Friday, October 1

ஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா? - ஒரு பார்வை




             தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் படம் எந்திரன் படம் பற்றி இனி விமர்சனம் எழுத ஒன்றும் இல்லை தமிழ் பதிவு  உலகில் அதிகம் எழுதப்பட்ட அதிகம் ஹிட் அடித்த விஷயம் எந்திரன் தவிர வேறு ஒன்றும் இல்லை
அதிலும் சன் டிவி இந்த படத்திற்கு செய்த சிறப்பான ப்ரோமாசன் நிச்சயம் பாராட்ட வேண்டிய  விஷயம்
ஒரு நாள் ரஜினி ,ஒரு நாள் ஷங்கர் ,ரஹ்மான் என அழாக பேச வைத்து சிறப்பான ஆரம்பம் கொடுத்தது
சரி தமிழ் எந்திரன் படம் பற்றி நான் பேச இனி ஒன்றும் இல்லை என்பதால் ஹிந்தி டப்பிங் படமான ஹிந்தி ரோபோ பற்றி
நான் இணையத்தில் பார்த்தது மற்றும் ETC  இசை சேனலில் ஹிந்தி வியாபாரம் பற்றி கோமல் நாத் வழங்கிய நிகழ்ச்சியில் இருந்து  இருந்து சில பகுதிகள்                      ஹிந்தி மொழியில் அக்டோபர் முதல் தேதி அன்று வந்த படங்கள் நான்கு அவைகள்
அஞ்சானா அஞ்சாணி (ரன்பீர் கபூர் ரவீனா ) ரோபோட் (ரஜினி ஐஸ்வர்யா )கிச்சடி (ஹிந்தி சீரியல் படம் )பென்னி அண்ட் பப்லு

                     இந்த நான்கு படங்கள்  மட்டுமே  இந்த வாரம் வந்தது .அதில் அஞ்சான அன்ஜானி படத்திற்கு ஆரம்பம் முதல் அதிக அளவில் இருந்த விளம்பரம் அதிலும் ரன்பீர் ரவீனா ஜோடி இந்த படத்திற்கு செய்த விளம்பரம் கொஞ்ச நஞ்சம் இல்லை எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் இவர்களின் குறிக்கோள் இந்த படத்திற்கு விளம்பரம் செய்வதில் இருக்கும் அதிலும் 20/20௦  கிரிக்கெட் விளையாட்டை கூட விடவில்லை இந்த ஜோடி
     ஹிந்தி மொழியல் வரும் படம் மற்றும் EROS  பிலிம் போன்ற காரணங்களால்  இந்த படத்திற்கு ரோபோட் (எந்திரன்) படத்தை விட அதிக அளவில் விளம்பரம் கிடைத்து

  ஆனால் பிரபல பத்திரிக்கை மாற்றும் செய்திதொலைக்கட்சிகளில்  ரோபோட் (எந்திரன் )படத்தை  குறைவான அளவில் ரேட்டிங்   பெற்றுள்ளது அஞ்சானா அன்ஜானி  . ஹிந்தி ரோபோட் திரை விமர்சனம் இந்த படத்தை மிகவும் உயர்வாக எழுதி உள்ளனர் .அதிலும் இந்த படத்தின் ஒலி/ ஒளிப்பதிவு அசந்து போய் உள்ளனர்
கோமல் நாத் சொன்னது போல  இது தமிழ் படம் என்று சொன்னால் நம்ப முடியவில்லை இது முழு ஹிந்தி படம் என்று சொல்லி உள்ளார் இப்படத்தை பற்றி வரும் விமர்சனங்கள்  ரசிகர்களின் கருத்துக்கள் வரும் நாட்களில் அஞ்சானா அன்ஜானி படத்தி முந்தி விடும் என்று சொல்லி இருப்பது இப்படம் ஹிந்தி மொழியிலும் ஒரு பெரும் வெற்றி பெரும் என்பது நிச்சயம்
அதாவது படம் வந்த இன்று அஞ்சானா அன்ஜானி படத்திற்கு திரை அரங்கம் முழுவதும் ஹவுஸ் புல் 
எந்திரன்  படம்  60 %  திரை அரங்கம் நிரம்பி இருந்ததது .
ஆனால் அது இன்றைய நிலை மட்டுமே ஹிந்தி தொலைக்கட்சிகள் மற்றும் செய்தி தாள்களில் வரும் விமர்சனம் சிறப்பான நிலையான வெற்றி படமாக மாறும் என்பது மட்டும் உண்மை 
 இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக மூன்று மல்டி ப்ளெக்ஸ் திரை அரங்கை சேர்ந்தவர்கள் போன் மூலம் சொன்ன கருத்து ஹிந்தி எந்திரன் வரும் நாட்களில் சூப்பர் ஹிட் ஆகும் என்பது மட்டும் நிச்சயம்
ஸ்பைஸ் மல்டி ப்ளெக்ஸ் (அமித் அவஸ்தி )
புனே
முதல் நாள் அஞ்சானா அன்ஜானி ஹவுஸ் புல் ஹிந்தி ரோபோ 60௦% மட்டுமே
ஆனால் அதே பேட்டியில் அவர் சொன்ன மற்றும் ஒரு கருத்து ரோபோட் படம் பற்றி இப்போது வந்து கொண்டு இருக்கும் சிறப்பான விமர்சனம் வரும் நாட்களில் படம் சூப்பர் ஹிட் ஆகும்
அதிலும் முக்கிய கருத்து ஸ்பைஸ் மல்டி ப்ளெக்ஸ் திரை அரங்கில் தமிழ் எந்திரன் அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை செய்து உள்ளது

பிரசாத் மல்டி ப்ளெக்ஸ் (t  ஸ்ரீ காந்த் )
ஹைதராபாத்
இந்த திரை அரங்கில் இதுவரை 18 ,000  டிக்கெட் விற்பனை ஆகி உள்ளது தெலுங்கு ரோபோ 17 ,தமிழ் எந்திரன் 3 , ஹிந்தி 1

SRS  சினிமா  (டிங்கு சிங் )
பரிதாபத்
இங்கும் அஞ்சானா அன்ஜானி ஹவுஸ் புல்  ஹிந்தி ரோபோட்  55% முதல் 60% வரை மட்டுமே  டிங்கு சிங் சொன்னது போல இது இன்றைய நிலை மட்டுமே ரோபோட் படம் பற்றி வரும் சிறப்பான கருத்துக்கள் வரும் நாட்களில் சூப்பர் ஹிட் படம் ஹிந்தி ரோபோட் ஆகும்


கிச்சடி & பென்னி அண்ட் பப்லு சொல்லும் படி வியாபாரம் இல்லை

மிக பெரும்  கருத்து :
           எந்திரன் படம் தயாரிக்க முடியாமல் கைவிட்ட நிறுவனம் தயாரித்த படம் தான் இந்த அஞ்சானா அன்ஜானி பார்க்கலாம் ரோபோட்  ஹிந்தி மொழியில் செய்யும் சாதனைகளை

ndtv movies

 ஹிந்தி மொழியில் எந்திரன் (ரோபோட் )சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்

மறக்காமல் படிப்பதுடன் உங்கள் வாக்கையும் இடவும்

11 comments:

  1. நல்ல விமர்சனம்.!

    ReplyDelete
  2. உங்கள் வார்த்தை பலிக்கட்டும்

    ReplyDelete
  3. சரியான ஆங்கிளில் கவர் பண்ணி எழுதியிருக்கீங்க!

    ReplyDelete
  4. அனைத்து வட இந்திய விமர்சனங்களும் எந்திரனை கொண்டாடுகின்றன.

    ReplyDelete
  5. very good.. இருந்தாலும் இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்..

    ReplyDelete
  6. நீங்கள் சொல்வது போல பாசிடிவ் விமர்சனங்களால் படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெறும்

    ReplyDelete
  7. தகவல்களுக்கு நன்றி தலைவரே ...

    ReplyDelete
  8. எந்திரன் வெற்றி பெற்றால் தமிழ் திரையுலம் வேறுகோணத்தினை நோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது. மருதநாயகம் கனவு ரஜினியால் பலிக்கப்போகிறது என்று வலைப்பூக்கள் எழுதி தள்ளுகின்றன.

    எந்திரன் எல்லையில்லா வெற்றி பெறட்டும்

    http://sagotharan.wordpress.com/

    ReplyDelete
  9. தகவல்களுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  10. மிக அருமையான பதிவு

    http://denimmohan.blogspot.com/

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை