யுத்தம் செய்
பிப்ரவரி மாத படங்களில் மூன்று படங்கள் வருகிறது இதில் வெற்றி பட கம்பனி மற்றும் தமிழ் திரை உலகில் சொல்லும்படியான நிறுவனங்களில் ஒன்றான கல்பாத்தி எஸ் அகோரம் அவர்களின் தயாரிப்பில்
தமிழ் திரை உலகில் சொல்லும்படியான இயக்குனர் மிஸ்கின் மற்றும் சேரன் முதலாமவர் இயக்கத்தில் இரண்டாமவர் நடிப்பில் ஒரு ஆக்சன் படமாக வருகிறது யுத்தம் செய் படத்தின் விளம்பரங்கள் பார்க்கும் போது இந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது பார்க்கலாம் வெற்றி நிலவரம் எப்படி என்று
(ரீமேக் படமாக மற்றும் சுட்ட கதையாக இல்லாமல் உண்மையான வெற்றி படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் )
பிப்ரவரி 4 முதல் திரை அரங்கில் யுத்தம் செய்ய வரும் படம்
தூங்கா நகரம்
மதுரை பீவர் தமிழ் சினிமா பீல்டை இந்த அளவிற்கு பாடு படுத்துகிறது மீண்டும் ஒரு மதுரை சார்ந்த கதை மதுரை தயாரிப்பாளர் (அதான் தயாநிதி அழகிரி )
தமிழ் நாட்டில் 24 மணி நேரமும் சுறு சுறுப்பாக இருக்கும் நகரம் மதுரை அதை கதை கருவாக கொண்ட படமிது
களவாணி ஹிட் படத்திற்கு பின்பு விமல் நடிக்கும் படம் இந்த படமும் ஹிட் ஆனால் தமிழ் சினிமாவில் அதிக அளவில் சம்பளம் கேட்டும் நடிகர் தயார்
இந்த படம் வரும் தேதி பிப்ரவரி 4
கோ
தமிழ் சினிமாவில் ப்ளாக் பஸ்டர் படம் அயன் கொடுத்த பின்பு வரும் படம் சிம்பு முதலில் நடிப்பதாக இருந்து பின்பு ஜீவா கையில் சென்ற படம்
பத்திரிக்கை புகைப்பட கலைஞர் கதை நிச்சயம் இந்த படம் ஹிட் ஆகும் என வாழ்த்துவோம்
படத்தில் சிறப்பு விஷயம் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் ஒரு காட்சியில் வருகிறார் (ஹாரிஸ் ரசிகர்களுக்கு சந்தோசமான செய்தி)
இந்த் படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி ஒவ்வொரு தமிழ் ரசிகர்களை கவரும் பாடல்கள் ஹாரிஸ் மீண்டும் ராக் திஸ் ஆல்பம் (கிங் ஆப் ஆல்பம் பாட்டு "ஏதோ எண்ணம் திரளது")
பாடல்கள் பற்றி தனி பதிவு விரைவில்
ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்கள் கூட மிக முக்கியம் அந்த வகையில் இந்த படத்தின் பாடல்கள் நூறு சதம் இந்த் படத்தின் வெற்றிக்கு உதவும்
பிப்ரவரி மாதம் வரும் என தெரிகிறது ஆனால் தேதி மாற கூட வாய்ப்பு உள்ளது
கலக்கல் சினி மினி :
ரஜினி அவர்களின் எந்திரன் இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பட்டை கிளப்பியது தெரிந்த செய்தி இப்போ இந்த படம் ஆர்டிக் பிரதேசத்தில் திரம்சோ உலக பட விழாவில் திரையிடப்படுகிறது
அதாவது முதல் இந்திய படம் இந்த எந்திரன் இந்த உலக பட விழாவில்
ரஜினியின் ராணா :
இந்திய அளவில் வசூல் சாதனை செய்ய அடுத்த ஆட்டம் ஆட தயாராகிவிட்டார் இந்தியாவின் ஓன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினி
இதில் எனக்கு சந்தோஷம் தரும் செய்தி ரஹ்மான் மீண்டும் இசை
(ரஹ்மான் சார் இந்த் ஆண்டு முழுவதும் திரைப்படங்களுக்கு இசை அமைக்க மாட்டேன் குடும்பத்துடன் பொழுது கழிக்க போகிறேன் என சொல்லி விட்டு இப்போ மும்பை மன்கீஸ் ,சென்னையில் ஒரு மழைகாலம் ,இப்போ ராணா அப்போ நீங்க சொன்ன அந்த விஷயம் பொய்யா?)
3 இடியட்ஸ் படத்தில் சூர்யா இல்லை
மிகவும் நல்ல செய்தி சூர்யா ரசிகர்களுக்கு
சூர்யா உங்களிடம் புதுமையான கதைகள் மட்டுமே எதிர்பார்க்கிறோம் யாரோ ஒருவர் இயக்கி நிச்சயம் ஹிட் ஆகும் என்ற படத்தில் நடித்து மீண்டும் ஹிட் கொடுப்பதில் என்ன த்ரில் இருக்கு
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் எல்லாம் புது கதையில் நடிக்க பயந்து ஏற்கனவே அடுத்தவன் ஹிட் கொடுத்த படத்தில் நடித்து ஹிட் கொடுக்கும் காலத்தில் நீங்களும் இது போல செய்ய வேணாம் உங்களிடம் புதுமையான கதைகள் உள்ள படங்கள் எதிர்பார்க்கிறோம் ஏழாம் அறிவு மாற்றான் அயன் போல தமிழ் சினிமாவில் திறமையுள்ள கலைஞர்களில் நீங்களும் ஒருவர் ரீமேக் படங்கள் நடித்து உங்கள் தரத்தை குறைத்து கொள்ள வேணாம் (தமிழ் திரை உலகின் தரமும் சேர்த்து )
AJITH BILLA 2
AJITH BILLA 2
இனிமேல் சினிமா மட்டும் என் குறிக்கோள் என சொல்லிய அஜித் மங்காத்தா படபிடிப்பு போகும் வேலையில் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிவிட்டார் பில்லா 2 இந்த படத்திற்கு இந்தியாவில் யாரும் பயன்படுத்தாத கேமெரா பயன்படும் என தவகல் வருகிறது படம் எப்படி இருக்கும் என பார்க்கலாம்
இப்போ இருக்கும் நடிகர்கள் எல்லாம் ஆந்திராவில் மலையாளத்தில் என்த படம் ஹிட் ஆகிறது என்று பார்பதே முக்கிய வேலையாக உள்ளது (ரிஸ்க் எடுக்க இப்போ யாரும் விரும்பவதில்லை அவர்களுக்கு தேவை எப்படியும் வெற்றி மட்டுமே )
இப்படியே போனா ரீமேக் படங்களின் விலையே பெரிய அளவில் இருக்கும்
தமிழ் வளர்த்தோம் தமிழர்களை அழித்து
என்ன கொடுமை சார் இது தமிழ் வளர்ப்பதை விட தமிழர்கள் வளர யோசியுங்கள்
கடல் கடந்து வாழும் தமிழர்கள் விரும்பவது தன் தாய் கூட்டில் வாழ தான்
(அந்நிய நாட்டில் தங்கத்திலே வீடு கொடுத்தலும் கூட )
இப்போ இருக்கும் நடிகர்கள் எல்லாம் ஆந்திராவில் மலையாளத்தில் என்த படம் ஹிட் ஆகிறது என்று பார்பதே முக்கிய வேலையாக உள்ளது (ரிஸ்க் எடுக்க இப்போ யாரும் விரும்பவதில்லை அவர்களுக்கு தேவை எப்படியும் வெற்றி மட்டுமே )
இப்படியே போனா ரீமேக் படங்களின் விலையே பெரிய அளவில் இருக்கும்
தமிழ் வளர்த்தோம் தமிழர்களை அழித்து
என்ன கொடுமை சார் இது தமிழ் வளர்ப்பதை விட தமிழர்கள் வளர யோசியுங்கள்
கடல் கடந்து வாழும் தமிழர்கள் விரும்பவது தன் தாய் கூட்டில் வாழ தான்
(அந்நிய நாட்டில் தங்கத்திலே வீடு கொடுத்தலும் கூட )
ரீமேக் படங்கள் பற்றி நான் முன்பு எழுதிய பதிவை படிக்க இதை அழுத்தவும்
இந்த் பதிவு உங்களுக்குக் பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் பேஸ்புக் மூலம் உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும்
மறக்காமல் வாக்களிக்கவும்
:எல்லாம் தேர்தல் நேரம் வேற வழி:
இந்த் பதிவு உங்களுக்குக் பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் பேஸ்புக் மூலம் உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும்
மறக்காமல் வாக்களிக்கவும்
:எல்லாம் தேர்தல் நேரம் வேற வழி: