Thursday, July 22

சிரிக்க தொடங்குமா (ரீமேக் ) திரை உலகம் ?




 

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் நடிக்க மறுக்கும்  அல்லது நடிக்க விரும்பாத வெற்றி மந்திரம் நகைச்சுவை படங்கள் ,


ஹிந்தி திரை உலகில் அதிக அளவில் பயன்படுத்தபடுகிறது .நகைச்சுவை படம் நடிப்பதால் எந்த அளவில் இவர்களின் மார்க்கெட் கீழே போகும் என தெரிய வில்லை

தன்னை நம்பி வரும் ரசிகன் சந்தோசமாக இருப்பதை விட ,தங்களின் ஒன்றுக்கும் பயன்படாத வெட்டி பந்தாவுக்கு ஆசைப்படும் சில நடிகர்களால்தான்  தமிழ் சினிமாவின் நகைச்சுவை என்னும் கோட்டை குட்டி சுவர் ஆனது


நல்ல நகைச்சவை படம் பார்க்க வேண்டும் என்றால் இப்போது நாம் சொல்வது மலையாள படங்கள் ,ஹிந்தி படங்கள் ,சில நேரங்களில் தெலுங்கு படங்கள்
நகைச்சவை இயக்குனர்கள் கொடிகட்டி பரந்த தமிழ் திரை உலகின் இன்றைய  நிலை புது இயக்குனர் முதலில் சொல்லும் கதை

" நம்ம ஹீரோ ஐந்து வயசு இருக்கும் போது பசி கொடுமை உடனே என்ன பண்றான் பக்கத்துல இருக்குற ரொட்டியை திருடுறான் அப்போ தடுக்க வர்ற ஒரு ஆளை ஏதோ கோபத்துல கையில இருக்குற கத்தியால ஒரு குத்து இப்போ ஸ்க்ரீன் புல்லா ரெட் ஆகுது "
இப்படித்தான் கதை சொல்கிறாகள்.
 
அதை விட்டால் காதல் வன்முறை ,பரம்பரை வன்முறை ,ஜாதி வன்முறை ,
ஏன் இதை விட்டால் வேறு கதையை நம்ம மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று இவர்களே முடிவு செய்து விடுவது
பிறகு
எப்படி எல்லா தரப்புக்கும் லாபம் தரும் நல்ல படங்கள் வரும்

            இவர்கள் செய்யும் இந்த சேட்டைகள் பார்ப்பதை விட ஆங்கில படத்தின் சேட்டைகள் பரவாயில்லை என்று நினைப்பதால் தான் மொழிமாற்று ஆங்கில படங்கள் மாபெரும் வெற்றி பெறுகிறது


தமிழில் வெற்றி பெரும் நல்ல படம் என்றால் அது மினிமம் உத்ரவாதம் ரீ மேக் படம் என மாற காரணம் ஒரே மாதிரி கதையை இயக்கம் வரவேற்கும் நடிகர்களை சொல்லலாம் 

புகழின் உச்சியில் இருக்கும் எல்லா நடிகர்களின்  படங்களும் அவர்களின் வெற்றியை தரும் படம் எல்லாம் ரீ மேக் படமாக இருக்க முக்கிய காரணம், இங்கே சொல்லும் படியான நல்ல கதை உள்ள  படங்கள் குறைவாக வருவதே .
சொல்லும்படியான் படங்கள் என்று எல்லா விதத்திலும் எல்லா தரப்பையும் சந்தோசபடவைத படங்கள் குறைவே அவை அயன் ,நாடோடிகள்,சிங்கம்,பையா , என குறைவான அளவில் சொல்லி விடலாம் .திரை அரங்கு சென்று பார்க்க வேண்டும் என்று நினைக்க வைக்கும் படங்கள் எத்தனை என விரல் விட்டு எண்ணி விடலாம் .

மினிமம்  வெற்றி பெற்றால் போதும்  நினைக்க வைக்கும் படங்கள் இப்போது அதிகம் வருகிறது .

எல்லா தரப்பையும் கவரும் நல்ல திரை கதை உள்ள படங்கள் என்றால் அது மிகவும் குறைவே

செலவும் குறைவு மினிமம் உத்தரவாதம் உள்ள படங்கள் நகைச்சுவை உள்ள படங்கள் என்பதை நம் நடிகர்களும் ,இயக்குனர்களும் உணரும் வரை இது போன்று ரீ மேக் படத்தின் பின்னே அலைய வேண்டியது நம் தலை எழுத்து


ஹிந்தி மொழியில் இப்போது புகழ் பெற்ற நடிகர் அக்சய் குமார் கூட தன் மினிமம் வெற்றிக்கு நம்புவது  .காமெடி நிறைந்த நகைச்சுவை படங்களை தான்
அக்சய் குமார் பிரியதர்சன் என்றால் வெற்றி கூட்டணி  என்பது மறுக்க முடியாது .வெற்றி கூட்டணி என்பதை விட நம்பி போகும் ரசிகரை சிரிக்க  வைத்து அனுப்புவதில்
சிறந்த கூட்டணி என கூட சொல்லலாம் .

இவர்களின் கூட்டணியில் வரும் படம் கட்டா மிட்டா
பிரியதர்சன் படம் எல்லாம் நகைச்சுவை வகை சேர்ந்த்தது இல்லை ஆனால்.அக்சய் குமார் பிரியதர்சன் இணைந்தால் அது நிச்சயம் காமெடி வகை படமாக மாறும் என்பதில் மாற்றம் இல்லை
இதற்க்கு முன் இவர்கள் கூட்டணயில் வந்த தே டன டேன் ,பூல் புலாலியா (சந்த்ரமுஹி),கரம் மசாலா ,ஹீரா பெரி ,என சொல்லிக்கொண்டு போகலாம்

நம்ம தமிழ்  சினிமா சிரிக்க தொடங்குவது எப்படி










   

4 comments:

  1. இங்கு சொல்லிக்கொள்ளும்படியான நகைச்சுவை இயக்குனர்கள் யாரும் இல்லை:((

    ReplyDelete
  2. நகைச்சுவைக்காக படங்கள் வந்ததுபோல் இப்போது வருவது இல்லை...எப்புடி சொல்லியவாறு சொல்லிக்கொள்ளும்படியான நகைச்சுவை இயக்குனர்கள் யாரும் இங்கு இல்லைதான்..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. //அவை அயன் ,நாடோடிகள்,சிங்கம்,பையா , என குறைவான//
    இதை விட, பசங்க, வெண்ணிலா கபடி குழு .. போன்ற படங்கள் எவ்வளவோ தேவலாம்

    ReplyDelete
  4. நம்ம ஆளுங்க action எனும் பெயரில் எவ்வளோ காமெடி பண்றாங்க ... அத விட்டுட்டீங்களே..

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை