Wednesday, May 12

இரும்பு கோட்டை சூப்பர் ஹிட்



  என்னடா இந்த வார டாப் டென் படத்தில் சுறாதான்  முதல்ல இருக்கு இவன் போய் இரும்பு கோட்டை சூப்பர் ஹிட் என்று சொல்றன்னே என்று பாக்கிறிங்களா ?


வெற்றி என்பது இரு வகை படும் உண்மையான வெற்றி மற்றது ஏமாற்று வெற்றி எப்படி என்று சொல்கிறேன் .ரசிகன் என்பவன் அவன் திரை அரங்கு சென்று படம் முழுவதும் பார்த்து ச்சே! என்ன படம் இது என்று சொன்னால் இது என்று சொன்னால் அது முழு தோல்வி .
பரவாயில்லை சில இடம் மட்டும் தான் சரி இல்லை என்றால் அது வெற்றி வரிசையில்  சேரும்  .


ரசிகன் சொல்லும் கருத்து எப்போதும் உண்மை இருக்காது சில நேரங்களில் மட்டுமே அதில் உண்மை இருக்கும் .(நான் ரஹ்மானின் பாட்டு நல்ல இருக்கு என்று சொன்னால் அது என் கருத்து ஆகா இருக்குமே தவிர பொதுவான கருத்தாக இருக்காது )

  அந்த வகையில் எல்லோராலும் நன்றாக இருக்கு என்று சொல்லப்படும் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்  உண்மையான ஹிட் என்பேன்.


பெரிய ஹீரோ இல்லை ,பெரிய அளவில் விளம்பரம் இல்லை இருந்த போதும் தமிழ் திரை உலகம் மறந்து போன நகைச்சுவை திரைப்படம் ரிஸ்க் அதிகம் உள்ள கௌ பாய் கதை அதிகமான செலவு .
எப்போதும் நல்ல கதை உள்ள படங்கள் புதுமைகளை  வரவேற்கும் தமிழ் மக்களை நினைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தை 
மோசமான விமர்சனம் மூலம் பின்னடைவு செய்ய வேண்டாம், முடிந்தால் நல்ல முறையில் விமர்சனம் செய்யவும் இல்லை என்றால் விமர்சனம் செய்ய வேண்டாம் 


நீங்கள் இந்த படத்திற்கு செய்யும் எதிர் மறை விமர்சனம் .

புது மாதிரியான் நல்ல படங்கள் வருவதை தடுத்து
எறா,நெத்திலி ,கருவாடு  போன்ற தமிழ் திரை உலகை உருப்படாமல்  போக வைக்கும் படங்கள் இன்னும் அதிகம் தாக்கும்  என்ற பயத்தில்  சொல்கிறேன் .
நகைச்சுவை களத்தில் வரும் இது போன்ற படங்களில் சில தவறுகள் இருந்தால் மன்னிக்கலாம் பாஸ்

புதுமையா எடுக்கிறேன் என்று ரசிகனை மோசமாக சோதிக்க வில்லை.புதுமையான கதை என்று என்ன கதை சொல்ல வந்தோம் என்று சொல்ல வந்தவருக்கும் தெரியாமல் ரசிகன் என்பவனை இன்னும் சோதிக்கவில்லை 



சிம்பு  தேவன் இன்னும் நல்ல நகைச்சுவை  திரைப்படங்கள் தர ஆதரவு தருவோம்
மனிதனை தாக்கும் மிருகங்களிடம் இருந்து ரசிகனை காப்போம்

  ஆகா மீண்டும் சொல்கிறேன் "இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் "
 நம்மை சிரிக்க வைக்கும் நல்ல சிங்கம் சார்

இது வரை பொறுமையா படித்ததிற்கு நன்றி

 
புதுமையான முயற்சி இதில் சில தவறுகள் இருக்கும் இது மன்னிக்க கூடியதே 

                 மறக்காம உங்கள் பொன்னான வோட்டையும் குத்திட்டு போங்க 

4 comments:

  1. //சிம்பு தேவன் இன்னும் நல்ல நகைச்சுவை திரைப்படங்கள் தர ஆதரவு தருவோம்
    மனிதனை தாக்கும் மிருகங்களிடம் இருந்து ரசிகனை காப்போம் //

    இது ஓக்கே!!!

    ReplyDelete
  2. நானும் வந்தேன்.

    ReplyDelete
  3. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com


    You can add the vote button on you blog:

    http://thalaivan.com/page.php?page=blogger

    THANKS

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை