Thursday, January 6

ரஹ்மான் சார் உங்கள் இசைக்காகவே .....



              ஒரு படத்திற்கு உண்மையான பலம்  அந்த படத்தின்  இசை கூட ,அந்த இசை மொழி தெரியாதவன்  ஒருவனை  கவந்தால் அது அந்த இசை அமைத்த  கலைஞனுக்கு கிடைக்கும் மிக பெரும் அங்கிகாரம்
       அந்த வகையில் சொன்னால் ரஹ்மான் ஆங்கில படங்களுக்கு இசை அமைத்து உலக அங்கிகாரம் பெற்ற இந்த் நேரத்தில்
       இப்போது ரஹ்மான் இசை அமைத்து உலக அளவில் இசை ரசிகர்களால் / இசை விமர்சகர்களால் அதிக அளவில் பாராட்டப்படும் 127 ஹவர்ஸ்  படத்தின் இசை 


   அந்த படத்தின் உண்மையான  கதை நாயகனால் பாராட்டப்பட்டது ரஹ்மான் இசைக்கு கிடைத்த பெரும் அங்கிகாரம்

       மலையுச்சி ஏறும் போது ஒரு விபத்தில் கை இழந்து 127  மணிநேரங்கள் வெறும் கொஞ்சம் தண்ணிர் மற்றும் சிறுநீர் இரண்டை மட்டும் வைத்து ஒரு பெரும் வாழ்க்கை போராட்டம் நடத்தி உயிர் தப்பிய ஆரன் அவர்களின் உண்மை கதை இந்த் 127 படம்   


     

 ஆரன் சொன்ன வரிகள்  (நன்றி :விகடன் )

                ஏ.ஆர்... நம்ப முடியாத ஆச்சர்யமூட்டும் இசை அனுபவத்தை எனது வாழ்க்கைக் கதையில் சேர்த்ததற்கு நன்றி. உங்களுடைய சவுண்ட் ட்ராக் பின்னணியில் ஒலித்துக்கொண்டு இருந்தால், இன்னொரு 127 மணி நேரங்கள் நான் அந்த மலை இடுக்கில் கழிக்கும் தைரியம் வரப்பெற்றிருப்பேன் - ஆரன் ரால்ஸ்டன்’ - இது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆரன் எழுதி அனுப்பியிருந்த பாராட்டு வரி!

ஆரன் ரால்ஸ்டன் எழுதிய கடிதம் 
 
           இன்னும் ரஹ்மானின் பின்னணி இசை பற்றி மோசமாக கருது கூறுபவர்களுக்கும் சரி
அவர் வெளிநாட்டு இசை காப்பி அடித்து பெரிய ஆள் ஆனார் என்று  சில்லி தனமாக சொல்பவர்களும் சரி ரஹ்மான் இசை முடிந்தால் பாராட்டுங்கள்  முடியவில்லை என்றால் பொறாமைப்பட்டு  கேவலமாக பேச வேண்டாம்

       "இந்த வாரம் முழுவதும் ரஹ்மான் பற்றிய பதிவுகள் அதிகம் போட்டுள்ளேன் ரஹ்மான் பிறந்த நாளுக்காக  "



இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் 

பேஸ்புக் மூலம் பகிரவும்

3 comments:

  1. He is indeed one of the best!

    ReplyDelete
  2. // இன்னும் ரஹ்மானின் பின்னணி இசை பற்றி மோசமாக கருது கூறுபவர்களுக்கும் சரி
    அவர் வெளிநாட்டு இசை காப்பி அடித்து பெரிய ஆள் ஆனார் என்று சில்லி தனமாக சொல்பவர்களும் சரி ரஹ்மான் இசை முடிந்தால் பாராட்டுங்கள் முடியவில்லை என்றால் பொறாமைப்பட்டு கேவலமாக பேச வேண்டாம்//

    சரியாக சொன்னீர்கள் நண்பரே

    சமீபத்தில் மன் மதன் அம்பு திரைபட பாடல் வெளியீடின் போது உலக நாயகன் கூறியிருந்தார் எம்.எஸ் இளையராஜாக்கு பிறகு இசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல கூடியவர் தேவ ஸ்ரீ பிரசாத் என்று...

    Happy Birthday - ஏ.ஆர்.ரஹ்மான்


    தல தளபதி No போட்டி

    ReplyDelete
  3. கப்பியடிக்கிறவன் ஒருபோதும் ஆஸ்கார் வாங்க முடியாது, நம்ம மணிரத்னம் மாதிரி இந்தியர்களை வேண்டுமானால் முட்டாள்களாக வைத்திருக்கலாம், ஆஸ்கார் அளவில் உலகை ஏமாற்ற முடியாது.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை