@ இந்திய மக்கள் தொகை 121 கோடியை தாண்டியிருப்பது கணக்கெடுப்பில் மூலம் தெரிய வந்துள்ளது
@ கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர்.
@ இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கபடுகிறது
@ 2001 ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு எடுக்கப்ட்டுள்ளது
@மக்கள் தொகை வளர்ச்சி அரசின் விழிப்புணர்வு மற்றும் மக்களின் விழிப்புணர்வு மூலம் தற்போது 17% குறைந்துள்ளது.
@மக்கள் தொகையில் மற்றும் ஒரு சுவாரசியம் இந்திய ஆண்களின் எண்ணிக்கை 62.3 கோடி பெண்களின் எண்ணிக்கை 58.6 கோடியாகவும் உள்ளது
@இந்தியாவின் மக்கள் தொகை ஐந்து நாட்டு மக்கள் தொகையுடன் கூட்டினால் கூட அவர்கள் நம்மை நெருங்க முடியாது (என்ன ஒரு சாதனை ) இந்தோனேசியா,அமெரிக்கா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மக்கள்தொகையை கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@இரண்டு மாநில மக்கள் தொகையுடன் கூட்டினால் கூட அமெரிக்க மக்கள் தொகை ஈடாகாது அந்த இரண்டு மாநிலங்கள் உத்திரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா
@அதே அளவில் படிப்பதிலும் இந்திய மக்கள் முன்னேற்றம் அடைந்து உள்ளனர் கற்றவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 9.21 உயர்ந்துள்ளது
@இந்த விசயத்தில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகம் படிப்பறிவு பெற்றுள்ளனர்
@ இந்திய மக்கள் தொகையில் 74 % விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர்கள். 26 % படிப்பறிவு பெறாதவர்கள் ஆவர்.
@ இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா ? ரூ.2,200 கோடி
@ அதிகம் மக்கள் தொகை உள்ள மாநிலம் எது தெரியுமா உத்தரபிரதேசம். அங்கு மக்கள் தொகை 19.9 கோடி.
@ குறைவான மக்கள் தொகை உள்ள மாநிலம் சண்டிகர்
@உலக அளவிலான மக்கள் தொகைக்கு நம்மால் முடிந்த உதவி எவ்வளவு தெரியுமா ? 17 %
@@:(அப்போ அடுத்த வருடம் வர போற ஒலிம்பிக் போட்டிகளில் எத்தனை தங்கம் வாங்க போறோம் ?:(