Sunday, May 30

வெற்றி படமும் வெற்றி இசையும்


போன வருடம் ஏப்ரல்  முதல் இந்த ஆண்டு மே வரை எத்தனையோ படங்கள் வந்தாலும் வெற்றி படங்கள் என்பது குறைவே
அதிலும் படத்தின் வெற்றிக்கு பாடல்கள் அதிக அளவில் உதவிய படம் என்றால் மிகவும் குறைவே

1 அயன்  (ஹாரிஸ் ஜெயராஜ் )


            ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையும் சரி பாடல்களும்  சரி இந்த படத்தை இவரின் இசை இல்லாமல் நினைத்து பார்க்க முடியாது .நெஞ்சே நெஞ்சே நீ எங்கே, ஹனி ஹனி ,தமிழ் நாடும் முழுவதும் கலை கட்டிய
விழி மூடி கண்கள் ,  இந்த படத்தின் இசை இப்படத்திற்கு பெரும் அளவில் உதவியது .
அயன் படமும்  ஹாரிஸ் இசையும் வெற்றி கூட்டணி சதவிதம் சூப்பர் ஹிட்

2 விண்ணை தாண்டி வருவாயா (எ ஆர் ரஹ்மான் )


        ஹாரிஸ் இல்லாத கௌதம் முதல் படத்திலே ரஹ்மான் சிக்ஸர் அடித்த படம் ஆஸ்கர் விருதுக்கு பின் ரஹ்மானின் சிறப்பான இசை (புதுமையான இசை என்றால் இன்னும் சிறந்தது ) சில அரை குறை விமர்சகர்கள் பாடலை குறை சொன்னாலும்  .இந்த படத்தின் வெற்றிக்கு ரஹ்மானின்  இசை மிக பெரும் அளவில் உதவியது சால சிறந்த்தது .
கௌதமும் ரஹ்மானும் புது வெற்றி கூட்டணி வெற்றி சதவிதம் சூப்பர் ஹிட்

3 பையா (யுவன் ஷங்கர் ராஜா)



              இந்த படத்தின் வெற்றிக்கு மற்ற படத்திற்கு இசை அமைத்த  இசை அமைப்பாளர்களின் பாடல்களை விட யுவனின் இசை வெற்றிக்கு நூற்றுக்கு நூறு உதவியது
யுவனின் ஒவ்வொரு பாடலும் சரி படத்தின் வெற்றிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் அளவில் உதவியது
யுவன் லிங்குசாமி பைய வெற்றி சதவிதம் நூற்றுக்கு இருநூறு

ஒரு படத்தின் பாடல்கள் அந்த படத்தின் வெற்றிக்கு அதிகம் உதவியது என்றால் அது அரிதாக அமையும் அந்த வகையில் அமைந்த பாடல்கள் இவை

தொடர் ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி 



   நஷ்டம் அடைந்த  திரை அரங்க உரிமையாளர்கள் சிங்கம் படத்தின் மூலம் சந்தோஷம் அடையும் இந்த நேரத்தில் நக்கீரன் தனமான விமர்சனம் செய்து படத்தினை பற்றி உங்களுக்கு பிடிக்க வில்லை என்ற காரணத்தால் படத்தின் வெற்றியை தடுக்க வேண்டாம் நல்லவர்களே

ஏன் என்றால் இன்று துபாய் கலேரிய திரை அரங்கு சென்று படம் பார்த்த என் நண்பர்கள் சொன்ன வார்த்தை "ரெண்டு மணி நேரம் படம் சரி ஜாலிய போச்சு  படம் பார்க்கலாம் சூப்பர் "
ஒரு சராசரி ரசிகன் முதல் அறிவு ஜீவி ரசிகன் வரை முதலில் எதிர் பார்ப்பது போரடிக்காமல் போகும் நல்ல திரைகதை  மட்டுமே
திரை அரங்கு நிறைந்து  இருந்ததது .என்பது அவர்கள் சொன்ன மற்றொரு விஷயம்

4 comments:

  1. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. நன்றி....((((

    ReplyDelete
  3. அக்மார்க் பகிர்வு ...
    வாழ்த்துகள்...மன்னிக்கவும் நேரகுறைவால் அடிக்கடி வரமுடியவில்லை மீண்டும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. :-))) .நல்ல பதிவு

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை