Monday, February 7

இப்படி ஒரு வேட்பாளர் வேண்டும் பகுதி -3

இப்படி ஒரு வேட்பாளர் வேண்டும் என்ற இந்த பகுதியல் இதற்க்கு முன்பு நான் எழுதிய சவி ராஜாவைத் போல மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் நம்  MLA  சிலர் நம்மிடம் உள்ளனர் என்பதை  கூறவே புதிய தலைமுறை இதழில்  வந்த பகுதியை இதில் பயன்படுத்தி உள்ளேன்
 என்ன செய்வது இவர்களை போல எளிமையாக வாழ நினைக்கும் வேட்பாளர்கள் சிலர் மட்டுமே நம்மிடம் உள்ளது என்னவென்று சொல்வது
      தன்னிடம் உள்ள பதவி என்னும் அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய சுயலாபத்திற்கு பயன்படுத்தாமல் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்று இவர்கள் மட்டும் நினைக்காமல் எல்லோரும் நினைத்தால்
 நிச்சயம் ஒரு வளமான எதிர்காலம்  நம் தமிழகதிற்கு உண்டு

  மக்களுக்கு உழைக்க நினைக்கும் உண்மையான வேட்பாளர்களுக்கு நாம் ஆதரவு தர வேணும்  

 நிச்சயம் இந்த தேர்தலில் நாம் நமக்காக நாம் அறிவுக்கு எது சரியோ அதன் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும்
நிச்சயம் இது போன்ற காரணங்களுக்காக வாக்களிகக வேண்டாம்
1 . பணத்திற்காக வோட்டு (அவர்கள் தரும் பணம் நம்மை வைத்து இன்னும் அதிக அளவில் பணம் சம்பாதிக்க செய்யும் முதலிடு )
2 . நடிகர்களுக்காக ( இன்று இந்த வேட்பாளர் சரி இல்லை என சொல்லும் இவர்கள் நாளையே பணம் என்று வந்த உடன் யாரை எதிர்த்தார்களோ அவர்களுடன் இனைந்து கொள்வார்கள் )
        
 இந்த தேர்தலில் மட்டும் இல்லை எல்லா தேர்தல்களிலும் நமக்கு சிந்திக்கும் அறிவு இருக்கு நமக்கு நாளைய தலைமுறைக்கும் உண்மையில் உதவி செய்வது யார்? 

இதுவரை இப்போது ஆட்சி செய்தவர்களின் நிலை?
இப்போது எதிர்கட்சியாக இருப்பவர்கள் அவர்கள் ஆட்சி இருந்தபோது என்ன செய்தார்கள்?
என்பதை நினைத்து வாக்களிக்க வேண்டும் .
வாக்களிப்பது ஒரு நாள் வேலை என்றாலும் ஐந்து வருடம் நாம் தலை எழுத்தை மாற்றும் விஷயம் இதில் யாருடைய பேச்சையும் கேட்காமல் நன்கு யோசனை செய்து நாம் வாக்கை அளிக்க வேண்டும்

நிச்சயம் நாம் தமிழ் நாடு அமைதியாக இருக்க நல்ல வேட்பாளர்கள் யார் என்பதை தேர்ந்தெடுத்து  வாக்களிக்கவும்
நடிகர்களுக்கு .அரசியல்வாதிகள் தரும் பணத்திற்கு .மதம் சார்ந்த விசயங்களுக்கு முடிந்த அளவிற்கு வாக்களிக்க வேண்டாம்

  தேர்தல் கால பதிவை பற்றி உங்கள் கருத்து தேவை 


புதிய தலைமுறையில் வந்த சில மக்களுக்கு உழைக்க நினைக்கும் எம் எல் ஏக்கள் பற்றி உங்களுக்கு






 

மதுரையிலுள்ள ஒரு பிரபல கல்லூரி. தனது மகனை அங்கு சேர்ப்பதற்காக பணம் கட்ட வந்திருக்கிறார்கள். மதுரை கிழக்குத் தொகுதி எம்எல்ஏ நன்மாறன். ஆனால், மாணவர்கள் சேர்க்கைக்கான கடைசி நாளான அன்று, பணம் கட்டும் நேரமும் கடந்துவிட்டது. கடன உடன வாங்கி பணம் ரெடி பண்ணிட்டு வர்றதுக்கு நேரமாயிருக்சுங்க என்று சொல்லிப் பார்த்திருக்கிறார் நன்மாறன். ஸாரி சார், டைம் ஓவர் என்பதே கல்லூரி நிர்வாகத்தின் பதில்.

அடுத்த ஆண்டு முன்னர் சொன்ன அதே பிரபல கல்லூரியில் நடந்த ஒரு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் நன்மாறன். மேடையில் பேசிய அக்கல்லூரியின் முதல்வர் நன்மாறனின் எளிமையைப் பாராட்டியதோடு நமது கல்லூரியில் நம் எம்எல்ஏவின் மகனும் படிக்கிறார் என்பது நமக்குப் பெருமை என்று பேச... உடனே நன்மாறன், அவரது கையைப் பிடித்து சுரண்டி யிருக்கிறார். என்ன?வென குனிந்து கேட்ட முதல்வரிடம் என் பையன் இங்க படிக்கலை சார், அன்னிக்கு டைம் முடிஞ்சுருச்சுன்னு சொல்லிட்டாங்க, சரி, படிக்கிறதுக்கு சிபாரிசு எதுக்குன்னுட்டு வேற காலேஜ்ல சேத்துட்டேங்க என்று மெல்லிசான குரலில் சொல்லி முடிக்க... ஆடிப்போனார் கல்லூரி முதல்வர். 



பார்ப்பதற்கு மிக மிக எளிமையாக இருப்பவர் திருவட்டாறு எம்எல்ஏ லீமாறோஸ். ஒருமுறை தனது தொகுதியிலுள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு போயிருக்கிறார். அங்கிருந்த அலுவலக உதவியாளரிடம் நான் இந்தத் தொகுதி எம்எல்ஏ. ஆர்டிஓவைப் பார்க்கணும் என்றிருக்கிறார். உதவியாளர் நம்பாமல் விசிட்டிங் கார்டு கேட்டிருக்கிறார். இல்லையே என்ற லீமாறோஸ் ஒரு துண்டுச்சீட்டில் எழுதித் தந்தார். அதைப்பார்த்த ஆர்.டி.ஓ. லீமாறோஸை வரச் சொல்லியிருக்கிறார்.
உள்ளே வந்தவரைப் பார்த்ததுமே ஆர்.டி.ஓ., உதவியாளரைக் கூப்பிட்டு எம்எல்ஏவை முதலில் அனுப்புங்க என்று சொல்ல, நான்தான் எம்எல்ஏ என்று லீமா சொல்லியும் அவர் நம்பவில்லை. தனது அடையாள அட்டையை லீமாறோஸ் எடுத்துக்காட்டிய பிறகுதான் ஆர்.டி.ஓ. ஸாரி மேடம், பொதுவா எம்எல் ஏன்னா ஆடம்பரமா, நிறைய ஆட்களோட வரு வாங்க. நீங்க சாதாரணமா, தனியா வந்ததால நம்ப முடியலை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் ராமசாமி, திண்டுக்கல் பாலபாரதி, நாகப்பட்டினம் வி.மாரிமுத்து, விளவங்கோடு ஜாண்ஜோசப், அரூர் டில்லி பாபு, குடியாத்தம் லதா, பெரம்பூர் எ.கே. மகேந்திரன் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசு அளித்துள்ள இலவச பஸ்பாஸை பயன்படுத்தித்தான் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்கின்றனர். வட்டச் செயலாளர்களே ஸ்கார்பியோ, டொயோட்டானு பறக்கற காலத்துல இவங்க இப்படியா? என்று சகபயணிகளோடு பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் ஆச்சரியப் பார்வை பார்க்கின்றனர்.
நன்றி : புதிய தலைமுறை (பிப்ரவரி 10)


     இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்  தமிழ்மணத்தில், இன்ட்லி ,மற்றும் தமிழ் 10 போன்றவற்றில் உங்களின் ஆதரவை அளிக்கவும்



       இந்த பதிவின் கருத்து உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் பேஸ்புக் மூலம் மற்றவர்களுக்கும் கூறவும்




2 comments:

  1. இவங்கஎல்லாம் 30,40 வருசத்துக்கு முந்தி இருந்த சட்டமன்ற உறுப்பினர்களோ..?நம்பவே முடியலீங்கண்ணா...!

    ReplyDelete
  2. நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் வேட்பாளர்களை போல, எல்லோரும் இருந்தால்? சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட பதிவு.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை