Tuesday, June 7

இசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்



        நாம் தேடும் தவல்கள் தர எத்தனையோ இணைய தளங்கள் இருந்தாலும் நமக்கு பிடித்தமான இசையை தேடி தர சிறந்த இரண்டு தளங்கள் பற்றி இன்று.  ஆங்கில  பாடல்களுக்கு  என்று தளங்கள் பல இருந்தாலும் தமிழ் பாடல்கள் தேட சிறந்த் தளம் இது

  ஒன்று SAAVN  மற்றது சர்ச் என்ஜின்களின் ராஜ கூகிள் GOOGLE  MUSIC  SEARCH   இன்று இந்த இரண்டை பற்றி பார்க்கலாம்

  SAAVN :     


இந்த இணையதளம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழி பாடல்களை தேடி பார்த்து கேட்க்க தரும் சிறந்த தளங்களில் ஒன்று
  நாம் தேடும் பாடல்கள் கேட்க்க இந்த இணையதளத்தில் பிளேயர்  உள்ளது 



SAAVN .COM செல்ல இதை அழுத்தவும் 

 
GOOGLE  MUSIC  SEARCH  
                 

  இந்த இணைய தளம் பற்றி அதிகம் சொல்ல தேவை இல்லை  இதில் நாம் விரும்பும் பாடல்கள் கேட்க்க IN .COM  பிளேர் உள்ளது 





GOOGLE MUSIC SEARCH செல்ல இதை அழுத்தவும்
  

Monday, June 6

பெங்களூர் குறும்பட விமர்சனம்


நடிப்பு :

சரவணா குமார் , தினேசு ,தங்கராஜு செயசங்கர் அரிகரன் கார்த்திக் சரவண ராம் குமார்  மற்றும் நம்ம நண்பர் "பலராமன்"

பாடல் எழுதி இசை அமைத்து பாடியவர் :சாய் சுதர்சன் 


ஒலி ஒளிபதிவு நிகழ்பட நெறியமைப்பு
சரவண ராம் குமார்
கதை கதையாடல் உரையாடல் :பலராமன்
  தயாரிப்பு கலை பொறியாளர்கள்

   

எதிர்பார்ப்பை உண்டாகிய குறும்படம் இப்போ நம் கணினித்திரையில் எதிர்பார்ப்பை உண்டாகிய அளவிற்கு அதை நிவர்த்தி செய்த படம் பெங்களூர் 

     பத்து நிமிட படத்தில் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு அசத்தலாக ஒரு நல்ல நகைச்சுவை கலந்த படம் கொடுக்க முடியும் என்று நிருபித்துள்ளார் பலரமான் 


 ஒரு கிராமத்து இளைஞன் நகரத்திற்கு வரும்போது  சந்திக்கும் பிரச்சினைகள் அவைகள் அவன் எப்படி சந்திக்கிறான் என்பதை நகைச்சுவையாக் சொல்லும் படம் இது 
:)

படத்தின் ஆரம்பதி வரும் ட்விஸ்ட் நிறைந்த நகைச்சுவையாக பேருந்து நிலையத்தில் படத்தின் ஹீரோ அவர்களும் இயக்குனர் "பல
ராமன்" அவர்களும் தொடரும் முதல் காட்சி சூப்பர்

 படத்தில் ஹீரோ அவர்களை ரூம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் அந்த இரண்டு நிமிட காட்சியில் பேச்சுலர் வாழ்க்கையில் நம்ம  இளம் தலைமுறை விடும் அலப்பறை  காட்டும்  காட்சிகள் சூப்பர்

  அதிலும் குளிக்கும் முறை பற்றி நண்பர் விளக்கும் காட்சி  இப்படியும் நடக்குமா என்று யோசிக்க வைக்கிறது

 நம்ம கிராமத்து ஹீரோ 
மெக்டொனால்ட் சென்று செய்யும் அலப்பறைகள் சிறப்பு சிரிப்புகள்

 

 இந்த படத்தின் மற்றும் ஒரு சொல்லும்படியான விஷயம் சாய் அவர்களின் பின்னணி இசை மற்றும் பெங்களூர் டைட்டில் பாடல் இதை அவரே இசை அமைத்து பாடல் எழுதி பாடியும் இருக்கிறார் 

 

வாழ்த்துக்கள் சாய் உங்களின் இசை  கேட்கும்படியான ஒரு முயற்சி ஒவ்வொரு நேரத்திற்கு தேவையான பாடல் சேர்ப்பு இன்னும் சிறப்பு,
செம்மொழி இசை எந்திரன் பாடல் நாயகன் பாடல் என சிறப்பாக சிறப்பான் காட்சியில் சேர்த்து மற்றும் உங்கள் பின்னணி இசை சூப்பர் உங்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல இசை காலம்
உள்ளது (எதிர்காலத்தின் பதம் )

   பலராமன் உழைப்பு நிச்சயம் பாரட்ட வேண்டியது ஆரம்ப காட்சியல் அவர் நடிப்பு சூப்பர் அவரின் உடை கூட சூப்பர்

 










அதிலும் ஹீரோ அவர்கள்  கடைசிக் காட்சிக்கு குறுந்தாடி தேவைப்பட்டது என்பதற்காக 3 வாரங்களாக சரியாக வளராத தாடியை வைத்தே அலுவலகத்தில் திரிந்தது தனி காமெடி.

 





மொத்தத்தில் சூப்பர் படம்





Saturday, June 4

இப்போ எதுக்குப்பா இந்த உண்ணாவிரத மெகா பட்ஜெட் படம்




  அண்ணா ஹாசரே  உண்ணாவிரதம் இருந்தார்
இவர்  உண்மையில் மக்களுக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு பதிவர் தொடங்கு சராசரி ஆட்கள் வரை அண்ணா அவர்களின் உன்னவிரத்திர்க்கும் அவர் தொடங்கிய இயக்கத்திற்கும் அமோக ஆதரவு தந்த அனைவரும் இப்போ யோசிக்க ஆரம்பித்துள்ளனர்

      

பூனைக்குட்டி இப்போ மெதுவாக வெளியே வர ஆரம்பிதுள்ள்ளது
இப்போ இவர்கள் உண்மையில் கருப்பு பணத்திற்குதான் உண்ணாவிரதம் இருக்கிறார்களா இல்லை காங்கிரஸ் சொல்வது போல கறுப்புப் பணத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் யோகா குரு ராம்தேவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது
உண்மையா ?

இந்த உண்ணாவிரதத்துக்கு ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தனது தொண்டர்களை பெருமளவில் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்பர் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.

 இந்தியாவின் உண்மையான முன்னேற்றத்திற்கு
தடையாக ஊழல் ஒரு காரணமோ அதை போல மத வெறி கலந்த செயல்களும் ஒரு காரணம்

     ஒரு ஹிந்துவாக இரு முஸ்லிமாக இரு கிறிஸ்துவனாக இரு நாம் முதலில் இருக்க வேண்டியது இந்தியனாக மட்டுமே
  மதம் என்பது நம்மை வளர்க்க மட்டுமே நாம் வளர்க்க இல்லை

 இப்போது ராம்தேவ் இருக்கும் இந்த உண்ணாவிரத்திற்கு அண்ணா ஹசாரே அவர்கள் கலந்து கொண்ட அளவிற்கு ஆதரவு இல்லாமல் போனது அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகம் மட்டுமே!
 உண்மையில் இவர்கள் கருப்பு பணத்திற்கு எதிராக உண்மையில்  போராடுகிறார்களா இல்லை என்றால் காங்கிரஸ் சொல்வது போல
இது  5 ஸ்டார் உண்ணாவிரதம் என்பது  உண்மையா?

 

இவர்களின் இந்த செயலில் உடன்பாடு இல்லாத காரத்தால் கூட அண்ணா ஹசாரே இதுவரை இதில் கலந்து கொள்ள வில்லை "இந் நிலையில் ராம்தேவின் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, அது குறித்து நாளை டெல்லிக்கு வந்த பின்னரே முடிவு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது."

 

எளிமையாக மக்கள் பிரச்சினைகளுக்கு மட்டுமே போராட்டம் மட்டுமே மேதா பட்கர் சொல்வது போல
இந் நிலையில் மக்கள் பிரச்சனைகளுக்கு அயராது உண்ணாவிரதப் போராட்டங்கள் பல நடத்திய சமூக சேவகி மேதா பட்கர் கூறுகையில், பாபா ராம்தேவின் போராட்டம் அதிக செலவிலான ஒன்று. இதுபோன்று செலவு பிடிக்கும் போராட்டங்கள், போராட்டத்தின் மற்றொரு முகத்தை காட்டுகிறது. நாம் ஊழலை எதிர்க்கிறோம். ஆனால் பல கோடிகளை செலவழித்து, இதுபோன்ற அதிக செலவாகும் போராட்டம் நடத்தப்படுகிறது.


 ஆகா மொத்தத்தில் ராம்தேவ் நடத்தும் இந்த உண்ணாவிரத
போராட்டம் மக்கள் ஆதரவு திரட்டபடுகிறதே தவிர கொடுக்கப்படவில்லை