Friday, March 25

"அழகர்சாமியின் குதிரை" ராஜ சவாரி (இசை விமர்சனம் )




கௌதம் மேனன் அவர்களின் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வரும் படம் இது .
இளையராஜா அவர்களின் இசை இந்த படத்தில் ஒரு உத்வேகத்தில் உள்ளது 
 
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இளையராஜா அவர்களின் அதே பரிமாண இசை
படத்தில் மூன்றே பாடல்கள் என்ற போதும் பாடல்களை விட அவரின் பின்னணி இசை படத்தின் முக்கிய ஜீவனாக இருக்க போகுது என்பதை இப்போதே உணர முடிகிறது

1.குதிக்கிற குதிக்கிற குதிரை -

இந்த பாடலை இளையராஜா அவர்களே பாடி உள்ளார் . பாடலை அவர் பாடி இருக்கும் விதம் நிச்சயம் படத்தில் இந்த பாடலை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது .இந்த வயதிலும் இளையராஜா அவர்களின் நிச்சயம் யாராலும் குறை சொல்ல முடியாது ராஜ நீங்கள் இசையில் ராஜா தான்

2.அடியே இவளே -
நாட்டுப்புற இசைக்கு ஒரு புது பரிமாணம் இந்த பாடல் தஞ்சை செல்வி அவர்கள் மற்றும் பலருடைய குரலில் கிராம திருவிழா பற்றி அழகாக இசையுடன் சொல்லி இருக்குது இந்த பாடல் .பாடலின் இடை இடையே வரும் உறுமி இசை மேளதாள இசை இளையராஜா தவிர வேறு யாராலும் இது போல பாடல்களை போடா முடியாது
3. பூவகேளு -
கார்த்திக் ஸ்ரேயா கோஷல் இசையில் சிறப்பான நல்ல மெலடி பாடல் நிச்சயம் பண்பலை அலைவரிசைகளில் ரசிகர்களின் விருப்பமாக இருக்கும் .ஸ்ரேயா கோஷல் கொஞ்சும் குரல் பாடலை இன்னும் அழாக மாற்றி உள்ளது


மொத்தத்தில் மூன்றே பாடல் என்றாலும் முத்துக்கள் போல தந்து உள்ளார் ராஜா அவர்கள்



மொத்ததில் பாடல் ரேட்டிங் 9/10

1 comment:

  1. அருமையான பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை