Tuesday, December 27

முல்லை பெரியார் விசயமும் இளையராஜா மற்றும் AR ரஹ்மான் விளக்கமும் & நடிகர்களும்



  முல்லை பெரியாறு  விசயத்தில் பெரிய நடிகர்கள் எல்லாம் வாய் திறக்காத நேரத்தில் ( அவர்களுக்கு தெரியும் அவர்கள் வாய் திறந்து தமிழனுக்கு ஆதரவாக பேசினால் மலயாளிகள் படம் பார்க்க மாட்டார்கள் அங்கு இருந்து அவர்களுக்கு கிடைக்கும் பணம் கிடைக்காது இல்லையா ? )
அதனால்தான்  அப்போ இதே நடிகர்கள்தான் இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள் என்றால் அதிலும் ஒரு வியாபார தந்திரமே தவிர வேறு ஏதும் இல்லை
  ஏன் என்றால் இவர்கள் எதிர்த்து குரல் கொடுக்கும் சிங்களவர்கள் இவர்கள் நடிக்கும் படத்தை பார்பதில்லை என்பதால் மட்டுமே
  சிங்களவன் மட்டும் இவர்கள் படத்தை பார்க்கும் நிலையில் இருந்து  இருந்தால் நிச்சயம் இந்த நடிகர் கூட்டம் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்து இருக்காது
  சரி இந்த நடிகர்களின் படங்களை மட்டும் பாருங்கள் மன்றம் வைக்காதிர்கள் என்று சொன்னால் மட்டும் கேட்கவா போறோம் ?



இது ரஹ்மானின் வருத்தம் 


  சரி இப்போ விஷயம் டேம் 999  படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேணும்  என்று பெருந்தன்மையுடன் கேட்ட ரஹ்மானை எதிர்த்து ஒரு குரல் எழும்புவதை அறிந்ந்த ரஹ்மான் உடனே எதிர்ப்பு எதிராக கடிதம் அனுப்பி உள்ளார் அது கீழே 




இது இளையராஜா வருத்தம்
 
மலபார் கோல்ட் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே ஒப்பந்தம் ஆகிவிட்டது. என் துணைவியாரின் மரணத்திற்கு பிறகு, நான் எந்த நிகழ்ச்சிக்கும் ஒப்புக் கொள்ளவில்லை.

இப்போது இந்த நிகழ்ச்சியை நடத்துவது சிக்கலாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின், தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்துக்கு ஆளாவேன் என்பது எனக்கும் தெரியும்.

அவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். எனவே எப்படியாவது நான் நிகழ்ச்சியை ஒத்திப்போடுவதற்கோ, கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்கோ முயற்சி செய்கிறேன் என்று போராட்டக்காரர்களிடம் கேட்டுள்ளார்

No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை