Friday, September 3

தமிழ் சினிமா மூன்று மூர்த்திகள் PART 1



இப்படியும் சொல்லலாம் தமிழ் சினிமா இப்போ இந்த மூன்று பேரின் கைகளில் உள்ளது .அல்லது இவர்களின் கையில் ஆட்டுவிக்கபடுகிறது . இப்போது இருக்கும் ஆட்சி என்னும் அஷ்திரத்தை  வைத்து  இவர்களின் சொல்படி தான் தமிழ் திரை உலகம் இருக்கோ என்றோ சொல்லும் படியான இவர்களின் பட வெளியிடும் அதற்க்கு தமிழ் நாட்டில் கிடைக்கும் மறைமுக ஆதரவும் ஒரு காரணம்

           ஒரு காலத்தில் தமிழ் படம் என்பது ஒவ்வொரு தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி இருந்தது ஒரு புது பத்மா வந்தால் திருவிழா கோலம் கொண்டாடிய தமிழ் திரை உலகம் சேட்டலைட் தொலைக்காட்சி ,விரைவாக வளர்ந்து வரும் இணையம் இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக திருட்டு  விசிடி போன்ற பெரும் சுனாமிகளின் மோதி சின்னாபின்னமானது  என்னவோ  உண்மை

 தொடர் திரை அரங்குகளின் மூடு விழ ,பழமை வாய்ந்த திரை நிறுவங்கள் படம் தயாரிப்பு என்ற விஷயத்தை அடக்கி வாசித்தது .நடிகர்களின் சம்பளம் ,கார்பரேட் நிறுவனகளின் திரை உலகின் வளர்ச் அதே வேகத்தில் அவைகளின் தோல்வி என பல விசயங்களில் தமிழ் படம் சிக்கி சீரழிந்த போது இந்த மூன்று பேரின் வருகை அளவான வளர்ச்சி மிகைபடுத்தப்பட்ட விளம்பரம் அளவிற்கு அதிகமான அளவில் செய்யப்படும் முதலிடு
அது எப்படி இவர்களின் படங்கள் மட்டும் வெற்றி பெறுகிறது அல்லது இவர்களால் எப்படி தாக்குபிடிக்க முடிகிறது 


சன் பிக்சர்ஸ் :
             இதில் சன் பிக்சர்ஸ் இவர்களின் வருகை மற்றும் வளர்ச்சி இன்று நேற்று உருவானதல்ல சன்  டிவி அதன் ஒரு அங்கமாக சன் பிக்சர்ஸ் வெகு காலமாக இருந்து வந்தது .சன் பிக்சர்ஸ் மற்றும் ராடான் பிக்சர்ஸ் இனைந்து திரை அரங்கு வராத தொலைக்கட்சிக்கு மட்டும் படங்கள் தயாரித்து அதன் மூலம் ஒரு லாபம் பார்த்து
சன் டிவி தொடர்ந்து பார்பவர்களுக்கு இது தெரியும்

  அது மட்டும் இல்லாமல் சன் டிவி  வந்த பின்பு தான் தமிழ் திரை படங்களின் சேட்டலைட் விநியோக உரிமைக்கு என ஒரு நல்ல விலை கிடைக்க ஆரம்பித்து
அது மட்டும் இல்லாமல் ஆரம்ப காலங்களின் பல படங்களின் வெற்றிக்கு சன்  டிவி விளம்பரம் ஒரு பக்க பலமாக இருந்தது
திரை துறை சார்ந்த நிகழ்சிகளுக்கு அதிக விலை கொடுத்து அது போன்ற நிகழ்ச்சி நடத்தி ஒரு லாபம் பார்க்க சன் டிவி வழி வகை  செய்ததது
(விஜய் டிவி போல திரை கலைஞர்களை மட்டும் பயன்படுத்திக்கொண்டு திரை உலகுக்கென ஒன்றும் செய்யாமல்  இல்லை   விஜய் டிவி தொடர்ந்து பார்பவர்களுக்கு அந்த விஷயம் தெரியும் ஹிந்தியில் இருக்கும் அவர்களின் ஸ்டார் பிளஸ் ஹிந்தி படத்தை அதிக விலை கொடுத்து வாங்கும்போது ஏன் தமில் மட்டும் இவர்களால் வாங்க முடியாதா ?அனால் அதை விட்டு விட்டு திரை கலைஞர்களுக்கு விழா திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சி மட்டும் வழங்க வில்லை )


 சன் டிவி  வந்த  பின்புதான் தமிழ் திரை உலகம் மோசமான நிலை அடைந்ததது என்பதை ஒத்து கொள்ள முடியாது


மாறி வரும் தொழில் நுட்பம் காரணாமாக சன் டிவி இல்லை என்றால் ஒரு மூன் டிவி அல்லது ஏதோ ஒரு டிவி அந்த வேலை செய்யும்
அப்படியே இருந்தாலும் சன் டிவி க்கு பின்தான் தமிழ் திரை உலகம் மோசமான நிலைக்கு  வந்தது என்றாளது உடனே நடந்து இருக்கும் இத்தனை ஆண்டு சென்று இந்த நிலை அடைய மிக முக்கிய் காரணம்
# திரை அருங்குகளின் அதிகப்படியான  டிக்கெட் விலை
#விலைக்கு  ஏற்ற சரியான  வசதி இல்லாமை
#நடிகர்களின் அதிகப்படியான் சம்பளம்
#நல்ல கதை உள்ள படங்களின் வருகை குறைவு
#இவை எல்லாவற்றக்கும் மேலாக திருட்டு விசிடி

சரி சன் பிக்சர் வருவோம்
    இப்போது இருக்கும் சூழ்நிலையில் அரசியல் சூழ்நிலை மாறினாலும் மாறாவிட்டாலும் சன்  டிவி வளர்ச்சி அரசியல் பயன்படுத்தி வர வேண்டும் என்ற நிலை தாண்டி வெளியே வந்து விட்டது
ஆரம்ப காலங்களின் சன் டிவி அரசியல் பயன்படுத்தி முன்னேறி இருந்தாலும் ? இப்போது இருக்கும் அதன்  சரியான வளர்ச்சி விகிதம் மற்றும் திரை  உலகில் சன் டிவி செய்யும் முதலிடு சன் டிவி பண  பலம் மற்றும் மார்க்கெட்டிங் திறமை  ஆகியவற்றின் காரணமாக  தமிழ் திரை உலகின் வெற்றி உண்மையான வெற்றி என சொல்லலாம்

இந்தியாவில் சிறந்த மீடியா நிறுவனத்தின் சன் பிக்சர்ஸ் தமிழ் தயாரிப்பு நிறுவங்களில் முதல் இடம் பெறுமா?
அதன் வரும் பெரிய முதலிட்டு படமான எந்திரன் வெற்றியில் அதன் மார்க்கெட்டிங் திறமை தெரியும்

சன் டிவி மீது உள்ள குற்றச்சாட்டு :
  1.சன் டிவி தான் வாங்கும் படத்தை மட்டும் சிறந்த படமாக  போடுகிறது
2.சன் டிவி டாப் டென் நிகழ்ச்சயில் அதன் படம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் முதல் இடத்தில இருக்கிறது
3.அதே நேரத்தில் மற்ற நல்ல படங்களை பற்றி அதன் தொலைக்கட்ச்யில் போடுவதில்லை
4.தொடர்ச்சியாக போடப்படும் திரைப்பட விளம்பரம் சன் டிவி படம்
மீது வெறுப்பு வருகிறது


  next பெரிய தலை பற்றி அடுத்த பதிவில்

4 comments:

  1. //# திரை அருங்குகளின் அதிகப்படியான டிக்கெட் விலை
    #விலைக்கு ஏற்ற சரியான வசதி இல்லாமை
    #நடிகர்களின் அதிகப்படியான் சம்பளம்
    #நல்ல கதை உள்ள படங்களின் வருகை குறைவு
    #இவை எல்லாவற்றக்கும் மேலாக திருட்டு விசிடி// good thought. thank u for sharing.

    ReplyDelete
  2. Anonymous4.9.10

    ரொம்ப ஆராய்ச்சிப்பண்ணி எழுதி இருக்கீங்க போல...

    ReplyDelete
  3. சன் டி.வி.யை பற்றி அக்குவேறு ஆணிவேராக பீராய்ந்து விட்டீர்கள்....

    அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்....

    ReplyDelete
  4. We have to take maran's business path how can we grow .

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை