Monday, September 3

வி.களத்தூரின் கல்லாற்று பாலம் திறப்புவிழாவுக்கு தயார்? ready for grand opening of the bridge kallarru


அரும்பாவூர் இருந்து வி.களத்தூர் செல்ல பெரம்பலூர் வழியாக செல்ல வழி இருந்தாலும் 
குறுக்கு பாதை எனப்படும் கிருஷ்ணாபுரம் வடகரை வழியாக களத்தூர் செல்ல சிறந்த பாதை ஆற்றை கடந்து செல்ல இருந்த பாலம்.
 பழையதாக மாறி வெல்ல பெருக்குக்கு தாக்கு பிடிக்காமல் போய்   அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு கஷ்டமாக இருந்தது  

  ஏன்  நான் கூட களத்தூர் செல்ல இந்த பாலம் உதவியாக இருந்தது என்றால் மிகை இல்லை 



 வி.களத்தூர் கல்லாற்றின் குறுக்கே ரூ. 4.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலக் கட்டுமானப்பணிகள் விரைந்து  முடிக்கப்பட்டுள்ளன, ஜூலை மாதத்தில் இந்தப்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று  ஜூன் 22 தேதி  கலெக்டர் தரேஸ்அஹமது  கூறினார்

 வண்ணம் தீட்டும் பணியும் முடியும் நிலையில் உள்ளது. இந்த (செப்டம்பர்) மாதம் திறப்புவிழா நடைப்பெறலாம். என்று தெரிகிறது



புது பாலம் இந்த ஊரு மக்களுக்கும் அரசு பள்ளி சென்று படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்



ஆற்றின்  மேம்பாலத்தில் இருந்து பார்க்கும் போது பள்ளியின் மினார் என்ன அழாகாக இருக்கிறது


பெரம்பலூர்  இருந்து வரும் என் டி பஸ் இந்த வண்டியில் பெரம்பலூர் வழியாக களத்தூர் சென்று வந்தது மறக்க முடியாத நினைவுகள்







 நன்றி : வி.களத்தூர் .காம்
 புகைப்படம் : அப்சரா மில் சையது

No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை