பிளாஸ்டிக் எமன்
நாம் இயற்கை விசயத்தில் சாதரணமாக நினைக்கும் விஷயம் நாம் நினைத்து பார்க்க முடியாத கொடூர எமனாக இருப்பதற்கு பெரும் எடுத்துக்காட்டு பிளாஸ்டிக் இன்று நம் வாழ்க்கையில் நுழைந்து நம் குடும்ப நண்பரில் ஒருவராக மாறி இன்று நம்மை ஆட்சி செய்யும் விஷயம் பிளாஸ்டிக்
பிளாஸ்டிக் தானே என்று நாம் சாதாரணமாக நினைக்கும் விஷயம் நம் இயற்கை நம் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்று பார்தாலே போதும் அதை பற்றி விழிப்புணர்வு நமக்கு மட்டும் இல்லாமல் நம்மை சார்ந்த சமுகதிற்க்கும் உண்டாக்குவது முக்கியம்
முதலில் பிளாஸ்டிக் பொருள்கள் உண்டாக்கும் விசயதை பற்றி
1 . பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணில் மக்கும் தன்மை இல்லாதது .மறுசுழற்சி செய்யாமல் குப்பையில் நாம் வீசும் பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணில் மக்காமலும் ,மரங்களின் வேர் மண்ணில் செல்ல விடாமலும் தடுக்கும்
அது மட்டும் இல்லாமல் மழை கால நீரை சரி வர மண்ணிற்கு செல்ல விடாமல் நிலதடி நீர் மட்டம் குறைய காரணாமாக இருக்கும்
2 .புற்று நோய் , தரமற்ற பிளாஸ்டிக் பொருள்களில் சூடான உணவு பொருட்களில் வைப்பதால் நுரையீரல் பாதிப்புகள் மரபணு குறைப்பாடு என பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால் அது வெளியிடும் புகை பல சுவாச சம்பந்தப்பட்ட நோய்களை உண்டாக்கும்
3 .பிளாஸ்டிக் பொருள்களை உணவு பொருள் என எண்ணி விழுங்கும் விலங்குகள் பரிதாபமாக உயிர் இழக்கின்றன
என்னதான் நினைத்தாலும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு இன்றி நம்மால் இருக்க முடியாது ஆனால் அதன் பயன்பாடுகளை குறைக்க நம்மால் முடிந்த செயலை செய்யலாம்
1 . வீடுகளில் நாம் பயன்படுதும் பிளாஸ்டிக் பொருட்களை ஒரே குப்பையாக தனியாக போட்டு வைக்கலாம்
2 . மினரல் வாட்டர் குளிர் பாதன பாட்டில்களை ஒரு முறை க்கு மேல் பயன் படுத்த வேண்டாம்
3 . வீட்டில் சமையல் பொருள்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்காமல் எவர்சில்வர் பீங்கான் பொருள்களை பயன்படுத்தலாம்
4 சூடான உணவு பொருட்களை தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களில் வைக்க வேண்டாம்
5 பொருட்களை வாங்க கடைக்கு செல்லும் போது முடிந்த அளவிற்கு அதிக அளவிலான பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்த வேண்டாம் முடிந்த அளவிற்கு நாமே இப்போது நல்ல மாடல்களில் வரும் மறு சுழற்சி சணல் பைகளை பயன்படுத்தலாம்
6 பிளாஸ்டிக் பொருள்களில் தர கட்டுப்பாடு முத்திரை பற்றி அறிந்து கொள்வது நலம் அதை பற்றி விரிவான தகவல்கள் அறிய
இதை படிக்கவும்
7 பிளாஸ்டிக் பொருள்கள் கௌரவ சின்னம் என்று நினைத்து நமக்கு நாமே அழிவை ஏற்படுத்தாமல் துணி பைகள் சணல் பைகளை அடிக்கடி பயன் படுத்தவும்
வெளிநாடுகளில் உள்ள பல பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன் பட்டை தடுக்க மறுசுழற்சி பைகள் மற்றும் சணல் பைகள் அதிகம் பயன் படுத்துகின்றனர்
பிளாஸ்டிக் பொருள்களை பற்றியும் அதன் தீமை பற்றி பல பதிவுகள் வந்து உள்ளன இயற்கை பற்றி இந்த தொடரில் பிளாஸ்டிக் பற்றி எழுதா விட்டால் குறையாக இருக்கும் என்பதால் இந்த பதிவு
இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்
இயற்கை பற்றி அறிய ஒரு சிறப்பான வலை தளம் ஒரு முறை பாருங்கள் மீண்டும் மீண்டும் படிக்க சிந்திக்க சிறந்த் தளம்
பூவுலகின் நண்பர்கள்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்
//என்னதான் நினைத்தாலும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு இன்றி நம்மால் இருக்க முடியாது ஆனால் அதன் பயன்பாடுகளை குறைக்க நம்மால் முடிந்த செயலை செய்யலாம்//
ReplyDeleteயதார்த்தமான உண்மை, பிளாஸ்டிக் பெருட்களை உக்குமாறு உருவாக்கலாம், வன்னியில் போலித்தீன்கள் இவ்வாறு உருவாக்கபட்டன(ஆனால் அவை தரத்தில் குறைந்தவை )
Thanks for sharing ARUMBAVUR
ReplyDeleteஇயற்கையைப் பற்றி எழுதியதற்காக உங்களுடைய இரண்டு ஓட்டு பட்டைகளிலும் குத்தி விட்டேன்..
ReplyDeleteமீதி பகுதிகளையும் படித்து விட்டு வருகிறேன்..
நன்றி..
http://saamakodangi.blogspot.com/2010/02/blog-post.html#comments
பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் முபாரக்.
ReplyDeleteநம்மால் முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க முடியாவிட்டாலும்
முடிந்த வரை அதனை பயன்படுத்துவதை படிப் படியாக குறைத்துக் கொண்டாலே
சுற்று சூழலை ஓரளவு பாது காக்க முடியம்.
அழகான பதிவு.
தொடரட்டும் உங்கள் பணி.
நட்புடன்.
அபுல்பசர் .