Saturday, August 6

கலக்கல் பாடல்கள் "எங்கேயும் எப்போதும் "(இசை விமர்சனம் )


 
  A.R.முருகதாஸ் மற்றும் ஹாலிவுட் பாக்ஸ்(FOX) நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கும் படங்கள் வரிசையில் முதலில் வரும் படம்.

புதுமுக இயக்குனர்  எம்.சரவணன் இயக்கத்தில் புதுமுக இசைஅமைப்பாளர் சி.சத்யா அவர்களின் இசை அமைப்பில் வந்து இருக்கும் பாடல்கள் முதல் முறை கேட்க்கும்போதே  பசை போட்டு நம் உள்ளத்தில் உட்கார்ந்து கொள்ளும் பாடல்கள்
நா.முத்துக்மார் எம் .சத்யா பாடல்வரிகளில் வந்து இருக்கும் பாடல்கள் ஐந்து பாடல்களும் சூப்பர் என்று சொல்லும் வகையில் உள்ளது . புதுமுக இசைஅமைப்பாளர் தன்னுடைய முதல் ஆட்டத்தல் ஐந்து பாடல்கள் (பந்துக்கள் ) சிக்ஸர் அடித்து உள்ளார் 


1 . கோவிந்தா  குரல் :விஜய் பிரகாஷ் ,ரணினா ,போனனி
   பாடல் வரிகள் :நா.முத்துகுமார்
  பாடல் ரேட்டிங்: 4 /5
   ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் ஒன்றே இந்த பாடல் மீது எதிர்பார்ப்பை உண்டாக்கி விடுகிறது .ஒரு பெண்ணை பார்த்த ஆணின் நிலையில் இருந்து ஒரு பெண்ணை பற்றி புரியாமால் கதாநாயாகன் பாடும் பாடல் இது பாடல் வரிகளும் சரி பாடல் குரலும் சரி அதை ஒட்டி வரும் இசையும் இந்த பாடலை ஒரு நிலைக்கு மேலே எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது .டாடி மம்மி என்ன பெயர் வைத்தார்கள் எனக்கு தெரியாது என்னை கேட்டால் குடைசல் என்பேன்
   கும்பலலேசமா என்ன வார்த்தை இது முத்துகுமார்  அவர்களே
2 .சொட்ட சொட்ட  குரல்:சின்மயி
   பாடல் வரிகள் :நா.முத்துக்குமார்
   பாடல் ரேட்டிங் :4 .5 /5
     ஹாரிஸ் ஜெயராஜ் இசை பாணியில் தொடங்கும் இசை அதே ஹம்மிங் பாடல் கேட்க்க கேட்க்க ஒரு புது உலகிற்கு நம்மை அழைத்து செல்லும்  .முத்துகுமார் பாடல் வரிகள் அருமை சின்மயி இந்த வருடம் விருதுகள் எதிர்பார்க்கலாம்
இந்த பாடல் கேட்கும்போது பாடல் இன்னும் சூப்பர் ஹிட் ஆகா சிறப்பான பாடலுக்கு ஏற்ற சூழ்நிலைகள் திரையில் கொண்டு வந்தால் இந்த பாடல் சொல்லும்படியான பாடல்களில் இதுவும் ஒன்றாக மாறும்
பாடல்கள் இடையில் வரும் தபேலா மற்றும் ப்ளுட் இசை சூப்பர்
3 .மாசமா ஆறு மாசமா குரல் : சத்யா
     பாடல் வரிகள் :எம்.சரவணன்
     பாடல் ரேட்டிங் :3 .5 /5
    கிராமத்து தப்பாங்குத்து நாகரிக இசையில் யூத்துக்கு ஏற்ற கலக்கல் பாடல் இது இயக்குனர் பாடல் வரிகளில் இசை அமைப்பாளர் சத்யா பாடி உள்ளார் ஆஹா ஓஹோ என்று சொல்லா விட்டாலும் சிறப்பான பாடல் இது
4 .உன் பேரே தெரியாது   குரல் : மதுஸ்ரீ
    பாடல் வரிகள் :முத்துகுமார்
    பாடல் ரேட்டிங் :4 /5
    அமைதியான முறையில் ஆரம்பம் ஆகும் இந்த பாடல் மதுஸ்ரீ அவர்களின் குரலுக்கு கேட்கலாம் பாடல் இதில் வரும் சின்ன சின்ன ஹம்மிங் மாறும் இசை சேர்ப்புகள் கேட்க்க கேட்க்க பாடலை நம் உள்ளத்தில் தனி இடத்தில் உட்கார வைக்கும் .  சத்யா அவர்களின் இசை இந்த பாடலில் கர்நாடக மற்றும் மாடர்ன் இசை இசை இரண்டையும் சேர்த்து ஒரு ஜுகல் பந்தி இசை படைத்துள்ளார்
5 .உயிர் அறுந்ததே  குரல் : சயோனரா
    பாடல் வரிகள் :எம் சரவணன்
    பாடல் ரேட்டிங் :5 /5
   சயோனரா குரலும் சத்யா அவர்களின் இசையும் சேர்ந்து இந்த சிறு பாடல் இசை தொகுப்பை நம்மை நிச்சயம் கவரும்
உயிர் அறுந்ததே உடல் விழுந்ததே என்று சயோனரா பாடும் குரலும் அதனுடனே ஒட்டி வரு இசையும்  இந்த பாடலை திரை வடிவில் எப்பாடி எந்த நிலையில் இயக்குனர் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பை உனதாக்கி உள்ளார் இசை அமைப்பாளர்

  மொத்தத்தில் இந்த எங்கேயும் காதல் பாடல் இசை வாங்க தகுதி வாய்ந்த பாடல்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை 
தமிழ் திரை உலகிற்கு ஒரு சொல்லும்படியான இசை அமைப்பாளர் கிடைத்துள்ளார்
 வரும் படங்களில் அதை அவர் நிருபித்தால் நிச்சயம் ஒரு நிலையான இடத்தை அடைவது உண்மை 







பாடல்கள் கேட்க்க மற்றும் வாங்க ராகா




1 comment:

  1. Anonymous7.8.11

    என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    Reverie

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை