Wednesday, December 1

நந்தலாலா பற்றி மிஸ்கின் சொன்னது ஆனந்த விகடன் இதழில்

''முதல் இரண்டு படங்களும் ஆக்ஷன். இப்போ சடார்னு வேறு இடத்துக்குப் போவது ரிஸ்க் இல்லையா?''

''இல்லைங்க! 'சித்திரம் பேசுதடி'க்குப் பிறகு படமே கிடைக்காமல் அநியாயத்துக்குக் காத்திருந்தேன். அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் 'அஞ்சாதே'. படம் முழுக்கவே எரிச்சலும், ரத்தமும், துப்பாக்கிச் சத்தமுமா இருக்கும். ஏன்னா, 'நந்தலாலா' ஸ்க்ரிப்ட்டுடன் நிறைய ஹீரோக்களிடம் போனேன். 'வருத்திக்கிற மாதிரி இருக்கே'ன்னு வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதான் நானே நடிச்சுட்டேன். ஆனா, படம் பார்த்துட்டு அவங்க வருத்தப்படலாம்!''

 
(நிச்சயம் வருத்தப்படலாம் )




 


'இவ்வளவு கடினமான கதைத்தளத்தில் ரசிகர்கள் ஆழமாகப் போக முடியும்னு நம்புறீங்களா?''

'' 'நந்தலாலா' நிச்சயம் அறிவுரை சொல்ற படம் இல்லை. இதுவரை சரியான படத்தைப் பாராட்டுவதில் பார்வையாளர்கள் தப்பு செஞ்சதே இல்லை. தியேட்டரில் டிக்கெட் வாங்கும்போது, குத்துப் பாட்டு, அஞ்சு ஃபைட், ஹீரோயின் தொப்புள்னு நினைச்சு யாரும் வாங்கறது கிடையாது. புதுசா ஒரு உலகத்துக்குப் போக முடியுமான்னுதான் பார்க்கிறான். பிடிச்சா, தலை மேலே தூக்கிவெச்சுக் கொண்டாடுவாங்க. படங்கள் தப்பு செய்தால், அது நம்ம தப்பாகத்தான் இருக்கும்!''

 (நிச்சயம் உங்கள் கருத்தை காப்பற்றி விட்டார்கள் ரசிகர்கள் )

 நன்றி :

அனந்த விகடன் 31 .12 . 2008 

 


    நிச்சயம் மிஸ்கின் அவர்களின் இந்த நம்பிக்கையை எந்த ரசிகனும் பொய் ஆக்க வில்லை  அவர் அந்த கதை கரு மேல் வைத்த நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் 


அதே போல கிகுஜிரோ படத்தை பற்றி கொஞ்சம் சொன்னால் தேவலை


    ஒரு நல்ல படத்தை வெற்றி படம் ஆக்கிய ரசிகர்கள் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்கள்


நாங்கள் எந்திரன் படமும் சரி நந்தலாலா படமும் சரி எங்களுக்கு பிடித்து இருந்தால் வெற்றி பெற வைப்போம்
எங்களுக்கு தேவை திரையில் மட்டும் நடிக்க தெரிந்த நடிகர்களின் பொழுதுபோக்கு படம் மட்டுமே


நிஜத்தில் நடித்து ரசிகனை ஏமாற்றும்  நடிகர்களின் படம் இல்லை


    



6 comments:

  1. நந்தலாலா பார்க்க வேண்டிய திரைப்படம், ஆனால் வெற்றிபெறுவதென்பது சாத்தியக்குறைவான விடயம்.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஹலோ ஹாய்... என்னதான் சொல்ல வர்றிங்க.. முன்னைய பதிவில் நந்தலாலாவை கடுமையாக சாடியிருந்தீர்கள் இப்ப ஏன் இப்படி..

    ReplyDelete
  4. நல்லா சொல்லி இருக்கீங்க அரும்பாவூர்..

    ReplyDelete
  5. தமிழ் வலைப்பதிவர்களே!
    புதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளை இனைத்துபயன் பெறுங்கள்.
    ‍தமிழ்புக்மார்க்
    http://tamilbookmark.co.cc

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை