Thursday, June 2

மங்காத்தா & ஏழாம் அறிவு எப்படி இருக்கும் ? summaa



           இது இந்த படங்கள் பற்றிய செய்திகள் இல்லை இந்த படங்கள் தாத்தா முதலமைச்சர் ஆகா இருக்கும்போது ஆர்பாட்டதுடன்  தொடங்கிய படங்கள்
   கட்சிகள் மாறினால் காட்சிகள் மாறுவது இயல்பு அந்த வகையில் இந்த படங்களின் வெளியிட்டின் போது பழைய ஆர்பாட்டம் இருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகமே

   ஆட்சியில் இருக்கும்போதே உதயநிதி ஸ்டாலின் செய்த ஒரு புத்திசாலிதனமான காரியம் தன்னுடைய மைனா படத்தை விஜய் டிவிக்கு விற்றது மற்றும் தன்னுடைய புது படங்கள் பற்றிய நிகழ்ச்சிகளுக்கு விஜய் டிவியை அதிகம் நம்பியது போன்றது

  இப்போது கட்சி மாறிவிட்டது காட்சிகளும் மாறிவிட்டது இனி மங்காத்தா மற்றும் ஏழாம் அறிவு எப்படி இருக்கும்

 இப்போது வர இருக்கும் இரண்டு படங்களும் அரசியல் தவிர்த்து பார்த்தல் பெரும் எதிர்பார்ப்பு  படங்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை
 

 ஒன்று அஜீத் அவர்களின் ஐம்பதாவது படம் மற்றும் அஜித் ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ள  படம்.

மற்ற  ஒரு விஷயம் அஜித் எப்போதும் ஒரு கட்சிக்கு ஆதரவாக  இருந்தது இல்லை
என்பது ஒரு முக்கிய காரணம் என்றாலும்  கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதே அவர் இருக்கும் மேடையிலே பாராட்டு விழாக்கள் பற்றிய அவரின் பேச்சு ஒரு புயலை கிளப்பியது 


 இப்போது ஆட்சி மாறி இருக்கும் இந்த நேரத்தில் மங்காத்தா படத்திற்கு அந்த அளவிற்கு தொல்லைகள் இருக்காது என்பது நிச்சயம்
     தன் ரசிகர்கள் வேண்டாத அரசியல் விசயங்களில் ஈடுபடுவதால் அவர்களின் பிழைப்பு வீணாக போகும் என்ற காரணத்தால் மட்டுமே தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்த பின்பு வரும் படம் என்பதால் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு இருக்குமா என்ற விசயத்தை பொய்யாக்கினர் அவரின் ரசிகர்கள் மங்காத்தா ஒரு பாடல் ஆல்பம் வெளியான அன்று கடைகளில் கூடி இசை கேசட்டை வாங்க நின்ற எதிர்பார்ப்பு

  தயாநிதி அழகிரி என்ற படத்தையும் மீறி மங்காத்தா பெரும் எதிர்பார்ப்பை உண்டாகக் முக்கிய காரணம்  அஜீத்  மட்டுமே

 முன்பு போல திரை அரங்குகள் அவர்களின் கையில் அதிகம் இருக்காது என்பது ஒரு மைனஸ் பாயிண்ட்


 

உதயநிதி ஸ்டாலின் வழங்கும் ஏழாம் அறிவு கூட ஒரு வகையில் இந்த அரசியல் விளையாட்டை மீறி ஜெய்க்கும் என சொல்லலாம்
 முக்கிய காரணம்  எ ஆ
ர் முருகதாஸ் , சூர்யா ,மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ்  
தமிழ் படங்களில் பிரமாண்ட படங்கள் வரிசையில் சேரும் எல்லா சாத்திய கூறுகளும் உள்ள படம் இது
இந்த படத்திற்கு இருக்கும் ஒரு பிரச்சினை முன்பு போல திரை அரங்கு அதிகம் கிடைப்பது சாத்தியம் குறைவே
சூர்யா எந்த கட்சியையும் சேராதவர் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்  மற்று இந்த படங்கள் பற்றிய விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் எந்த தொலைக்காட்சியில் அதிகம் ஒளிபரப்பாகும் என்பதை வைத்து இதன் வெற்றி சதவிகிதம் கூடும்
  ஆட்சி மாறிய முதல் இன்று வரை திரை உலகம் சம்பந்தப்பட்ட விசயங்களில் அதிகம் புது அரசு ஈடுபடாதது பாராட்ட வேண்டிய விஷயம்
மக்கள் பணி சம்பந்தமான விஷயங்கள் பார்ப்பதே  தன்னுடைய  முக்கிய வேலை என்று புது அரசின் செயல்பாடு

 முந்தைய அரசியல் போல ஒரே திரை உலகம் சம்பந்தப்பட்ட விசயங்களில் கலந்து கொள்வது பாராட்டு விழாக்களில் நேர விரயம் செய்வது விளம்பரம் ஒன்றே ஓட்டுக்கள் அளிக்கும் என்ற தவறான செயல்களில் ஈடுபடாமல் இந்த புது அரசு ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவது கூட  இந்த இரண்டு படங்களுக்கு அந்த அளவிற்கு தொல்லைகள் இருக்காது என்று தெரிகிறது

 ஆகவே மங்காத்தா மற்றும் ஏழாம் அறிவு பெரும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்


Wednesday, June 1

ஹாரிஸ் ஜெயராஜ் உலக இசை பயணம் @ செல்போன் பேசினால் கேன்சர் வரும்



   தமிழ் மொழியில் ஹாட் மியூசிக் டைரக்டர் ஹாரிஸ் இப்போ ரஹ்மான் வழியில் உலக இசை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்
   இது மிகவும் வரவேற்க வேண்டிய விஷயம் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு உலக அளவில் இசை ரசிகர்கள் உள்ளனர் இந்த் நேரத்தில் இவர் மேற்கொள்ளும் இந்த உலக இசை பயணம் பெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கலாம்

  

அக்டோபர் இரண்டு முதல் இந்த உலக இசை பயணம் தொடங்கும் என விரைவில் ஹாரிஸ் எங்கு எங்கு இசை பயணம் மேற்கொள்கிறார்  என்ற விவரம் வரும்

   நிச்சயம் துபாயில் ஹாரிஸ் இசை பயணம் இருக்கும் என எதிர்பார்கலாம்
 
  கோ மற்றும் எங்கேயும் காதல் பாடல்கள் மூலம் கலக்கிய ஹாரிஸ்
விரைவில் வர இருக்கும் ஏழாம் அறிவு மற்றும் நண்பன் மூலம் மாபெரும் ஹிட் பாடல்கள் கொடுப்பார் எனற எதிர்பார்க்கலாம்

ஏழாம் அறிவு ஸ்பெஷல் அதில் வரும் சீனா மொழி பாடல் ஒன்று

  ஜெயாவுக்கு ஒரு ஜெ !

 

கலைஞர் போல ஒரே பாராட்டு விழாக்களில் கந்து கொள்வதை விட மக்கள் பனி முக்கியம் என கூறி திரை உலகம் பாராட்டுவிழாவை வேண்டாம் என கூறிய ஜெயா அவர்களுக்கு ஒரு ஜெ

 


 செல்போன் அதிகம் பேசினால் கேன்சர் வரும்
 

நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  எஸ் எம் எஸ்   அனுப்புதல், ஹெட்போன் பயன்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்தை தவிர்க்கலாம் என்றும் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு கிளியோமா என்ற மூளை புற்றுநோய் தாக்கக் கூடும் என்றும் இந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது.  

  அதிகம் போன் பயன்படுத்தாமல் இருக்கவும்

 
 

Monday, May 30

ரஹ்மான் ஆஸ்கரை விலை கொடுத்து வாங்கினாரா ? (இஸ்மாயில் தர்பார் பிதற்றல் )



    

ஒரு இந்தியன் உலக அளவில் தன்னுடைய சாதனை செய்தால் அதை முதலில் பாராட்டுவது இந்தியனாக இருக்க வேண்டும் ஆனால் .அவன் செய்த சாதனையை குறை கூறுவது அந்த கலைஞனை பிடிக்காமல் இருக்க வேணும் அல்லது அவன் மேல் பொறாமை இருக்க வேண்டும்

    தமிழ் கலைஞர்கள் ஹிந்தி மொழியில் சென்று சாதனை செய்தால் பாராட்டும் மனபக்குவம் இல்லாதவர்களை கூட ரஹ்மான் அவரின் இசை சாதனை மூலம் வென்று காட்டினார்

   

ஹிந்தி மொழியில் மட்டும் வெற்றி கொடி நாட்டாமல் உலக அளவில் சாதனை செய்த ரஹ்மானை அவர் விருது வாங்கி இரண்டு ஆண்டுகள் சென்ற பின்பு   இஸ்மாயில் தர்பார் என்ற ஹிந்தி மொழி இசை அமைப்பாளர்  ரஹ்மான் இசை அமைத்த ஷ்லம்டாக் மில்லியனர் படம் பற்றி இப்படி கூறி உள்ளான் :ஆப்  ஹீ  படியே உஷ்  பிலிம்  கே  மியூசிக்  மெயின் ஆஸ்கார்  ஜெயிச  க்யா தா …குச்  பீ  தொஹ்  நஹி  தா   ( நீங்களே சொல்லுகள் இந்த படத்தில் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான இசை இருக்கா ? ஒன்றும் இல்லை  அப்படின்னு இந்த இஸ்மாயில் சொல்கிறான் )

  அதாவது இவன் இசை வாழ்கையில் ஒழுங்கா அடித்த உருப்படியான   படம் ஹம் டில் தே சுகே சனம் மற்றும் தேவதாஸ்  மட்டுமே அதற்க்கு பின்பு அவன் இருக்கும் ஹிந்தி மொழியல் கூட தன்னுடைய திறமை நிருபிக்க முடியாத இவன் உலக அளவில் இருக்கும் எல்லா இசை விருதுகளும்  பெற்ற படத்தை பற்றி அந்த இசை பற்றி ரஹ்மான் மீது உள்ள பொறாமையில் ரஹ்மான் ஆஸ்கர் விருதை விலை கொடுத்து வாங்கி விட்டார்  என்று சொல்வது   

  இவன் போன்ற பொறமை பிடித்த இசை கலைஞர்கள் இன்னும் எத்தனை இருக்கிறார்கள் என்று தெரியவில்லை
  ரொம்ப நாளாக இருந்த வயிற்று எரிச்சலை இப்படி கேவலமான கருத்துக்களை சொல்லி தன மீது புழுதி தெளித்து கொள்ளும் இவனை என்னவென்று  சொல்வது  


pirtam பற்றி அவன் சொன்ன வீடியோ இது




 இதற்க்கு முன்பு இவன் இசை அமைப்பாளர் pritam  பற்றி பிரதம் ஒரு இசை திருடர் என்று சொன்னவன்  அப்படி பட்ட  முட்டாள் இவன் 

  

இவனை எல்லாம் ஆளாக மதித்து ரஹ்மான் ஒரு மறுப்பு வெளியுட்டுள்ளார்
ஆஸ்கர் விருது என்பது 3000  பரிசலனைக்கு பின்பு தருவது என்னாலாம் எல்லாம் எல்லோரையும் விலைக்கு வாங்க முடியாது என்று கூறி உள்ளார் 

  இவனை எல்லாம் மதித்து மறுப்பு வெளியிட வேணாம்  ரஹ்மான்