குரல் மாற்றி பேசுவது என்பது எல்லோருக்கும் கிடைக்கும் வரம் இல்லை அதிலும் குரல் மாற்றி பேசும்போது சிரிக்க வைப்பது இன்னும் சிறப்பு அதில்
சீனிபிரபு தன் திறமையை இதற்க்கு முன்பு அவர் மிமிக்ரி மூலம் நிருபித்து இருக்கும் இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்து சென்னையில் பெரும் நிறுவனத்தில் பணியாற்றும் இவர்
தன்னுடைய மிமிக்கிரி கலையை மறக்காமல் அவ்வப்போது ஏதும் ஒரு கான்செப்ட் கொண்டு மிமிக்கிரி நிகழ்ச்சியை தயாரித்து வெளியிடுகிறார்
சமிபத்தில் வந்த அவரின் ஊர்த்திருவிழா கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்.
சீனிபிரபு கணேசன் அவர்கள் ஒரு நடிகர் பட்டாளத்தையே கிராமத்துக்கு கொண்டு சென்று நம்மை சிரிக்க வைத்து விடுகிறார் " சிம்பு ,விஜயகாந்த் ,பூர்ணம் விஸ்வநாதன் ,அஜித் ,சூர்யா ,சிவாஜி ,மம்மூட்டி என்று தொடரும் நடிகர்களின் காமெடி வசனங்களை எப்படி சிறப்பாக பேசி அதே நேரத்தல் நம்மையும் சிரிக்க வைத்துள்ளார் சீனிபிரபு கணேசன்
ஒரு முறை கேட்டால் மீண்டும் கேட்டு சிரிக்க வைக்கும் வசங்கள் அதற்க்கு ஏற்ற சரியான அளவில் குரல் தேர்வு சீனி பிரபுவின் முயற்சி பாராட்ட வேண்டியாது
விரைவில் இன்னும் சில அவரின் படைப்புகள் ஹாய் அரும்பாவூரில் அவரின் அனுமதியுடன்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் பேஸ்புக் மூலம் மற்றவர்களுக்கு சொல்லவும்