Tuesday, August 17

நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன்தொடர் பதிவுக்கு அழைத்த அருமை நண்பன் எப்பூடிக்கு நன்றி

பதிவுலகத்தில் என்னை மதித்து ஆதரவு தந்த நண்பர்களுக்கும் சகோதரிகளுக்கும்  பதிவுலக திரட்டிகளுக்கும் நன்றி

இப்போ நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன் என்பதை பற்றி  சிறு தொகுப்பு

1.அது என்ன ஹாய் அரும்பாவூர் ?
   முதலில் பதிவுலகம் வரும் எண்ணமே இல்லை அப்படியே
போய் இருக்க வேண்டியதுதானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது (அது உங்கள் நல்ல நேரம் சார் )
  அரும்பாவூர் நான் பிறந்து வளர்ந்த ஊர் சுற்றிலும் மலைகள் சூழ்ந்து உள்ள மலயாப்பட்டி ,ஊரை சுற்றி சிறு சிறு கிராமங்கள் (அப்போ உன் என்ன பெரிய சிட்டியா ? அப்படின்னு கேட்க்க வேண்டாம் கொஞ்சம் பெரிய ஊர்தான் )தழுதாழை மேட்டூர் கிருஷ்ணாபுரம் என பல ஊர்கள் இருக்கு 


என்னோட ஊர் பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கு
 முதலில் வணக்கம் அரும்பாவூர் என்று தான் தலைப்பு வைத்து இருந்தேன் காலப்போக்கில் ஹாய் அரும்பாவூர் என மாறி விட்டது
  பதிவுலகத்திற்கு வர காரணம் ?
        மிக முக்கிய காரணம் தமிளிஷ் தான் ஒரு வருடதிர்க்கு முன் நான் தினமும் தமிளிஷ் இணையத்தில் பல பேருடைய பதிவுகளை பார்ப்பேன் அந்த ஆர்வம் தான் மொக்கை பதிவு புகழ் ஹாய் அரும்பாவூர் ஆகி விட்டது 


  2.முதல் பதிவை பற்றி ?
  நம்முடைய முதல் பதிவே தலை ரஹ்மான் பற்றி தான் அவர்   கப்புள்ஸ் ரீத்ரெட்
என்னும்ஆங்கில படத்திற்கு இசை அமைத்தது பற்றி என்னுடைய பதிவுதான் அது ஆனால் அதை வலைப்பதிவு  திரட்டியில் சேர்க்க வில்லை


3.முதல் பாராட்டு
என்னுடைய   மரம் ஒரு வரம்  என்னும் பதிவுக்கு வெண்ணிற இரவுகள் மற்றும் பின்னோக்கி இருவரின்  பின்னுட்டம் என் எழுத்து ஆர்வத்தை இன்னும் அதிகம் ஆக்கியது 


4.பின்னுட்டம் வாக்களிப்பு எதற்கு முன்னுரிமை ?
பின்னுட்டம் என்பது முக்கியம் ஆனால் ஆதி விட முக்கியம் வாக்கெடுப்பு என்பதில் உறுதியாக இருப்பவன் நான்  நம்முடைய பதிவு எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் பல பேரை சென்றடைய வாக்கெடுப்பில் வாக்கின் எண்ணிக்கை தேவை இல்லையா அதனால் நான் அதிகம் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவேன்  நான் ஆயிரக்கணக்கில் அளித்த வாக்குகள் சாட்சி 5.வலைபதிவை பிரபலம் ஆக்க என்ன செய்விர்கள் ?
 வேற என்ன ஆரம்ப காலத்தில் நியூஸ் பானை ,தமிளிஷ் ,தமிழ்10 உளவு, நம்குரல் ,என எல்லா வலைபதிவு திரட்டியுலும் பதிவை இணைப்பேன்
இப்போ இன்டிலி ,திரட்டி பேஸ்புக் மற்றும் தமிழ் 10 மட்டுமே

6.நண்பர்களின் ஆதரவு உள்ளதா ?
உனக்கு ஏன் இந்த தேவை  இல்லாத வேலை  எழுதி ஏதும் ஒரு ருபாய் லாபம் இருக்க இதுதான் அவர்களின் கருத்து

7.உங்களுக்கு பிடித்த  பதிவர்?
  என் மீது பாராட்டு தெரிவிக்கும் எல்லா நண்பர்களும் எனக்கு பிடித்த  பதிவர்களே 
8.வலைபதிவு வந்த பின்பு ஏதும் மாற்றம் ?
ஒன்றும்  இல்லை ,அதே முபாரக் கான் அதே சூப்பர் மார்கெட் வேலை

9.பதிவுலகில் வந்த பின்பு நண்பர்களின் வட்டம் அதிகம் ஆகி உள்ளதா ?
நண்பர்கள் அதிகம் ஆனால் யாருடனும் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என் தொலைப்பேசி இலக்கம் யாருக்கும் கொடுக்க வில்லை அவர்கள் தொடர்பு கொள்ளும் போது என்னால் பேச முடியாத என் வேலை 

00971501431819

என் இலக்கத்திற்கு உங்கள் பெயர் வலைப்பதிவு தலைப்புடன் எஸ் எம் எஸ் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும் போது நானே தொடர்பு கொள்வேன் 10.மற்ற வலைபதிவு நண்பர்களுக்கு ஏதும் கருத்து ?

அந்த அளவிற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை
எனக்கு உங்களின் தொடர் ஆதரவு தேவை


நான் தொடர் பதிவு எழுத அழைப்பது
  புன்னகையே வாழ்க்கை
உண்மை உணர்வுகள்

7 comments:

 1. உங்கள் ஊரை பார்க்கும்போது சூப்பராக இருக்கிறது , நான் இதுவரை ஒரு மலைகூட நேரில் பார்த்ததில்லை, உங்கள் ஊர் மலையடிவாரத்தில், சூப்பர்.

  ReplyDelete
 2. நாம் உங்களுக்கு என்ன பாவம் பண்ணினோம் முபாரக்..
  இப்படி ஒரு ஆப்பு வச்சிட்டீங்க...
  உங்க ஊர் சூப்பர்.. (எங்க ஊர் மாதிரி)

  ReplyDelete
 3. அந்த ஊரும் மலையும் ரொம்ப அழகா இருக்கு சார்!

  ReplyDelete
 4. 8.வலைபதிவு வந்த பின்பு ஏதும் மாற்றம் ?
  ஒன்றும் இல்லை ,அதே முபாரக் கான் அதே சூப்பர் மார்கெட் வேலை///

  உண்மையான வார்த்தை நண்பா

  ReplyDelete
 5. நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. ஆஹாஆரம்பமே ரகுமான் தானா

  ReplyDelete
 7. நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்.. arumbavur

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை