Thursday, August 19

சிக்கு புக்கு இசை ரயில் (இசை விமர்சனம் )


நீண்ட நாட்களுக்கு பிறகு காதுகளுக்கு இனியமையான் இசை தொகுப்பு .மாடர்ன் இசையும் கிளாசிக் இசையும் கலந்த ஜுகல் பந்தி  சிக்கு புக்கு

ஆர்யா ஸ்ரேயா சந்தானம் நடிப்பில்
கலோனியல் கசின்ஸ் பிரவின் மணி இருவரும் சேர்ந்து கலக்கி இருக்கும் இசை ஆல்பம்
மோதி விளையாடு படத்திற்கு பின் கலோனியல் கசின்ஸ் இசையில்  வரும் இரண்டாவது ஆல்பம் 


 
மொத்தத்தில் இளமை ததும்பும் இசை ஆல்பம்
1.சிக்கு புக்கு (பென்னி தயால், ராகுல் நம்பியார் ,மாயா )

 கற்க நாம் கற்க  இளமை ததும்பும் பா.விஜய் வரிகள் கல்லூரி மாணவர்களின் தீம் பாடல் டாக்சி டாக்சி பாடலுக்குக் பின் பாஸ்ட் ரிதமில்  வரும் பாடல்  பென்னி தயாள் ராகுல் நம்பியார் குரலும் பாடலுக்கு பிளஸ் பாயிண்ட் நீண்ட நாட்களுக்கு மாணவர்களின் தேசிய கீதமாக  இருக்கும் பாடல்

2. ஒரு நிலா (ஷங்கர் மகாதேவன் ,சந்திராய பட்டச்சார்யா ,உமா )

பாடலின் ஆரம்பத்தில் வரும் பெண்ணின் அழகிய ஹம்மிங் அதை தொடர்ந்து வேகமான தளக்கட்டுடன் வரும் ஷங்கர் மகாதேவன் குரல் ஷங்கர் மகாதேவன் குரலை இப்படி கேட்டு எத்தனை நாள் ஆகிறது ,வேகமான இசையுடன் சிறப்பான குரல்களுடன் வரும் பாடல் வாலிப கவிஞர் வாலி இந்த வயதில் எவ்வளவு அழகா பாடலை எழுதி இருக்கிறார்
3.ஜரா ஜரா (பென்னி தயால் ,லாவண்யா )
     பென்னி தயால் குரலில் மற்றும் ஒரு கலக்கல் பாடல் புரியும் படியான் பாடல்கள் அதை இன்னும் சிறப்பாக்கும் இசை பேஸ் கிடார் ,ட்ரும்ஸ் என பாடல் கேட்க்க கேட்க்க சுகம்
ஸ்மைல் (சுசித் சுரேசன் )
   ஹிப்பி டைப் பாடலாக ஆரம்ப்பிக்கும்  இசை ஹும்மிக் அப்படியே ஒரு இளமை ரிதம் மாறும் பாடல் கலோனியல் கசின்ஸ் இசை தொகுப்பு சிறப்பாக இருக்கிறது .காதுக்கு தொந்தரவு இல்லாத இசை சிறப்பான மெலடி
  4.தூறல் நின்றாலும் (ஹரிஹரன் )
  ஹரிஹரன்  குரலின் வரும் கஜல் பாடல் தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தமிழில் கஜல் பாடல்களில் சொல்லும் படியான பாடலாக இருக்கும் ,ஹரிஹரன் உருகி பாடி இருக்கிறார் அவருடன் சேர்ந்து பாடி இருக்கும் வாளடி சகோதர்களின் குரல் நிச்சம் இந்த கஜல் பாடல் இன்னும் ஒரு சிறப்பன் கஜல் பாடலாக இருக்கும்
5.விழி ஒரு பாதை (அட்னான் சாமி ,சுஜாதா   )
  அட்னான் சாமி சுஜாதா குரலுக்கு கேட்கலாம்   என்ன அட்னான் சாமி தமிழை கஷ்டப்பட்டு  பாடுகிறார் அதும் அழாக இருக்கு
6.அடி சாரல் (பிரதிப் விஜய் சுவி )
      பிரதிப் அவர்களின் மெல்லிய குரலில் ஆரம்பிக்கும் பாடல் சுவி இனைந்து படும் பொது மெல்ல மெல்ல ஆரம்பிக்கும் வேகம் பாடல் முழுவதும் மெல்லிய அதிர்வை உண்டாக்குகிறது .காதலர்களுக்கு ஏற்ற பாடல் வியலின் புளுட் என பாடல் முழவும் சிறப்பாக உள்ளது
மொத்தத்தில் ஒரு கேட்க்க ரசிக்க கூடிய
ஆல்பம் சிக்கு புக்கு


ரேட்டிங் இசை  :9.5/10

 
பாடல் பிளேயர்
நன்றி : ராகா .காம்




1 comment:

  1. நல்ல இசை விமர்சனம் இப்போவே கேக்கணும் போல இருக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை