Sunday, September 5

ராக்கிங் சைத்தான்களும் & ஏழை மாணவியின் பரிதாபமும்


செய்தி 1
  ராசிபுரம் மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டதற்கு ராக்கிங் கொடுமையே காரணம் என மாணவியின்  பெற்றோர் புகார்

செய்தி 2
 

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பொறியியல் மாணவி ஜோதி தற்கொலை செய்து
கொண்டதற்கு, அவரது வகுப்பில் படித்து வரும் ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த
கேலி, கிண்டல்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.
செய்தி 3
ராக்கிங் கொடுமையை நடக்காமல் தடுக்க வேண்டும் பிரதிபா பாட்டில்

இந்த விசயத்தில் எது நடந்ததோ ஆனால் ஒரு அப்பாவி மாணவியின் உயிர் போனது போனதுதான் 


இந்த விசயத்தில் மாணவியின் உயிர்  போக காரணம் அந்த மாணவிக்கு தன்னம்பிக்கை குறைவாக கூட இருக்கலாம் .
இந்த விசயத்தில் அரசு பள்ளியில் படித்த அதிலும் கிராமப்புற மாணவர்களின் நிலை மிகவும் மோசம்
அரசு பள்ளியில் அவர்கள் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்தாலும் நல்ல மதிப்பெண் பெற்று இருந்த போதும் புதிதாக செல்லும் பொது அவர்கள் சந்திக்கும் மிக பெரும் பிரச்சினை ஆங்கிலம்
ஆங்கில கல்வியும் நம் மாணவர்களும் என்று நான் எழுதிய பதிவை படிக்க இதை அழுத்தவும்

இந்த விசயத்தில் அந்த மாணவியின் பெற்றோர் மனம் எப்படி கஷ்டப்படும் என்பதை நினைது பாருங்கள்
என்னை பொறுத்தவரை ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த எந்த மாணவனும் இது போன்ற கீழ்த்தரமான இது போன்ற ரேகிங் கொடுமையில்  ஈடுபடமாட்டான்
  இந்த ரேக்கிங் கொடுமை இனிமேல் நடக்காமல் இருக்க மாணவர்கள் அவர்களாய்  திருந்தினால் மட்டுமே முடியும்

ஒவ்வொரு மாணவனின் /மாணவியின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு  கல்லூரி செல்லும்  முன்  ரேக்கிங்  கொடுமை நடக்காமல் இருக்க  அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல அறிவுரை வழங்க வேண்டும்
ஒவ்வொரு மாணவ / மாணவிகளுக்கு கல்வி பற்றி விழிப்புணர்வு வழங்குவதுடன் நல்ல  மனோதைரியத்தை வழங்க வேண்டும் .தன்னம்பிக்கை இல்லாத கல்வி அஸ்திவாரம் இல்லாத மாளிகை போன்றது
இதை நினைவில் வைத்து மாணவ மாணவிகளுக்கு நல்ல தைரியம் கொடுத்து கல்லூரி அனுப்ப முயற்சி செய்ய வேண்டும்


  இந்த மாணவியின்  மரணம் ரேக்கிங் கொடுமைக்கு கடைசி உயிராக இருக்க வேண்டும் இனிமேல் இது போன்ற கொடுமை நடக்காமல்  இருக்க  நமக்கு தெரிந்த மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்

   ஆங்கில கல்வி முக்கியமா இல்லையா? என்பதையும் தெரிவிக்கவும்

     "தற்கொலை செய்து கொண்ட  ராசிபுரம் மாணவி ஜோதி ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்"






6 comments:

  1. நம் கல்விமுறை தன்னம்பிக்கை, தைரியம், எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் ஆகியவற்றைத்தர வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. Anonymous6.9.10

    உங்கள் பிராத்தனையில் நானும் பங்கேற்கிறேன் நண்பரே...

    ReplyDelete
  3. எந்த மொழிவழிக்கல்வியாய் இருந்தாலும்தான் என்ன. மாணவர்களின் மனதை பண்படுத்தவியலாத ஏட்டுச்சுரைக்காயாய் இருப்பதுதான் பெரிதும் வருத்தமளிக்கிறது.

    ReplyDelete
  4. May her soul rest in peace.

    ReplyDelete
  5. என்னை பொறுத்தவரை ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த எந்த மாணவனும் இது போன்ற கீழ்த்தரமான இது போன்ற ரேகிங் கொடுமையில் ஈடுபடமாட்டான்
    இந்த ரேக்கிங் கொடுமை இனிமேல் நடக்காமல் இருக்க மாணவர்கள் அவர்களாய் திருந்தினால் மட்டுமே முடியும்


    ... so true.

    ReplyDelete
  6. ராசிபுரம் மாணவி ஜோதி ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்
    இவன்
    http://tamilcinemablog.com/

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை