Monday, August 29

இருக்காரா இல்லையா ? விரைவில் வரும் குறும்பட முன்னோட்டம்



  மீண்டும் ஒரு முறை நண்பர் சாய் தான் ஒரு பலமுக கலைஞன் என்று நிருபித்து உள்ளார் .இந்த முறை அவர் எடுத்து இருக்கும் அவதாரம் இயக்குனர்
ஏற்கனவே இசை அமைப்பாளர் கவிஞர்  பாடகர்  மென்பொருள் துறை வல்லுநர் என்று பலதுறைகளில் கலந்தடிக்கும் சாய் 


  இப்போ நடிகர் கம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்
படத்தின் ஆரம்ப முன்னோட்ட காட்சிகள் செய்தி வடிவில் கடவுள் இருக்காரா இல்லையா  என பல பேர்களிடம் பேட்டி வடிவில் அமைத்து உள்ளார்
கடவுள் விஷயம் என்றாலே ஆயிரகணக்கான 
பிரச்சினையான கருத்துக்கள் இருக்கும் அவைகளை எப்படி ஒரு அழகிய குறும்படமாக கொடுப்பார் என்று இப்போவே எதிர்பார்ப்பு உண்டாக்கி விட்டார் சாய்

   இந்த படத்தை பற்றி விரிவான பதிவு படம் வரும்போது.

சாய் படத்தில்  வரும் கருத்து போல இறைவன் நாடினால் எழுதவேன்
 
   இந்த படத்தில் நான் எதிர்பார்க்கும் முக்கிய விஷயம் சாய் அவர்களின் இசை எப்படி இந்த படத்தில் இருக்கும் என்று
ஏற்கனவே பெங்களுரு குறும்படத்தில் குறும்படத்தில் குறும்பாட்டு போட்டு கலக்கிய சாய் இந்த படத்தில் இன்னும் சிறப்பாக செய்வார் என்று நம்புகிறேன்

 


WATCH VIDEO  இருக்காரா இல்லையா ? 

Sunday, August 28

எப்படி தயாரிக்கிறார்கள் "BOOKS " FM (25 )& cinema மசாலா துணுக்குகள்



  இந்த பதிவு 25 வது எப்படி தயாரிக்கிறார்கள் பதிவு
இதுவரையான பதிவுகளுக்கு ஆதரவு தந்தது போல இந்த் பதிவிற்கும் உங்கள் ஆதரவு தேவை
என் பதிவில் சொல்லும்படியானா விஷயம் இருக்கோ இல்லையோ மோசமாக இருக்காது என்று நினைக்கிறேன் 



இந்த வார ஹிட் பாடல் வரிசையில் நேரிடையாக சேரும் எல்லா சிறப்பும் வேலாயுதம் பாடல்களுக்கு உண்டு
வேட்டைக்காரன் பாடல்கள் போல ரொம்ப சுறு சுறுப்பாக இல்லை என்றாலும் காவலன் பாடல்கள் போல அந்த அளவிற்கு மோசம் இல்லை
மொத்தத்தில் வேலாயுதம் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும் பாடல்களுக்கு உள்ள எல்லா தகுதியும் இருக்கு

 ஆடியோ உலகில் இந்த வாரம் முதல் மங்காத்தா வேலாயுதம் போட்டியில் ஜெயிக்கும் தகுதி வேலாயுதம் படத்திற்கு இருக்கு
வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி 


செப்டம்பர் 10  இதே கவுண்டவுனில் முதல் இடம் மாற்றம் இல்லாமல் ஏழாம் அறிவுக்கு மட்டுமே இருக்கு
இதன் பாடல் நேரிடையாக சிங்கப்பூரில் இருந்து சன் டிவி ஒளிபரப்பும் என்று தகவல்கள் சொல்கிறது







  மங்காத்த வரும் புதன் முதல் வெளியிடு  என சன் டிவி விளம்பரம் இப்போவே கண்ணை கட்ட ஆரம்பித்து விட்டது 


மலையாள செய்தி சேனல் பார்க்கும் பொது இது போல தமிழி நல்ல செய்திகள் வராத என்று நினைத்து இருக்கேன் அந்த ஆசையை முழுவத்ம் நிறைவேற்றி உள்ளது புதிதாக வந்துள்ள புதிய தலைமுறை செய்தி சேனல்
   வட இந்திய ஹிந்தி மற்றும் ஆங்கில செய்தி சேனல் எப்போதும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல தங்கள் டிஆர்பி எகிற உப்பு சப்பிலாத விசயத்தையும் தேசபக்கிதியுடன் முடிச்சு போட்டு கழுதையும் குதிரை ஆக்கும் திறமை உள்ளவைகள்
  அந்த வகையில் தமிழர்கள் ஆகிய நாம் ஒரு படி மேலேதான்
இப்படி ஒற்றுமை இல்லாமல் இருக்கும்போதே இவ்வளவு சாதித்து இருக்கோம் ஒற்றுமை மட்டும் மலையாளிகள் போல நம்மிடம் இருந்து விட்டால் தமிழ் நாடுதான் இந்தியாவிற்கே டாப்

" சரி இந்த வார எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் நாம் வாழ்க்கையில் ஒரு அங்கமான புத்தகம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பாருங்க ===========


Friday, August 26

மங்காத்தா குழப்பம் தீர்த்த சன் பிக்சர்ஸ் " I AM BACK "


   மங்காத்தா படம் ஆரம்பித்
போது இருந்த சுறு சுறு விறுப்பு எல்லாம் ஆட்சி மாறிய உடன் தலை கீழாக மாறியாது
போன ஆட்சி வரை தாங்கள் வைத்ததே சட்டம் என்று இருந்த தயாநிதி உதயநிதி எல்லாம் இப்போ படம் வெளியே வந்தால் போதும் என்று சொல்லும் அளவிற்கு மாறி போனது 


  ஒரு காலத்தில் என்ன ஆட்டம் போட்டாங்க என்று திரை உலகில் ஒரு பொறாமை உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருந்தது என்னவோ உண்மை என்பதை ஆட்சி மாறிய உடன் நிருபித்தது
 மங்காத்தா  படம் வெளியிட இவர்களுக்கே திரை அரங்கு கிடைக்க வில்லை என்பது . ஸ்டுடியோகிரீன் கையில் சென்ற படம் சில மணி நேரங்களில் என்ன நடந்ததோ
பெரியண்ணன் சன் பிக்சர்ஸ் கையில் வந்தது .யாரும் எதிர்பார்க்க முடியாத செய்தி 


 தெரிந்தோ தெரியாமலோ சன் டிவிக்கு ஜெயலலிதா செய்த உதவி சக்சேனா கைது அவர் கைதுக்கு பின்புதான் சன் பிக்சர்ஸ் பெயரில் ஹன்ஸ்ராஜ் மாப்பிள்ளை செய்த தில்லாலங்கடி ஆடுகள வேலைகள் சன் டிவிக்கு தெரிய  வந்தது அது வரை தெனாவட்டாகதீராத விளாயாட்டு பிள்ளை போல  இருந்த ஹான்சராஜ் மேல் படிக்காதவன் போல இருந்த கலாநிதி  தீயாக வேட்டைக்கார சிங்கமாக மாறி அவரை மாற்றி புது தலைமை மீது சன் பிக்சர்ஸ் மாறியது
  இப்போ விஷயம் அது இல்லை ஆட்சி மாறிய உடன் சன் டிவி வாங்கிய வேங்கை அவன் இவன் படங்களை  வெளி இடம்  பின் வாங்கியாது புலி பதுங்குவது பாய்தான் என்று நிருபித்தது சன் பிக்சர்ஸ் பற்றி வரும் செய்திகள்
விரைவில் வர இருக்கும் ஏழாம் அறிவு மற்றும் நண்பன் படங்கள சன் டிவி வாங்கி விட்டது என்ற செய்திகள் மற்றும்
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஹன்ஸ்ராஜ் பதிலாக புதிய தலைமை மாற்றப்பட்டது போன்றவைகள் இப்போ சன் பிக்சர்ஸ் புது பொலிவுடன் வரும் என்று தெரிகிறது அதன் ஆரம்பம்தான்  இந்த மங்காத்தா என்று தெரிகிறது

     கொசுறு : கருணாநிதி குடும்பாதால் தான் படங்கள் எல்லாம் ஓட வில்லை என சொன்ன திரை உலகத்தில் இது; வரை இந்த ஆண்டு வந்த படங்களில் எல்லா தரப்புக்கும் லாபம் கொடுத்த படம் என்றால் மூன்று மட்டுமே என்று செய்திகள் சொல்கிறது அவைகள்
1 .சிறுத்தை
2 . கோ
3 .காஞ்சனா
கதை நல்லா இருந்தா படம் எப்படியும் ஓட்டலாம் என்பதை புரிந்து  கொண்டால் சரி   



இப்போ சன் பிசர்ஸ் வெளியிட்ட மங்காத்தா முன்னோட்டம்


Tuesday, August 23

எப்படி தயாரிக்கிறார்கள் "JEANS" FM(24)


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது இளைஞர்களின்   நாகரிக உடையில் அன்று முதல் இன்று வரை கோலாச்சும் உடை என்றால் அது ஜீன்ஸ் மட்டுமே 



ஜீன்ஸ் நீங்கள் மட்டும் போடுவிர்களா நாங்களும் போடுவோம் என பெண்களின் ஸ்டைல் ஆகா இன்று மாறி விட்ட ஜீன்ஸ்  ஜேகப் டேவிஸ் கால்வின் ரோஜர்ஸ் லேவி ஸ்ட்ராஸ் ஆகியோர் மூலம் 1873 வடிவமைக்கப்பட்ட  ஜீன்ஸ்
இன்றுவரை உலகம் முழுவதும் ஹிட் ஆனா ஒரு உடை என்றால் அது ஜீன்ஸ் மட்டுமே 


அதிலும்  நீல நிற ஜீன்ஸ் என்றால் அது தனி அடையாளம்

அதிலும் இன்றைய நாகரிக ஜீன்ஸ் என்றால் கடினமான துணியில் கிழிக்கப்பட்ட வடிவத்தில் வரும் ஜீன்ஸ் மற்றும் ஒரு ஹிட் உடை

  இப்போது ஜீன்ஸ் உடை தாயரிக்கும் நிறுவனங்களில் சூப்பர் நிறுவனம் என்றால் லீ ,லெவிஸ் .பெப் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஜீன்ஸ்களை  சொல்லலாம் 






Friday, August 19

எப்படி தயாரிக்கிறார்கள் "BALLPOINT PENS" FM(23)


 எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது நம்முடன் பள்ளிக்காலம் முதல் உற்ற நண்பனாக இருக்கும் பேனா
பேனா பால்பைன்ட் பேனா பற்றி அவைகள் தயாரிக்கும் விதம் பற்றி நாம் பார்க்க போகலாம் 



இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் கருத்து சொல்லவும்

 


Thursday, August 18

லஞ்சத்தின் வலி

     
                   லஞ்சம் வாங்குபவனுக்கு தெரியாது
            அதை கொடுப்பவன் வலி  என்ன என்று

          மனம் எரிந்து  கொடுத்தவன் காசில் அடுப்பெரிக்கும்
            பிணம் தின்னி பிழைப்பு என்று
       
         அடுத்தவன் கோவணத்தை உருவி
-தன் மனைவிக்கு
        
பட்டுசேலை என்னும் நிர்வாணத்தை போர்த்தும் ஈனபொழைப்புகாரன்

         கழுத்தை தாண்டி விட்டால்- உணவுக்கு கூட வேறு பெயர்
        இது கூட தெரியாத பிச்சை பொழப்புக்கு மறுபெயர் - லஞ்சம் 




 
   இப்போது மஹாத்மா இருந்த உண்ணாவிரதத்தை காமெடி மற்றும் விளம்பரம் ஆக்கும்  இன்றைய தலைப்பு செய்தி நாயகர்களுக்கு மத்தியில் 




    உண்ணாவிரதம் இருப்பது உண்மையான காரணத்திற்காக அரசாங்கத்தால் அலைகளிக்கப்படும் இவர் எவ்வளவு உயர்ந்தவர் 
ஐரோம் ஷர்மிளா
 







Wednesday, August 17

a.r.ரஹ்மானின் superheavy வீடியோ பார்க்க (வீடியோ இசை ஆல்பம் )



  செப்டம்பர் 19 அன்று வரபோகும் superheavy  இசை ஆல்பத்தின் முன்னோட்டமாக முழு வீடியோ ஒன்று superheavy  குரூப் மூலம் வந்து youtube மற்றும் vevo வீடியோ தளங்களில்
மூன்று நாட்களில் 7 லட்சத்திற்கும் மேற்போட்டோர் பார்த்து சாதனை செய்துள்ளது
  இந்த வீடியோவில் ரஹ்மானின் பங்கு குறைவு என்றாலும்  மொத்தத்தில் இந்த வீடியோ ஆல்பம் பார்க்க சிறந்ததாக் உள்ளது

   இந்த இசை ஆல்பத்தில்
BOB MARLEY ,DAMIAN MARLEY ,AR RAHMAN JOSS STONE MICK JAGGER DAVE STEWARD உலக புகழ்பெற்ற இசை கலைஞர்களுடன் ரஹ்மானின் பங்கும் உள்ளது




 நம்ம ரஹ்மான் கலக்கும் இசை ஆல்பத்தை சேர்த்து பாருங்கள்

  ரஹ்மானின் FACEBOOK  இப்போ 54 லட்சத்தை தாண்டி போய் கொண்டு உள்ளது

 கொஞ்சம் ஆல்பம் கவர்ச்சியாக உள்ளது மற்றபடி சூப்பர்



Monday, August 15

டாட நானோ தங்க கார் "சும்மா 22 கோடிக்கு மேலே "



   இந்தியாவில் தங்க நகைகள் உருவாக்கும் கலைகள்  வந்து 5000 ஆயிரம் வருடம் ஆனதை கொண்டாடும் விதமாக டாடா நிறுவனம்
   இந்தியாவில் விலை குறைந்த நானோ காரை இந்தியாவில் விலை உயர்ந்த காராக மாற்றி உள்ளது அதுவும்  எப்படி  ஒரு கிலோ இல்லை இரண்டு கிலோ இல்லை 75 தங்கத்தை கொண்டு இந்த காரை தயாரித்துள்ளனர்   டாடா  நிறுவனம்


   இவ்வளவு விலை உயர்ந்த காரை ஊரில் இப்போது தங்கம் இருக்கும் விலையில் ஓட்டினால் பாதுகாப்ப என்று நீங்கள் கேட்பது சரி ?
 அந்த கவலை உங்களுக்கு வேணாம் இந்த வண்டி ஒட்டி பார்க்க இல்லை நகை கடையில் பார்வைக்கு மட்டுமே
 டைட்டன் கோல்ட்ப்ளஸ்  கடையில் மக்கள் பார்வைக்கு வைக்க போகிறார்கள் 


  இந்தியாவில் பல மாநிலங்களில் இருக்கும் நகை வேலைப்பாடுகள் இந்த காரில் வர உள்ளது
மற்றும் ஒரு சிறப்பு இந்த காரில் வேலைப்பாடுகள் எல்லாம் இயந்திரங்கள் இல்லாமல் கைவேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படுகிறது


  இந்த கார் தயாரிப்புக்கு முன்பு மூன்று மாடல்கள் தயாரிக்கப்பட்டு மக்கள் இடம் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டு இப்போது இந்த கார் வருகிறது

   இந்த காரின் விலை அதிகம் இல்லை ரூ .22  கோடிக்கு மேல்  தங்கம் விலை உயர்வை கொண்டு இன்னும் அதிகரிக்கும் 






TATA NANO GOLD CAR VIDEO



NEXT AR RAHMAN MIRACLE WORKERS FULL VIDEO

Sunday, August 14

எப்படி தயாரிக்கிறார்கள் "EGGS PACKAGING " FM(22)


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா என்று  நம் மக்கள் எடக்கு மடக்காக கேட்க்கும் கேள்விகள் எல்லோருக்கும் தெரியும் 

  ஆனா கோழியில் இருந்து வந்த முட்டை எப்படி சரியான அளவில் ஆட்டோமாடிக் இயந்திரங்கள் மூலம் தர வாரியாக பிரிக்கப்பட்டு  பேக்கிங் செய்யப்பட்டு நம் கைககளுக்கு வருகிறது என்று இன்று நாம் பார்போம்
   கோழிகளுக்கு சிறப்பான முறையில் சிறந்த தீவனங்கள் வழங்கி அவைகள் இடும் முட்டைகளை எப்படி எல்லாம் வியாபாரம் செய்கிறார்கள் என்று பாருங்கள்
             " முட்டை இடும் கோழிக்குதான் அதன் வலி  தெரியும் "   





Saturday, August 13

வேலாயுதம் கலக்கல் துளிகள்




   விஜய் படங்களில் ஆட்சி மாற்றத்திற்கு  பின்பு  வரும் படம்  , காவலன் படம் வெற்றி பட வரிசையில் இணைந்த பின்பு பெரும்
எதிர்பார்ப்புடன் வரும் படம்

  இந்த படத்தின் சில பிளஸ் பாயின்ட்
  ஜெயம் ராஜா அவர்களின் இயக்கத்தில் தெலுங்கு படத்தின் ஆசாத் படத்தில் இருந்து சில காட்சிகளை மட்டும் பயன்படுத்தி மீதி விசயங்களை ராஜா அவர்கள் தனக்கே உரிய பாணியில் உருவாக்கி உள்ளார் 


 அதே ராஜா அவர்கள் இது ஆசாத் படத்தின் கதை இல்லை தன் சொந்த கதை என்று கூறி உள்ளார் எது உண்மை என்று படம் வந்தால் தெரியும்


  

காவலன் படத்தில் அவரின் கலக்கல் பஞ்ச வசனங்கள் மற்றும் சண்டைகள் இல்லை என்று சொல்லிய சில ரசிகர்களை இந்த படம் மனநிறைவை தரும்
  கலக்கல் ஹன்சிகா மோத்வாணி மற்றும்  சச்சின் படத்தில் சிறந்த ஜோடியாக வந்த ஜெனிலியா இந்த படத்தில் ரசிகர்களை சந்தோச படுத்துவார்

   வடிவேல் இல்லாத இந்த நேரத்தில் ஓரளவிற்கு நகைச்சுவையில் சிரிக்க வைக்கும் சந்தானம் இந்த படத்தில் 
   ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன் திரை வாழ்க்கையில் இந்த படம் மீண்டும் ஒரு மாற்றத்தை மற்றும் வெற்றியை தரும் என நம்பும் படம்

  கலைஞர் டிவியில் ஆரம்பித்து ஜெயா டிவி இடம் சென்ற படம்  தொலைக்காட்சி உரிமை மட்டும் ரூ .4 கோடி  வாவ்

  ரூ 45  கோடிக்கு மேல் செலவு செய்து  வரும் படம்
 (முருகதாஸ் விஜய் இணையும் படம் ரூ .65 கோடி என்று செய்திகள் சொல்கிறது  )

படத்தின் பெரிய பிளஸ்( + )
 

விஜய் ஹான்சிகா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் உண்டாக்கும் ஒரு இளமை உணர்வு
 விஜய் ஆண்டனி அவர்களின்  இசை  வேட்டைக்காரன் படத்தை பற்றி நூறு குறைகள் சொன்னாலும் யாராலும் குறை சொல்ல முடியாத ஒரு விஷயம் உண்டு என்றால் அது விஜய் ஆண்டனி அவர்களின் இசை
  அதை நிருப்பிக்கும் வகையில் இந்த படத்தின் பாடல் உரிமைகளை மிக பெரும் போட்டிக்கு இடையில் வாங்கி உள்ளது சோனி இந்திய  இசை நிறுவனம்
 

படத்தின் பாடல் சில :
1 . சொன்னா புரியாது   2 .மாயம் செய்தாயோ  3 .சிள்ளக்ஸ்  4 .ரத்தத்தின் ரத்தமே 5 .மயக்கி புட்ட















  படத்தின் பாடல் வெளியிடு ஆகஸ்ட் 28  அன்று ஆயிரம் விஜய் ரசிகர்களுக்கு முன்னிலையில் மதுரையில் இசை வெளியுடு நடைப்பெறும் என்று தகவல்கள் வருகிறது  
மொத்தத்தில் இந்த ஆண்டு எதிர்பார்ப்பை உண்டாக்கும் படங்களில் இதுவும்   ஒன்று


                               **** இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்****


Thursday, August 11

A.R. ரஹ்மானின் சத்தியமே ஜெயதே (வாய்மையே வெல்லும் ) பாடல் கேட்க்க


 
 ரஹ்மானின் விரைவில் வர இருக்கும் மிராக்கில் வொர்கர்ஸ்  ஆல்பத்தில் இருக்கும் பாடல்களில்  ஒன்று சத்தியமே ஜெயதே
  இந்த பாடல் இந்திய சுதந்திர நாளை போற்றும் விதமாக வெளிவந்துள்ளது
  இதற்க்கு முன்பே மைக்கேல் ஜாக்சன் உடன் இந்த பாடலை பாடி உள்ளார் இப்போ மீண்டும் புது பொலிவுடன் வந்துள்ள இந்த பாடலை கேளுங்கள் 







Superheavy - Satyameva Jayate [A. R. Rahman] (2011) by Jerin John

Wednesday, August 10

மங்காத்தா கலக்கல் திரைமுன்னோட்டம் மற்றும் அஜித் அவர்களை ஏன் பிடிக்கும்



   ரசிகர் என்பவர்களை வைத்து பணம் சம்பாதிக்க  நினைக்கும் நடிகர்கள் மத்தியில் படம் பிடித்து இருந்தால் மட்டும் பாருங்கள் என்று பகிரங்கமாக சொல்லும் தைரியம்  இருக்கும் ஒரே நடிகர்


  என் பெயரை வைத்து நல்ல காரியங்கள் செய்வதை விட உங்கள் பெற்றோர்கள் பெயரில் நல்ல காரியம் செய்யுங்கள் என்று சொல்லும் மனிதர் 


   நடிப்பது என் வேலை நான் நடிகன் ஆனால் உங்களுக்கு படம் பார்ப்பது போஸ்டர் ஓட்டுவது பட்டாசு வெடிப்பது, என் பெயரை சொல்லி நல்ல காரியம் செய்வது வேலை இல்லை இதனால் உங்களுக்கு ஒரு நன்மையையும் இல்லை
உங்கள் பெற்றோர்கள் சந்தோஷம் அடையும் காரியம் செய்யுங்கள் உங்கள் படிப்பை பாருங்கள் வேலை எதுவோ அதை செய்யுங்கள் என்று ரசிகர்களை நோக்கி சொல்லும் உண்மையான மனிதர்

  

என் படம் பிடித்து இருந்தால் மட்டும் பாருங்கள் என்று ரசிகர்களை தன் படம் ஓட வைக்க விரும்பாத ஒரே காரணாத்தால் மட்டுமே அஜித் அவர்களை பிடிக்கும் 

 அஜித் சொன்னது போல படம் பிடித்து இருந்தால் மட்டுமே அஜித் படம் என்றாலும் பார்ப்பேன் அவரின் ரசிகன் என்று வீணாக படத்திற்கு பணம் செலவு செய்ய மாட்டேன்
 











ரசிகர்களை தன் புகழ் பேராசைக்கு பகடை காய் ஆக்கி அதில் குளிர் காய நினைக்கும் திரைக்கு வெளியே மட்டும் நடிக்க தெரிந்த நடிகர்களுக்கு மத்தியில் அஜித் சிம்ப்லி சூப்பர்
 
  : ஸ்டார் அஜித் அவர்களின் கலக்கல் மங்காத்தா திரை முன்னோட்டம் :



Monday, August 8

மங்காத்தா கலக்கல் சாம்பிள் பாடல்கள் கேட்க்க



  படம் : மங்காத்தா 


  ஆடியோ வெளியுடு : ஆகஸ்ட் 10


  இசை : யுவன் ஷங்கர் ராஜா 


   இயக்கம் : வெங்கட் பிரபு 


  ஆடியோ வெளியிடு : சோனி மியூசிக் (India) 




 







தல கலக்கும் அதிரடி பாடல்கள் ஆகஸ்ட் 10  முதல் கடைகளில்
  பத்தாம் தேதி உங்கள் காதுகளுக்கு

  மச்சி ஓபன் தி பாட்டில்
       விளையாடு மங்காத்தா 





     BUY ORIGINAL SONY MUSIC CD

Sunday, August 7

எப்படி தயாரிக்கிறார்கள் "MATCHES" FM(21)


 எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க  போவது தீக்குச்சிகள்  அதிலும் ஒரு தொழிநுட்பம் நிறைந்த தொழிற்சாலையில் சிறப்பான முறையில் ஸ்டைல் ஆகா தயாரிக்க படும் தீக்குச்சிகள் நாம் பார்க்கலாம் 


   நம் ஊரை போல கையில் தயாரிக்காமல் தொழிற்சாலையில் தயாரிப்பது பாராட்ட வேண்டிய விஷயம் மற்றது குழந்தை தொழிலாளிகள் இல்லாமல் தயாரிப்பது இன்னும் ஒரு சிறப்பு

   மறக்காமல் உங்களுக்கு இந்த பதிவு பிடித்து இருந்தால் பேஸ்புக் மற்றும் கூகுல் பிளஸ் மூலம் மற்றவர்களுக்கும் சொல்லவும்

 


Saturday, August 6

கலக்கல் பாடல்கள் "எங்கேயும் எப்போதும் "(இசை விமர்சனம் )


 
  A.R.முருகதாஸ் மற்றும் ஹாலிவுட் பாக்ஸ்(FOX) நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கும் படங்கள் வரிசையில் முதலில் வரும் படம்.

புதுமுக இயக்குனர்  எம்.சரவணன் இயக்கத்தில் புதுமுக இசைஅமைப்பாளர் சி.சத்யா அவர்களின் இசை அமைப்பில் வந்து இருக்கும் பாடல்கள் முதல் முறை கேட்க்கும்போதே  பசை போட்டு நம் உள்ளத்தில் உட்கார்ந்து கொள்ளும் பாடல்கள்
நா.முத்துக்மார் எம் .சத்யா பாடல்வரிகளில் வந்து இருக்கும் பாடல்கள் ஐந்து பாடல்களும் சூப்பர் என்று சொல்லும் வகையில் உள்ளது . புதுமுக இசைஅமைப்பாளர் தன்னுடைய முதல் ஆட்டத்தல் ஐந்து பாடல்கள் (பந்துக்கள் ) சிக்ஸர் அடித்து உள்ளார் 


1 . கோவிந்தா  குரல் :விஜய் பிரகாஷ் ,ரணினா ,போனனி
   பாடல் வரிகள் :நா.முத்துகுமார்
  பாடல் ரேட்டிங்: 4 /5
   ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் ஒன்றே இந்த பாடல் மீது எதிர்பார்ப்பை உண்டாக்கி விடுகிறது .ஒரு பெண்ணை பார்த்த ஆணின் நிலையில் இருந்து ஒரு பெண்ணை பற்றி புரியாமால் கதாநாயாகன் பாடும் பாடல் இது பாடல் வரிகளும் சரி பாடல் குரலும் சரி அதை ஒட்டி வரும் இசையும் இந்த பாடலை ஒரு நிலைக்கு மேலே எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது .டாடி மம்மி என்ன பெயர் வைத்தார்கள் எனக்கு தெரியாது என்னை கேட்டால் குடைசல் என்பேன்
   கும்பலலேசமா என்ன வார்த்தை இது முத்துகுமார்  அவர்களே
2 .சொட்ட சொட்ட  குரல்:சின்மயி
   பாடல் வரிகள் :நா.முத்துக்குமார்
   பாடல் ரேட்டிங் :4 .5 /5
     ஹாரிஸ் ஜெயராஜ் இசை பாணியில் தொடங்கும் இசை அதே ஹம்மிங் பாடல் கேட்க்க கேட்க்க ஒரு புது உலகிற்கு நம்மை அழைத்து செல்லும்  .முத்துகுமார் பாடல் வரிகள் அருமை சின்மயி இந்த வருடம் விருதுகள் எதிர்பார்க்கலாம்
இந்த பாடல் கேட்கும்போது பாடல் இன்னும் சூப்பர் ஹிட் ஆகா சிறப்பான பாடலுக்கு ஏற்ற சூழ்நிலைகள் திரையில் கொண்டு வந்தால் இந்த பாடல் சொல்லும்படியான பாடல்களில் இதுவும் ஒன்றாக மாறும்
பாடல்கள் இடையில் வரும் தபேலா மற்றும் ப்ளுட் இசை சூப்பர்
3 .மாசமா ஆறு மாசமா குரல் : சத்யா
     பாடல் வரிகள் :எம்.சரவணன்
     பாடல் ரேட்டிங் :3 .5 /5
    கிராமத்து தப்பாங்குத்து நாகரிக இசையில் யூத்துக்கு ஏற்ற கலக்கல் பாடல் இது இயக்குனர் பாடல் வரிகளில் இசை அமைப்பாளர் சத்யா பாடி உள்ளார் ஆஹா ஓஹோ என்று சொல்லா விட்டாலும் சிறப்பான பாடல் இது
4 .உன் பேரே தெரியாது   குரல் : மதுஸ்ரீ
    பாடல் வரிகள் :முத்துகுமார்
    பாடல் ரேட்டிங் :4 /5
    அமைதியான முறையில் ஆரம்பம் ஆகும் இந்த பாடல் மதுஸ்ரீ அவர்களின் குரலுக்கு கேட்கலாம் பாடல் இதில் வரும் சின்ன சின்ன ஹம்மிங் மாறும் இசை சேர்ப்புகள் கேட்க்க கேட்க்க பாடலை நம் உள்ளத்தில் தனி இடத்தில் உட்கார வைக்கும் .  சத்யா அவர்களின் இசை இந்த பாடலில் கர்நாடக மற்றும் மாடர்ன் இசை இசை இரண்டையும் சேர்த்து ஒரு ஜுகல் பந்தி இசை படைத்துள்ளார்
5 .உயிர் அறுந்ததே  குரல் : சயோனரா
    பாடல் வரிகள் :எம் சரவணன்
    பாடல் ரேட்டிங் :5 /5
   சயோனரா குரலும் சத்யா அவர்களின் இசையும் சேர்ந்து இந்த சிறு பாடல் இசை தொகுப்பை நம்மை நிச்சயம் கவரும்
உயிர் அறுந்ததே உடல் விழுந்ததே என்று சயோனரா பாடும் குரலும் அதனுடனே ஒட்டி வரு இசையும்  இந்த பாடலை திரை வடிவில் எப்பாடி எந்த நிலையில் இயக்குனர் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பை உனதாக்கி உள்ளார் இசை அமைப்பாளர்

  மொத்தத்தில் இந்த எங்கேயும் காதல் பாடல் இசை வாங்க தகுதி வாய்ந்த பாடல்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை 
தமிழ் திரை உலகிற்கு ஒரு சொல்லும்படியான இசை அமைப்பாளர் கிடைத்துள்ளார்
 வரும் படங்களில் அதை அவர் நிருபித்தால் நிச்சயம் ஒரு நிலையான இடத்தை அடைவது உண்மை 







பாடல்கள் கேட்க்க மற்றும் வாங்க ராகா




Tuesday, August 2

எப்படி தயாரிக்கிறார்கள் "BUBBLE GUM" FM(20)


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது
வாயில போட்டு சும்மா மென்னு ஒரு ஊது ஊதினா கலர் கலரா  பலுன் விடும் சமாசாரம்  இது குழந்தைங்க சமாச்சாரம் மட்டும் இல்லை பெரியவர்கள் கூட ஸ்டைல் விட பயன்படுத்தும் பபுள்கம் தான் அது

   இயந்திர கைகள் மூலம் நொடி பொழுதில் ஆயிரக்கணக்கான பபுள்கம் தயாரிக்கும் விதம் அதை மெதுவாக ஓட விட்டு பார்க்கும்
போது சரி அதே காட்சியை வேகமாக ஓட விட்டு பார்க்கும்போதும் சரி
  தொழிநுட்பம் எப்படி எல்லாம் முன்னேறி உள்ளது என்று நினைக்க தோன்றுகிறது

அமெரிக்க தொழில்நுட்பத்தில் தயாரிக்க படும் இவைகளை நீங்களும் பாருங்கள்