Thursday, December 29

சிறந்த 8 தமிழ் படங்கள் 2011 ( வசூல் கதை மகிழ்ச்சி ) என் பார்வையில்



  1 . மங்காத்தா
        

சிலர் சொல்வது போல முதல் நாளே ஐம்பது கோடி வசூல் அறுபது கோடி வசூல் என்று சொல்லாமல் நிதானமாக அதிகாரபூர்வமாக சன் டிவி 130  கோடி வசூல் என்று சொன்ன படம்
 கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஒரே தமிழ் படம் ஐம்பதாவது படம் சூப்பர் ஹிட் ஆகா சிலருக்கு மட்டுமே அமையும் அந்த  வாய்ப்பை அஜித் அவர்களுக்கு தந்த படம்
  இதற்க்கு முன்பு பல தோல்வி படங்கள் தந்து இருந்த போதும்  ஹிட் என்றால் சூப்பர் ஹிட் கொடுத்து அஜித்தை சந்தோச பட வைத்தார்கள் அவர்கள் ரசிகர்கள்
   இந்த படத்தின் மொத்த வசூல் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வந்த வசூலை வைத்து மெகா ஹிட் ஆனது 


  (+) அஜித் சன் டிவி மற்றும் அஜித் ரசிகர்கள் 



2 . கோ
      

யாரும் எதிர்பார்க்காமல் கே வி ஆனந்த் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இவர்களால் மட்டுமே சூப்பர் ஹிட் ஆனா படம் இது கே வி ஆனந்த் இயக்கமும் சரி ஹாரிஸ் ஜெயராஜ் இசையும் இந்த படத்தை மெகா ஹிட் என்ற வரிசையில் சேர்த படம் இது
  தமிழ் மொழியில் மற்றும் ஹிட் இல்லை இந்த படம் தெலுங்கு மொழியில் ரங்கம் என்ற பெயரில் வந்து அங்கும் வசூலை வாரி தந்த படம்
  இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் ஆனா பாடல்கள் இதில் மட்டுமே உள்ளது
( +) கே வி ஆனந்த்  ஹாரிஸ் ஜெயராஜ் 




3 . காஞ்சனா
        

இது யாரும் எதிர்பார்க்காத வெற்றி படம் பேய் படம் வெற்றி அடையும் என்பது ஓகே ஆனா பேய் படைத்தல் காமெடி படமாக தந்து எல்லோரையும் சந்தோச பட வைத்தார் லாரன்ஸ் இந்த படத்தின் வெற்றி
இந்த படம் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யும் அளவிற்கு கொண்டு சென்றது
(+) லாரன்ஸ்  கோவை சரளா தமன்.எஸ் 





4 .எங்கேயும் எப்போதும்
       

குறைந்த பட்ஜெட் நிறைந்த லாபம் என்று சொவதை விட குறைந்த செலவில் சந்தோஷம் தந்த படம்
எ ஆர் முருகதாஸ் தயாரிப்பாளர்க வெற்றி அடைந்த படம் இது
   இந்த படத்தின் வெற்றிக்கு பாடல்கள் கூட ஒரு காரணம்
(+) எ ஆர் முருகதாஸ் சரவணன் சத்யா எஸ் 




5 .சிறுத்தை
         

உண்மை சொல்வது என்றால் தெலுங்கு மொழியில் இந்த படம் பார்த்தல் அந்த அளவிற்கு சிரிப்பு வராது தமிழ் மொழியிலில் படம் முழுவதும் நகைச்சுவை கொடி கட்டி பரந்த படம் இது  அதே அளவிற்கு கார்த்திக் நகைச்சுவை மற்றும் ஆக்சன் கலக்கிய படம் இது
(+) கார்த்திக் சிவா சந்தானம் 



6 .ஆடுகளம்
       

தனுசுக்குள் இப்படி எல்லாம் நடிப்பு திறமை இருக்கா என்று வியக்க வைக்கும் நடிப்பு இந்த படம் தனுஸ் நடிப்பிற்க்காக பார்க்க வைத்த படம் இது
வெற்றி மாறனின் இயக்கமும் ஜி வி பிரகாஷ் இசையும் பக்க பலம் இந்த படம்
(+) தனுஷ் வெற்றி மாறன் ஜி வி பிரகாஷ் சன் டிவி



7 .தெய்வ ஐ ஆம் திருமகள் சாம்
      சுட்ட பழம் என்றாலும் ருசியாக வந்த பழம் இது , பட்ஜெட் அதிகம் இல்லை அதிகம் நஷ்டமும் இருக்காது என்று சொல்லாலம்
(+)விக்ரம் விக்ரம் விக்ரம் 



8 .மௌன குரு
  

மௌனமான் வெற்றி என்று சொல்ல வைத்த படம் இது இயக்குனர் சாந்த குமார் இயக்கத்திற்காக  வெற்றி அடைந்த படம் இது
(+) சாந்த குமார்

 

சிலம்பரசனின் "LOVE ANTHEM FOR WORLD PEACE " பார்க்க கேட்க்க




   தனுஷ் போட்டியாக சிலம்பரசின் ஆட்டம் ஆரம்பம் இந்த முறை தனுஷ் கொலை வெறி போட்டு உலகம் முழுவதும் ஹிட் அடிக்க சில்பரச்ன் இந்த முறை உலக மொழிகளில் உள்ள காதல் என்ற வார்த்தை மட்டும் மையமாக வைத்து உலக அளவில் ஹிட் அடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் அவருக்கு ஹிட் கொடுப்போம் 


   இந்த பாடல் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் பேஸ்புக் மூலம் பகிரவும்  





Tuesday, December 27

முல்லை பெரியார் விசயமும் இளையராஜா மற்றும் AR ரஹ்மான் விளக்கமும் & நடிகர்களும்



  முல்லை பெரியாறு  விசயத்தில் பெரிய நடிகர்கள் எல்லாம் வாய் திறக்காத நேரத்தில் ( அவர்களுக்கு தெரியும் அவர்கள் வாய் திறந்து தமிழனுக்கு ஆதரவாக பேசினால் மலயாளிகள் படம் பார்க்க மாட்டார்கள் அங்கு இருந்து அவர்களுக்கு கிடைக்கும் பணம் கிடைக்காது இல்லையா ? )
அதனால்தான்  அப்போ இதே நடிகர்கள்தான் இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள் என்றால் அதிலும் ஒரு வியாபார தந்திரமே தவிர வேறு ஏதும் இல்லை
  ஏன் என்றால் இவர்கள் எதிர்த்து குரல் கொடுக்கும் சிங்களவர்கள் இவர்கள் நடிக்கும் படத்தை பார்பதில்லை என்பதால் மட்டுமே
  சிங்களவன் மட்டும் இவர்கள் படத்தை பார்க்கும் நிலையில் இருந்து  இருந்தால் நிச்சயம் இந்த நடிகர் கூட்டம் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்து இருக்காது
  சரி இந்த நடிகர்களின் படங்களை மட்டும் பாருங்கள் மன்றம் வைக்காதிர்கள் என்று சொன்னால் மட்டும் கேட்கவா போறோம் ?



இது ரஹ்மானின் வருத்தம் 


  சரி இப்போ விஷயம் டேம் 999  படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேணும்  என்று பெருந்தன்மையுடன் கேட்ட ரஹ்மானை எதிர்த்து ஒரு குரல் எழும்புவதை அறிந்ந்த ரஹ்மான் உடனே எதிர்ப்பு எதிராக கடிதம் அனுப்பி உள்ளார் அது கீழே 




இது இளையராஜா வருத்தம்
 
மலபார் கோல்ட் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே ஒப்பந்தம் ஆகிவிட்டது. என் துணைவியாரின் மரணத்திற்கு பிறகு, நான் எந்த நிகழ்ச்சிக்கும் ஒப்புக் கொள்ளவில்லை.

இப்போது இந்த நிகழ்ச்சியை நடத்துவது சிக்கலாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின், தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்துக்கு ஆளாவேன் என்பது எனக்கும் தெரியும்.

அவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். எனவே எப்படியாவது நான் நிகழ்ச்சியை ஒத்திப்போடுவதற்கோ, கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்கோ முயற்சி செய்கிறேன் என்று போராட்டக்காரர்களிடம் கேட்டுள்ளார்

Tuesday, December 20

2011 அதிகம் வசூல் செய்த ஹிந்தி படங்கள்

 


   இந்த ஆண்டு வந்த படங்களில் ஹிந்தி மொழியில்  அதிகம் வசூல் செய்த படங்கள் 



1. Bodyguard - 229 கோடி (பாடிகார்ட் மலையாள பட  ரீமேக்)  

2. Ra.One (Hindi) - 200 கோடி

3. Ready - 179 கோடி(ஆர்யா தெலுங்கு பட  ரீமேக்  )

4. Zindagi Na Milegi Dobara - 152 கோடி

5. Singham - 139 கோடி  (தமிழ் சிங்கம் ரீமேக் )

6. The Dirty Picture  - 110 கோடி (இன்னும் படம் ஓடுகிறது )

7. Rockstar - 107 கோடி (இன்னும் படம் ஓடுகிறது )

8. Mere Brother Ki Dulhan - 94 கோடி

9. Delhi Belly - 92 கோடி

10. Yamla Pagla Deewana - 87 கோடி 

            நம்ம தமிழ் படங்கள் பற்றி இது போல அதிகாரபூர்வமாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வருவதில்லை எல்லாம் குத்துமதிப்பு கணக்குதான் 

 source: boxofficeindia.com

Tuesday, December 13

AR ரஹ்மான் இசையில் வர இருக்கும் படங்கள் (AR RAHMAN UPCOMING MOVIE)



          ரஹ்மான் இப்போ தன் இசை அடிக்கும் படங்களின்  எண்ணிக்கை குறைத்தும்.  குறைவான அளவில் தன் உழைப்புக்கு ஏற்ற படங்களுக்கு மட்டும் இசை அடிக்க ஒப்பு கொள்கிறார்
  அது கூட நல்லதுக்குதான் எல்லா படங்களுக்கும் இசை அடித்து  தன்னுடைய இசை எல்லோரையும் சென்றடையாமல் இருப்பதை விட குறைந்த அளவில்     நல்ல கலைஞர்களுடன் இனைந்து இசை அடிப்பதால் தன் இசை சரியான அளவில் எல்லோருக்கும் செல்வதே  வெற்றி என்று நினைப்பதுதான் நல்ல கலைஞனின் எண்ணம்
   அந்த வகையில் ரஹ்மானின் மீது இருக்கும் குற்றச்சாட்டு கூட இதுதான் அவர் பிரபலங்களுடன் மட்டும்தான் இசை அமைக்கிறார்
 அது கூட அவரின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் தன் இசை எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று நினைக்கும் எந்த கலைஞனும் நினைப்பது இதைதான்
   
   சரி இப்போ ரஹ்மான் இசையி வரும் படங்கள் ஒரு பார்வை
1 . ஏக் தீவான தா (விண்ணை தாண்டி வருவாயா )
 

         தமிழ் மொழியில் ரஹ்மான் கௌதம் மேனன் கூட்டணியில் இசை ஹிட் அடித்த படம் இப்போ ஹிந்தி மொழியி கௌதம் தயாரிப்பில் மூன்று பாடல்கள் புதிதாக மாற்றப்பட்டு ஹிந்தி மொழியில் வரும் படம் .அடுத்த மாதம் வரும் படம் ஹிந்தி மொழியில் ஒரு இசை கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்
2 . காட்பாதர் (வரலாறு )
             கன்னட மொழியில் ரஹ்மானுக்கு இரண்டாவது படம் முதல் படம் சஜினி இப்போ தமிழ் மொழியில் ரஹ்மான் இசையில் அஜித் நடித்து வந்த படம் இப்போ உபேந்திரா நடிக்க பி சி. ஸ்ரீராம் இயக்கத்தில் வரும் படம் இது

3 . மங்கிஸ் ஆப் பாலிவுட்  (அனிமேசன் படம் )
       ஹாலிவுட் சிறந்த தயாரிப்பு நிறுவனம் ட்ரிம் வொர்க்ஸ் தயாரிப்பில் வரும் படம் இது முழு நீல அனிமேசன் படம் இது ரஹ்மானின் முதல் அனிமேசன் இசை படம் இது
4 . வெல்கம் டூ பீப்புள் (Welcome to People )
    வரும் ஆண்டில் 2012  வரும் முதல் ஆங்கில  மொழி படம் இது . இதுவும்  ட்ரிம் வொர்க்ஸ் படம்    விரைவில் இந்த படத்தின் இசை தொகுப்பு வரலாம்
5 . மணிரத்னம் படம்
                கார்த்திக் மகன் நடிப்பில் வெற்றி கூட்டணி மணிரத்னம் ரஹ்மான் இசையில் வரும் படம் இது பூக்கடை என்று பத்திக்கு பெயர் சொன்னாலும் பெயர் மாறக்கூடும்
6 .பாணி (water )
          

மிக நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் படம் இது சேகர் கபூர் இயக்கத்தில் வரும் படம் இது
7 யோகன் 


       விஜய் கௌதம் ரஹ்மான் கூட்டணியல் சீரியல் பாடல் இது தொடரின் முதல்பாகம் விரைவில் படப்டப்பு தொடங்கும்
8 .யாஷ் சோப்ரா படம்
     யாஷ் சோப்ரா ஷாருக் கான் ரஹ்மான் கூட்டணியில் வரும் படம் இது .
9  ரஜினி ஸ்பெஷல் (ராணா, சுல்தான் ,கொச்சுடையான்)
                எப்படியும் ரஜினி படம் என்றால் ரஹ்மான் இசை என்று நிச்சயம் சொல்லலாம்  

Monday, December 5

குழந்தையையும் விட்டு வைக்காத கொலவெறி பாடல் (குழந்தை பாடல் )



  தனுஷ் தமிழ் கொலை செய்கிறார் என்று தமிழை மட்டும் வளர்த்து தமிழனை பற்றி
நினைக்காத கும்பல் சொன்னாலும்
முல்லை பெரியார் விசயத்தில் மலையாளிகள் இடம் இருக்கும் ஒற்றுமையில் நூற்றில் ஒரு பங்கு இருந்தாலும் நம் ஒற்றுமை ஓகே ரகம்தான்
     சரி இப்போ சொல்ல வர்ற விஷயம் அது இல்லை இந்த கொலவெறி பாடல் மூலம் தமிழ் வார்த்தைகள் உலகம் முழுவதும் தமிழ் மொழி என்றால் என்ன என்று தெரியாத மக்கள் எல்லாம் தமிழ் கலந்த இந்த ஆங்கில தமிழ் பாடல் பாடுகிறார்கள் என்றால் அதில் ஒரு ஹை லைட்
  இந்த பொடியன் பாடிய கொலவெறி பாட்டால் இணையத்தில் வந்த முதல் நாளே  ஒரு லட்சம் ஹிட் நோக்கி போகுது
  நீங்கள் சொல்வது போல ஆரம்பத்தில முழுவதும் தமிழ் மொழியில் மட்டும் பாடி
இருந்தால் இந்த பாடல் இந்த அளவிற்கு ஹிட் ஆகுமா உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் 


    இந்த பாடல் மூலம் தமிழ் அழிந்து விட்டது என்று சொல்வது பொறாமை என்று சொல்வதை தவிர வேறு என்ன வென்று சொல்வது



children song


Thursday, December 1

மணிரத்னம் அடுத்த படம் இசை A.R.ரஹ்மான்



   தமிழ் மொழியில் ரஹ்மானுக்கு  நீதானே என் பொன் வசந்தம் படத்திற்கு பின்பு படம் ஏதும் ஒப்பு கொள்ளாத  நிலையில் ரஹ்மான்
     மணிரத்னம் அடுத்த இயக்கம் படத்திற்கு சத்தம் இல்லாமல் ஒரு பாடல் பதிவையும் நடத்தி உள்ளார் ரஹ்மான்
இந்த தகவல் சொன்னது மணிரத்னமோ ரஹ்மானோ இல்லை
வைரமுத்து சொன்னதாக தகவல்கள் சொல்கிறது



  மணிரத்னம் நீண்ட நாட்களாக கார்த்திக் மகனை வைத்து ஒரு காதல் கதை எடுப்பதாக செய்தி உலாவும் நிலையில் இந்த செய்தி ரஹ்மான் ரசிகர்களுக்கு  ஒரு இசை கொண்டாட்டமாக இருக்கும்


        ரஹ்மான் மணிரத்னம் என்றாலே ஒரு இசை கொண்டாட்டம் என்று சொல்லவா வேணும்

  "  இசையால் சாதனைகள் செய்தாலும்
         அமைதியால் அதை வெல்லும் ரஹ்மான் "
    இசை தான் பேச வேண்டும் இசை கலைஞன் இல்லை என்று நிருபித்த ரஹ்மான் "

Monday, November 28

சொந்தமா யோசிக்க தெரியாத வடநாட்டு கொலவெறி பாட்டு கும்பல் "Why this kolaveri di ( Female Version ) "



    தனுஷ் அனிருத் உழைப்பில் வந்து இந்தியாவையே பித்து  பிடிக்க வைத்த கொலவெறி பாடலை ஒரு வடநாட்டு கும்பல் ஒரு பெண்ணை விட்டு பாட வைத்து
உண்மையான தனுஷ் பாடலின் ரேட்டிங்கை குறைக்க பார்க்கும் இந்த ஈன பயல்களை என்ன வென சொல்வது

   அதை விட கொடுமை இந்த பாடலின் வெற்றியை பாராட்டாமல் தமிழை கொள்கிறார் இதனால்  தமிழ் வளராது என்று சொல்லும்   தமிழ் ஆர்வலர்களே தமிழ் ஒன்றும் தனுஷ் போன்றவரால் அழியாது ஓரளவிற்கு வளரும்

  இப்படி பேசும் நீங்கள் முதலில் உங்கள் குழந்தைகளை தமிழ் அரசு பள்ளியில்  படிக்க வையுங்கள்  உங்கள் குழந்தைகளை மட்டும் ஆங்கில பள்ளிக்களில் படித்து உயர்ந்த வேலைக்கு செல்ல வேண்டும் இல்லாதவர் குழந்தைகள் மட்டும் தமிழ் மீடியம் படிக்க வேணும் என்ன கொடுமை சார்

   தமிழை வளர்ப்பதை விட மலையாளிகள்  போல  தமிழனிடம்  ஒற்றுமை  வளருங்கள் இல்லை என்றால் ஒற்றுமையாக இருங்கள்


   " உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் தமிழர்களிடம் உண்மையான ஒற்றுமை உள்ளதா "

   இன்றைய நிலைக்கு தமிழ் வளர்வதை விட தமிழனின் பொருளாதார தரம் உயர வேண்டும்
                        " இது ஒரு ஆதங்கம் மட்டுமே "








அந்த டுபாக்கூர் பாட்டு இது


Wednesday, November 23

தமிழர்கள் பெருமை பட வைத்த "Why This Kolaveri Di " இளைஞர்களின் தேசிய வார்த்தை



  இந்த சாதனைகள் எல்லாம் செய்த தனுஷ் ஒன்றும் சூப்பர் ஹீரோ இல்லை மியூசிக் டைரக்டர் கூட உலக புகழ் இல்லை இவை எல்லாவற்றை விட எளிமை ஒன்றே காரணம்


   இன்று இந்தியா முழுவதும் கொலை வெறி என்ற வார்த்தை தேசிய சொத்து ஆகி விட்டது

 இந்திய செய்தி தொலைக்கட்சிகளில் இதை பற்றிய செய்தி
இந்தியா முழுவதும் ஒளிபரப்பான அதுவும்  அமோக ஆதரவுடன் ஒளிபரப்ப பட்ட ஒரே தமிழ் பாடல் இது

   தனுஷ் ஒரே பாடல் மூலம் தமிழர்கள் எல்லோரையும் பெருமை பட வைத்து விட்டார்

இரண்டரை மில்லியன் பார்வயாலர்களை தொடர்ந்து
ஒரு மில்லியன் பேஸ்புக் பரிமாற்றம்
இந்தியா முழுவதும் இளைஞர்களிடம் தேசிய வார்த்தை Why This Kolaveri Di கொலை வெறி  
அமிதாப் முதல் ஷாருக் வரை பாராட்டும் தமிழ் பாடல் 






Why This Kolaveri Di Full Song Promo Video 

 

Tuesday, November 1

ஒஸ்தி மாஸ் பாடல்கள் "முதல் முறையா சிம்பு படத்தில் "



      சிம்பு படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும் வித்தியாசமான முறையில்
இளைஞர்களுக்கு ஏற்ற முறையில் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது 

     ஆனால் முதல் முறையாக சிம்புவுக்கு மாஸ் வசதி உள்ள பாடல்கள் கிடைதுள்ளது தரணி மற்றும் தமன் உதவியால்
இந்த ஆண்டின் முதல் ஹெவி மாஸ் மற்றும் கலக்கல் இசை உள்ள பாடல்கள் என்றால் இதை துணிந்து சொல்லலாம்

    ஏற்கனவே ஹிந்தி மொழியில் பட்டை கிளப்பிய படம் இதும் தபாங் சல்மான் கான் திரை வரலாற்றில் துணிந்து சொல்ல கூடிய படம் இது.அதிலும் அந்த முன்னி பாடல் கலக்கிய அளவிற்கு தமிழில் அதே தரத்துடன் ஒரு பாடல் இந்த இசை ஆல்பத்தில் உள்ளது 



   தரணிக்கு தன்னை மீண்டும் ஒரு வெற்றிகரமான இயக்குனராக காட்ட இந்த படம் தேவைபடுகிறது " குருவி என்ற தோல்வி படத்திற்கு பின்பு தரணி இயக்கத்தில் வரும் படம் இது
   குருவி அளவிற்கு இந்த படம் மோசமாக இருக்காது என்று எதிர்பார்க்கலாம்
  கில்லி ,தூள் ,thill போல இந்த படமும் தரணி படங்களில் ஒரு வெற்றி படமாக அமையும் என்று நம்புவோமாக

 ஆனால் பாடல்கள் ஆடியோ உலகில் விற்பனையில் முதல் இடத்தில உள்ளது கலக்கலான இசை மற்றும் தரணி குருவி படத்தில் செய்த தவறுகளில் இருந்து இந்த படத்திற்கு பாடங்கள் கற்று இருப்பது பாடல்களில் தெரிகிறது

 1 . உன்னாலே உன்னாலே
    தமன் ,எஸ் .ரீட்டா
    பாடலாசிரியர் " யுகபாரதி
    அமைதியான இசையுடன் ஆரம்பிக்கும் இந்த பாடல் மெதுவாக ஹை பிட்சில் கலக்கலான ஒரு காதல் பாடல் தமன் மற்றும் ரீட்ட குரல்  இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணம்
யுகபாரதி சிறப்பான பாடல் வரிகளை கொடுத்துள்ளார் மற்றும் ஒரு சிறப்பு

பாடல் ரேட்டிங் : 9 /10 


  ௨.நெடுவாலி நெடுவாலி
 ராகுல் நம்பியார் ,மஹாதி
  பாடலாசிரியர் :யுகபாரதி
 " அடடா மழைடா " பையா படத்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு பிறகு ராகுல் நம்பியாருக்கு கிடைத்துள்ள மற்றும் ஒரு சிக்ஸர் இந்த நெடுவாலி
  கலக்கலான் இசை கோர்வைகள் மற்றும் கேட்க்க கேட்க்க பிடித்து போகும் பாடல்
பாடல் ரேட்டிங் :9 .5 /10


3 . பொண்டாட்டி  
பாடலை பாடி எழுதியவர் : யங்  சூப்பர் ஸ்டார்  எஸ் டி ஆர் (சிம்பு )

   சிம்பு இந்த பாடலை எழுதி பாடியும் இருக்கார் , சிம்பு பாடிய பாடல்களில் ஒரு நல்ல உற்சாகம் இருக்கும் இந்த பாடலில் அது உள்ளது
கலக்கல் பாடல் ரேட்டிங் :8 .5 / 10

4 .ஒஸ்தி மாமு
 பாடல் பாடியவர் : பாபா சேகல் ,ரஞ்சித் ,ராகுல் நம்பியார்
பாடலாசிர்யார் : வாலிப கவிஞர் : என்றும் இளமை வாலி

   பாபா சேகல் குரலில்  இந்த அதிரடி பாடல் கேட்க்கும்போது படம் எப்போ வரும் என்று எதிர்பார்க்க வைக்கிறது
குத்து பாடல் என்று ஒரு வரியில் சொல்லாமல் சரியான அளவில் இசை கோர்ப்பு வேலை இந்த படத்தின் தரத்தை குத்து பாடல் என்ற அளவையும் மீறி சரியான அளவில் வந்த மாடர்ன் குத்து பாடல் இது
பாடல் ரேட்டிங் :10 /10 

5 . கலாசலா  கலாசலா
  பாடல் பாடியவர் : வயதான  இளமை குரல்கள்  டி .ராஜேந்தர் .எல் ஆர் ஈஸ்வரி ,விஜயா
  இந்த டாப் பாடலை எழுதியவர் : வாலிப கவிஞர் நம்ம வாலிதான்

  படத்தில் டாப் விஷயமா இந்த் பாடல்தான் ஹிந்தி மொழியில் முன்னி பாடல் எப்படி ஒரு கலக்கு கலக்கியதோ அதை விட இரண்டு மடங்கு சிறப்பான பாடல் இது ,அதுவும்  எல் ஆர் ஈஸ்வரி குரல் இன்றைய யூத்தையும் ஆட வைக்கும்
வடக்கே கேட்டு பாரு என்று எல் ஆர் ஈஸ்வரி ஆரம்பிக்கும்போதே இந்த பாடலை எப்படி திரையில் தரணி கொண்டு வர போகிறார் என்று நம்மை எதிபார்ப்பை உண்டாக்கி விட்டார் தமன்
  இந்த ஒரு பாடலுக்கு மட்டும் மல்லிகா செகாவத்  குத்தாட்டம் சிம்புவுடன் ஆட போகிறார்

   நீண்ட நாட்களுக்கு பிறகு திரை அரங்கில் துணிந்து ஒன்ஸ்  மோர்  கேட்க்க வைக்கும் பாடல்கள் 

பாடல் ரேட்டிங் :10 /10

  ஆகா தமன் இசை அமைப்பில் அவருக்கு ஒரு மைல் கல் பாடல் இது

கண்டிப்பாக கேட்க்க கூடிய பாடல் இது 







SUPER OSTHI TRAILER 





Sunday, September 25

சீனிபிரபுவின் சிரிக்கவைக்கும் "ஊர்த்திருவிழா" மிமிக்ரி கேட்டு சிரியுங்கள்




    குரல் மாற்றி பேசுவது என்பது எல்லோருக்கும் கிடைக்கும் வரம் இல்லை அதிலும் குரல் மாற்றி பேசும்போது
சிரிக்க வைப்பது இன்னும் சிறப்பு அதில் 

சீனிபிரபு தன் திறமையை  இதற்க்கு முன்பு அவர் மிமிக்ரி மூலம் நிருபித்து இருக்கும் இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்து சென்னையில் பெரும் நிறுவனத்தில் பணியாற்றும் இவர்
   தன்னுடைய மிமிக்கிரி கலையை மறக்காமல் அவ்வப்போது ஏதும் ஒரு கான்செப்ட் கொண்டு மிமிக்கிரி நிகழ்ச்சியை தயாரித்து வெளியிடுகிறார்
  சமிபத்தில் வந்த அவரின் ஊர்த்திருவிழா கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்.


 
சீனிபிரபு கணேசன் அவர்கள்  ஒரு நடிகர் பட்டாளத்தையே கிராமத்துக்கு கொண்டு சென்று நம்மை சிரிக்க வைத்து விடுகிறார் " சிம்பு ,விஜயகாந்த் ,பூர்ணம் விஸ்வநாதன் ,அஜித் ,சூர்யா ,சிவாஜி ,மம்மூட்டி என்று தொடரும் நடிகர்களின் காமெடி வசனங்களை எப்படி சிறப்பாக பேசி அதே நேரத்தல் நம்மையும் சிரிக்க வைத்துள்ளார் சீனிபிரபு கணேசன்
 ஒரு முறை கேட்டால் மீண்டும் கேட்டு சிரிக்க வைக்கும் வசங்கள் அதற்க்கு ஏற்ற சரியான அளவில் குரல் தேர்வு சீனி பிரபுவின் முயற்சி பாராட்ட வேண்டியாது

விரைவில் இன்னும் சில அவரின் படைப்புகள் ஹாய் அரும்பாவூரில்  அவரின் அனுமதியுடன்







இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் பேஸ்புக் மூலம் மற்றவர்களுக்கு சொல்லவும்

Saturday, September 24

ஆதாமிண்டே மகன் அபு + தெய்வ திருமகள் = ஆஸ்கர் awards




    இந்த ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு செல்லும் படங்களின் வரிசையில் பல படங்கள் போட்டி போட்டாலும் அதில் சிறந்த படம் என்று மலையாள படமான ஆதமிண்டே மகன் அபு  தேர்ந்தேடுக்கப்படத்தில் சந்தோசம் இல்லையோ? 

அதே அளவு தெய்வ திருமகள் படம் தேர்ந்தெடுக்கப்படாமல்  போனதில் மிக்க சந்தோஷம் ?


  என்னடா இவன் இப்படி
சொல்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம் இதில் ஒரு சொல்லும்படியான விஷயம் தெய்வ திருமகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் நம் தமிழ் படங்கள் பற்றி ஒரு அளவிற்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டு போய் இருக்கும் 

   பின்னே சும்மாவா தெய்வ திருமகள் படத்தின் மூலப்படமான ஆங்கில படம் ஐ ஆம் சாம் படத்தில் நடித்த நடிகர் சிறந்த நடிகருக்கு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட    விஷயம் எல்லோருக்கும் தெரியும் அதே படத்தை காப்பி அடித்து ஒரிஜினல் என்று நாம் அனுப்பினால் தமிழ்
படங்களை பாராட்டவா செய்வார்கள் ?

  இந்திய தேசிய விருதுகள் நான்கு பெற்ற இந்த படம் ஆஸ்கர் விருது  வாங்க  வாழ்த்துக்கள்

  நறுமண திரவியங்கள் விற்கும் அபு ஹஜ் பயணம் செல்ல மிகவும் கஷ்டப்படும்  சூழ்நிலைகளும் ,அதன் பிறகு கிடைக்கும்
பணம் நேர்மையான வழியில் கிடைக்க வில்லை என்பதால் ஹஜ் பயணம் செல்லாமல் இருக்கும் கதையை சிறப்பான முறையில் இயக்கி உள்ளார் சலீம் அஹமது
  இந்த படத்தில் அபுவாக நடித்த சலீம் குமார் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கினார்
மற்றும் சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த பின்னணி இசை  ஆகிய பிரிவுகளிலும்  தேசிய விருது வாங்கிய  படம் இது


 வரும் ஆண்டுகளில் ஆஸ்கர்  விருதுக்கு தமிழ் மொழியில் இருந்து சொந்த கதையுடன் சிறந்த  படங்கள் போக வேணும் 


   மிக நீண்ட நாட்களுக்கு பிறகு  விகடன் திரை விமர்சனத்தில் குறையே சொல்லாத 50 /100  மதிப்பெண் பெற்ற படம் படம் "எங்கேயும் எப்போதும் "


Thursday, September 22

வெளிவந்துவிட்டது google + ஒரு முறை சோதித்து பாருங்கள்



                              பல வாரங்களாக சோதனை பதிப்பில் இருந்த கூகுல் பிளஸ் இப்போ சோதனை ஓட்டத்தை தாண்டி  இப்போ நம் பார்வைக்கு வந்து விட்டது 




                            கூகுல் என்னதான் பல துறைகளில் பலசேவைகள் தந்தாலும் ஒரே ஒரு சேவை மூலம் பேஸ்புக் ஹிட் அடித்து கூகுல் இணையதளத்தையே முந்தியது வியப்பின் சரித்திரம் 


                        


  கூகுல் இடம் மெயில் ,youtube , பிகாஸா,ஆர்குட் .பஸ் இன்னும் எத்தனையோ வசதிகள் இருந்துதான் முதல் இடத்தில இருந்தது . ஆனால் பேஸ்புக் ஒரே ஒரு சோசியல் நெட்வொர்க் மூலம் மொத்த உலகத்தையும் தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தது என்றால் மிகை இல்லை
                           அதிலும் இரண்டு ஆண்டுகள்
முன்புவரை ஆர்குட்டை விட்டு வர மனம் இல்லாத நம் இந்திய நண்பர்கள் கூட ஆர்குட்டை அம்போவென்று விட்ட கதை வேறு . இந்த ஆர்குட் கூட கூகுல் நிறுவனத்தின் சொல்லும்படியான ஒரு தயாரிப்பு கூட .
  பேஸ்புக்கில் இருக்கும்  எளிமை நாம் விரும்பும் விஷயத்தை உடனடியாக எல்லோரிடமும் பரிமாறும்
எளிமை  போன்றைவகள் தான் பேஸ்புக் 800  மில்லியன்(80 கோடி )   பயன்படுதுபவர்களுடன்  முதல் இடத்தில வர காரணம்

   சும்மா கல்லூரி போனோம் படித்தோம் ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ சம்பளம் கிடைத்தால் போதும் என்று நினைக்காமல் நண்பன் கொடுத்த ஐடியா கொண்டு துணிந்து இறங்கிய "Mark Zuckerberg "  இப்போ சம்பாதிக்கும் கணக்கு வேறு
   இப்போ சொல்ல வர விஷயம் அது இல்லை இதே நிலை நீடித்தால் கொஞ்ச நாளில் உலகம் முழுவதும் பேஸ்புக் இல்லை என்றால் பைத்தியம் 
பிடிக்கும் என்று சொல்லும் அளவிற்கு நம் மக்கள் மாறினால் கூட மிகை இல்லை
  இதை எல்லாம் கணக்கில் கொண்டுதான் கூகுல் பேஸ்புக் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் அதில் இருக்கும் அதே சில வசதிகள் மற்றும் பேஸ்புக்கில் இல்லாத பல வசதிகளை கொண்டு துணிந்து இறங்கிய விஷயம் கூகுல் +

  என்னதான் பல வசதிகள் தந்தாலும் கூகுல் + செய்த மிக பெரும் தவறு என்று என்றால் நுழை வாயில் சரியாக இருந்தால் தானே பலரும் அதில் சென்று என்ன இருக்கு என்று பார்க்க முடியும்
எடுத்து காட்டு கணினி 
பற்றி  அதிகம் தெரியாதவன் கூட சும்மா இணையத்தில் சென்று பேஸ்புக் என்று அடித்தால் கூட போதும் எளிமையான இணைய முகவரி அதிக ஹிட்ஸ் கொடுக்கும் இது எளிய உளவியல் கூட 
படம் 1   
நீங்கள் கூகுல் இணையதளம் சென்றால் அதன் ஓரத்தில் இருக்கும் +you இடத்தை க்ளிக் செய்தால் நேராக அது கூகுல் பிளஸ் லாகின் செய்யும் இடத்திற்கு போகும்  

  ஆனால் கூகுல் பிளஸ் அப்படி இல்லை நீங்கள் இந்த முகவரி செல்ல வேணும் என்றால் plus . Google .com
என்று டைப் செய்ய வேணும்
  இதை இன்னும் இளமையாக plus .com  அல்லது gplus .com  என்று வைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் 


படம் 2
இரண்டாவதா நீங்க sign in  என்பதை கிளிக் செய்ய வேணும்  


  எது எப்படியோ கூகுல் பிளஸ் போட்டிக்கு வந்து விட்டது, 

இப்போ பிளஸ்  வந்த உடன் பேஸ்புக் பல்வேறு மாற்றங்களை அதன் பயனாளர்களுக்கு வாரி வழங்கி வருகிறது 


படம் 3
  உங்களிடம் ஜிமெயில் கணக்கு இருந்தால் நீங்கள் sign inஎன்ற இடத்தில கணக்கை துவங்கலாம்
அப்படி உங்களிடம் ஜிமெயில் கணக்கு இல்லை என்றால் 2என்ற இடத்தில சொல்லி இருப்பது போல புது ஜிமெயில் கணக்கை  துவங்கி கூகுல் ப்ளஸில் கலக்கலாம்
3என்று சொல்லி இருப்பது அதில் இருக்கும் சில முக்கிய விஷயங்கள் கூட
 



    எப்படியோ இவர்களின் சண்டையில் லாபம் என்னவோ நமக்குதான்

 பேஸ்புக்கில் இது எனக்கு ஐந்தாவது வருடம் முதல் நான்கு வருடம் இந்தியர்கள் இல்லாத வெறும் பேஸ்புக் இப்போ அதிகம் இந்தியர்கள் மட்டுமே
   அதற்க்கு முன்பு ஆர்குட்டை விட்டு வர மாட்டோம் என்று சொன்னவர்கள் எங்கே நடந்த ஒரு சின்ன மேஜிக் ஆர்குட்டை அம்போவென விட்ட அதிசயம்தான்

  இந்த கூகுல் ப்ளஸில் சேர கூகுல் ஜி மெயில் கணக்கு மட்டும் போதும்

 


Tuesday, September 20

ஹாரிஸ் ஜெயராஜ் இசை துளிகள் பகுதி 1



   ஹாரிஸ் ஜெயராஜ் தன்னுடைய முதல் படமான மின்னலே தொடங்கி விரைவில் வரும் ஏழாம் அறிவு வரை அவர் காட்டும் உழைப்பும் இசையில் காட்டும் புதுமை மட்டுமே அவரை இந்த அளவிற்கு தமிழ் மொழியில் முதல் இடத்தில வைத்து உள்ளது அவரை பற்றிய இசை துளிகள் 



  ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்தது  ஜனவரி எட்டு 1975  அதாவது அவர் முதல் படமான மின்னலே படத்திற்கு இசை அமைக்க நுழைந்த பொது அவரின் வயது 26 மட்டுமே  

   அவரின் முதல் படமான மின்னலே தமிழ் திரை உலகில் ஒரு இசை சுனாமியை ஏற்படுத்தியது என்னவோ உண்மை இந்த படத்தின் ஆடியோ கேசட் வரலாறு படைக்கும் அளவிற்கு விற்பனை ஆனது மற்றும் ஒரு சரித்திரம் 


  இந்த படத்தின்  வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ஹாரிஸ் அவர்களின் இசை என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை
   வேறென்ன வேறன்ன வேணும் மற்றும் வசீகரா பாடல்கள் வசீகரிக்கத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் 


 சென்னையில் பிறந்து வளர்ந்த ஹாரிஸ்  அவர்களின் தந்தை கூட இசை துறையில் வந்த ஒருவர் எஸ்.எம் .ஜெயகுமார் சொல்லும்படியான் ஒரு கிடார் கலைஞர் மற்றும் இல்லாமல் இசை மீது ஆர்வம் உள்ளவர்
மலையாள படங்களில் உதவி இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளார்

   ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம்  சிறு வயது முதலே கர்நாடிக் இசை மற்றும் ட்ரினிட்டி இசை கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள்

  இப்போ ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் சில ஒற்றுமைகள் :1


ரஹ்மான் பிறந்தது ஜனவரி 8  ஹாரிஸ் பிறந்த நாள் ஜனவரி 6 


ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் பிறந்தது சிங்கார சென்னையில்


இருவரும் ட்ரினிட்டி கல்லூரியில் இசை பட்டம் பெற்றவர்கள் 



                                                                                                               
தொடரும்

Sunday, September 18

எப்படி தயாரிக்கிறார்கள் "french fries " fm(27) & செய்தி கதம்பம்

பிரெஞ்சு பிரைஸ் சும்மா சொல்ல கூடாது நல்ல சூடான உப்பு தூவப்பட்ட பிரெஞ்சு பிரைஸ் மற்றும் டொமாடோ சாஸ் (தக்காளி சாஸ் ) உடன் சாப்பிடுவது இன்னும் சுவை தரும் விஷயம்

இந்த உருளை கிழங்கு எப்படி ஆளாக வெட்டப்பட்டு குளிர்விக்கப்பட்டு சரியான அளவில் சூப்பர் மார்க்கெட் மூலம் நம்மை எப்படி அதே தரம் சுவையுடன் வருகிறது என்று பார்க்கலாம்
பிரெஞ்சு பிரைஸ் பிறப்பிடம் பெல்ஜியம் இருந்த போதிலும் இதம் பெயர் உலகம் முழுவதும் பிரெஞ்சு பிரைஸ் என்று அழைக்கப்படுவது அதன் மற்றும் ஒரு சிறப்பு

எங்கேயும் எப்போதும் விமர்சன வெற்றி :

சும்மா சொல்ல கூடாது எங்கயும் எப்போதும் படத்திற்கு கிடைத்த சாதகமான விமர்சனம் எனக்கு தெரிந்து இதற்க்கு முன்பு எந்த படத்திற்கும் கிடைத்து இருக்குமா எனபது சந்தேகமே
சொல்லப்பட்ட விதம் சொல்ல வனந்த கருத்து மிகைப்படுத்தாமல் சொன்ன ஒரே காரணத்தால் மட்டுமே இந்த ஆதரவு விமர்சனம் என்று சொல்லலாம்
இல்லை என்றால் சும்மா இருக்கும் நம்ம விமர்சனம் அதற்க்கு எடுத்து காட்டு ஒரு
வந்தான் வென்றான் படத்திற்கு வந்த ஒரு வரி விமர்சனம்
" வந்தான் நொந்தான் "

ஆனால் இதே எங்கேயும் எப்போதும் படத்திற்கு நான் சொல்லும் விஷயம் முடிந்தால் திரை அரங்கில் பார்க்கவும் "


காமெடி உண்ணாவிரதங்கள் மற்றும் உண்மையான உண்ணாவிரதங்கள் :
இப்போ உண்மையான காரணத்திற்கு உண்ணாவிரதம் இருப்பவனையும் காமெடி ஆகா மாற்றி விட்டது இந்த ஹசாரே மற்றும் மோடி போன்றவர்களின் விளம்பர உண்ணாவிரதங்கள்
ஒரு பக்கம் இரோம் சர்மிள பற்றி எப்படி அதிக மக்களுக்கு தெரியாமல் இந்த மேடைய செய்ததோ அதே போல இப்போ கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான உண்ணாவிரதமும் திட்டமிட்டு மீடியா ஒளிபரப்புவதில்லை

அந்நிய செலவாணி கவலை :

வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு கவலை நிச்சயம் இருக்கும் அது தங்கள் இருக்கும் நாட்டில் பண பதிப்பு இந்திய பணமதிப்பில் அதிகம் ஆனால் சந்தோஷம் அடைவதும் குறைந்தால் வருத்தம் அடைவதும்

என்ன செய்வது இங்கே இருக்கும்போது இந்திய பண மதிப்பு அதிகம் தேவை என்று நினைக்கும் மனம் அதே நாம் இந்தியாவில் இருக்கும்போது குறைய வேணும் என்று நினைப்பது இயல்புதானே
" எப்போடா சொந்த நாட்டில் அமெரிக்க லண்டன் துபாய் போல நாம் வாழ்வது

இதற்க்கு நாமும் உண்ணாவிரதம் இருந்தால் மட்டுமே உண்டு


Tuesday, September 13

கே.பாலச்சந்தர் பெருமைப்படும் அறிமுகம் AR ரஹ்மான்



இந்த வார ஆனந்த   விகடன் விகடன் மேடையில் அவருடன் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பாலச்சந்தர் சொன்ன பதில்தான் இந்த தலைப்பு 


    உங்கள் அறிமுகங்களிலே நீங்கள் பெருமையாக நினைப்பவர்கள் யார் யார் ? என்ற கேள்விக்கு பாலச்சந்தர்
அவர் அறிமுகபடுத்திய எத்தனையோ
கலைஞர்கள் இருந்த போதிலும் அவர் பெருமைப்படும்
அறிமுகமாக நினைப்பவர் ரஹ்மான் என்று சொல்லி இருப்பது
 ஒரு பழம் பெரும் கலைஞர் அந்த காலம் முதல் இந்த காலம் வரை அவர் இயக்கத்தில் எத்தனையோ கலைஞர்கள் இருந்த போதும்  ரஹ்மான் பேரை மட்டும் சொல்லி விட்டு மற்றவர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமே என்று சொல்லி இருக்கிறார் 
  அதுதான் ரஹ்மான் என்று சொல்லி நான் பெருமை கொள்ள விரும்பவில்லை இத்தனை சாதனைகள்  செய்தும்  இன்னும் அமைதியாக என்ன புது மாதிரியான இசை தரலாம் என்று யோசிக்கும் ரஹ்மானின் உழைப்புக்கு
மணி மகுடம்தான் பாலச்சந்தர் வாயால் அவர் பெருமைப்படும் அறிமுகம் என்று சொல்லி இருப்பது 




"  ரஹ்மானின் முதல் படமான ரோஜா படத்தின் தயாரிப்பாளர் கே. பாலச்சந்தர் அவர்கள் "

  ரஹ்மானின் ISAYIL இந்த மாதம் இரண்டு சிறப்பு  மிகு இசை வர உள்ளது
 ஒன்று உலக அளவிலான " சூப்பர் ஹெவி "
மற்றது ஹிந்தி  இசை படமான " ராக் ஸ்டார்  "

   தமிழ் மொழியில் அவர் இசை அமைக்கும் இரண்டு FILM மட்டுமே
ஒன்று ரஜினி அவர்களின் "ராணா "
மற்றது  கௌதம் மேனன் அவர்களின் " நீதானே என் பொன்வசந்தம் "

Thursday, September 8

எப்படி தயாரிக்கிறார்கள் "cotton buds" FM(26) & சன் டிவி + அரசு கேபிள்


இன்றைய காது குடையும் விஷயம்
நமக்கு தேவையான ஒரு விஷயம் மட்டும் இல்லை அத்யாவசிய விஷயம் கூட 


இன்றைய நாகரிக உலகில் காதில் என்னை போடுவது எல்லாம் அறிவியல் பூர்வமாக நல்லது இல்லை என்று சொல்லும் நேரத்தில் நம் காதை சுத்தம் செய்வதில் முக்கிய இடம் பிடிப்பது காட்டன் பட்ஸ் எனப்படும் பஞ்சு குச்சிகள்

  இந்த காட்டன் பட்ஸ் வாங்கும்போது பார்க்க வேண்டிய விஷயம் சரியான தரத்துடன் வாங்குவது நலம் நல்ல தரமான நிறுவனத்தின் தயாரிப்பை வாங்குவது நலம்

சன் டிவி + அரசு கேபிள்
  சன் டிவி தங்கள் அரசியல் பலத்தை பயன்படுத்தி தான் இந்த அளவில் முன்னேறியது என்று சொல்பவர்களுக்கு சரியான பதிலாக  அமைந்தது  சன் டிவி இல்லை என்பதால் மக்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு
  இலவசமாக கொடுத்தாலும் தரமான தொலைக்கட்சிதான் பார்ப்பார்கள் ஆகா என்னதான் அரசு கேபிள் என்று ஆயிரம் தொ(
ல்)லைக்காட்சி கொடுத்தாலும்
தரமான கட்டண தொலைகாட்சி இல்லை என்றால் அது ஜீரோ அளவில் தான் இருக்கும்

  மக்களுக்கு குறைவான விலையில் தேவை தரமான கல்வி மட்டுமே தொலைக்காட்சி இல்லை 








Tuesday, September 6

ஜீவா + கௌதம் + AR ரஹ்மான் =நீதானே என் பொன்வசந்தம் ( stills)



   கௌதம் விண்ணை தாண்டி வருவாயா வெற்றிக்கு பின்பு "நடுநிசி நாயிகள்" தோல்விக்கு பின்பு மீண்டும்
அவரின் இயக்கதில் வரும் படம் " நீதானே என் பொன்வசந்தம் "


  
   கௌதம் படங்களில் அதுவும் காதல் கலந்த படங்கல் முக்கிய கதாநாயகனே இசை அதற்க்கு எடுத்து காட்டு " மின்னலே ,வாரணம் ஆயிரம் ,விண்ணை தாண்டி வருவாயா "




அந்த வகையில் இந்த படத்தில் மீண்டும் ரஹ்மானுடன் அவர் இணைவது இன்னும் சிறப்பு
  





ரஹ்மான் தமிழ் படங்களில் அதிகம் ஒப்பந்தம் ஆகாத இந்த நேரத்தில் கௌதம் படத்தில் மட்டும் எப்படி இசை அமைக்க ஒப்பு கொள்கிறார் என்பது சிதம்பர ரகசியம் 






  கோ படத்தில் ஜீவா அவர்களின் நடிப்பும் சரி அவரின் லுக்கையும் மாற்றினார் கே வி ஆனந்த், இந்த படத்தில் கௌதம்.


ஜீவா அவர்களின் புகைப்படம் பார்க்கும் போது ஒரு புது மாதிரியான யூத்தான ஜீவா அவர்களை பார்க்கலாம்

  






அடுத்த ஆண்டில் ஒரு இசை கொண்டாட்டம் ரெடி
 ஜீவா + கௌதம் +ரஹ்மான் = இசை தீபாவளி 

  
  cast :
      Starring                   =Jiiv Samantha
      Directed by             =Gautham Menon
     Produced by            = Kumar Jayaram
     Written by                = Gautham Menon
     Music by                  = A. R. Rahman
     Cinematography      =Manoj Paramahamsa
     Editing by                = Anthony


Sunday, September 4

Most Viewed YouTube Channels - மியூசிக் வீடியோ august Month



உலக அளவில் அதிகம் பேர் பார்த்த இசை வீடியோ பற்றி இந்த வாரம்
இது இந்த மாதத்தில் அதிகம் பேர் பார்த்த ஹிட்ஸ் கணக்கில் இந்த டாப் வீடியோ கணக்கிடப்படுகிறது
இதில் மொத்த பார்வையாளர்கள் கணக்கிடப்படுவதில்லை
இந்த மாதத்தில் அதிக அளவில் பார்க்கும் ஹிட்ஸ் கணக்கிட்டு இந்த டாப் வீடியோ


முதல் இடத்தில இருப்பது

 டாப் நம்பர் 1 இருப்பது nicki in super bass






டாப் நம்பர் 2 இருப்பது PARTY ROCK ANTHEM




டாப் நம்பர் 3 இருப்பது DANZA KUDURO





டாப் நம்பர் 4 இருப்பது RAIN OVER ME FT. MARC ANTHONY


டாப் நம்பர் 5 இருப்பது LAST FRIDAY NIGHT





  " ENJOY THE VIDEO AND DON'T FORGET VOTE THE ARTICLE FACEBOOK AND
     SHARE THE ARTICLE UR FACEBOOK"

Saturday, September 3

அஜித் ஹாரிஸ் ஜெயராஜ் சூர்யா மற்றும் அரசு கேபிள்

அஜித் (rock )

   
   இந்த ஆண்டில் சூப்பர் ஹிட் படங்கள் சிறுத்தை ,கோ ,காஞ்சனா வரிசையில்  மங்காத்தா சந்தேகம் இன்றி சேரும் எல்லா சாத்திய  கூறும் உள்ள படம் இது
   படத்தில் உங்களை காப்பாற்றுவேன் நீங்கள்தான் எனக்கு கடவுள் என்று  ரசிகனை ஏமாற்றும் வசனங்கள் இல்லை படம் வருவதற்கு முன்பு படம் ஓட வைக்க ஆடு மாடு நோட்டு புத்தங்கள் தரவில்லை
  ரசிகர்களை நோக்கி என் படம் பிடித்து இருந்தால் மட்டும் பாருங்கள் என்று சொல்லி ரசிகர் மன்றங்களை களைத்த பின்பு இவர் படம் எங்கே ஓடும் என்று அனைவரும் நினைத்து இருந்தது என்னவோ உண்மை

  ஆனால் அஜித் மீண்டும் தான் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ என்று நிருபித்து விட்டார்
ஒரு படம் ஓட நல்ல கதை மட்டுமே தேவை தேவை இல்லாத ரசிகர்களை ஏமாற்றும் பில்ட் அப் தேவை இல்லை என்று இனிமேல்  புரிந்தால் சரி 
  இதே சூட்டோடு வரும் பில்லா படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் படம் பிடித்து இருந்தால் மட்டும் படம் பார்க்க சொல்லும் அஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  கொசுறு : மணிரத்தனம் அஜித் விரைவில் இணைவார்கள் என்று தெரிகிறது

ஹாரீஸ் ஜெயராஜ் 3டி உலக இசை பயணம் 



   தமிழ் திரை உலகில் no 1  இசை அமைப்பாளர் முதல் முறையாக உலக இசை பயணம் மேற்கொண்டுள்ளார் எல்லா இசை நிகழ்ச்சி நவீன தொழில்நுட்பம் மூலம்  3டி ஒளிபரப்பாவது சிறப்பு மற்றும் ஒரு சிறப்பு முதல் நிகழ்ச்சி அவர் நம் தமிழ் மண்ணில் தொடங்குவது
முதல் இசை நிகழ்ச்சி சென்னை மாயாஜாலில் அக்டோபர் 2-ந்தேதி நடைபெறும். கோவையில் அக்டோபர் 16-ந்தேதியும் ஹைதராபாத்தில் 22-ந்தேதியும், துபாயில் நவம்பர் 18-ந்தேதியும், மலேசியாவில் டிசம்பர் 3-ந்தேதியும் நடைபெறும்
ஹரிகரன், கார்த்திக், திப்பு, கிரிஷ், ஹரிணி, ஆண்ட்ரியா, சின்மயி, பென்னிதயாள், நரேஷ் அய்யர், ஹரீஷ் ராக வேந்திரா புகழ் பெற்ற மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் நடனமும் இடம்பெறும்

  மிக குறைந்த செலவில் உலக தரமானா இசை நிகழ்ச்சி நடத்தும் ஹாரிஸ் அவர்கள் இதன் மூலம் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை குழைந்தைகள் உதவிக்கு வழங்க இருக்கிறார்


 அசத்தும் சூர்யா   இனி  இந்திய நாயகன் 


  தமிழில் ஏழாம் அறிவு ,மாறன் படங்களில் நடித்து வரும் சூர்யா அடுத்த சூப்பர் ஹிட் இந்திய அளவில் கொடுக்க உள்ளார் தன் தம்பி நடித்தூ சூப்பர் ஹிட் ஆனா பையா படம் ஹிந்தி மொழியில் ரீமேக் ஆகா போகிறது கார்த்திக் வேடத்தில் ஹிந்தி மொழியில் கலக்க போவது யாரும் இல்லை நம்ம சூர்யா அவர்களே
  ஏற்கனவே விளம்பரங்கள் மற்றும் ரத்த சரித்திரா படம் மூலம் ஹிந்தி மொழியில் நுழைந்த இவர் அடுத்த ஏழாம் அறிவு ஹிந்தி மொழியில் வருகிறது கலக்குங்க சூர்யா அவர்களே

  அரசு  கேபிள் (எங்கே சன் டிவி )


   நம்ம ஊரை பொறுத்த வரை கேபிள் டிவி என்றால் அது சன் டிவி என்பதை மாற முடியாது என்பதை நிருபித்த அரசு கேபிள் மக்கள் நூறு சேனல் கொடுத்தாலும் சன் டிவிக்கு இணையாகுமா
பார்க்கலாம் கட்டண சேனல்கள் உடன் விரைவில் பேச்சு வார்த்தை நடைபெற்று; விரைவில் கட்டண சேனல் வரும் என்று எதிர்பார்க்கலாம்
  அது வரை பக்கத்து வீட்டில் போய்தான் நாடகம் பார்க்க வரும் நம்ம பெண்களுக்கு
டிஸ்கவரி தமிழ் போன்ற சேனல்கள் வழங்கும் இந்த அறிவியல் நிகழ்சிகள் இலவசமாக வழங்க சொல்வது எப்படி சரியாகும்
தமிழ் சேனல்கள் இலவசமாக வழங்கலாம் ஆனால் டிஸ்கவரி போன்ற சேனல்கள் ரூ .10 கொடுத்தாலும் குறைவே  

Thursday, September 1

A.R.ரஹ்மானின் ராக் ஸ்டார் முன்னோட்ட இசை துளிகள்



   ரஹ்மானுக்கு தால் படத்திற்கு பிறகு முழுவதும் இசையுடன் சம்பந்தப்பட்ட படம் ஹிந்தி மொழியில் கிடைக்க வில்லை என்ற ஆசை நிறைவேற்றி உள்ள படம் இது 


தால் படத்திற்கு எப்படி ரஹ்மானின் இசை ஒரு தூணாக இருந்ததோ அதே போல இந்த படத்திற்கு இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை 



  எவ்வளவுதான் இசை சிறப்பாக இருந்தாலும் அதை இன்னும் சிறப்பாக அனைவரிடம் கொண்டு செல்ல உதவுவது படத்தின் வெற்றி கூட.





யுவராஜ் (சுபாஸ் கய் இயக்கத்தில் வந்த படம்) இந்த படத்தில் ரஹ்மானின் இசை எவ்வளவு சிறப்பாக இருந்த போதும் இந்த படத்தின் தோல்வி இந்த இசை ஒரு அளவிற்கு மேல் அனைவரிடமும் செல்லவில்லை
சல்மான் கான் நடிப்பில் இந்த படத்தில் ரஹ்மானின் இசை சிம்பொனி இசை ஒத்து இருந்த போதும் வெற்றி அளவு அவரின் ரசிகர்களிடமும் இசை விமர்சகர் இடம் மட்டுமே பாராட்டு பெற்றது

  இப்போ ராக் ஸ்டார் விஷயத்திற்கு வருவோம் 


   இந்த படத்தின் இயக்குனர் அவர்களுக்கு இது நான்காவது படம் ரஹ்மானுடன் இணையும் முதல் படம்  இந்த கதை ஒரு இசை கலைஞன் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இம்தியாஸ் இந்த படம் இசை அமைத்தால் அது ரஹ்மான் அவர்களின் இசை மட்டுமே இருக்க வேண்டும் என்ற முடிவில் ரஹ்மானை இந்த படத்திற்கு இசை அமைப்பாளாராக ஒப்பந்தம் செய்தார்

  ரூ 60 கோடி செலவில் ஒரு இசை சம்பந்தப்பட்ட படத்திற்கு  மிக பெரும் பொருள் செலவில் தயாரித்துள்ளது எரோஸ் மற்றும் ஸ்ரீ விநாயக் சினி விசன் 



  இந்த படத்தின் மூன்று நிமிட முன்னோட்டத்தில் வரும் ரஹ்மானின் இசை இந்த படம் ரஹ்மானின் இசை வாழ்க்கையில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகா இருக்கும் என்று எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது

  ரன்பீர் கபூர் ,நர்கீஸ் மற்றும் சமிபத்ல் மரணம் அடைந்த ஷம்மி கபூர் அவர்களுக்கு இது கடைசி படம்

  



இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள் 
இந்த முன்னோட்டத்தில் வரும் ஷதா  ஹக் பாடல் அதனை ஒட்டி வரும் பேஸ் கிடார் இசை ஆவேசம் கொண்டுள்ள ஒரு இசை கலைஞனின் இசை எப்படி வரும் என்று ரஹ்மானின் மூலம் வந்துள்ளது

        ஹிந்தி திரை உலகில் அதிகம் எதிர்பார்க்கும் இசை இன்றைய அளவில் ராக் ஸ்டார் முன்னிலையில் உள்ளது   




Monday, August 29

இருக்காரா இல்லையா ? விரைவில் வரும் குறும்பட முன்னோட்டம்



  மீண்டும் ஒரு முறை நண்பர் சாய் தான் ஒரு பலமுக கலைஞன் என்று நிருபித்து உள்ளார் .இந்த முறை அவர் எடுத்து இருக்கும் அவதாரம் இயக்குனர்
ஏற்கனவே இசை அமைப்பாளர் கவிஞர்  பாடகர்  மென்பொருள் துறை வல்லுநர் என்று பலதுறைகளில் கலந்தடிக்கும் சாய் 


  இப்போ நடிகர் கம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்
படத்தின் ஆரம்ப முன்னோட்ட காட்சிகள் செய்தி வடிவில் கடவுள் இருக்காரா இல்லையா  என பல பேர்களிடம் பேட்டி வடிவில் அமைத்து உள்ளார்
கடவுள் விஷயம் என்றாலே ஆயிரகணக்கான 
பிரச்சினையான கருத்துக்கள் இருக்கும் அவைகளை எப்படி ஒரு அழகிய குறும்படமாக கொடுப்பார் என்று இப்போவே எதிர்பார்ப்பு உண்டாக்கி விட்டார் சாய்

   இந்த படத்தை பற்றி விரிவான பதிவு படம் வரும்போது.

சாய் படத்தில்  வரும் கருத்து போல இறைவன் நாடினால் எழுதவேன்
 
   இந்த படத்தில் நான் எதிர்பார்க்கும் முக்கிய விஷயம் சாய் அவர்களின் இசை எப்படி இந்த படத்தில் இருக்கும் என்று
ஏற்கனவே பெங்களுரு குறும்படத்தில் குறும்படத்தில் குறும்பாட்டு போட்டு கலக்கிய சாய் இந்த படத்தில் இன்னும் சிறப்பாக செய்வார் என்று நம்புகிறேன்

 


WATCH VIDEO  இருக்காரா இல்லையா ? 

Sunday, August 28

எப்படி தயாரிக்கிறார்கள் "BOOKS " FM (25 )& cinema மசாலா துணுக்குகள்



  இந்த பதிவு 25 வது எப்படி தயாரிக்கிறார்கள் பதிவு
இதுவரையான பதிவுகளுக்கு ஆதரவு தந்தது போல இந்த் பதிவிற்கும் உங்கள் ஆதரவு தேவை
என் பதிவில் சொல்லும்படியானா விஷயம் இருக்கோ இல்லையோ மோசமாக இருக்காது என்று நினைக்கிறேன் 



இந்த வார ஹிட் பாடல் வரிசையில் நேரிடையாக சேரும் எல்லா சிறப்பும் வேலாயுதம் பாடல்களுக்கு உண்டு
வேட்டைக்காரன் பாடல்கள் போல ரொம்ப சுறு சுறுப்பாக இல்லை என்றாலும் காவலன் பாடல்கள் போல அந்த அளவிற்கு மோசம் இல்லை
மொத்தத்தில் வேலாயுதம் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும் பாடல்களுக்கு உள்ள எல்லா தகுதியும் இருக்கு

 ஆடியோ உலகில் இந்த வாரம் முதல் மங்காத்தா வேலாயுதம் போட்டியில் ஜெயிக்கும் தகுதி வேலாயுதம் படத்திற்கு இருக்கு
வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி 


செப்டம்பர் 10  இதே கவுண்டவுனில் முதல் இடம் மாற்றம் இல்லாமல் ஏழாம் அறிவுக்கு மட்டுமே இருக்கு
இதன் பாடல் நேரிடையாக சிங்கப்பூரில் இருந்து சன் டிவி ஒளிபரப்பும் என்று தகவல்கள் சொல்கிறது







  மங்காத்த வரும் புதன் முதல் வெளியிடு  என சன் டிவி விளம்பரம் இப்போவே கண்ணை கட்ட ஆரம்பித்து விட்டது 


மலையாள செய்தி சேனல் பார்க்கும் பொது இது போல தமிழி நல்ல செய்திகள் வராத என்று நினைத்து இருக்கேன் அந்த ஆசையை முழுவத்ம் நிறைவேற்றி உள்ளது புதிதாக வந்துள்ள புதிய தலைமுறை செய்தி சேனல்
   வட இந்திய ஹிந்தி மற்றும் ஆங்கில செய்தி சேனல் எப்போதும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல தங்கள் டிஆர்பி எகிற உப்பு சப்பிலாத விசயத்தையும் தேசபக்கிதியுடன் முடிச்சு போட்டு கழுதையும் குதிரை ஆக்கும் திறமை உள்ளவைகள்
  அந்த வகையில் தமிழர்கள் ஆகிய நாம் ஒரு படி மேலேதான்
இப்படி ஒற்றுமை இல்லாமல் இருக்கும்போதே இவ்வளவு சாதித்து இருக்கோம் ஒற்றுமை மட்டும் மலையாளிகள் போல நம்மிடம் இருந்து விட்டால் தமிழ் நாடுதான் இந்தியாவிற்கே டாப்

" சரி இந்த வார எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் நாம் வாழ்க்கையில் ஒரு அங்கமான புத்தகம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பாருங்க ===========