எழுத்து இயக்கம் :திவ்யன் ராஜ் குமார்
நடிப்பு :திவ்யன் ராஜ்குமார் ,ரேகா கிருபாகரன் ,குமார் ,ரமணன்
இசை : நந்தா
இருக்கிறது எட்டு நிமிடம் இதில் ஒரு காதல் கதை சொல்ல வேணும் அதே நேரத்தில் அந்த காதலால் நடக்கும் சண்டை சொல்ல வேணும் பழிவாங்கல் ஆக்சன் எல்லாம் இருக்கணும் அப்படின்னா கொஞ்சம் கஷ்டம் திவ்யன் இதில் ஓரளவிற்கு பாஸ்மார்க் வாங்கி விடுகிறார்
ஒரு பெரும் பில்ட் அப்புடன் தொடங்கும் காட்சிகள் இடையில் ஏற்படும் காதல் இடபிரசினை எல்லாம் மிகவும் குறைவான காலநேரத்தில் சொல்ல முனைவதால் நமக்கு ஒரு தேக்கம் ஏற்படுகிறது என்னவோ உண்மை
இருந்த போதிலும் இவர்களின் இந்த முயற்சி பாராட்டு பெரும் அளவிற்கு உள்ளது
ஹாரிஸ் ஜெயராஜ் காட்டில் இந்த ஆண்டு மழை என்று சொல்வதை விட அடை மழை என்று சொல்வதே சிறந்த்தது ஆண்டின் ஆரம்பமே ஹாரிஸ் ஜெயராஜுக்கு அமோகமாக இருந்தது எங்கேயும் காதல் ஆடியோ மார்கெட்டில் அமைதியாக தூள்கிளப்ப
அதை தொடர்ந்து வந்த கோ படமும் சரி பாடல்களும் சரி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது இந்த படத்தின் பாடல் உரிமைகளை வாங்கிய சோனி அவரின் இசை தகடுகளின் விற்பனையை பார்த்து உடனடியாக அதிக விலை கொடுத்து அவரின் எதிர்வரும் 7 ஆம் அறிவு படத்தின் ஆடியோ உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கியது அவரின் இசை எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது
இப்போ எதிர்வரும் அவரின் இசையில் வரும் படங்கள் பற்றி : 7 ஆம் அறிவு
ஹிந்தி மொழியில் கஜினி மெகா ஹிட் படத்திற்கு பின்பு எ ஆர் முருகதாஸ் ஹாரிஸ் உடன் இணையும் முதல் படம் . இது ஒரு அறிவியல் கலந்த த்ரில்லர் படம் என்பதால் இதில் ஹாரிஸ் அவர்களின் வித்தியாச இசையை எதிர்பார்க்கலாம் .இந்த படத்தின் மற்றும் ஒரு சிறப்பு விஷயம் இதில் வரும் சைனிஸ் மொழி பாடல் ஒன்று
மற்றும் எல்லா பாடல்களையும் மதன் கார்கி எழுதி உள்ளார்
ஹாரிஸ் அவர்களின் அடுத்த மியுசிகல் ஹிட் 7 ஆம் அறிவு
நண்பன் (++++விஜய் ++++ ஷங்கர் )
விஜய் படம் என்றாலே பாடல்கள் சிறப்பாக இருக்கும் அதிலும் ஷங்கர் விஜய் ஹாரிஸ் என்று சொல்லும்போது சொல்லவா வேணும் இந்த ஆண்டின் சூப்பர் டூப்பர் இசை நண்பன் ஒன்றாக மட்டுமே இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை
ஏற்கனவே ஹிந்தி மொழியில் ஹிட் ஆன படம் என்பதால் அதை விட சிறப்பான இசை தர வேண்டும் என்பதில் ஹாரிஸ் அவர்கள் இன்னும் சிறப்பாக இசை இருக்கும் என நினைக்கலாம்
ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓகே ஓகே )
யுவன் ஷங்கர் ராஜ கூட்டணியை விட்டு எம் ராஜேஷ் ஹாரிஸ் உடன் இணையும் படம் இது மற்றும் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படம் ஹாரிஸ் அவர்களின் படங்களில் சொல்லும்படியான படமாக் இருக்கும்
மாற்றான் (இந்த ஆண்டில் தொடங்கி அடுத்த ஆண்டு வரும் படம் )
அயன், கோ படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்பு ஆனந்த் ஹாரிஸ் அவர்களின் கூட்டணி வரும் படம்
படத்தின்
படத்தின் பாடல்களை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை
FORCE (ஹிந்தி காக்க காக்க )
தமிழ் மொழியில் வந்த இந்த படத்தின் ரீமேக் ஹிந்தி மொழியில் ஹாரிஸ் மீண்டும் தன் திறமையை நிருபிக்கும் வாய்ப்பு வந்துள்ளது . ஜான் அப்ராஹம் ஹீரோ வாக நடிக்கும் படத்தின் மூலம்
தன்னுடைய இசை மூலம் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்
மொத்தத்தில் இந்த ஆண்டு ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் அமைந்துள்ளது
ரொம்ப நாலா ஒரு சுறு சுறு விறு படம் தராமல் சோர்ந்து போய் இருக்கும் விக்ரம் இப்போ ரொம்ப நம்பி இருப்பது ராஜபாட்டை படத்தை . விக்ரம் படத்தை பற்றி என்ன சொல்றார் அப்படின்னா தூள், சாமி போன்ற படங்களை அடுத்து ஒரு முழு நீள கமர்ஷியல் படம் 'ராஜபாட்டை'. இப்படத்தின் கதை, கதையில் வரும் நகைச்சுவை ஆகியவை என்னை கவர்ந்ததால் இந்த படத்தில் நடிக்கிறேன் .
அப்படின்னு சொல்லி இருக்கிறார் சரி அவர் ஆசை படி இந்த படம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்
சுசிந்திரன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்
" படத்தில் கதை இருக்கோ இல்லையோ போரடிக்காம பார்க்கிற திரைக்கதை இருக்கான்னு பாருங்க விக்ரம் "
ஆகஸ்டில் மோத போறாங்க தல தளபதி (சந்தானம் ஸ்டைலில் )
இப்போ ஆட்சி மாறி இருக்கும் இந்த நேரத்தல் உடனே பல படங்கள் திரை அரங்கில் வெளி வரும் என்று எதிர்பார்த்தால் ஒரே சுணக்கமாக இருக்கும் நேரத்தில் ரெடியாகி வெளியிட தயாரக இருக்கும் படங்கள் என்று பார்த்த வேலாயுதம் மங்காத்தா படங்கள் ஆகஸ்டில் வெளி வரும் என சொல்லபடுகிறது
இரண்டு படங்களும் ஒரே நாளில் வராது என்று எதிர்பார்க்கலாம் இல்லை என்றால் அதை வைத்து ஒரு ரசிகர் பிரச்சினை நடக்கும்
படம் வருவது இருக்கட்டும் சீக்கிரம் பாடல்களை வெளியிடுங்கள்
கோடை விடுமுறை ரஹ்மான் இசை அமைப்பார ?
ரஹ்மான் கதிர் கூட்டணி என்றால் வெற்றி கூட்டணி என்று கூட சொல்லலாம் மீண்டும் ரஹ்மான் கதிர் இணைவார்கள் என்று சொல்லப்படும் " கோடை விடுமறை " படத்தில் ரஹ்மான் இசை அமைப்பார் என்று சொல்லபட்டாலும் ரஹ்மான்
இசை அமைப்பார் என்பது சந்தேகமே ரஹ்மான் ஹிந்தி மொழியில் இசை அமைக்கும் ராக் ஸ்டார் படத்திற்கு அவர் முழு மும்முரத்துடன் இருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம்
தமிழ் மொழியில் அவர் கையில் இருக்கும் படம் சுல்தான் தீ வாரியார் மட்டும் ராணா மட்டுமே
ஆறு மாதத்தில் கலக்கிய ஒரே படம் "கோ"
படம் வந்து ஆறு வாரங்கள் ஆகியும் இன்னும் பாக்ஸ் ஆபீஸ் கலக்கல் ஹீரோ கோ படம் மட்டுமே இந்த ஆறு வாரத்தில் மட்டும் இல்லை " ஆறு மாதத்தில் பாக்ஸ் ஆபீஸ் கலக்கிய படம் கோ மட்டுமே
ஒரு பக்கத்தல் ஆடியோ மார்கெட்டில் கோ பாடல்கள் இன்னும் முதல் இடம் படத்திலும் முதல் இடம்
ஆறு மாதத்தில் ரியல் ஹீரோ கோ இயக்குனர் கே வி ஆனந்த் மற்று ஹாரிஸ் ஜெயராஜ் மட்டுமே