Thursday, December 29
சிறந்த 8 தமிழ் படங்கள் 2011 ( வசூல் கதை மகிழ்ச்சி ) என் பார்வையில்
1 . மங்காத்தா
சிலர் சொல்வது போல முதல் நாளே ஐம்பது கோடி வசூல் அறுபது கோடி வசூல் என்று சொல்லாமல் நிதானமாக அதிகாரபூர்வமாக சன் டிவி 130 கோடி வசூல் என்று சொன்ன படம்
கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஒரே தமிழ் படம் ஐம்பதாவது படம் சூப்பர் ஹிட் ஆகா சிலருக்கு மட்டுமே அமையும் அந்த வாய்ப்பை அஜித் அவர்களுக்கு தந்த படம்
இதற்க்கு முன்பு பல தோல்வி படங்கள் தந்து இருந்த போதும் ஹிட் என்றால் சூப்பர் ஹிட் கொடுத்து அஜித்தை சந்தோச பட வைத்தார்கள் அவர்கள் ரசிகர்கள்
இந்த படத்தின் மொத்த வசூல் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வந்த வசூலை வைத்து மெகா ஹிட் ஆனது
(+) அஜித் சன் டிவி மற்றும் அஜித் ரசிகர்கள்
2 . கோ
யாரும் எதிர்பார்க்காமல் கே வி ஆனந்த் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இவர்களால் மட்டுமே சூப்பர் ஹிட் ஆனா படம் இது கே வி ஆனந்த் இயக்கமும் சரி ஹாரிஸ் ஜெயராஜ் இசையும் இந்த படத்தை மெகா ஹிட் என்ற வரிசையில் சேர்த படம் இது
தமிழ் மொழியில் மற்றும் ஹிட் இல்லை இந்த படம் தெலுங்கு மொழியில் ரங்கம் என்ற பெயரில் வந்து அங்கும் வசூலை வாரி தந்த படம்
இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் ஆனா பாடல்கள் இதில் மட்டுமே உள்ளது
( +) கே வி ஆனந்த் ஹாரிஸ் ஜெயராஜ்
3 . காஞ்சனா
இது யாரும் எதிர்பார்க்காத வெற்றி படம் பேய் படம் வெற்றி அடையும் என்பது ஓகே ஆனா பேய் படைத்தல் காமெடி படமாக தந்து எல்லோரையும் சந்தோச பட வைத்தார் லாரன்ஸ் இந்த படத்தின் வெற்றி
இந்த படம் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யும் அளவிற்கு கொண்டு சென்றது
(+) லாரன்ஸ் கோவை சரளா தமன்.எஸ்
4 .எங்கேயும் எப்போதும்
குறைந்த பட்ஜெட் நிறைந்த லாபம் என்று சொவதை விட குறைந்த செலவில் சந்தோஷம் தந்த படம்
எ ஆர் முருகதாஸ் தயாரிப்பாளர்க வெற்றி அடைந்த படம் இது
இந்த படத்தின் வெற்றிக்கு பாடல்கள் கூட ஒரு காரணம்
(+) எ ஆர் முருகதாஸ் சரவணன் சத்யா எஸ்
5 .சிறுத்தை
உண்மை சொல்வது என்றால் தெலுங்கு மொழியில் இந்த படம் பார்த்தல் அந்த அளவிற்கு சிரிப்பு வராது தமிழ் மொழியிலில் படம் முழுவதும் நகைச்சுவை கொடி கட்டி பரந்த படம் இது அதே அளவிற்கு கார்த்திக் நகைச்சுவை மற்றும் ஆக்சன் கலக்கிய படம் இது
(+) கார்த்திக் சிவா சந்தானம்
6 .ஆடுகளம்
தனுசுக்குள் இப்படி எல்லாம் நடிப்பு திறமை இருக்கா என்று வியக்க வைக்கும் நடிப்பு இந்த படம் தனுஸ் நடிப்பிற்க்காக பார்க்க வைத்த படம் இது
வெற்றி மாறனின் இயக்கமும் ஜி வி பிரகாஷ் இசையும் பக்க பலம் இந்த படம்
(+) தனுஷ் வெற்றி மாறன் ஜி வி பிரகாஷ் சன் டிவி
7 .தெய்வ ஐ ஆம் திருமகள் சாம்
சுட்ட பழம் என்றாலும் ருசியாக வந்த பழம் இது , பட்ஜெட் அதிகம் இல்லை அதிகம் நஷ்டமும் இருக்காது என்று சொல்லாலம்
(+)விக்ரம் விக்ரம் விக்ரம்
8 .மௌன குரு
மௌனமான் வெற்றி என்று சொல்ல வைத்த படம் இது இயக்குனர் சாந்த குமார் இயக்கத்திற்காக வெற்றி அடைந்த படம் இது
(+) சாந்த குமார்
சிலம்பரசனின் "LOVE ANTHEM FOR WORLD PEACE " பார்க்க கேட்க்க
தனுஷ் போட்டியாக சிலம்பரசின் ஆட்டம் ஆரம்பம் இந்த முறை தனுஷ் கொலை வெறி போட்டு உலகம் முழுவதும் ஹிட் அடிக்க சில்பரச்ன் இந்த முறை உலக மொழிகளில் உள்ள காதல் என்ற வார்த்தை மட்டும் மையமாக வைத்து உலக அளவில் ஹிட் அடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் அவருக்கு ஹிட் கொடுப்போம்
இந்த பாடல் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் பேஸ்புக் மூலம் பகிரவும்
Tuesday, December 27
முல்லை பெரியார் விசயமும் இளையராஜா மற்றும் AR ரஹ்மான் விளக்கமும் & நடிகர்களும்
முல்லை பெரியாறு விசயத்தில் பெரிய நடிகர்கள் எல்லாம் வாய் திறக்காத நேரத்தில் ( அவர்களுக்கு தெரியும் அவர்கள் வாய் திறந்து தமிழனுக்கு ஆதரவாக பேசினால் மலயாளிகள் படம் பார்க்க மாட்டார்கள் அங்கு இருந்து அவர்களுக்கு கிடைக்கும் பணம் கிடைக்காது இல்லையா ? )
அதனால்தான் அப்போ இதே நடிகர்கள்தான் இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள் என்றால் அதிலும் ஒரு வியாபார தந்திரமே தவிர வேறு ஏதும் இல்லை
ஏன் என்றால் இவர்கள் எதிர்த்து குரல் கொடுக்கும் சிங்களவர்கள் இவர்கள் நடிக்கும் படத்தை பார்பதில்லை என்பதால் மட்டுமே
சிங்களவன் மட்டும் இவர்கள் படத்தை பார்க்கும் நிலையில் இருந்து இருந்தால் நிச்சயம் இந்த நடிகர் கூட்டம் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்து இருக்காது
சரி இந்த நடிகர்களின் படங்களை மட்டும் பாருங்கள் மன்றம் வைக்காதிர்கள் என்று சொன்னால் மட்டும் கேட்கவா போறோம் ?
இது ரஹ்மானின் வருத்தம்
சரி இப்போ விஷயம் டேம் 999 படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேணும் என்று பெருந்தன்மையுடன் கேட்ட ரஹ்மானை எதிர்த்து ஒரு குரல் எழும்புவதை அறிந்ந்த ரஹ்மான் உடனே எதிர்ப்பு எதிராக கடிதம் அனுப்பி உள்ளார் அது கீழே
இது இளையராஜா வருத்தம்
மலபார் கோல்ட் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே ஒப்பந்தம் ஆகிவிட்டது. என் துணைவியாரின் மரணத்திற்கு பிறகு, நான் எந்த நிகழ்ச்சிக்கும் ஒப்புக் கொள்ளவில்லை.
இப்போது இந்த நிகழ்ச்சியை நடத்துவது சிக்கலாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின், தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்துக்கு ஆளாவேன் என்பது எனக்கும் தெரியும்.
அவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். எனவே எப்படியாவது நான் நிகழ்ச்சியை ஒத்திப்போடுவதற்கோ, கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்கோ முயற்சி செய்கிறேன் என்று போராட்டக்காரர்களிடம் கேட்டுள்ளார்
Tuesday, December 20
2011 அதிகம் வசூல் செய்த ஹிந்தி படங்கள்
இந்த ஆண்டு வந்த படங்களில் ஹிந்தி மொழியில் அதிகம் வசூல் செய்த படங்கள்
1. Bodyguard - 229 கோடி (பாடிகார்ட் மலையாள பட ரீமேக்)
2. Ra.One (Hindi) - 200 கோடி
3. Ready - 179 கோடி(ஆர்யா தெலுங்கு பட ரீமேக் )
4. Zindagi Na Milegi Dobara - 152 கோடி
5. Singham - 139 கோடி (தமிழ் சிங்கம் ரீமேக் )
6. The Dirty Picture - 110 கோடி (இன்னும் படம் ஓடுகிறது )
7. Rockstar - 107 கோடி (இன்னும் படம் ஓடுகிறது )
8. Mere Brother Ki Dulhan - 94 கோடி
9. Delhi Belly - 92 கோடி
10. Yamla Pagla Deewana - 87 கோடி
நம்ம தமிழ் படங்கள் பற்றி இது போல அதிகாரபூர்வமாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வருவதில்லை எல்லாம் குத்துமதிப்பு கணக்குதான்
source: boxofficeindia.com
Tuesday, December 13
AR ரஹ்மான் இசையில் வர இருக்கும் படங்கள் (AR RAHMAN UPCOMING MOVIE)
ரஹ்மான் இப்போ தன் இசை அடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைத்தும். குறைவான அளவில் தன் உழைப்புக்கு ஏற்ற படங்களுக்கு மட்டும் இசை அடிக்க ஒப்பு கொள்கிறார்
அது கூட நல்லதுக்குதான் எல்லா படங்களுக்கும் இசை அடித்து தன்னுடைய இசை எல்லோரையும் சென்றடையாமல் இருப்பதை விட குறைந்த அளவில் நல்ல கலைஞர்களுடன் இனைந்து இசை அடிப்பதால் தன் இசை சரியான அளவில் எல்லோருக்கும் செல்வதே வெற்றி என்று நினைப்பதுதான் நல்ல கலைஞனின் எண்ணம்
அந்த வகையில் ரஹ்மானின் மீது இருக்கும் குற்றச்சாட்டு கூட இதுதான் அவர் பிரபலங்களுடன் மட்டும்தான் இசை அமைக்கிறார்
அது கூட அவரின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் தன் இசை எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று நினைக்கும் எந்த கலைஞனும் நினைப்பது இதைதான்
சரி இப்போ ரஹ்மான் இசையி வரும் படங்கள் ஒரு பார்வை
1 . ஏக் தீவான தா (விண்ணை தாண்டி வருவாயா )
தமிழ் மொழியில் ரஹ்மான் கௌதம் மேனன் கூட்டணியில் இசை ஹிட் அடித்த படம் இப்போ ஹிந்தி மொழியி கௌதம் தயாரிப்பில் மூன்று பாடல்கள் புதிதாக மாற்றப்பட்டு ஹிந்தி மொழியில் வரும் படம் .அடுத்த மாதம் வரும் படம் ஹிந்தி மொழியில் ஒரு இசை கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்
2 . காட்பாதர் (வரலாறு )
கன்னட மொழியில் ரஹ்மானுக்கு இரண்டாவது படம் முதல் படம் சஜினி இப்போ தமிழ் மொழியில் ரஹ்மான் இசையில் அஜித் நடித்து வந்த படம் இப்போ உபேந்திரா நடிக்க பி சி. ஸ்ரீராம் இயக்கத்தில் வரும் படம் இது
3 . மங்கிஸ் ஆப் பாலிவுட் (அனிமேசன் படம் )
ஹாலிவுட் சிறந்த தயாரிப்பு நிறுவனம் ட்ரிம் வொர்க்ஸ் தயாரிப்பில் வரும் படம் இது முழு நீல அனிமேசன் படம் இது ரஹ்மானின் முதல் அனிமேசன் இசை படம் இது
4 . வெல்கம் டூ பீப்புள் (Welcome to People )
வரும் ஆண்டில் 2012 வரும் முதல் ஆங்கில மொழி படம் இது . இதுவும் ட்ரிம் வொர்க்ஸ் படம் விரைவில் இந்த படத்தின் இசை தொகுப்பு வரலாம்
5 . மணிரத்னம் படம்
கார்த்திக் மகன் நடிப்பில் வெற்றி கூட்டணி மணிரத்னம் ரஹ்மான் இசையில் வரும் படம் இது பூக்கடை என்று பத்திக்கு பெயர் சொன்னாலும் பெயர் மாறக்கூடும்
6 .பாணி (water )
மிக நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் படம் இது சேகர் கபூர் இயக்கத்தில் வரும் படம் இது
7 யோகன்
விஜய் கௌதம் ரஹ்மான் கூட்டணியல் சீரியல் பாடல் இது தொடரின் முதல்பாகம் விரைவில் படப்டப்பு தொடங்கும்
8 .யாஷ் சோப்ரா படம்
யாஷ் சோப்ரா ஷாருக் கான் ரஹ்மான் கூட்டணியில் வரும் படம் இது .
9 ரஜினி ஸ்பெஷல் (ராணா, சுல்தான் ,கொச்சுடையான்)
எப்படியும் ரஜினி படம் என்றால் ரஹ்மான் இசை என்று நிச்சயம் சொல்லலாம்
Monday, December 5
குழந்தையையும் விட்டு வைக்காத கொலவெறி பாடல் (குழந்தை பாடல் )
தனுஷ் தமிழ் கொலை செய்கிறார் என்று தமிழை மட்டும் வளர்த்து தமிழனை பற்றி நினைக்காத கும்பல் சொன்னாலும்
முல்லை பெரியார் விசயத்தில் மலையாளிகள் இடம் இருக்கும் ஒற்றுமையில் நூற்றில் ஒரு பங்கு இருந்தாலும் நம் ஒற்றுமை ஓகே ரகம்தான்
சரி இப்போ சொல்ல வர்ற விஷயம் அது இல்லை இந்த கொலவெறி பாடல் மூலம் தமிழ் வார்த்தைகள் உலகம் முழுவதும் தமிழ் மொழி என்றால் என்ன என்று தெரியாத மக்கள் எல்லாம் தமிழ் கலந்த இந்த ஆங்கில தமிழ் பாடல் பாடுகிறார்கள் என்றால் அதில் ஒரு ஹை லைட்
இந்த பொடியன் பாடிய கொலவெறி பாட்டால் இணையத்தில் வந்த முதல் நாளே ஒரு லட்சம் ஹிட் நோக்கி போகுது
நீங்கள் சொல்வது போல ஆரம்பத்தில முழுவதும் தமிழ் மொழியில் மட்டும் பாடி இருந்தால் இந்த பாடல் இந்த அளவிற்கு ஹிட் ஆகுமா உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்
இந்த பாடல் மூலம் தமிழ் அழிந்து விட்டது என்று சொல்வது பொறாமை என்று சொல்வதை தவிர வேறு என்ன வென்று சொல்வது
children song
Thursday, December 1
மணிரத்னம் அடுத்த படம் இசை A.R.ரஹ்மான்
தமிழ் மொழியில் ரஹ்மானுக்கு நீதானே என் பொன் வசந்தம் படத்திற்கு பின்பு படம் ஏதும் ஒப்பு கொள்ளாத நிலையில் ரஹ்மான்
மணிரத்னம் அடுத்த இயக்கம் படத்திற்கு சத்தம் இல்லாமல் ஒரு பாடல் பதிவையும் நடத்தி உள்ளார் ரஹ்மான்
இந்த தகவல் சொன்னது மணிரத்னமோ ரஹ்மானோ இல்லை
வைரமுத்து சொன்னதாக தகவல்கள் சொல்கிறது
மணிரத்னம் நீண்ட நாட்களாக கார்த்திக் மகனை வைத்து ஒரு காதல் கதை எடுப்பதாக செய்தி உலாவும் நிலையில் இந்த செய்தி ரஹ்மான் ரசிகர்களுக்கு ஒரு இசை கொண்டாட்டமாக இருக்கும்
ரஹ்மான் மணிரத்னம் என்றாலே ஒரு இசை கொண்டாட்டம் என்று சொல்லவா வேணும்
" இசையால் சாதனைகள் செய்தாலும்
அமைதியால் அதை வெல்லும் ரஹ்மான் "
இசை தான் பேச வேண்டும் இசை கலைஞன் இல்லை என்று நிருபித்த ரஹ்மான் "
Subscribe to:
Posts (Atom)