Tuesday, February 8

2 idli 2 vadai tamil short film

2 இட்லி 2 வடை குறும்பட விமர்சனம்

 தயாரிப்பு :வெயிலோன் திரை  
நடிப்பு :
              முருகன்    (கான்டீன்  வேலையாள் )
              பால சரவணன் ,நட்டு ,பாலாஜி ,விஜய் குமார் ,கௌசிக் (மாணவர்கள் )
 இணை இயக்கம் :உலகன் ,வெங்கடேஷ் ,சிவா
அசொசியட் இயக்கம் :எஸ்.விக்னேஸ்வரன் ஆர் .கார்த்திக் ஐயர்
எடிட்டிங்: சரத் ஜோதி ,
இசை :தயானத் பிறைசூடன்   சினிமடோக்ரபி :கோகுல் பினோய்
இயக்கம் :எஸ் யு. அருண்குமார் 




         கல்லூரி நினைவுகள் பற்றி பல படங்கள் குறும்படங்கள் வந்து இருந்தாலும் இந்த படம் தொட்டு இருபது யாராலும் மறக்க முடியாத ஒரு இடத்தை கல்லூரியில் படிக்கும் போது எந்த அளவிற்கு படிப்பு முக்கியமோ அதே அளவில் உணவு பிரச்னைகள் இருக்கும்
ஒரு சிலருக்கு சிறப்பான  கல்லூரி கான்டீன் கிடைக்கும்  வீட்டில் தாய் இடம் கிடைக்கும் பரிவான உணவு நிச்சயம்
கான்டீன்யில் கிடைக்காது சில கான்டீன் வேலையாட்கள் தங்களிடம் சாப்பிட வரும் மாணவர்களை தங்கள் மகனாக நினைத்து பரிவுடன் கவனிக்கும் சில நல்ல உள்ளங்கள்  உண்டு  அப்படிப்பட்ட ஒரு மனிதரை பற்றிய குறும்படம் இது

    இந்த படத்தில் கான்டீன் வேலையாளாக வரும் அழகர் அண்ணன் (முருகன்) நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய கதாபாத்திரம் அதை ஒட்டிய    நடிப்பு என இயல்பாக வாழ்துள்ளார் .  கல்லூரி மாணவர்களா வருபவர்களின் தேர்வு சிறப்பானது இந்த படத்தின் தூண்களாக இவர்களின் நடிப்பு உள்ளது (பால சரவணன் ,நட்டு ,பாலாஜி ,விஜய் குமார் ,கௌசிக்) ஒரு இடத்திலும் குறை சொல்லமுடியாத நடிப்பு எட்டு நிமிடம்  ஓடும் படத்தில் சிறப்பான இசை ,ஒளி கோர்வைகள் எட்டு நிமிட படத்தில் எடிட்டிங் பாராட்ட பட வேண்டிய விஷயம் (சரத் ஜோதி , ) அதே போல இசை படத்தின் ஜீவனாக உள்ளது
இந்த கூட்டணி வெள்ளி திரையில் சாதிக்க எல்லா திறமைகளும் உள்ள அணி அது

          சில ஜீவனுள்ள மனிதர்கள் பற்றிய பாராட்ட பட வேண்டிய குறும்படம் இது வாழ்த்துக்கள் எஸ் யு. அருண்குமார் 


இந்த படத்தை  பார்க்க 





   இந்த(  குறும் )படம் உங்களுக்கு  பிடித்து இருந்தால்  வாக்களிக்கவும்
                           மறக்காமல்  உங்கள் கருத்தை கூறவும்

          விரைவில் சித்தம் குறும்படம் விமர்சனம்



5 comments:

  1. அருமையான பகிர்வு.,, குறும் படம் அரும்பாவூர்.

    ReplyDelete
  2. ஒரு அருமையான குறும்படத்தை பற்றி சொன்னதற்கு நன்றிங்க... மிகவும் ரசித்தேன்!

    ReplyDelete
  3. அந்த குறும்படம் மனதை விட்டு அகல நாளாகும்....

    ReplyDelete
  4. கதை எனக்கு பிடிச்சிருந்தது. ஆனால் students நடிப்பு எனக்கு பிடிக்கலை. ஒரு நாடகத்தனம் தெரியும். மத்தபடி அழகர் அண்ணனா வருகிறவற நெறைய படத்துல பார்த்திருக்க்கிறேன்.he is a natural actor.

    டெல்லி பிரபு

    ReplyDelete
  5. Short film is super boss...
    2 vadai guy Acting is good...

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை