Saturday, September 3

அஜித் ஹாரிஸ் ஜெயராஜ் சூர்யா மற்றும் அரசு கேபிள்

அஜித் (rock )

   
   இந்த ஆண்டில் சூப்பர் ஹிட் படங்கள் சிறுத்தை ,கோ ,காஞ்சனா வரிசையில்  மங்காத்தா சந்தேகம் இன்றி சேரும் எல்லா சாத்திய  கூறும் உள்ள படம் இது
   படத்தில் உங்களை காப்பாற்றுவேன் நீங்கள்தான் எனக்கு கடவுள் என்று  ரசிகனை ஏமாற்றும் வசனங்கள் இல்லை படம் வருவதற்கு முன்பு படம் ஓட வைக்க ஆடு மாடு நோட்டு புத்தங்கள் தரவில்லை
  ரசிகர்களை நோக்கி என் படம் பிடித்து இருந்தால் மட்டும் பாருங்கள் என்று சொல்லி ரசிகர் மன்றங்களை களைத்த பின்பு இவர் படம் எங்கே ஓடும் என்று அனைவரும் நினைத்து இருந்தது என்னவோ உண்மை

  ஆனால் அஜித் மீண்டும் தான் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ என்று நிருபித்து விட்டார்
ஒரு படம் ஓட நல்ல கதை மட்டுமே தேவை தேவை இல்லாத ரசிகர்களை ஏமாற்றும் பில்ட் அப் தேவை இல்லை என்று இனிமேல்  புரிந்தால் சரி 
  இதே சூட்டோடு வரும் பில்லா படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் படம் பிடித்து இருந்தால் மட்டும் படம் பார்க்க சொல்லும் அஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  கொசுறு : மணிரத்தனம் அஜித் விரைவில் இணைவார்கள் என்று தெரிகிறது

ஹாரீஸ் ஜெயராஜ் 3டி உலக இசை பயணம் 



   தமிழ் திரை உலகில் no 1  இசை அமைப்பாளர் முதல் முறையாக உலக இசை பயணம் மேற்கொண்டுள்ளார் எல்லா இசை நிகழ்ச்சி நவீன தொழில்நுட்பம் மூலம்  3டி ஒளிபரப்பாவது சிறப்பு மற்றும் ஒரு சிறப்பு முதல் நிகழ்ச்சி அவர் நம் தமிழ் மண்ணில் தொடங்குவது
முதல் இசை நிகழ்ச்சி சென்னை மாயாஜாலில் அக்டோபர் 2-ந்தேதி நடைபெறும். கோவையில் அக்டோபர் 16-ந்தேதியும் ஹைதராபாத்தில் 22-ந்தேதியும், துபாயில் நவம்பர் 18-ந்தேதியும், மலேசியாவில் டிசம்பர் 3-ந்தேதியும் நடைபெறும்
ஹரிகரன், கார்த்திக், திப்பு, கிரிஷ், ஹரிணி, ஆண்ட்ரியா, சின்மயி, பென்னிதயாள், நரேஷ் அய்யர், ஹரீஷ் ராக வேந்திரா புகழ் பெற்ற மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் நடனமும் இடம்பெறும்

  மிக குறைந்த செலவில் உலக தரமானா இசை நிகழ்ச்சி நடத்தும் ஹாரிஸ் அவர்கள் இதன் மூலம் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை குழைந்தைகள் உதவிக்கு வழங்க இருக்கிறார்


 அசத்தும் சூர்யா   இனி  இந்திய நாயகன் 


  தமிழில் ஏழாம் அறிவு ,மாறன் படங்களில் நடித்து வரும் சூர்யா அடுத்த சூப்பர் ஹிட் இந்திய அளவில் கொடுக்க உள்ளார் தன் தம்பி நடித்தூ சூப்பர் ஹிட் ஆனா பையா படம் ஹிந்தி மொழியில் ரீமேக் ஆகா போகிறது கார்த்திக் வேடத்தில் ஹிந்தி மொழியில் கலக்க போவது யாரும் இல்லை நம்ம சூர்யா அவர்களே
  ஏற்கனவே விளம்பரங்கள் மற்றும் ரத்த சரித்திரா படம் மூலம் ஹிந்தி மொழியில் நுழைந்த இவர் அடுத்த ஏழாம் அறிவு ஹிந்தி மொழியில் வருகிறது கலக்குங்க சூர்யா அவர்களே

  அரசு  கேபிள் (எங்கே சன் டிவி )


   நம்ம ஊரை பொறுத்த வரை கேபிள் டிவி என்றால் அது சன் டிவி என்பதை மாற முடியாது என்பதை நிருபித்த அரசு கேபிள் மக்கள் நூறு சேனல் கொடுத்தாலும் சன் டிவிக்கு இணையாகுமா
பார்க்கலாம் கட்டண சேனல்கள் உடன் விரைவில் பேச்சு வார்த்தை நடைபெற்று; விரைவில் கட்டண சேனல் வரும் என்று எதிர்பார்க்கலாம்
  அது வரை பக்கத்து வீட்டில் போய்தான் நாடகம் பார்க்க வரும் நம்ம பெண்களுக்கு
டிஸ்கவரி தமிழ் போன்ற சேனல்கள் வழங்கும் இந்த அறிவியல் நிகழ்சிகள் இலவசமாக வழங்க சொல்வது எப்படி சரியாகும்
தமிழ் சேனல்கள் இலவசமாக வழங்கலாம் ஆனால் டிஸ்கவரி போன்ற சேனல்கள் ரூ .10 கொடுத்தாலும் குறைவே  

1 comment:

  1. மங்காத்தா படத்தை, தற்போது தமிழ்நாட்டில் உள்ள மூன்று பெரும் நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடுகின்றன.
    பத்தாததற்கு ராதிகா நிறுவனமும் சேர்ந்துகொண்டது.
    சன் டிவி காரர்கள் ஒன்நேரூபா வசூளிக்குற படத்தையே மகாஹிட்ன்னு பீத்திக்குவாங்க.
    இந்தப்படம் 'ஒம்பது' ரூபாவாவது வசூலிக்கும். ஏன்னா அஜித் இருக்காரில்லையா?.. அப்படின்னா இந்தப்படத்தை blockbuster என்று தம்பட்டம் அடிச்சுக்குவார்கள். இவ்வளவு பெரிய நிறுவனங்கள், இவ்வளவு பெரிய விளம்பரம், 2 வருடம் கழிச்சு வரும் அஜித் படம்.
    மாஸ் ஹீரோன்னா , விளம்பரம் இல்லாம, பெரிய நிறுவனம் இல்லாம, ஆறு மாசத்துக்கு ஒரு படம் வந்தாலும், opening கிராண்டா இருக்கணும்.. அவர்தான் மாஸ்.. அது எப்படி என்று கேட்கிறீர்களா?
    இப்படி....

    பலத்த எதிர்பார்ப்பால் வெளியகியதால்த்தான் இப்பிடி.... உங்களுக்கு அவன்இவன் ஓபனிங் தெரியுமா இதேபோலத்தான் இருந்தது பட் பிறகு என்ன நடந்ததது...

    மங்காத்தா படம் பார்த்தவர்களில் பாதிப்பேருக்கு படம் பிடிக்கல

    இதுதான் உண்மை..

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை