சொன்னான் 
“நீ ஏன் கேட்க்கிறாய் அப்படின்னு எனக்கு தெரியும் அந்த விரைவு உணவு கடையில்  டிப்ஸ் கொடுக்க சொன்னே நான் தரவில்லை இங்கே ஏன் தர்றேன்னு கேட்க்கிறே

நாம அங்கே சாப்பிட்டது ஆடம்பரத்திற்கு அதனால் ஒரு பயன் இல்லை அது மட்டும் இல்லாமல் அங்கே இருப்பவனுக்கு நிலையான சம்பளம் இருக்கு
ஆனா இந்த பாட்டி இயற்கையை காப்பாத்துறது மட்டும் இல்லாம நம்ம எதிர்கால சந்ததிக்கு உதவி செய்றது இந்த விவசாயம் மட்டுமே

ஆடம்பரம் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு ஆடம்பர விசயங்களை வேண்டும்  என்றால் வளர்க்கலாம்
எதிர்காலத்தில் கணக்கு இல்லாம நாம் சம்பாதிக்கிறே பணத்தை கொண்டு எதை சாப்பிட முடியும், பணத்தை சாப்பிட்டு உயிர் வாழ முடியாது ஆடம்பரத்திற்கு செய்யும் பத்து ருபாய் செலவை கணக்கு பார்க்காத நாம .
இந்த இயற்கை சார்ந்த விசயத்தில் ஒரு ருபாய் கூட கணக்கு பார்ப்பதால் நமக்கு நாமே காங்க்ரிட் சமாதி கட்டி கொள்கிறோம்
      எதிர் பார்க்காம கிடைக்கிற ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமை ஆகாமல் கொஞ்சம் பழசையும் மறக்காம இருந்தா  நம்மை நாமே காப்பாத்துறது   மட்டும் இல்லாம இயற்கையும் காப்பத்துலாம் “

முன் பின் தெரியாத அவன் பேச்சு அஸ்வின் கன்னத்தில் அறைந்து சொன்னது போல இருந்ததது   

3 comments:

  1. எதிர் பார்க்காம கிடைக்கிற ஆடம்பர வாழ்க்கை க்கு அடிமை ஆகாமல் கொஞ்சம் பழசையும் மறக்காம இருந்தா நம்மை நாமே காப்பத்ருது மட்டும் இல்லாம இயற்கையும் காப்பத்துலாம் “


    .......உண்மை. சரியாக சொல்லி இருக்கீங்க...

    (கொஞ்சம் எழுத்துப் பிழையையும் சரி செய்து விட்டால், இன்னும் நன்றாக இருக்கும்.)

    ReplyDelete
  2. நல்லா எழுதி இருக்கீங்க நண்பா, தொடருங்கள் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கதைகள்ள கூட சமூகக்கருத்துத்து நன்றாக உள்ளது, வரவர முழுநேர சமூக சேவகன் ஆகிற்றீங்கபோல , கலக்குங்க .

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை