Sunday, January 9

இப்படி ஒரு வேட்பாளர் வேண்டும் பகுதி 2

 
  சவி ராஜாவத் போல பத்து பேர் வந்தால் தமிழ் நாட்டில் நல்ல மாற்றம் வரும் (வீடியோ)

      இப்படி  ஒரு வேட்பாளர் வேண்டும் பகுதி 1  உங்களின் ஆதரவுக்கு நன்றி அதே நேரம் தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளன அதாவது 


                                        சவி ராஜாவத்

  நம் தலை எழுத்து நம்மை யார் யாரோ ஆட்சி செய்யும் போது அவர்கள் நான் இதை செய்வேன் இதை செய்வேன் என்று வெட்டி பந்தா காட்டி  நம்மை ஏமாற்றும் இவர்களுக்கு மத்தியில்
   அந்த காலத்தில் வாழ்ந்த கக்கன் காமராஜர் போன்றோர் வேண்டும் என்று சொல்ல வேண்டும் ஆனால் அப்படி சொல்வதை  விட இப்போ நம் கண்ணுக்கு எதிரில் மக்களுக்கு வாழும் மக்களுக்கு உண்மையாக வாழும் சவி ராஜாவத் போன்ற வேட்பாளர்கள் வேண்டும் 


மக்களுடன் சவி ராஜாவத் 



   இவரை பற்றிய விஷயங்கள்  நான் படித்தது மற்றும் உதவி செய்தது THANKS: விகடன் ,IBN LOKMAT, INDIA TIMES

சவி ராஜாவத் என்கிற 30 வயது இளம்பெண். எம்.பி.ஏ. படித்திருக்கும் இந்தப் பெண், ராஜஸ்தானின் பின்தங்கிய பகுதியான டோங் மாவட்டத்தின், சோடா  என்னும் கிராமத்தில் பிறந்தவர்
   ஷாருக் கான் படமான ஸ்வதேஷ் (தமிழில் :தேசம் ) படத்தில் வருவது போல தன்னுடைய மிக பெரும் நிறுவன வேலையே விட்டு விட்டு கிரமா மக்களுக்காக உழைக்கக் வந்தார்

  மக்களை ஏமாற்றி சம்பாதிக்க வரவில்லை  அரசியலுக்க வந்த விசயத்தை விட  பாராட்ட வேனித்யா மற்றும் ஒரு விஷயம் அவரின் உண்மையான உழைப்புக்கு ஆதரவளித்து ஓட்டளித்த அந்த மக்களை சொல்ல வேண்டும்
  (இன்னும் எம் ஜி ஆருக்கு வோட்டு போடுவேன் கருணாநிதிக்கு ஒட்டு போடுவேன் ,ரஜினிக்கு ஒட்டு போடுவேன் இவை எல்லாவற்றிக்கும் மேல் இலவசம் என்றால் பிச்சைக்காரன் போல தேடி வோட்டு போடும் ஈன நிலை மாறினால் மட்டுமே உண்டு )
   சவி ராஜாவத்  இளம்பெண். எம்.பி.ஏ. படித்துவிட்டோம் என்று நினைக்காமல் அரசியல் படிக்காதவர்களுக்கு என்று நினைக்காமல் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற நினைப்பே அவரின் உண்மையான தன்னம்பிக்கை
 தன்னுடைய படிப்பு அறிவை வியாபார நிறுவனங்களுக்கு பயன்படுத்தி தான் மட்டும் தன குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என்று நினைக்காமல் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று நினைத்த சவி ராஜாவைத் வாழ்க 

 சவி ராஜாவத் பற்றிய வீடியோ



  தமிழ் நாட்டில் சவி ராஜாவைத் போல மக்களுக்கு உழைக்க வேண்டும் மக்களை ஏமாற்றாமல் அரசியல் செய்து தமிழ் நாட்டை இந்தியாவில் முதல் மாநிலம் ஆக்க நினைக்க வேண்டும் என்று எத்தனையோ நல்ல உள்ளங்கள் உள்ளன
   ஆனால் அவர்களுக்கு ஆதரவு தர நம்மில் எத்தனை பேருக்கு என்னம் உள்ளது ,  ஒரு காலத்தில் விவசாயத்திற்கும் உணவு விலைவாசி ஏறாமல் இருந்த நிலை மாறி தமிழ் நாடே வறட்சி நிலை வர என்ன காரணம் அரசியல் வாதிகள் எந்த அளவிற்கு தங்கள் குடும்பம் பசுமையாக சந்தோசமாக இருக்க வேண்டும் வேண்டும் என்று நினைக்கின்றனரோ அந்த அளவிற்கு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்

 சவி ராஜாவாத் அவர்கள் சாதாரணமாக செய்த சாதனைகள் சில துளிகள் :
    கிராமத்தின் முக்கியப் பிரச்னையான தண்ணீருக்காக மழை நீரை சேமிக்க கிராமத்து பெரியவர்கள் மற்றும் ஜெய்ப்பூரின் மண் ஆய்வாளர்களின் கருத்துகளைக் கேட்டு, கிராமத்தின் நூறு ஏக்கர் அளவிலான ஏரியை ஆழப்படுத்தினார் ராஜாவத். இதற்கு உதவியாக  உடல் உழைப்பை கிராம மக்கள் சுமார் 3,000 பேர்  தர முன் வந்தோம். சிறுவர்கள், பெண்கள், ராஜாவத்தின் பெற்றோர் உட்பட அனைவருமாக ஏரியை வெட்டியதில் நல்ல பலன் கிடைத்துள்ளது'
           இவர் செய்த இந்த செயலால் விவசாயம் மற்றும் தண்ணிர் பஞ்சம் தீர்ந்துள்ளது  அதாவது அவர் மட்டும் நினைக்காமல் மக்களும் அவரின் ஒவ்வொரு செயலுக்கும் மக்கள் உதவி செய்ததால் இந்த சாதனை செய்ய முடிந்தது

    மக்களுக்குக் உண்மையில்   உதவி செய்ய நினைத்து இவர் ஒவ்வொரு செயலையும்  தமிழ் நாட்டில் இதுவரை ஆட்சி செய்த வேட்பாளர்கள் எத்தனை பேர் செய்து உள்ளனர் 
     மக்களுக்கு செய்யாமல் கவர்ச்சியாக அறிக்கைகள் மட்டும்
இவர்களுக்கு மத்தியில் இவர் செய்த  ஒரு செயல்
  "ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் மழை நீர் சேமிப்பு குறித்து ஒரு கருத்தரங்கு நடக்கவிருப்பதை கேள்விப்பட்ட ராஜாவத் அதில் கலந்து கொண்டு தனது கிராமத்தின் நிலை பற்றி பேசியுள்ளார். பிரச்னையை முறையாக எடுத்து வைத்ததைப் பாராட்டிய அமைச்சர், சோடா கிராமத்தின் மழைநீர் சேமிப்புக்காக 71 லட்சத்தை ஒதுக்கியிருக்கிறார்."

    நாம் எப்போது இது போன்ற உண்மையாக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் வேட்பாளருக்கு ஆதரவு  தர போகிறோம்

        சவி ராஜவாத் போன்ற உண்மையாக மக்களுக்கு உதவி செய்ய நினைக்கும் வேட்பாளர் வேண்டும் அதற்க்கு நம்மால் முடிந்த அளவிற்கு பதிவுகள் மூலம் கருத்துக்கள் பரப்பலாம்
  சிறு துரும்பும் பல்குத்த உதவும் 
  நிஜத்தில் இருக்கும் சவி ராஜாவைத் போன்ற வேட்பாளர்களும் கற்பனை திரைப்படங்களில் ஸ்வதேஷ்  போன்றவர்களும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்

''படித்துவிட்டு பெரிய, பெரிய நிறுவனங்களுக்காக நாம் செலவிடும் மூளையை, ஒரு கிராமத்துக்காகச் செலவிட்டால், வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து, வளர்ந்த நாடுகளின் பட்டியலுக்கு நம் நாடு மாறிவிடும்'' என்று கூறிய சவி ராஜாவத் வார்த்தைகள் நிச்சயம் உண்மையாக நாம் முயற்சி செய்வோம் 

   
நான் உங்களிடம் கேட்பது மறக்காமல் இந்த பதிவுக்கு   வாக்களிக்கவும்மறக்காமல் பேஸ்புக் மூலம் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்  


  
             டோன்ட் மிஸ் VOTE
 

1 comment:

  1. அன்பின் அரும்பாவூர் - செய்தி பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை