Thursday, December 27
ஹாய் அரும்பாவூர் விருதுகள் 2012 சிறந்தவைகள் ஒரு பார்வை
சிறந்த படம் 3
ஒரு கல் ஒரு கண்ணாடி (சென்னை பாக்ஸ் ஆபீஸ் எந்திரன் படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படம் இது )
Total collections in Chennai: Rs. 16.78 Crore
பிட்சா
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்
சிறந்த நடிகர்
விஜய் சேதுபதி ( சுந்தரபாண்டியன் ,பிட்சா,நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம் )
சிறந்த நடிகை
லக்ஷ்மி மேனன் (சுந்தரபாண்டியன் ,கும்கி )
சிறந்த இயக்குனர் 3 பேர்
எம்.ராஜேஷ் ( ஒரு கல் ஒரு கண்ணாடி )
குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் கொடுத்த படம் கொடுத்ததிற்கு
கார்த்திக் சுப்புராஜ் (பிட்சா)
தமிழ் திரை உலகில் முதல் முறையாக சிறந்த அதிக புதுமைகள் கொடுத்த காரணத்தால்
பிரபாகரன் (சுந்தரபாண்டியன்)
புதுமைகள் இல்லாவிட்டாலும் திரையுலகை வாழவைத்த படம் யார் மனதை புண்படுத்தாமல்
சிறந்த இசை அமைப்பாளர்
டி.இமான் (கும்கி)
படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் இவரின் இசையும் ஒன்று
சிறந்த பாடல்
வாய்மூடி சும்மா இருடா (ஆலப் ராஜு )
அமைதியாக ஹிட் கொடுத்த பாடல்
வொய் திஸ் கொலவெரி ( தனுஷ் )
பாட்டு மட்டுமே ஹிட்
சிறந்த பாடகர்
ஆலப் ராஜு (வாய முடி ,அகிலா அகிலா , தீயே தீயே
சிறந்த பாடகி
சைந்தவி //நெஞ்சுக்குள்ளே ( சுந்தரபாண்டியன் )
சிறந்த தொலைகாட்சி நிகழ்ச்சி
குட்டி சுட்டிஸ் (சன் டிவி )
குழந்தைகள் மழலை பேச்சை விரும்பும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சி
சின்னத்திரை சூப்பர் சிங்கர் ஸ்டார்
ஆஜீத்
Monday, November 26
அரும்பாவூர் அரசுமேனிலைப்பள்ளி மலரும் நினைவுகள் 1981-1988 ஒரு ஆட்டோகிராப் பயணம்
அரும்பாவூர் அரசு மேனிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அதாவது 1981-1988 ஆண்டு படித்த மாணவர்கள் படித்த மலரும் நினைவுகளை பகிர்ந்த செய்தி
பேஸ்புக் மூலம் எனக்கு தெரிய வந்தது இதை பற்றி இன்னும் முழுமையாக எழுதலாம் என்றால் எனக்கு இந்த பற்றிய முழுமையான செய்திகள் தெரியவில்லை
இருந்த போதும் இது போன்ற செயல்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் குழந்தைக்கு மேற்பட்ட இளைஞன் என்ற நிலைக்கு முன் பள்ளிப்பருவ வாழ்க்கையை மீட்டு கொடுக்கும் நிகழ்ச்சியே இந்த முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல்
அரும்பாவூர் அரசு மேனிலைப்பள்ளி பற்றி ஒரு தனி பதிவே போடலாம்
நிச்சயம் இந்த நாளில் இந்த நிகழ்ச்சியில் எல்லோரும் சந்தோஷம் அடைந்து என்பது மட்டும் நிச்சயம்
இந்த நிகழ்ச்சியில் என் அண்ணன் மற்றும் என் அவர்களின் நண்பர்களையும் பார்பதில் சந்தோஷம்
இதில் சிலரின் பெயர் எனக்கு தெரியும் பாண்டியன் 1, பாண்டியன் 2,சந்திரசேகர் ஷாகுல் அமல்ராஜ் விஜயன் ரவி மோகன்1 மோகன் 2 மற்றும் பலரின் பெயர் தெரியவில்லை
ARUMBAVUR LONG VIEW
இந்த பதிவில் இருக்கும் புகைப்படங்கள் சந்திரசேகர் அவர்களின் பேஸ்புக்கில் எடுத்தது
அவர்களுக்கு நன்றி
Tuesday, September 4
உலக அளவில் அதிக பேர் பார்த்த 5 YOUTUBE VIDEOS
ஒரு கோடி இல்லை ரெண்டு கோடி இல்லை எழுபத்திஏழு கோடி அப்படின்னு சிவாஜி டைட்டில் வசனம் மாதிரி பேச வேண்டி இருக்கு இந்த சாதனை வீடியோ பார்க்கும்போது தெரிகிறது
அமுல் பேபி மாதிரி இருக்க இந்த ஜஸ்டின் பைப்பர் "பேபி" பாடல்தான் உலக அளவில் முதல் இடத்தில உள்ளது
சும்மா இல்லை எழுபது கோடிக்கு மேல் பார்வை கொண்டுள்ளது
Justin bieber - baby -ft .ludacris 775,743,307
பொடி பையன்தானே அப்டின்னு நினைச்சா சாதனைகள் எல்லாம் பெரிய ஆள் அளவிற்கு பண்றான்
waka waka (this time for Africa ) 490,433,878
உலக கோப்பை புட்பாலை விட அதிக அளவில் ஹிட்ஆகா முடியும் என்று நிருபித்த ஷகிரா அவர்களின் ஆடல் மற்றும் அவரின் கலக்கல் இசைக்கு பத்து முறை பார்க்காலாம்
jennifer lopez - on the floor 590,027,962
ஜெனிபார் லோபஸ் இசை உலகில் அதிக ஹிட் அடித்த பழைய அக்கா
பாட்டுன்னா ஜென்பார் லோபஸ் மாதிரி இருக்கணும்
lady gaga bed romance - 484,480,726
லேடி காகா ஹிந்தி பாட்டுபாட போறாங்க அப்படின்னு சொல்றாங்க அப்படி நடந்தால் நல்லதுதான்
eminem - love the way 491,309,917
எமினெம் - பேனரில் ரைஹானா கலக்கல் குரலில் பாடல் இது
பார்த்தவங்க கவுண்டிங் இன்னைக்கு உள்ள நிலவரம் இது நாளைக்கு இன்னும் கூடலாம்
Justin bieber - baby -ft .ludacris 775,743,307
பொடி பையன்தானே அப்டின்னு நினைச்சா சாதனைகள் எல்லாம் பெரிய ஆள் அளவிற்கு பண்றான்
waka waka (this time for Africa ) 490,433,878
உலக கோப்பை புட்பாலை விட அதிக அளவில் ஹிட்ஆகா முடியும் என்று நிருபித்த ஷகிரா அவர்களின் ஆடல் மற்றும் அவரின் கலக்கல் இசைக்கு பத்து முறை பார்க்காலாம்
jennifer lopez - on the floor 590,027,962
ஜெனிபார் லோபஸ் இசை உலகில் அதிக ஹிட் அடித்த பழைய அக்கா
பாட்டுன்னா ஜென்பார் லோபஸ் மாதிரி இருக்கணும்
lady gaga bed romance - 484,480,726
லேடி காகா ஹிந்தி பாட்டுபாட போறாங்க அப்படின்னு சொல்றாங்க அப்படி நடந்தால் நல்லதுதான்
eminem - love the way 491,309,917
எமினெம் - பேனரில் ரைஹானா கலக்கல் குரலில் பாடல் இது
பார்த்தவங்க கவுண்டிங் இன்னைக்கு உள்ள நிலவரம் இது நாளைக்கு இன்னும் கூடலாம்
Monday, September 3
வி.களத்தூரின் கல்லாற்று பாலம் திறப்புவிழாவுக்கு தயார்? ready for grand opening of the bridge kallarru
அரும்பாவூர் இருந்து வி.களத்தூர் செல்ல பெரம்பலூர் வழியாக செல்ல வழி இருந்தாலும்
குறுக்கு பாதை எனப்படும் கிருஷ்ணாபுரம் வடகரை வழியாக களத்தூர் செல்ல சிறந்த பாதை ஆற்றை கடந்து செல்ல இருந்த பாலம்.
பழையதாக மாறி வெல்ல பெருக்குக்கு தாக்கு பிடிக்காமல் போய் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு கஷ்டமாக இருந்தது
குறுக்கு பாதை எனப்படும் கிருஷ்ணாபுரம் வடகரை வழியாக களத்தூர் செல்ல சிறந்த பாதை ஆற்றை கடந்து செல்ல இருந்த பாலம்.
பழையதாக மாறி வெல்ல பெருக்குக்கு தாக்கு பிடிக்காமல் போய் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு கஷ்டமாக இருந்தது
ஏன் நான் கூட களத்தூர் செல்ல இந்த பாலம் உதவியாக இருந்தது என்றால் மிகை இல்லை
வி.களத்தூர் கல்லாற்றின் குறுக்கே ரூ. 4.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலக் கட்டுமானப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன, ஜூலை மாதத்தில் இந்தப்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று ஜூன் 22 தேதி கலெக்டர் தரேஸ்அஹமது கூறினார்
வண்ணம் தீட்டும் பணியும் முடியும் நிலையில் உள்ளது. இந்த (செப்டம்பர்) மாதம் திறப்புவிழா நடைப்பெறலாம். என்று தெரிகிறது
புது பாலம் இந்த ஊரு மக்களுக்கும் அரசு பள்ளி சென்று படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்
ஆற்றின் மேம்பாலத்தில் இருந்து பார்க்கும் போது பள்ளியின் மினார் என்ன அழாகாக இருக்கிறது
பெரம்பலூர் இருந்து வரும் என் டி பஸ் இந்த வண்டியில் பெரம்பலூர் வழியாக களத்தூர் சென்று வந்தது மறக்க முடியாத நினைவுகள்
நன்றி : வி.களத்தூர் .காம்
புகைப்படம் : அப்சரா மில் சையது
Friday, August 31
அதிரடி கலக்கல் "கொரியா குத்து பாடல் " BSY - GANGNAM "style
"ஓபன் கன்னம் ஸ்டார் இப்படிதான் இந்த பாட்டு எனக்கு முதலில் கேட்டது"
நம்ம ஊரு கொலைவெறி பாடல் யு ட்யுபில்(YOUTUBE ) மட்டும் கலக்கியது என்றால் இந்த ஹை வோல்டேஜ் பாடல் சும்மா கொலை குத்து பாடலாக மாறி ஒரு சாதனை இல்லை பல சாதனைகள் செய்துள்ளது
சும்மா இல்லை ஏழு கோடிக்கு மேல் பார்வையாளர்கள் கவுண்டவுன் இன்னும் கூடும்
யு ட்யுபில்(YOUTUBE ) முதல் இடத்தில உள்ள அதிகம் பார்வையாளர்கள் கொண்ட பாடலாக உள்ளது
பில்போர்ட் இணைய இதழில் சமுக தளங்களில் சிறந்த பாடல்களில் முதல் இடத்தில் உள்ளது
ஐ-ட்யூன் இணையதளத்தில் அதிக விற்பனை தனிபாடல்களில் முதல் இடத்தில் உள்ளது அமெரிக்க பட்டியலில்
டைம் இதழில் நீங்கள் கண்டிப்பாக கேட்க்க வேண்டிய அதிரடி பாடல் என்று வந்துள்ளது
தென் கொரியா பாடகரான PSY 2001 இசை துறைக்கு வந்து இருந்தாலும் இந்த் பாடல் தொகுப்பு அவரை உலக அளவில் புகழ் பெற்ற ஆளாக மாற்றி உள்ளது என்றால் சால சிறந்தது
இந்த பாடல் கேட்க்க தேவையானவை ஒரு ஹை பேஸ் உள்ள ஒரு ஸ்பீக்கர் பக்கத்தில் அமைதியாக இந்த பாடலை கேட்க்க ஒரு நல்ல துணை
YOU TUBE
Wednesday, August 29
எப்படி தயாரிக்கிறார்கள் சி எப் எல் விளக்குகள் & கவிதை மாதிரி
மின்சார கட்டணம் பலமடங்கு உயந்து விட்ட இந்த நிலையில் அனைவரும் விரும்பும் மற்றும் மின்சாரம் சேமிக்க பயன்படுத்தும் விளக்கு கிராமபுறங்களில் மக்கள் செல்லாமாக அழைக்கும் குச்சி பல்புகள் அதாங்க (சி எப் எல் விளக்குகள்)
இந்த சி எப் எல் விளக்குகள் விளக்குகள் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்க்கலாம்
(Compact fluorescent lamp )
சும்மா இயந்திர கைகள் அசுர வேகத்தில் தயாரிக்கும் அழகே தனி
WATCH THE VIDEO
SMILE HUNTERS
சிரிக்க நினைக்கும் மனிதர்கள்
தொலைந்த சிரிப்பை
தொலைந்த இடம் தெரியாமல்
தேடும் குழந்தையாய்
Sunday, August 26
எப்படி தயாரிக்கிறார்கள் "ஹெலிகாப்டர்" 'FM"
நீண்ட நாட்களுக்கு பிறகு எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் நீங்கள் முதலில் பார்க்க போவது
ஹெலிகாப்டர்
ஹெலிகாடர் தயாரித்து பறக்க போவதை இப்போ பார்க்கலாம்
watch the video
ஹெலிகாப்டர்
ஹெலிகாடர் தயாரித்து பறக்க போவதை இப்போ பார்க்கலாம்
watch the video
Wednesday, August 15
சிவாஜி 3டி ஒரு அதிரடி அறிமுக வீடியோ
சும்மா யு ட்யுப் புகுந்து வரும் போது இந்த சிவாஜி 3டி பற்றி வீடியோ பார்த்தேன் சும்மா சொல்ல கூடாது பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு வருடத்திற்கு மேல் உழைத்து இந்த சிவாஜி 3டி படத்தை உருவாக்கி உள்ளார்கள் என்று தெரிகிறது இந்த படத்தை திரை அரங்கில் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது என்றால் மிகை இல்லை
அதிலும் சிவாஜி படத்தில் வரும் ஆக்சன் காட்சிகளும் சரி வசனங்களும் சரி 3டி வடிவத்தில் மிரட்ட போவது என்னவோ நிச்சயம்
"ரஹ்மான் இசையில் சிங்கம் சிங்கிளாதான் வரும் என்று ரஜினி சொல்லும் காட்சிகள்
நம்ம தமிழ் திரை உலகில் மிகவும் திறமை கிராபிக் கலைஞர்கள் உள்ளார்கள் என்பதை இந்தியா முழுவதும் சொல்ல போகும் படமா இந்த சிவாஜி 3டி படம் வர போவது என்னவோ நிச்சயம்
2டியில் ஒவ்வொரு காட்சியையும் 3டி வடிவில் மாற்ற இவர்கள் கஷ்டப்படும் காட்சிகள் உண்மையில் சிறப்பு வாய்ந்ததது
சில புகைப்படங்கள் மற்றும் யு ட்யுப் வீடியோ
WATCH THE YOUTUBE VIDEO
Monday, August 13
அடிமை விலங்கு -ரணகளம் "கலக்கல் பாடல் " கேளுங்கள் கேளுங்க கேட்டுகிட்டே இருங்க
நண்பர் சாய் சுதர்ஷன் அவர்களின் இசை நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு உள்ளது விரைவில் தமிழ் திரை உலகிற்கு ரஹ்மான் ஹாரிஸ் இசைக்கு அடுத்த இடம் இவருக்கு இருக்கு என்று கூறலாம்
(நம்ம தோஸ்த் இல்லையா அதனால்தான் )
இதற்க்கு முந்தைய பாடல்களுடன் ஒப்பிடும்போது இவரின் இசையில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது
வாழ்த்துக்கள் சாய்
கிராம பின்னணி கொண்ட ஒரு கதைக்கு சாய் சுதர்ஷன் அவர்கள் சிறப்பான பாடலை கொடுத்துள்ளார்
அந்த பாடல் வரிகள்
அடிமை விலங்கு வந்து இவன் முன் உடையுது......
புரட்சி பிறக்க ஓர் புயலடிக்குது..
சிறையை சிதைக்கச்சிட்டு சிறகடிக்குது அது..
இவன் இதய ஒலியிலே இடி இடிக்குது...
இளமை விழியிலே பொறி பறக்குது...
வெற்றி வேட்கை துளி விழும் வியர்வை அது !!
இந்த பூமி சிறு பந்து..
வென்று காட்டு வலம் வந்து..
இந்த ஊரின் தலை எழுத்து..
போர்க்காய் எடுத்து திருத்து !!
சாய் அவர்களின் இந்த பாடலின் இசை எப்படி உங்களின் கருத்தை மறக்காமல் சொல்லவும் நண்பர்களுக்கும் கேட்க்க சொல்லவும்
பாடல் கேட்க்க
Adimai Vilangu - Ranagalam - Tamil Short Film - (Final Mix) by Sai Sudharshan
Tuesday, July 31
கரையெல்லாம் செண்பக பூ - மேற்கத்திய தாளக்கட்டில் கலக்கல் இசை
இளையராஜா அவர்களின் பாடல்களில் இந்த படத்தில் ஒரு சிறப்பு இருப்பது உண்மை.
ஒரு கிராம திர்ல்லர் படமான இதில் சுஜாதா அவர்களின் கதை ஒரு ஹீரோ என்றால்
இந்த படத்தில் உண்மையான ஹீரோ இளையராஜா அவர்கள் மட்டுமே
அதிலும் இதில் இடம் பெரும் முதல் பாடல் நிச்சயம் ஒரு கலக்கல் இசை தொகுப்பு
ஒரு முறை இந்த பாடலை கேளுங்கள் இளையாராஜா அவர்களின் குரலும் சரி இசையும் சரி சிங்கம் போல கர்ஜிக்கும்
Monday, June 25
கலைப்பொரியாளர்கள் வழங்கும் "உடன்பிறப்புகளே" குறும்பட சகுனியாட்டம்
பெங்களுரு குறும்பட வெற்றிக்கு பின்பு கலைபொரியாளர்கள் வழங்கி இருக்கும் வெற்றி குறும்படம்
தங்களுடைய அலுவல்களுக்கு இடையே தங்கள் கலைதாகத்தை தீர்க்கும் இந்த சாப்ட்வேர் இளைஞர்களின் சொல்லும்படியான படைப்பு உடன்பிறப்புகளே
" சகுனி படத்திற்கு இருவேறுவிதமான விமர்சனம் வந்தாலும் கதையில் கரு என்னவோ ஒவ்வொரு இடத்திலும் சகுனி இருக்கான் என்று சொல்லும் குறும்பட சகுனி இந்த உடன்பிறப்புகளே
இக்கதையில் நடித்து இருக்கும் அரவிந்த் ,பலராமன் ,சந்தோஷ் ,ராஜேஷ் ,தனசேகர் ,சுப்ரமணியன் பெங்களுரு ஹீரோ சரவண குமார் ஜெய் ஷங்கர் கார்த்திக் அருள் போன்றோர்களின் நடிப்பு ஆஹா என்று பாராட்ட விட்டாலும் குறை சொல்ல முடியாத முயற்சி
நண்பர் பலராமன் ஒலிப்பதிவு கதை திரைக்கதை வசனம் என்று பலதுறைகளில் புகுந்து கலக்கி இருக்கிறார்
இவர்கள் தங்களின் பணிகளுக்கு இடையே இப்படி ஒரு படைப்பை தர மற்றும் ஷூட்டிங் மற்றும் இட தேர்வுக்கு மற்றும் அவர்களின் நடிப்பும் அவர்கள் உழைப்பை பாராட்ட வேண்டும்
அதிலும் அரசியல்வாதியாக நடித்து இருப்பவரின் நடிப்பும் சரி பலராமனின் தம்பி கதாபாத்திரத்திற்கு விருமாண்டி டைப் மீசை சிம்ப்லி சூப்பர்
ஒரு அரசியல் கதை ஒரு ரௌடி கதை இவற்றில் அரசியல்வாதிகள் செய்யும் நம்பிக்கை துரோகம் போன்றவைகளை ஒரு குறைவான நேரத்தில் தந்து இருக்கும் கலைபொரியாளர்கள் உழைப்பை பாராட்ட வேண்டும்
இந்த படைப்பில் குறை என்று சொல்ல முடியாது , இன்னும் ஒளிப்பதிவில் முன்னேற்றம் தேவை
ஒரு அரசியல் கதையை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பான திருப்பங்களுடன் அமைத்துள்ளார் பலராமன்
இந்த குறும்படத்தில் இன்னும் சொல்லும்படியான விஷயம் பேஸ்புக் நண்பர் சாய் சுதர்சன் அவர்களின் இசை
ஆக மொத்தத்தில் நீங்கள் பார்ப்பது மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கும் சொல்ல தகுதி வாய்ந்த படைப்பு
உடன்பிறப்புகளே YOUTUBE VIDEO
Saturday, June 9
vote for 'The Greatest Indian' உங்களுக்கு பிடித்த தலைவருக்கு வாக்களிக்கவும்
அதில் இந்தியாவில் அரசியல் வியாபாரம் கலை மக்கள் பனி போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் சிறப்பு மிக்கவர்களை தேர்ந்தெடுக்க உள்ளது
தலைவர்களின் சர்வதேச புகழ், மக்கள் மீதான அவர்களின் தாக்கம், உதாரணத்தன்மை என பல விஷயங்களின் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
பிபிசியின் வாக்கெடுப்பு விதிகளின் அடிப்படையில் நடத்தப்படும் இதில் 50 இந்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்போது முதல் இடத்தில் அம்பேத்கர் உள்ளார் இரண்டாம் இடத்தில் கன்ஷி ராம் உள்ளார்
டாப் 10 இல் ரஜினி மற்றும் ரஹ்மான் உள்ளனர்
நீங்கள் இதில் உள்ள எண்ணுக்கு மிஸ்ஸுடு கால் கொடுத்தாலே போதும் இந்த எண்ணிற்கு போன் செய்வது
உங்களுக்கு பிடித்த தலைவருக்கு வாக்களிக்கவும்
வெளிநாட்டில் உள்ளவர்கள் முதலில் உள்ள பூஜியத்தை நீக்கி விட்டு 0091 சேர்த்து போன் செய்யலாம்
இதன் இணையத்தால் முகவரி இதோ vote for 'The Greatest Indian'
Sunday, April 15
தல கலக்கும் "பில்லா 2 " அசத்தல் திரை முன்னோட்டம்
ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் ஸ்டைல் அசத்தல் லுக்
தல கலக்க போவது நிச்சயம்
தலைக்கு ஒரு அசத்தல் படமாக இருக்கும் பில்லா 2
Tuesday, April 3
A.R ரஹ்மான் இசையில் "people like us "ஆங்கில திரைப்பட முன்னோட்ட வீடியோ
இசை புயல் ரஹ்மான் இசையில் June 29 அன்று வர இருக்கும் ஆங்கில திரைப்படம் people like us " முன்னோட்ட இசையில் ரஹ்மானின் இசை துளிகள் கேட்க்கும்போது சிறப்பாக உள்ளது.
அது இன்னும் திரைப்படத்தில் சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம்
முதலில் இந்த படத்திற்கு " welcome to people " என்று பெயர் வைத்து இருந்தார்கள்.
பிறகு " people like us " என்று மாறி உள்ளது
ஆங்கில திரை உலகில் புகழ் பெற்ற மீடியா ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனத்தின் படைப்பு இது
FACEBOOK :
http://www.facebook.com/peoplelikeus
Subscribe to:
Posts (Atom)