Saturday, October 30
டியோட்ரன்ட் விளம்பரம் பெண்களும்
ஒரு விளம்பரம் என்பது ஒரு பொருளை விற்க எந்த அளவிற்கு முக்கியம் என்பது அனைவரும் அறிந்தது
ஒரு தீப்பெட்டி முதல் சேலை வரை எந்த பொருளும் விளம்பரம் இல்லாமல் விற்பது என்பது இப்போது குதிரை கொம்பு
அந்த விளம்பரம் படைக்கப்படும் விதத்தில் அனைவரையும் கவரும் ஆனால் நான் பார்த்த வரை அதிகமான டியோட்ரன்ட் விளம்பரம் சொல்லி வைத்த மாதிரி ஒரே மாதிரி பாருமுலவை பின்பற்றி வருவது ஏனோ எனக்கு தெரியவில்லை
பெண்களை அழாகாக காட்டி விளம்பரம் செய்யும் சோப்பு விளம்பரம் ஆகட்டும் குழந்தை பயன்படுத்தும் பொருள்களுக்கான விளம்பரம் ஆகட்டும் பெண்களை அழாகா காட்டும் முறை தான் உள்ளது
இதற்க்கு எத்தனையோ உதாரணம் சொல்லலாம் ஆனால் இதற்க்கு விதி விளக்கா உள்ளது டியோட்ரன்ட் விளம்பரங்கள்
எவனோ ஒருவன் குளித்தோ குளிக்காமலோ டியோட்ரன்ட் அடிக்க எங்கே இருக்கும் ஒரு பெண் அந்த வாசனைக்கு அடிமையாகி அவனை தேடி வருவது போன்ற கருத்துகளை கொண்ட விளம்பரம் இங்கு மட்டும் இல்லை வெளிநாட்டு டியோட்ரன்ட் விளம்பரம் கூட இதே பார்முலாவை பயன்படுத்துகிறது
ஏன் இது போன்ற விளம்பரத்தை மேல் நாட்டில் எதிர்க்க வில்லை
சின்ன சின்ன விசயத்திற்கு கூட எதிர்ப்பு செய்யும் நம் ஆட்கள் பெண்களை கேவலபடுத்தும் இது போன்ற விளம்பரம் பற்றி என்ன நினைக்கிறார்கள்
டியோட்ரன்ட் என்பதே உடலில் வரும் துர்நாற்றத்தை வேர்வை நாற்றத்தை போக்க என்ற கருத்தை கொண்டு இல்லாமல் டியோட்ரன்ட் அடித்தால் பெண்கள் மயங்குவார்கள் என்ற பாணியில் செல்லும் சில விளம்பரங்களை என்னவென்று சொல்வது அழகிய சில விளம்பரங்கள் இருக்கும் அதே நேரத்தில் இது போன்ற சில விளம்பரங்கள் இருப்பதால் இந்த கேள்வி ?
சில டியோட்ரன்ட் விளம்பரம் அந்த பொருள் பற்றி சொல்லமால் அந்த டியோட்ரன்ட் பயன்படுத்தினால் பெண்கள் மயங்குவார்கள் என்று சொல்வதை என்னவென்று சொல்வது
ஒரு அழகிய முறையில் spinz விளம்பரம்
******* VOTE THIS ARTICLE ******
மறக்காமல் உங்கள் வாக்கை அளிக்கவும்
விரைவில்
ஹாய் அரும்பாவூர் விருதுகள் 2010
Subscribe to:
Post Comments (Atom)
என்ன பண்ண ? காலக் கொடுமை இதெல்லாம்
ReplyDeleteஒரு குறிப்பிட்ட சாக்கலேட் வாங்கி சாப்பிடுவதன் மூலம் இன்னொருத்தன் காதலியையே லவட்டிக் கொண்டு ஓடுவது போல இங்கே விளம்பரங்கள் உள்ளனவே!
ReplyDelete