Sunday, May 8

பலராமனின் தமிழ் தோட்டம் "எறுழ்வலி "(இணைய தள விமர்சனம் )




சும்மா வந்தோம் ஏதோ எழுதினோம் வலைபதிவு திரட்டிகளில் ஏற்றினோம் என்று இருக்கும் என பதிவை பற்றி நானே சில நேரங்களில் நினைக்கும் போது.
என் மற்றும் ஒரு முகபுத்தக(FACEBOOK) நண்பர் பொறியாளர் . இன்று படிப்பை முடித்து சிறந்த வேலையில் இருக்கும் இவர் சராசரி இளைஞர்கள் போல இல்லாமல் தன்னுடைய தமிழ் மீது உள்ள பற்று காரணமாக தமிழ் பதிவுகள் மூலம் தன்னுடைய தமிழ் ஆர்வத்தை தனித்து கொள்கிறார்

தன்னை பற்றி இவர் அழகாக தன் எறுழ்வலி இணையத்தில் கூறி இருப்பது பாருங்கள்

எனது சொந்த ஊர் பாரதி பிறந்த எட்டயபுரம். நான் பிறந்தது தூத்துக்குடியில். வளர்ந்தது மதுரையில் இருக்கும் சோழவந்தானில். பள்ளிப்பருவம் சோழவந்தானில். கல்லூரி காலம் மதுரையில். தற்போதைக்கு அலுவலக அலுவல்கள் பெங்களூரில். இந்த வலைப்பதிவு மூலம் சமுதாயத்திற்கு/குடியினருக்கு என்னால் முடிந்த கருத்துக்களை கூற விரும்புகிறேன்.
என்ன அழகான வரிகள் 
 



இந்த வலைதளத்தில் கவிதை சிறுகதைகள் அழகிய தமிழ் கட்டுரைகள் என ஒரு சிறப்பான படைப்புகள் வழங்கி உள்ளார் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் யாரும் விரும்பும் பக்கம் இது 


 
பலராமன் பேஸ்புக்கில் தமிழ் வளர்ச்சிகாக தனி பக்கம் ஒன்று கூட தொடங்கி உள்ளார் 
விக்கிபேடியா உடன் இனைந்து தமிழ் வளர்ச்சிக்கான தமிழ் பக்கத்திற்கு தன்னால் முடிந்த உதவிகள் செய்கிறார்
இவரின் மற்றும் ஒரு சிறப்பான செயல் 


  'கலைப்பொறியாளர்கள்'-இலும் கதையாசிரியராக இருந்து குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் 

 



ஆகா மொத்தத்தில் ஒரு கலைபொறியாளரின் இந்த தமிழ் வளர்ச்சிக்கு செய்யும் செயலை பாராட்ட வார்த்தைகள் இல்லை
இவரின் வலைத்தளத்தில் இருந்து இவரின் ஒரு அழகிய கவிதை இது
முன்குறிப்பு:
கீழே உள்ள கவிதையில் ஒவ்வொரு வரியும் சிதைவுற்றது போல் தோன்றக்கூடும். என் புதிய முயற்சிக்காக அதை சகித்துக் கொள்ளவும்!
***இலவசமாக பெற்றேன் இன்பம் தரும் காட்சிகள் திரையில்…
***பெறவில்லை ஒளி தரும் மின்சாரம் ஆனால்…
***உயிர்போகும் தனித்தீவில் தேடோடி ‘வலையில்-விழா-மீன்களால்’…
***வீணாகப்போகும் நிறைவேறாமல் உண்ணாநிலைகள் நாடகமாய்…
***உன்னிடத்தில் ‘மூன்றாம்-தலைமுறை-அலைக்கற்றை’ பெறவிரும்பினேன்…
***கற்பனைச்சிறையில் மாட்டியது கனிமொழி போராட்டங்களால்…
***ஏமாற்றம் தந்துவிடுமோ ‘கூட்டணி-தாவல்கள்’ அஞ்சுகிறேன் நான்…
***விரல் மையிட்ட நாளில் முடிவான வாக்கு…
***உறக்கம் கெட்டது அன்றிலிருந்து உராய்வால்…
இப்பொழுது நீங்கள் ஒரு அரசியல் கவிதை படித்திருக்கக்கூடும். அதே கவிதையை மீண்டும் ஒருமுறை படிக்கவும். ஆனால், ஒவ்வொரு வரியையும் ‘திருப்பி’ப் படிக்கவும். அதாவது வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம்(‘…’-யில் தொடங்கி ‘***’ வரை)!
ஒரு காதல் கவிதை படிக்கலாம்…..!



என்ன ஒரு சிறப்பான கவிதை இது






"தமிழ் மொழி பேசுவதே கேவலம் என நினைக்கும் இந்த காலத்தில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசினால் தான் நம்மை மதிப்பார்கள் என்று தமிழர்களிடமே ஆங்கிலத்தில் பேசும் சில தமிலாங்கிலவதிகளுக்கு முன் தமிழ் தன் பணிகளுக்கு இடையே
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும்
பாலராமனுக்கு
ஒரு தமிழ் ஓ!

 
தமிழ் வளர்ச்சிக்கு இவரின் பேஸ்புக்(Tamil (Language))


 
இந்த பதிவிற்கு உங்கள் தொடர் ஆதரவு வேண்டும் 

DON'T MISS VOTE 

2 comments:

  1. Anonymous8.5.11

    என்னைப் பற்றி எழுதியதற்கு நன்றி. இது போக டுவிட்டரிலும் என்னால் முடிந்த தமிழ்த் தொண்டுகளைச் செய்து வருகிறேன்!

    https://twitter.com/#!/tamil_thondu

    ReplyDelete
  2. வருக வருக புதிய நன்பர்ரே வளர்க உம் தமிழ் தொண்டு. எனது ஆதரவு என்றூம் உண்டு. எறூழ் வலி வளர்க. நட்புடன் நக்கீரன்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை