Tuesday, August 31

AR ரஹ்மான் FACEBOOK சாதனை 15 லட்சம் தொடர்பவர்கள் &மைய நோக்கு பாடல் சரி இல்லை



  இந்தியாவில் இப்போ பேஸ்புக் அடிக்குற கொடுமை தாங்கல சாமி !
இந்த விசயத்திலும் ரஹ்மானி பேஸ்புக் சாதனை செய்து உள்ளது ஒரு மாதத்திற்கு முன் ஒரு மில்லியன் தொடர்பவர்களை  இருந்த ரஹ்மானின் பேஸ்புக் ஒரு மாதத்திற்குள் மேலும் ஐந்து லட்சம் தொடர்பவர்களை  கொண்டுள்ள்ளது .


 ரஹ்மான் இசை விசயத்தில் மட்டும் இல்லாமல் இப்போது இருக்கும் சோஷியல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதிலும் ரஹ்மான் ஒரு படி முன்னே உள்ளார்
VISIT TODAY ரஹ்மானின் பேஸ்புக்

இன்னும் நீங்கள் ரஹ்மானின் பேஸ்புக்கில்  சேரவில்லையா ?




செய்தி 1              

    காமன்வெல்த் விளையாட்டு சம்பந்தாமாக நல்ல செய்திகளை வெளியுடுங்கள் .இது இந்தியா சம்பந்தப்பட்ட விஷயம்
 இது ரஹ்மான்
செய்தி 2

            ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான மையநோக்குப் பாடல் மனதை கவரவில்லை
            இது
மக்களவை எதிர்க் கட்சித் துணைத் தலைவர்   விஜயகுமார் மல்ஹோத்ரா

 ரஹ்மான் சார் இதுதான் அரசியல்வாதி(வியாதி )ஆறு மாதம் நீங்கள் கஷ்டப்பட்டு போட்ட ட்யுனை ஒரு நிமிடத்தில் கேட்டு மனதை கவரவில்லை என சொல்ல இவருக்கு அப்படி என்ன இசை ஞானாம் இருக்குகு

உங்கள் பாடல்களை பலமுறை கேட்ட பிறகு பிடிக்கும் என்பது எல்லா ரசிகனுக்கும் தெரியும் இந்திய 
பாணியில்  பாங்கரா ஸ்டைல் பாடல் கேட்க்க கேட்க்க சூப்பரா  இருக்கு  (daud  படத்திற்கு பிறகு ரஹ்மான் பாங்காரா ஸ்டைல் இந்த பாடலில் உள்ளது )

  இனி மேலும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட நிகழ்சிக்கு இசை அடித்து உங்கள் பேரை கெடுத்து கொள்ள வேண்டாம்  
ரஹ்மான்




Sunday, August 29

A.R.ரஹ்மான் 127 HOURS ஆங்கில பட முன்னோட்டம்


மீண்டும் AR ரஹ்மான் ஆங்கிலத்தில் ஒரு படத்திற்கு இசை அமைத்துள்ளார் .ஷ்லம்டாக்   மில்லியனர் படத்தை தயாரித்த அதே குழு இந்த படத்திற்கு இணைந்துள்ளனர்


இப்படம் ஒரு மலை உச்சில் நடக்கும் திர்ல்லர் படமாக இருக்கும் என தெரிகிறது .இப்படத்தின் முன்னோட்டம் இப்போதே கேட்க்கும்போது ரஹ்மானின் இசை மீது ஒரு எதிர்பார்ப்பு உருவாகி விட்டது

ஷ்லம்டாக் படத்தை போல இந்திய பாணியில் இசை இருக்காது என்று முன்னோட்டம் காட்சி கேட்கும் போதே தெரிகிறது 


  TAMILIL இப்போது ரஹ்மானின் கையில் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது அது ரஜினி அனிமேட்    கதாபாத்திரத்தில் நடிக்கும் சுல்தான் மட்டுமே  

எப்படியோ ரஹ்மானின் இசை உலகம் முழுவதும் கலை கட்டினால் சரி
இப்படம் நவம்பர் 5 வருகிறது படத்தின் இசை எப்போது வரும் என அறிவிக்கவில்லை

திரைப்பட முன்னோட்டம் இதோ





திரைப்படத்தின் பிரத்யோக வலைத்தளம் இது



                        FEEL TO RAHMAN MUSIC FOR THE MOVIE

Saturday, August 28

எ ஆர் ரஹ்மான் காமன் வெல்த் விளையாட்டு தீம் பாடல்



ரஹ்மானின் மற்றும் ஒரு மணிமகுடம் காமன் வெல்த் விளையாட்டிற்கு அவர்  அடிக்கும் தீம் பாடல் இன்று வந்து உள்ளது
 
ஒ யாரோ இந்தியாஎன ரஹ்மானின் குரலில்  தொடங்கும் பாடல் அதை வரும் ஹம்மிங் சடார் என மாறும் பாஸ்ட் பீட் ட்ரம்ஸ் இசை என களைகட்டும் பாடல் .கேட்க்க கேட்க்க இன்னும் பிடிக்கும் .வாக்கா  வாக்கா பாடல் போல இதுவும்  ஹிட் ஆகும் என நம்பலாம்
ஒ யாரோ இந்தியா கொஞ்சம் நாளைக்கு ரிங் டோன் ஹிட் ஆகா  இருக்கும் 
இந்த பாடல் பற்றி பதிவு போடா நினைத்தால் அதற்க்கு ஏற்ற பாடல் கிடைக்க வில்லை  you tube தேடும்போது இந்த பாடல் வீடியோ கிடைத்தது இவருக்குக் notnursideboy  இவருக்குக்  நன்றி 

பாடலை கேட்க்க இந்த you tube  வீடியோ


 


Friday, August 27

வாங்குவோம் ஒரிஜினல் மோசர் பயர் தமிழ் DVD



 இப்போ வர படம் ஒன்னும் சரி இல்லை திரை அரங்கு சென்று  பார்த்தால் பணம் வேஸ்ட் என்று சொல்பவர்களுக்கு
வீட்டில் நல்ல படம் பார்க்கலாம் என்று சொல்பவர்களுக்கு சிறந்த மாற்று வழி  நல்ல பழைய படங்களை பார்ப்பது


அதற்க்கு சிறந்த நிறுவனம் மோசர் பயர் தமிழ்  DVD . தமிழின் சிறந்த படங்கள் தரமான விலையில்  வாங்க சிறந்த வழி மோசர் பயர் தமிழ்  DVD  தமிழ் நாட்டில் எல்லா பெரும் நகரங்களிலயும் பெரிய CD/DVD கடைகளில் கிடைக்கிறது

ஆன்லைன்  மூலம்  வாங்க வழி வகை செய்கிறது
இனிமேலும் மோசமான திருட்டு டிவிடி வாங்கி ஏமாறுவதை விட அதே விலையில் தமிழ் சிறந்த படங்கள் எல்லாம் வாங்க ஒரு முறை சிடி கடை சென்று பாருங்கள் /அல்லது மோசர் பயர் தமிழ்  DVD  இணைய தளம் மூலம் பார்த்து வாங்கவும் 





Visit moserbaerhomevideo



திருட்டு CD/DVDதடுப்போம் என்று போடுவதை விட அதை  வாங்க இருக்கும் வழி வகை போடுவோம் என்று இந்த பதிவு


குறைந்த விலை தரமான படங்களின் வெளியுடு திருட்டு CD/DVD ஒழிப்போம் ஒரிஜினல் வாங்குவோம்
 






Thursday, August 26

இப்போ இந்தியாவின் NO.1 சோஷியல் நெட்வொர்க் "பேஸ்புக் "



 
இந்தியாவில் தனிகாட்டு ராஜாவாக இருந்த ஆர்குட் நீண்ட நாட்களாக NO  1   இடத்தில இருந்தது
அந்த இடத்தை   இப்போ உலகம் முழுவதும் சக்கை போடு போடும் .பேஸ்புக் பெற்றுள்ளது
கூகுள் நிறுவனத்தின் ஆர்குட்  சோசியல் நெட்வொர்க் இந்தியாவில் இளைஞர்களின் உயிர்மூச்சாக இருந்து வந்தது

இப்போ அதற்க்கு ஆப்பு வைத்து விட்டது பேஸ்புக் இந்தியாவில் மெதுவான முன்னேற்றத்தில்  இருந்து வந்த பேஸ்புக் கடந்த ஜூலை மாத கணக்கெடுப்பில் ஆர்குட்டை விட ஒரு மில்லியன் மேலே பயனாளர்களை  கொண்டு  

 
இப்போ இந்தியாவின் NO.1 சோசியல் நெட்வொர்க் ஆகா மாறி விட்டது

அதாவது FACE BOOK 20 .9  மில்லியன் பயனாளர்களை  கொண்டு முதல் இடத்தில இருக்கு கடந்த ஆண்டை கணக்கிடும் பொது நூறு சதத்திற்கு மேல் முன்னேற்றம்

ஆர்குட் 19 .9  மில்லியன் பயனாளர்களை கொண்டு இரண்டாம் இடத்தில் இருக்கு
பாரத் ஸ்டுடன்ட் 4.4 மில்லியன்
ட்விட்டர் 3.3 மில்லியன்   
சோசியல் நெட்வொர்க் மார்கெட்டில் இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கு
பேஸ்புக் இந்தியாவில் அதன் முதல் அலுவலகத்தை ஹைதராபாத்தில் திறக்க இருக்கிறது

நம்ம ஹாய் அரும்பாவூர் பேஸ்புக் குழு இருக்கு மறக்காமல் சேருங்கள்

என்னுடைய click this  A.R.RAHMAN "MUSICAL STORM" பேஸ்புக் குழுவில் சேருங்கள்

Wednesday, August 25

"ICC LG People's Choice Award " வோட்டு போட வாங்க



ஐ சி சி இந்த முறை உலகம் முழுவதும பிரிக்க முடியாத பந்தமான இணையத்தை மையமாக வைத்து "ICC LG People's Choice Award "  என்ற விருது என்ற பிரிவினை இணையத்தில் வழங்கி உள்ளது
இந்த விருதுக்கு வீரர்களை தேர்வு செய்ய போவது வேற யாரும் இல்லை சார் நாம்தான் 


இந்தப் பிரிவில் சிறந்த கிரிக்கெட் வீரரைத் தேர்ந்தெடுக்கப்போவது, கிரிக்கெட் ரசிகர்கள்தான்.

உங்களுக்கு பிடித்த  வீரர்களை தேர்ந்தெடுக்க சிறந்த வாய்ப்பு

அந்த வீரர்கள்
1.மைக் உசே (ஆஸ்திரேலிய)

 
2.மகேள ஜெயவர்தனே (ஸ்ரீ லங்கா )
3.அண்ட்ருவ்  ஸ்ட்ராஸ் (இங்கிலாந்த் )

 
4.சச்சின் டெண்டுல்கர் (இந்திய)
5.அப் டி வில்லியர்ஸ் (ஆப்பிரிக்கா )

 

 இதன் விருதுக்கு உங்கள் வோட்டை போட கடைசி நாள் செப்டம்பர் 10
என்ன நீங்க ரெடியா ?
ஒருவருக்கு ஒரு வோட்டுதான் நம்ம வோட்டை வீணாக்கலாமா ?
பி பி சி சிறந்த பாடல் இணைய வாக்கெடுப்பில் நம்ம மக்கள் அதிகமாக வோட்டு போட்டதால் தான் "ராக்கம்மா கைய  தட்டு"முதல் இடத்தில வந்தது .
இணையம் இப்ப்போ சல்லிசா கிடைக்குற காலத்தில் மறக்காம  நம்ம வோட்டை  மறக்கமா நமக்கு பிடித்த வீரருக்கு போடுங்க சார் 


இணையத்தில் சிறந்த வீரர் யார் பார்க்கலாம்


" ICC LG People's Choice Award " இணைய தளம் பார்க்க இதை அழுத்தவும்

Tuesday, August 24

கோடிக்கணக்கில் ஊழலும் தெருக்கோடி இந்தியனும்

 

செய்தி 1
பொதுவிநியோகத் திட்டத்தில் நடைபெற்ற சுமார் ரூ. 1000 கோடி ஊழல் தொடர்பாக அருணாச்சல் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கெகாங் அபாங்  கைது

செய்தி 2
இப்போது கேதான் தேசாய் ஊழல் இப்போது அம்பலமாகியிருக்கிறது. ரூ.1800 கோடி பணமும், 1500 கிலோ தங்கமும் அவரிடமிருந்து மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது

செய்தி 3
 ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ரூ.10,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவைகள் எல்லாம் செய்திகளின் ஒரு பகுதிதான்
தோண்ட தோண்ட இன்னும் எத்தனை ஊழல் பூதம் வர போகுதோ ?

இதற்க்கு முன்பே நான் சொன்னது போல கழுத்தை தாண்டினால் உணவுக்கு கூட வேறு பெயர்தான் 


இருக்க வீடு ,சாப்பிட உணவு என சராசரி ஆசைக்கு கூட ஆசைப்படும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் இந்த இந்தியாவில் தான் இப்படிப்பட்ட ஊழல் நச்சுப்பாம்புககள் இருக்க யார் காரணம்
ஒரு வகையில் நாமும் தான் ஏன் எதற்கு என்று கேட்க பயம் ,எவன் எப்படி போனா என்ன நாம் நல்ல இருந்த சரி நம் குடும்பம்  நல்ல இருந்தா சரி  என்ற எண்ணமே காரணம்

இதற்க்கு தீர்வு என்று சொல்ல நான் ஒன்றும் பெரிய அறிவாளி இல்லை ஆனால் எனக்கு தோன்றிய சில எண்ணம்கள் உங்களுடன்
போதும் என்ற எண்ணம் எந்த மனிதனுக்கும் இருக்காது அது மனித  இயல்பு
1.நம்மால் முடிந்த அளவிற்கு ஒரு ரூபாயாவது  உண்மையாக கஷ்டப்படும்   ஒருவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வளர்க்க  வேண்டும்
2. படிப்பு விசயத்திலோ வேலைவாய்ப்பு விசயத்திலோ நம்மால் முடிந்த அளவிற்கு அடுத்தவர்க்கு அறிவுரை வழங்க வேண்டும்
(நான் பெரிய வேளையில் வந்து விட்டேன் இனி வேற யாரும் அந்த அந்த வேலைக்கு வர கூடாது என்ற எண்ணம் வராமல் அது சம்பந்தப்பட்ட அறிவுரை வழங்கலாம் )
  3.தேர்தல் நேரத்தில் நன்கு யோசித்து வாக்களிக்க  முனைவோம் .அனைவரையும் மறக்காமல்  வாக்களிக்க வைக்க
   பதிவுகள் போடுவோம்
ஊழல் செய்தவர்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது .நாம் நம்மால் முடிந்த அளவிற்கு நேர்மையாக லஞ்சம் கொடுக்காமல் வேலை செய்ய முனைவோம்
   
ஜாதிக்கு ஒரு வோட்டு ,நடிக்கனுக்கு ஒரு வோட்டு என்ற எண்ணங்களை மீறி நாம் நிம்மதியாக வாழ ஒரு வோட்டு என்ற எண்ணம் வளர்ப்போம்

நாம் என்னதான் சொன்னாலும் இவர்கள்
திருந்த போவது இல்லை பெற்ற ஒரு குழந்தைக்கு  கோடிக்கணக்கில் ஊழல் செய்து . லட்சக்கணக்கான ஏழைகளுக்கு வாய்க்கரிசி போடும் இவர்களை திட்ட கேவலமான வார்த்தை இல்லாத காரணத்தால்

    ----------------------------------------------------------------------------------------------------------------------------,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


லஞ்சத்தின் வலி என்ற தலைப்பில் நான் எழுதியி சில வரிகள் மறுபதிப்பு 


  மனம் எரிந்து  கொடுத்தவன் காசில் அடுப்பெரிக்கும்
          பிணம் தின்னி பிழைப்பு 


 
   அடுத்தவன் கோவணத்தை உருவி
-தன் மனைவிக்கு
 
பட்டுசேலை என்னும் நிர்வாணத்தை
போர்த்தும் ஈனபொழைப்புகாரன்
  


Sunday, August 22

அஜித் மங்காத்தா ட்ரைலர் & கலக்கல் ஸ்டில்



அதோ வருது இதோ வருத் என்று சொன்ன அஜித் அவர்களின் மங்காத்தா திரை பட முன்னோட்ட ட்ரைலர் வெளி வந்து விட்டது .
கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று முதலில் சொல்லப்பட்டு பலபேருடைய இயக்கத்தில்
செய்திகள்  வந்து இறுதியாக வெங்கட் பிரபு இயக்கத்தில்  தயாநிதி அழகிரி தயாரிப்பில் வரபோகும் மங்காத்த முன்னோட்டம் சிறப்பாக இருக்கு எதற்கும் நீங்களும் ஒரு முறை பாருங்கள் 


அஜித் ஐம்பதாவது படம் வெற்றி பெற நல்ல கதையுடன்  கூடிய  திரை கதை தேவை என்பதை அஜித் மறக்காமல் இருந்தால்.


மங்காத்தா ஒரு உண்மையான ஆட்டமாக இருக்கும்


Saturday, August 21

ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகமும் சில சந்தேகங்களும்



 முதலில் இந்த செய்தி படித்தவுடன் சந்தோஷம் .ஒவ்வொரு விசயத்திற்கும் கால்கடுக்க நிறைக்க வேண்டியதில்லை வீட்டில் இருந்தே நம் வேலைவாய்ப்பு நிலவரம் சரி பார்த்து விடலாம்
ஆனால் எனக்கு சந்தேகம் வந்த விஷயம் ஆன்லைன்   மூலம் இதன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று கால்கடுக்க காத்திருக்காமல் வீட்டிலிருந்த படியே சான்றிதழ்களை பதிவு செய்யலாம்.

 கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை யார் இப்போது கால் கடுக்க நிற்கிறார்கள் நடுத்தர வீட்டு மாணவ மணிகள் தான் அவர்கள் கால் கடுக்க நின்று பதிவு செய்யும் நேரத்திற்குள்  வசதி உள்ள வீட்டு மாணவர்கள் வீட்டில் அழகாய் டீ குடித்து கொண்டு ஒரு சராசரி மாணவனை விட முன்னே சீக்கிரமகா பதிவு செய்து விடுவார்கள்

இதனால் பாதிக்கபடுவது யார் சராசரி ஏழை மாணவன் தான் எல்லோரு வீட்டிலும் கணினி வசதி என்பது சாத்தியம் இல்லை அதிலும் விரைவான இணைய வசதி என்பது இன்னும் குறைவு அப்படி இருக்கும் போது இணையம் மூலம் பதிவு நிலவரம் பார்க்கலாம் என்பது வரவேற்க வேண்டிய விஷயம் ,


இணையம் மூலம் பதிவு என்பது
யோசித்து முடிவு வேண்டிய ஒரு முக்கிய விஷயம் கூட
இப்போது இருக்கும் கால கட்டத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ் எது உண்மை சான்றிதழ் எது என்பதை நேரில் பார்க்காமல் பதிவு செய்வது சரியில்லை .


காரணம் 1
ஒரு நாள் பதிவு மூப்பு தவறினாலும் அரசு பணிக்காக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் சான்றிதழ் வாங்கிய உடனேயே பதிவு செய்ய கட்டுக்கடங்காத கூட்டம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கூடி விடு கிறது.
காரணம் 2
இடைநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள், பிஎட் தேர்வு முடிவுகள் வெளியிடும் போது சான்றிதழ் பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக முந்தைய நாள் இரவு, அதிகாலையிலேயே வந்து கால் கடுக்க காத்துக் கிடக்கின்றனர்.
தீர்வு
இதற்க்கு ஏற்ற மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அவர்கள் படித்த பள்ளியில் சிறப்பு அலுவலர்கள் போட்டு அந்த அந்த பகுதியில் பதிவு செய்து அலுவலர்கள் சான்றிதல்களை சரி பார்த்த பின்பு அந்த அந்த இடத்தில இருந்து இணையம் மூலம் பதிவு செய்ய வசதி செய்ய வேண்டும்


  போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் இப்போது நடந்த பெரும் உழல் வந்த இந்த நேரத்தில் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் சரி பார்த்த பின்பே பதிவு செய்ய வேண்டும்

இணையம் மூலம் அணைத்து வேலை வாய்ப்பு அலுவலகம் 

 அனைத்தையும் முடித்து செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று துவக்கி வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

:புதுமைகள் வரும் நேரத்தில் சரியான முறையில் அனைவருக்கும் அந்த வசதி  செல்ல ஏற்ற சூழ்நிலைகள் உருவாக்க வேண்டும்:  



Thursday, August 19

சிக்கு புக்கு இசை ரயில் (இசை விமர்சனம் )


நீண்ட நாட்களுக்கு பிறகு காதுகளுக்கு இனியமையான் இசை தொகுப்பு .மாடர்ன் இசையும் கிளாசிக் இசையும் கலந்த ஜுகல் பந்தி  சிக்கு புக்கு

ஆர்யா ஸ்ரேயா சந்தானம் நடிப்பில்
கலோனியல் கசின்ஸ் பிரவின் மணி இருவரும் சேர்ந்து கலக்கி இருக்கும் இசை ஆல்பம்
மோதி விளையாடு படத்திற்கு பின் கலோனியல் கசின்ஸ் இசையில்  வரும் இரண்டாவது ஆல்பம் 


 
மொத்தத்தில் இளமை ததும்பும் இசை ஆல்பம்
1.சிக்கு புக்கு (பென்னி தயால், ராகுல் நம்பியார் ,மாயா )

 கற்க நாம் கற்க  இளமை ததும்பும் பா.விஜய் வரிகள் கல்லூரி மாணவர்களின் தீம் பாடல் டாக்சி டாக்சி பாடலுக்குக் பின் பாஸ்ட் ரிதமில்  வரும் பாடல்  பென்னி தயாள் ராகுல் நம்பியார் குரலும் பாடலுக்கு பிளஸ் பாயிண்ட் நீண்ட நாட்களுக்கு மாணவர்களின் தேசிய கீதமாக  இருக்கும் பாடல்

2. ஒரு நிலா (ஷங்கர் மகாதேவன் ,சந்திராய பட்டச்சார்யா ,உமா )

பாடலின் ஆரம்பத்தில் வரும் பெண்ணின் அழகிய ஹம்மிங் அதை தொடர்ந்து வேகமான தளக்கட்டுடன் வரும் ஷங்கர் மகாதேவன் குரல் ஷங்கர் மகாதேவன் குரலை இப்படி கேட்டு எத்தனை நாள் ஆகிறது ,வேகமான இசையுடன் சிறப்பான குரல்களுடன் வரும் பாடல் வாலிப கவிஞர் வாலி இந்த வயதில் எவ்வளவு அழகா பாடலை எழுதி இருக்கிறார்
3.ஜரா ஜரா (பென்னி தயால் ,லாவண்யா )
     பென்னி தயால் குரலில் மற்றும் ஒரு கலக்கல் பாடல் புரியும் படியான் பாடல்கள் அதை இன்னும் சிறப்பாக்கும் இசை பேஸ் கிடார் ,ட்ரும்ஸ் என பாடல் கேட்க்க கேட்க்க சுகம்
ஸ்மைல் (சுசித் சுரேசன் )
   ஹிப்பி டைப் பாடலாக ஆரம்ப்பிக்கும்  இசை ஹும்மிக் அப்படியே ஒரு இளமை ரிதம் மாறும் பாடல் கலோனியல் கசின்ஸ் இசை தொகுப்பு சிறப்பாக இருக்கிறது .காதுக்கு தொந்தரவு இல்லாத இசை சிறப்பான மெலடி
  4.தூறல் நின்றாலும் (ஹரிஹரன் )
  ஹரிஹரன்  குரலின் வரும் கஜல் பாடல் தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தமிழில் கஜல் பாடல்களில் சொல்லும் படியான பாடலாக இருக்கும் ,ஹரிஹரன் உருகி பாடி இருக்கிறார் அவருடன் சேர்ந்து பாடி இருக்கும் வாளடி சகோதர்களின் குரல் நிச்சம் இந்த கஜல் பாடல் இன்னும் ஒரு சிறப்பன் கஜல் பாடலாக இருக்கும்
5.விழி ஒரு பாதை (அட்னான் சாமி ,சுஜாதா   )
  அட்னான் சாமி சுஜாதா குரலுக்கு கேட்கலாம்   என்ன அட்னான் சாமி தமிழை கஷ்டப்பட்டு  பாடுகிறார் அதும் அழாக இருக்கு
6.அடி சாரல் (பிரதிப் விஜய் சுவி )
      பிரதிப் அவர்களின் மெல்லிய குரலில் ஆரம்பிக்கும் பாடல் சுவி இனைந்து படும் பொது மெல்ல மெல்ல ஆரம்பிக்கும் வேகம் பாடல் முழுவதும் மெல்லிய அதிர்வை உண்டாக்குகிறது .காதலர்களுக்கு ஏற்ற பாடல் வியலின் புளுட் என பாடல் முழவும் சிறப்பாக உள்ளது
மொத்தத்தில் ஒரு கேட்க்க ரசிக்க கூடிய
ஆல்பம் சிக்கு புக்கு


ரேட்டிங் இசை  :9.5/10

 
பாடல் பிளேயர்
நன்றி : ராகா .காம்




Tuesday, August 17

எ ஆர் ரஹ்மானுக்கு ரசிகனின் கண்டனம்


  "லண்டனில் நான் இருந்தபோது காமன்வெல்த் போட்டிகளில் எல்லாமே முறைகேடாகவும் ஊழலாகவும்தான் நடக்கிறது என்பதைப்போல இந்தியப் பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் போட்டிபோட்டு செய்திகளை வெளியிட்டன. இதனால் நான் மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளானேன். இங்கு வந்து பார்த்தபோதுதான் இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை என்ற உண்மை உறைத்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்."


ரஹ்மான் நான் உங்களின் தீவிர ரசிகன் உங்களின் திரை   உலக வாழ்கையும் சரி தனி பட்ட வாழ்க்கையும் சரி தறந்த புத்தகம் போன்றது .


ஆஸ்கர் வென்றபோதும் சரி தமிழ் உலக செம்மொழி பாடல் வெளியுட்டிலும் சரி உங்களை விட அதிகம் சந்தோசப்பட்டது உங்கள் ரசிகன் ஆகிய நாங்கள் தான்
காமன்வெல்த்
விளையாட்டு உழல் பற்றி பத்திரிக்கை தொலைக்காட்சி ,அரசியல் கட்சிகள் உழல் நடந்து இருக்கலாம் என்று தினமும் செய்திகள் வெளியிட்டு வருவது வேதனைகூரியது ஆனால் தமிழில் ஒரு பழமொழி உள்ளது நெருப்பில்லாமல் புகையாது 

நீங்கள் சொல்வது போல் ஒரு விசயத்தில் உழல் நடப்பது நடக்காமல் போவது வேறு பிரசினை  ஆனால் நீங்கள் சொல்வது .

அதுவும் நீங்கள் காமன்வெல்த் விளையாட்டிற்கு கருப்பொருள் பாடல் இசை அமைக்கும் இந்த நேரத்தில் நீங்கள் சொல்லி இருக்கும்  இந்த விஷயம்
மனவேதனை தந்தது அது எப்படி இது ஒன்றும் நாட்டிற்கு மிகவும் முக்கியமான் விசயம் இல்லை மக்கள் வரி பணம்
கோடிகணக்கில் செலவு செய்து செய்யப்படும் விளையாட்டில் உழல் நடந்து இருக்கலாம் என்ற கண்ணோட்டதில் பத்திரிக்கைகள் செய்தி போடுகின்றன  அது  பத்ரிக்கை தர்மம் நீங்கள் சொல்வது போல நாட்டின் பெயர் எந்த  முறையுலும் கெடாது

நீங்கள் சொல்வது போல காமன்வெல்த் விளையாட்டில் இருக்கும் நல்ல விஷயங்கள் மட்டும் சொன்னால் அதில் உழல் நடந்ததாக சொல்லும்  உழல் மறைக்கப்படும் அல்லவா ?


இது போன்ற கருத்துக்களை சொல்லும் முன் நீங்கள் அந்த விசயத்தில் பங்கு பெறாத போது கருத்து சொல்வது நலம் 



உங்களின் காமன்வெல்த் பாடல் கேட்க்க ஆவலாக இருக்கும் உங்கள் ரசிகன்

நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன்



தொடர் பதிவுக்கு அழைத்த அருமை நண்பன் எப்பூடிக்கு நன்றி

பதிவுலகத்தில் என்னை மதித்து ஆதரவு தந்த நண்பர்களுக்கும் சகோதரிகளுக்கும்  பதிவுலக திரட்டிகளுக்கும் நன்றி

இப்போ நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன் என்பதை பற்றி  சிறு தொகுப்பு

1.அது என்ன ஹாய் அரும்பாவூர் ?
   முதலில் பதிவுலகம் வரும் எண்ணமே இல்லை அப்படியே
போய் இருக்க வேண்டியதுதானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது (அது உங்கள் நல்ல நேரம் சார் )
  அரும்பாவூர் நான் பிறந்து வளர்ந்த ஊர் சுற்றிலும் மலைகள் சூழ்ந்து உள்ள மலயாப்பட்டி ,ஊரை சுற்றி சிறு சிறு கிராமங்கள் (அப்போ உன் என்ன பெரிய சிட்டியா ? அப்படின்னு கேட்க்க வேண்டாம் கொஞ்சம் பெரிய ஊர்தான் )தழுதாழை மேட்டூர் கிருஷ்ணாபுரம் என பல ஊர்கள் இருக்கு 


என்னோட ஊர் பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கு
 முதலில் வணக்கம் அரும்பாவூர் என்று தான் தலைப்பு வைத்து இருந்தேன் காலப்போக்கில் ஹாய் அரும்பாவூர் என மாறி விட்டது
  பதிவுலகத்திற்கு வர காரணம் ?
        மிக முக்கிய காரணம் தமிளிஷ் தான் ஒரு வருடதிர்க்கு முன் நான் தினமும் தமிளிஷ் இணையத்தில் பல பேருடைய பதிவுகளை பார்ப்பேன் அந்த ஆர்வம் தான் மொக்கை பதிவு புகழ் ஹாய் அரும்பாவூர் ஆகி விட்டது 


  2.முதல் பதிவை பற்றி ?
  நம்முடைய முதல் பதிவே தலை ரஹ்மான் பற்றி தான் அவர்   கப்புள்ஸ் ரீத்ரெட்
என்னும்ஆங்கில படத்திற்கு இசை அமைத்தது பற்றி என்னுடைய பதிவுதான் அது ஆனால் அதை வலைப்பதிவு  திரட்டியில் சேர்க்க வில்லை


3.முதல் பாராட்டு
என்னுடைய   மரம் ஒரு வரம்  என்னும் பதிவுக்கு வெண்ணிற இரவுகள் மற்றும் பின்னோக்கி இருவரின்  பின்னுட்டம் என் எழுத்து ஆர்வத்தை இன்னும் அதிகம் ஆக்கியது 


4.பின்னுட்டம் வாக்களிப்பு எதற்கு முன்னுரிமை ?
பின்னுட்டம் என்பது முக்கியம் ஆனால் ஆதி விட முக்கியம் வாக்கெடுப்பு என்பதில் உறுதியாக இருப்பவன் நான்  நம்முடைய பதிவு எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் பல பேரை சென்றடைய வாக்கெடுப்பில் வாக்கின் எண்ணிக்கை தேவை இல்லையா அதனால் நான் அதிகம் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவேன்  நான் ஆயிரக்கணக்கில் அளித்த வாக்குகள் சாட்சி 



5.வலைபதிவை பிரபலம் ஆக்க என்ன செய்விர்கள் ?
 வேற என்ன ஆரம்ப காலத்தில் நியூஸ் பானை ,தமிளிஷ் ,தமிழ்10 உளவு, நம்குரல் ,என எல்லா வலைபதிவு திரட்டியுலும் பதிவை இணைப்பேன்
இப்போ இன்டிலி ,திரட்டி பேஸ்புக் மற்றும் தமிழ் 10 மட்டுமே

6.நண்பர்களின் ஆதரவு உள்ளதா ?
உனக்கு ஏன் இந்த தேவை  இல்லாத வேலை  எழுதி ஏதும் ஒரு ருபாய் லாபம் இருக்க இதுதான் அவர்களின் கருத்து

7.உங்களுக்கு பிடித்த  பதிவர்?
  என் மீது பாராட்டு தெரிவிக்கும் எல்லா நண்பர்களும் எனக்கு பிடித்த  பதிவர்களே 
8.வலைபதிவு வந்த பின்பு ஏதும் மாற்றம் ?
ஒன்றும்  இல்லை ,அதே முபாரக் கான் அதே சூப்பர் மார்கெட் வேலை

9.பதிவுலகில் வந்த பின்பு நண்பர்களின் வட்டம் அதிகம் ஆகி உள்ளதா ?
நண்பர்கள் அதிகம் ஆனால் யாருடனும் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என் தொலைப்பேசி இலக்கம் யாருக்கும் கொடுக்க வில்லை அவர்கள் தொடர்பு கொள்ளும் போது என்னால் பேச முடியாத என் வேலை 

00971501431819

என் இலக்கத்திற்கு உங்கள் பெயர் வலைப்பதிவு தலைப்புடன் எஸ் எம் எஸ் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும் போது நானே தொடர்பு கொள்வேன் 



10.மற்ற வலைபதிவு நண்பர்களுக்கு ஏதும் கருத்து ?

அந்த அளவிற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை
எனக்கு உங்களின் தொடர் ஆதரவு தேவை






நான் தொடர் பதிவு எழுத அழைப்பது
  புன்னகையே வாழ்க்கை
உண்மை உணர்வுகள்

Monday, August 16

அருமை குழந்தைகளுக்கு அம்புலிமாமா இணைய தளம்

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு இருந்து இருக்கும் .அதிலும் 1980 1990 களின் சிறுவர்களின் முக்கிய பொழுது போக்கு சிறுவர் இதழ்கள் தான் கோகுலம் ,பூந்தளிர் .அம்புலிமாமா ,ராணி காமிக்ஸ் .லயன் ,திகில் .முத்து என சொல்லி கொண்டு போகலாம் .ஆனால் கால ஓட்டத்தின் மாற்றங்களின் தொலைக்காட்சி ,இணையத்தின் பயன்பாடு அதிகம் வந்த பின் புத்தகம் படிப்பது என்பது மிகவும் குறைவு


இப்போது வரும் சொல்லும் படியான இதழ்கள் என்றால் சுட்டி விகடன் ,மற்றும் கோகுலம் தொலைக்காட்சி மூலம் கார்டூன் பார்க்க ஆசைப்படும் குழந்தைகள் புத்தக படிப்பு என்பது குறைந்து விட்டது


அதிலும் கார்டூன் நெட்வொர்க் ,போகோ .டிஸ்னி .சுட்டி போன்ற தொலைகாட்சிகள் அதிகம் வந்த இந்த காலத்தில் குழந்தைகள் இதழ் என்ற விஷயம் இல்லாமல் போக இன்னும் சாத்யம் அதிகம் உள்ளது

அந்த வகையில் தமிழில் பழமையான குழந்தைகள் இதழ் என்றால் அது அம்புலிமாமா என சொல்லலாம் .திரைபட தயாரிப்பகட்டும் குழந்தைகள் இதழ் ஆகட்டும் இந்திய முழுவதும் சாதனை செய்த இதழ் நாகி ரெட்டி அவர்களின் சந்தமாமா (அம்புலி மாமா )

அப்படிப்பட்ட இதழை 1947 முதல் 2000 வரை சிறப்பான முறையில் படிக்க சிறந்த வசதிகள் செய்து உள்ளது சந்தமாமா இணைய தளம்

பழைய அம்புலி மாமா இதழ்களை படிக்கும் போது ஒரு தனி உற்சாகம் உண்டாகிறது
பழைய இதழ்கள் மட்டும் இல்லாமல் பழைய விளம்பரங்கள் பார்க்க தனி வசதி உள்ளது .

பழைய கட்பெரி சாக்லேட் ,பாப்பின்ஸ் ,கோல்கேட் ,எம் ஜி ஆர் எங்க வீட்டு பிள்ளை ,அளிபாவும் 40 திருடர்கள் என பழைய திரைப்படங்களின் விளம்பரம்
பீர்பால் கதைகள் கம்ப்யூட்டர் டிப்ஸ் குறும்புகார கோபாலு என பல படைப்புகள் பார்க்கலாம் ,படிக்கலாம்

உங்கள் குழந்தைகளுக்கு அறிமுக படுத்த சிறந்த் தளம்

Sunday, August 15

கருணாநிதி அவர்களின் சுதந்திர தின திட்டங்களும் எண்ணங்களும்

 சுதந்திர நாள் விழாவில் கருணாநிதி அவர்கள் அறிவித்த திட்டங்களில் சிறந்தவைகள் என நான் நினைப்பது .சரியான முறையில் இடையில் நடக்கும் உழல்கள் இல்லாமல் சரியான  முறையில் நடைமுறை படுத்தினால் வெற்றி தரும் 


அறிவிப்பு 1
உலக இளைஞர்கள் ஆண்டை முன்னிட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் எஞ்சினியரிங்  இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.  1 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 50 கோடி ரூபாய் வழங்கப்படும்.

  படிப்பு  என்ற விஷயத்தை மீறி வெற்றி பெற  படிக்கும் மாணவர்களின் பட்டம் என்பதையும் மீறி அவர்களின் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் அந்த வகையில் பட்ட படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி என்ற விஷயம் சந்தோஷம் தர கூடியது . இதற்க்கு செலவழிக்கும் தொகை சரியான முறையில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு சென்றால் நாளைய தலைமுறைக்கு சந்தோஷம் தர கூடிய விஷயம்
அறிவிப்பு என்ற விஷயம் வெற்றி பெற்ற விஷயமாக மாற சரியான வழிகாட்டுதல் தேவை

அறிவிப்பு 2
சாலைகளை சீரமைக்க இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

 ஒரு நாட்டின் உண்மையான வசதி என்பது அந்த நாட்டில் இருக்கும் சாலை வசதிகளை வைத்து சொல்லலாம் .
தமிழ் நாட்டில் இருக்கும் மோசமான சாலைகள் சரியான முறையில் மாற இந்த பணம் முழுவதும் ஒப்பந்ததார்களின் ஊழல் இல்லாமல் மக்கள் சேவைக்கு பயன்படும் சாலை வசதிக்கு செலவழித்தால் அதவே  உண்மையான மனிதாபிமான செயல் என கூறலாம்
தாங்கள் போடும் சாலையில் பொது மக்கள் செல்வார்கள் என்பதை விட சாலை போடும் ஒப்பந்ததார்களின் குடும்பமும் போகும் என்று நினைவில் வைத்து நேர்மையாக சாலை போட்டால் அதுவே உண்மையான வெற்றி


அறிவிப்பு 3
சிறு, குறு விவசாயிகளின் பம்பு செட்களில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கிவிட்டு புதிய மின் மோட்டார்கள் அரசின் சார்பில் இலவசமாக பொருத்தித் தரப்படும். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் புதிய மோட்டார் பொருத்தித் தரப்படும்

 விவசாயம் என்பதே மறைந்து காங்க்ரிட் வீடுகளாக விலை நிலங்கள் எல்லாம் மாறி வரும் காலத்தில் இன்னும் விவசாயம் வளர சிறப்பான திட்டங்கள் வர வேண்டும் அதவே உலகை அச்சுறுத்தும் விளைவை வாசி உயர்வை எதிர்க்கும் உண்மையான ஆயுதம்

அறிவிப்பு 4

தமிழகத்தில் 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக 6 ஆண்டுகளில் மாற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது

  மழைகாலத்தில் வெள்ளத்தில் பிரச்சினை ,வெயில் காலங்களில் தீபிடிக்கும் பிரச்சினைகள் என பல பிரச்சினைகளில் வாழும் ஏழை ,நடுத்தர மக்களின் கனவான் காங்க்ரிட் வீடுகள் நீண்ட நாட்கள் உழைக்கும் வகையில் ஊழல் இல்லாத முறையில் நேர்மையாக கட்டி தரும் நிறுவனங்களின் கையில் இந்த திட்டத்தை ஒதுக்கினால் சந்தோஷம்


  மொத்தத்தில் ஒவ்வொரு ஆட்சியிலும்  அறிவிப்புகள் என்பது பிரமாண்ட படத்திற்கு ஈடாக  எதிர்பார்ப்பு இருப்பது வாடிக்கை அதன் செயல்பாடுகள் உழல் என்னும் அஷ்திர்வாரம் மோசமாக இருக்கும் போது மக்களுக்கு பயன் இல்லாமல் போவது வாடிக்கை .
அது மாறி இல்லாமல் இந்த திட்டங்கள் சரியான முறையில் மக்களுக்கு கிடைக்க தனி கவனம் செலுத்த வேண்டும்



பேஸ்புக் தொடரும் நண்பர்களுக்கு நன்றி !
தொடர போகும் நண்பர்களுக்கும் நன்றி !!







Saturday, August 14

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் "சில சிந்தனைகள் "



              சுதந்திரத்தின் அருமை அடிமையாய் இருக்கும் போதுதான் தெரியும் .


நாட்டில் ஆயிரக்கணக்கில் உழல் கொள்ளை லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது .இது மறுக்க முடியாத உண்மைதான் ஆனால் அதே நேரத்தில் 



  :ஒரு சுதந்திர நாட்டின் வாழும் சுகம் இன்றளவில் பிரசினைக்களுக்குள் ஓடும் நாட்டில் வாழும் மக்களுக்கு தெரியும் :

என்ன செய்ய நாட்டில் பல பிரச்சினை இருக்கு விலைவாசி அதிகம் ,உழல் ,சரியான வேலை இல்லை என்று புலம்புவதை விட .
இனி வரும் காலங்களில் நாம் நம் செய்ய வேண்டிய செயல்களில் சரியாக இருந்தாலே போதும்

#தேர்தல் நேரங்களில் வெட்டி பேச்சு பேசுவதை விட நன்கு சிந்தித்து நமக்கு கிடைக்கும் சில ஆதாயங்களை விட  நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சிக்கு வாக்களிக்க முயற்சி செய்ய வேண்டும்

#தேர்தல் நம் நாட்டின் வாழ்க்கை மட்டும் இல்லாமல் நம் வாழ்க்கையும் மாற்ற கூடியது என்பதை நினைத்து சரியான முறையில் நம் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்

# புது படம் பார்க்க மூன்று மணி  நேரம் வீணாக்குவதை விட தேர்தலுக்கு செய்யும் ஒவ்வொரு நிமிடமும் நம்
வாழ்க்கை மற்றும் செயல் என்பதை நினைவல் வைக்க வேண்டும்

# இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் மதவாத கட்சிகளுக்கு வாக்களிப்பதை தடுப்போம்


#மதம் என்பது எல்லோருக்கும் உள்ளது மதம் உள்ள மனிதானாக வாழ முயற்சி செய்யலாம் மதம் பிடித்து ஆட்டும் மனிதனாக வாழாமல் இருக்க  வேண்டும்

# லஞ்சம் அழிய வேண்டும் என்று பேசுவதை விட நம்மால் முடிந்த அளவிற்கு லஞ்சம் கொடுக்காமல்  நேர்மையாக நாம் செல்ல முயற்சி செய்வோம்

#  மாதம் ஒரு ரூபாயாவது நேர்மையான் முறையில் கஷ்டப்படும்  நபருக்கு உதவ வேண்டும் என்று தீர்மானம் செய்வோம் 


# சுதந்திர நாள் அன்றாவது திரைப்படம் & திரை கலைஞர்கள் தவிர்து சுதந்திர நாள் பற்றி நல்ல விசயங்களுக்கு செலவு செய்வோம் 


#  அரசாங்கம் எல்லா விதத்திலும்
உதவ வேண்டும் என்று நினைக்கும் நாம் .அந்த உதவியை பெற்று உயர்ந்த நிலை அடைந்த உடன் அரசாங்கத்தை நம்பாமல் நம்மால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்வோம் என்று உறுதிமொழி எடுப்போம் 



       
   "நாட்டின் முன்னேற்றம் பற்றி யோசிக்கும் இந்தியானாக வாழ
முயற்சி  செய்வோம் "

         :அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் :



Thursday, August 12

கௌதம் வாசுதேவ மேனன் & போட்டன் கதாஸ்



    தமிழ் திரை உலகின் முக்கிய இயக்குனராக வளர்ந்து உள்ள .கௌதம் வாசுதேவ் மேனன் .தான் ஒரு சிறந்த இயக்குனர் மட்டும் இல்லை கை தேர்ந்த தயாரிப்பாளர் எனவும் கூறும் விதத்தில் சத்தம் இல்லாமல் அவரின் மேற்பார்வையில் மூன்று படம் வர போகிறது 


  அதில் ஒன்று அவரின் இயக்கத்தில் வர போகிறது" நடுநிசி நாய்கள்" த்ரில்லர் படமாக வர போகும் இந்த படம் குறுகிய கால தயாரிப்பாக இருக்கும் . இப்படத்தில் பாடல்கள் இருக்காது என்று நினைக்கிறேன்


 மற்றொரு படம் வெப்பம்  அஞ்சனா இயக்கம் யப்படும் விரைவில் வெளி வர இருக்கிறது

இதில் சிறப்பு விசயம் அவரின் மூன்றாவது படம் பற்றிய அறிவிப்புதான் 

".அழகர்சாமியின் குதிரை "  இந்த படத்தின் முக்கிய ஹீரோ இளையராஜா சாரின் இசையாக இருக்கும் .வெண்ணிலா கபடி குழு படம் மூலம் அறிமுகமான இயக்குனர் சுசிந்தரனின் மூன்றாவது படம் இது
இரண்டாவது படம் நான் மகான் இல்லை விரைவில் வெளி வருகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பு என்பதால் இளையராஜாவின் இசையில் இன்னும் புதுமையை எதிர்பார்க்கலாம் 



ஷங்கர் வழியில் கௌதம் வாசுதேவ் மேனன் கூட ஒரு சிறந்த தயாரிப்பாளர் ஆகா  மாறுவார் என்று எதிபார்க்கலாம்

களவாணி படத்தின் முழு ரீ மேக்  உரிமையை   கௌதம் வாசுதேவ் மேனன்  நிறுவனம் வாங்கி உள்ளது

சும்மாவா கௌதம் பாலக்காடு அல்லவா ?

Wednesday, August 11

மர்ம யோகி சன் கை கொடுக்குமா ?

கீழே உள்ள செய்திகள் படிப்பதால் உங்களுக்கு ஒரு பயனும் இருக்கபோவதில்லை
ஜஸ்ட் டைம் பாஸ் மட்டுமே  பிடித்து பிடித்து இருந்தால் மட்டும் வாக்களிக்கவும்

 
            தமிழ் திரை உலகில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற பெயரை எந்திரன் பெற்றுள்ளது .
முதலில் ஐங்கரன் மற்றும்
எரோஸ்  நிறுவனத்தால் தொடங்கப்பட்டு அதிக பொருட்செலவு காரணாமாக நிறுத்தவேண்டிய சூழ்நிலைக்கு வந்த இப்படம் சன் டிவி உதவியால் மீண்டும் புது பொலிவுடன் வர இருக்கிறது 


வால்ட் டிஸ்னி மற்றும் பரத் பாலா இணைந்து பெரும் பொருள் செலவில் தயாரிக்க எ ஆர் ரஹ்மான் இசை அமைக்க
இருந்த படம் 

அதே காரணத்தால் நிறுத்த பட்ட படம் கமலின் மர்ம யோகி கமலின் கனவு படம் கனவு படமாகவே போகாமல் இருக்க இப்போதைக்கு சன் டிவி நிறுவனம் கை கொடுத்தால் மீண்டும் கமலின் கனவு படம்  நிஜ படமாக வர இப்போதைக்கு தமிழில் யானை கட்டி தீனி போட சன் டிவியால் மட்டுமே முடியும் 



கமல் என்னும் கலை ஞானி படம்  மர்மயோகி மீண்டும் உயிர் பெறுமா?


 இப்போதைக்கு மர்மயோகி என்னும் பிரமாண்ட படத்திற்கு உயிர் கொடுக்க சன் நிறுவனத்தால் மட்டுமே முடியும்

 

பளிங்குகல்  தரை தேக்கு மர  கதவு 
வீட்டை பார்த்து கட்டும் மனிதன்
வானுயர்ந்த அழகிய இல்லம் என யோசிக்கும் மனிதன்
நிரந்தர கல்லறை வீட்டை மறந்தவனாக ?


Tuesday, August 10

ரஜினி ஷங்கர் ரஹ்மான் நாட்டுக்கு உழைக்க வந்தோம் என்று எப்போதும் சொல்லவில்லை ?

இப்போ புதுசா ஒரு கருப் கிளம்பி இருக்கு என்னடான்னா தமிழ் சினிமாவை காப்பற்ற போகும் அந்த நபர்கள் முதல் கட்டமாக எந்திரன் படத்தை  புறக்கணிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை
என்ன  ஒரு ஆதங்கம் இந்த படம் பார்க்க சராசரி தமிழன் அதிக அளவில் பணத்தை செலவிடுவானம் இது போன்ற படங்கள் வந்தால் எதார்த்தம் பிரதிபலிக்கும் படங்கள் வராது என்பது இவர்களின் கருத்து



யப்பா சாமி எங்களுக்கு வேவை மூன்று மணி நேரம் கவலை மறந்து படம் பார்க்க வேண்டும் நீங்கள் சொல்லும் எதார்த்தம் என்பது என்ன ?
சோகத்தை சொட்ட சொட்ட வழிய வேண்டும் படத்தில் ஏழ்மை இருக்க வேண்டும் அதாவது இந்தியாவின் ஏழ்மை சொல்லி படம் எடுத்து நல்ல பேர் வாங்குவதை விட இது போன்ற நேரத்தை போக்கும் படங்கள் எவ்வளவோ மேல் சாமி

     "ஏற்கனவே அவன் அவன் பல பிரச்சினையில் நொந்து போய் இருக்கான் இப்போ எந்திரன் படத்தை பார்க்காமல் இருந்தால் என்ன எல்லா பிரச்சினையும் தீரவா போவுது "



    "கலாநிதி மாறன் இவ்வளவு பணம் போட்டு படம் எடுப்பது சேவைக்கு இல்லை அவர் ஒரு
வியாபார மனிதர் அவர் ஒரு ருபாய் போட்டு பத்து ருபாய் லாபம் பார்க்கத்தான் பார்ப்பார் ,கோடிக்கணக்கில் பணம் போடும் போது  யாரும் ஓடும் குதிரையில் தான் பணம் கட்டுவார்கள் "

ஒரு பதிவர் சொன்னது போல ரஹ்மான் வியாபாரம் செய்யவும் தன பாடல்கள் உலகம் முழுவதும் செல்லவும் தனக்கு ஏற்ற சூல்நிழை உள்ள படங்களுக்கு தான் இசை அமைப்பார்,
நல்ல கதை என்று யாருக்கும் தெரியாத படத்திற்கு இசை அமைத்து தன் இசை கிணற்று தவளையாக இருக்க தகுதி உள்ள எந்த கலைஞனும் ஒத்து கொள்ள மாட்டன்
இதில் எங்கே தவறு உள்ளது

  நாட்டில் தினமும் குடித்து அழிந்து போகும் குடிமகனை விட ஒரு நாள் எந்திரன் படத்தை பார்த்து  சராசரி தமிழன் அழிந்து போவான் என்று பதிவு போடும் பதிவர்களை என்னவென்று  சொல்வது

நாட்டில் தினம் ஆயிரக்கணக்கில்  உழல் ,ஜாதி பிரச்சினை ,அரசியல் ,காலாவதி பொருள்கள் என பல்வேறு பிரச்சினை இருக்க எந்திரன் படத்தை புறக்கணிப்போம் என்று பதிவு போடும் பதிவர்களை புறக்கணிப்போம்

கலாநிதி மாறன் ரஜினி ஷங்கர் ரஹ்மான் நாட்டுக்கு உழைக்க வந்தோம் என்று எப்போதும் சொல்லவில்லை தங்கள் கலை திறமை காட்டி அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பது அவர்களின் திறமை அதை  வேறு விதமாக நினைத்து
கம்யுனிசம் பேச வேண்டாம்

  "வெளிநாட்டு பொருள்களில் வாங்க வேண்டாம் என்று சொல்பவன் வீட்டில்  படித்த தங்கள் வாரிசு வெளி நாடு சென்று சம்பாதித்தால் வேண்டாம் என்று சொல்லவா போகிறார்கள் "

எல்லாம் ஊருக்கு உபதேசம் செய்யும் ஆட்கள்
(இவர்கள் தன் முதலில் படம் பார்ப்பார்கள் )

படம் பார்க்க வேணாம் என்று சொல்லும்  அரை குறை நண்பர்களுக்கு சொல்ல விரும்புவது
ஐயா உங்கள் அளவுக்கு எங்களுக்கு அறிவு இல்லை.

எனவே நாங்கள் கண்டிப்பா படத்தை பார்ப்போம்





Sunday, August 8

ஹாய் அரும்பாவூர் பேஸ்புக் குழுவில் சேருங்கள்




   இப்போ இந்தியாவில் சக்கை போடு போடும் பேஸ்புக்கில் ஹாய் அரும்பாவூர் குழு உள்ளது இதில் விரும்பினால் சேருங்கள் .

உங்கள் ஆதரவு கிடைத்தால் இன்னும் அதிகமான பேருக்கு என் பதிவு செல்ல உபயோகமாக இருக்கும்


JOIN

  அல்லது LIKE
என்ற பட்டனை அழுத்தி ஹாய் அரும்பாவூர் குழுவில் சேருங்கள் உங்கள் ஆதரவை தரவும்  




என்னதான்  பதிவு  கொஞ்சம் சுமார இருந்தாலும் அதிகமான பேரை சென்றடைய விளம்பரம் தேவை எனவே ஹாய் அரும்பாவூர் பேஸ்புக் குழுவில் சேருங்கள்


உங்கள் கருத்து ஏதும் இருந்தால் மறக்காமல் பரிமாறவும் 



அன்புடன் 



ஹாய் அரும்பாவூர்

 

ஹாய் அரும்பாவூர் குழுவில் சேர இதை அழுத்தவும்


Friday, August 6

சின்ன சின்ன சினிமா செய்திகள்



1 .அஜித்தின் மங்காத்
தா படபிடிப்பு  தொடங்கியது . அஜித் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஆகஸ்ட் 2  படபிடிப்பு தொடங்கியது 

2.எந்திரன் தெலுங்கு மொழி உரிமை 30 கோடிக்கு விற்பனையானது ..இதில் இன்னும் ஒரு சிறப்பு ரஜினி தெலுங்கு மொழியில் டப்பிங் பேசி உள்ளார் தெலுங்கில் எந்திரன் ரோபோ என்று வெளி வரும்

3.கௌதம் குறுகிய காலத்தில் இயக்கி வெளியிட இருக்கும் நடுநிசி நாய்கள் விரைவில் வர இருக்கிறது .இது வரை யார் இசை என்று தெரிய வில்லை அநேகமாக எ ஆர் ரஹ்மானாக கூட இருக்கலாம்

4.ஏழு கோடிக்கு விற்கப்பட்ட எந்திரன் ஆடியோ எதிர்பார்த்ததை விட ஹிமாலய வெற்றி பெற்றுள்ளது . சி டி சேல் மற்றும் இணைய தள டவுன்லோட் மூலம் பெரும் சாதனை படைத்தது உள்ளது .ரஹ்மான் ரஜினி என்றாலே விற்பனை மந்திரம் தான்


5.எந்திரன் சனி ஞாயிறு மெகா வியாபாரம்
               சாதாரண விழா என்றாலே விளம்பரம் மூலம் லாபம் பார்க்கும் சன் டிவி நாளை மற்றும் நாளை மறு நாள் நடக்கும் எந்திரன் ஆடியோ விழா மூலம் sun tv  எவ்வளவு லாபம் பார்க்க போகுதோ .விவேக் வடிவேலு இரண்டு பேருடைய நகைச்சுவை கலக்கலா
இருக்கு மறக்காம பார்க்க வேணும் 



6.உத்தமபுத்திரன்
        தனுஷ்
நடித்து அடுத்த வர இருக்கும் படம் தமிழ் திரையுலகில் இப்போது பெரிய ஹீரோக்களை காப்பற்றும் வெற்றி மந்திரம் அதே ரீ மேக் படம்தான் .
ரெடி என்ற தெலுங்கு படம் இப்போ மினிமம் வெற்றி எல்லாம் பக்கத்து வீட்டில் இருக்கு








Wednesday, August 4

ஏ ஆர் ரஹ்மான் ஐ ட்யூன் சாதனை ஷ்லம்டாக் மில்லியனர் &எந்திரன்




  இப்போது வந்து இருக்கும் எந்திரன் பாடல்கள் ஐ ட்யுனில் சாதனை என்று அந்த ஐ  ட்யூன்  இணைய தளம் சென்று பார்த்த போது ஐ ட்யுனில் எ ஆர் ரஹ்மானின் ஷ்லம்டாக்  மில்லியனர் பாடல்கள் இன்னும் சத்தம் இல்லாமல் சாதனை செய்து வருகிறது


  ஐ ட்யுனில் பல்வேறு நாடுகளின் ஐ ட்யூன் தளங்களின் டாப் 10  டவுன்லோட் செய்ய படும் பாடல்களில் எ ஆர் ரஹ்மானின் ஷ்லம்டாக்  மில்லியனர் நீண்ட நாட்களக்கு பிறகும் இன்னும் சாதனை  செய்து வருகிறது 



நாடுகள் வாரியாக டாப் 10 டவுன்லோட் பாடல்களில் ஷ்லம்டாக்  மில்லியனர் இடம்
பிரான்ஸ் 2  ,ஆஸ்திரேலியா 2 ,ஆஸ்திரியா 3 ,பெல்ஜியம் 1 ,டென்மார்க் 7  ,பின்லான்ட் 9  ,இத்தாலி 7
ஜெர்மனி 9  லெக்சம்பர்க்  1  ,நார்வே 1 ,ந்யுசிலாந் 1 , ஸ்பெயின் 1  ஸ்விடன் 3  போர்சுகல்  5  





என பல்வேறு நாடுகளில் ரஹ்மானின்  இசை சாதனை படைப்பது அவரின் உழைப்புக்கு ஏற்ற வெற்றி
ஐ ட்யூன் top10world albums பிரத்யோக இணைய தளம் செல்ல  இதை அழுத்தவும்


Sunday, August 1

ஒரே வார்த்தை ஓஹோன்னு "எந்திரன்" பாடல்கள்



       சும்மா சொல்ல கூடாது ரஜினி படம்னா ஒரு டைட்டில் பாட்டு தத்துவ பாட்டுன்னு ஒரே மாதிரி அவரை பார்த்து இப்போ எந்திரன் பாட்டு கேட்க்கும் 
போது
  சிவாஜி படத்துல விவேக் சொல்வரே இப்போ வர விடலை பசங்க எல்லாம் கை தூக்கி பஞ்ச டயலாக் பேசறாங்க நீயுமா சிவாஜி அப்படின்னு கேட்ப்பார் (இப்போ வர்ற அரை டிக்கெட் நடிகர்கள் எல்லாம் பஞ்ச டயலாக் பேசி ரஜினி படத்திற்கு உரிய மரியாதை போய்டுச்சு )

  டைட்டில் பாட்டு இல்லை குத்து பாட்டு இல்லை தமிழ் திரை உலகதிற்கு புதுமையான பாட்டு அதுவும் ரஜினி சார் படத்தில்.
 நிச்சயம் பாட்டு எல்லாம் ஹிட் 


எப்பன்டின்னு சொன்ன முதல்ல கேட்க்கும் போது எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை
ரெண்டாவது முறை கேட்க்கும் போது பரவாயில்லை என சொல்ல வைத்தது
திரும்ப திரும்ப கேட்க்க  ரஹ்மான் ரியல்லி இசை மேஸ்ட்ரோ என்று நிருபித்து விட்டார்
புதுமையான இசை ஒலிகள் சிறப்பான தமிழ் கலந்த அறிவியல் வரிகள் (சிட்டி பாட்டு மட்டும் கொஞ்சம் ஸ்லம்டாக் ஞாபகம் வருகிறது மற்றபடி )


   ரஜினிக்கு இந்த பாட்டு ஒத்து
வராது என்று சொல்ல முடியாது  (யார் சொன்னது ரஜினி ரசிகர்கள் புதுமையான பாட்டை கேட்க்க மாட்டார்கள் என்று அது அந்த காலம் மாப்பு )

இப்படி வேண்டும் என்றால் சொல்லலாம் இந்த கால இளைய தலைமுறை நடிகர்களுக்கு கூட இப்படி பட்ட பாட்டு கிடைக்காது
மொத்தத்தில் எந்திரன் பாட்டுகள் அமெரிக்க ஐ பேட் முதல் சௌகார் பேட்டை சைனா மொபைல் வரை  ஒத்து போகும் கலக்கல் பாட்டுகள்


அரிமா அரிமா என்ன பாட்டு சார்
கிளிமஞ்சாரோ கேட்க்க கேட்க்க சொக்க வைக்கும்
பூம் பூம்  கலக்கல் பூம்

சிட்டி
சிட்டி காலர் ட்யூன் ஹீரோ

இரும்பில் செய்த இதயம்   ரஜினி சார் எப்படி இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடபோறார் என்று மலைக்க வைக்குது (
பாட்டின் ஆரம்பம் மட்டும் காதல் வைரஸ் படத்தில் வரும் பைலமொரே பாட்டை ஞாபகபடுத்தும்)



காதல் அணுக்கள்  ஆரம்பத்தில் வரும் பழைய இளையராஜா ட்யூன் போன்ற சந்தம் கிறங்க வைக்கும் குரல் கேட்க்க கேட்க்க ஸ்லொவ் பாய்சன்  "சிம்பு ,சூர்யா அஜித் எல்லாம் பொறமை பட போகும் பாட்டு "

புதிய மனிதா மட்டும் கொஞ்சம் லேட் பிக்அப்   இதவும் ரஹ்மான் குரல்க்கு கேட்கலாம் கூடவே எஸ் பி பாலசுப்ரமணி



புதிய தலைமுறைக்கு ஏற்ற அடுத்த கட்ட இசை எந்திரன்


மன்னிக்கணும் புதிய மனிதா திரும்ப oru முறை கேட்டேன் இதுவும் ஹிட்


(நான் ரஹ்மானின் தீவிர ரசிகன் சார் )






பாட்டை நல்லா கேட்டு எனக்கு எல்லா பாட்டும்  பிடித்த பின் இந்த பதிவு