Friday, February 25

சென்னையில் கவிழ்ந்த காவலன்



        இப்போ நடக்கும் இந்த உலக கோப்பை காரணமாக திரை அரங்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும் நிலையில் 



 பொங்கல் படங்கள் வந்து ஐந்து வாரங்கள் முடிந்த நிலையில் பொங்கல் படங்களின் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வந்துள்ளது
   என்னதான் படம் வெற்றி வெற்றி என்று சொன்னாலும் காவலன் சென்னை நிலவரம் நார்மலாக உள்ளது அவரின் முந்தைய படங்களை போல தான் இந்த படமும் வசூல் பெற்றுள்ளது
ஐந்து வார முடிவில்  ஆடுகளம் மற்றும் காவலன் படத்தை விட  சிறுத்தை படம் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்து பொங்கல் படங்களில் சூப்பர் ஹிட் படம் ஆகா சிறுத்தை படம் மாறி உள்ளது
ஐந்து வார முடிவில் சிறுத்தை படத்தின் மொத்த வசூல் Rs. 4.50 கோடி   ,ஆடுகளம் Rs. 3.32 கோடி , காவலன் Rs. 3.30 கோடி

 ஐந்து வார முடிவில் கூட
சிறுத்தை படத்திற்கு வரும்  வரும் ரசிகர்களின்  எண்ணிக்கை 56% சதம்  உள்ளது
காவலன்  45%   ஆடுகளம் 50 % சதம்
    மொத்தத்தில் பொங்கல் படங்களில் சென்னை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் சிறுத்தை மட்டுமே
   ஆகா பொங்கல் படங்களில் சிறுத்தை படம் சென்னை பாக்ஸ் ஆபீஸ் மட்டும் இல்லை  சென்டர்களிலும் ஹிட் ஆகா  ஒரே விஷயம் போரடிக்காத கதை வசனம் மட்டுமே

 நன்றி
Behindwoods

 





Thursday, February 24

அரசியல் நாக்குகள் (எப்படியும் பேசும் )


           தேர்தல் நெருங்க நெருங்க நேற்றைய கெட்டவர்கள் இன்றைய நல்லவர்கள் ஆவார்கள் .மக்கள் சேவை கடவுள் சேவை என சொல்லும் இவர்கள் தங்கள் சுயலாபத்திற்கு இன்னும் என்ன என்ன பேச்சு சொல்வார்களே

     இவர்கள் வந்து நம்மை எல்லாம்?



அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக-முதல் கட்ட பேச்சு
 

ஜெயலிதா சொன்னது :
குடித்து விட்டு அறையில்  அறையில் கிடப்பவர் . ஊழலை ஒழிப்பதும், வீட்டுக்கு வீடு ரேஷன்பொருள் வழங்குவதும்  குடிகாரன் பேச்சாக உள்ளது

விஜயகாந்த் சொன்னது  :
ஆளுநர் சென்னாரெட்டியையே கொச்சைப்படுத்திய ஜெயலலிதா, என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதில் எந்தவியப்பும் இல்லை. யார் என் மீது சேற்றை வாரி வீசினாலும், அவற்றை சந்தனமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நான் பெற்றிருக்கிறேன்.

 இந்த விவகாரத்திற்கு தேமுதிக தொண்டர்கள் செய்தது

இதேபோல ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தலைமையில் ஜெயலலிதாவுக்கு கண்டனம்தெரிவித்து போராட்டம் நடந்தது. சேலத்தில் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை தேமுதிக தொண்டர்கள் எரித்தனர். கும்பகோணத்திலும்ஜெயலலிதாவைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.


திமுக கூட்டணியில் ராமதாஸ்

இலங்கை விவகாரம் பற்றி கருணாநிதிக்கு எதிராக ராமதாஸ் சொன்னது

இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத்தை உருவாக்கித் தருமானால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே ஆளட்டும்; 10 ஆண்டு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி செய்யாது என்றெல்லாம் அன்றைய காலத்தில் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். ஆனால், காலத்தின் மாற்றம் காரணமாக இதையெல்லாம் இன்றைக்கு அவர் மறந்துவிட்டதன் விளைவாகத்தான் இலங்கையில் சுமுகநிலை திரும்பிவிட்டது என்று துணிந்து சொல்கிறார். மற்றவர்களும் அதை நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

காடு வெட்டி குரு கைது ஆனதை எதிர்த்து

தமிழக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும், காடுவெட்டி குரு அரசியல் நோக்கத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. மத்திய அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதை ரத்து செய்து அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிடவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

         இப்போ இவர்கள் ஒரே கூட்டணி