ஒரு இந்தியன் உலக அளவில் தன்னுடைய சாதனை செய்தால் அதை முதலில் பாராட்டுவது இந்தியனாக இருக்க வேண்டும் ஆனால் .அவன் செய்த சாதனையை குறை கூறுவது அந்த கலைஞனை பிடிக்காமல் இருக்க வேணும் அல்லது அவன் மேல் பொறாமை இருக்க வேண்டும்
தமிழ் கலைஞர்கள் ஹிந்தி மொழியில் சென்று சாதனை செய்தால் பாராட்டும் மனபக்குவம் இல்லாதவர்களை கூட ரஹ்மான் அவரின் இசை சாதனை மூலம் வென்று காட்டினார்
ஹிந்தி மொழியில் மட்டும் வெற்றி கொடி நாட்டாமல் உலக அளவில் சாதனை செய்த ரஹ்மானை அவர் விருது வாங்கி இரண்டு ஆண்டுகள் சென்ற பின்பு இஸ்மாயில் தர்பார் என்ற ஹிந்தி மொழி இசை அமைப்பாளர் ரஹ்மான் இசை அமைத்த ஷ்லம்டாக் மில்லியனர் படம் பற்றி இப்படி கூறி உள்ளான் :ஆப் ஹீ படியே உஷ் பிலிம் கே மியூசிக் மெயின் ஆஸ்கார் ஜெயிச க்யா தா …குச் பீ தொஹ் நஹி தா ( நீங்களே சொல்லுகள் இந்த படத்தில் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான இசை இருக்கா ? ஒன்றும் இல்லை அப்படின்னு இந்த இஸ்மாயில் சொல்கிறான் )
அதாவது இவன் இசை வாழ்கையில் ஒழுங்கா அடித்த உருப்படியான படம் ஹம் டில் தே சுகே சனம் மற்றும் தேவதாஸ் மட்டுமே அதற்க்கு பின்பு அவன் இருக்கும் ஹிந்தி மொழியல் கூட தன்னுடைய திறமை நிருபிக்க முடியாத இவன் உலக அளவில் இருக்கும் எல்லா இசை விருதுகளும் பெற்ற படத்தை பற்றி அந்த இசை பற்றி ரஹ்மான் மீது உள்ள பொறாமையில் ரஹ்மான் ஆஸ்கர் விருதை விலை கொடுத்து வாங்கி விட்டார் என்று சொல்வது
இவன் போன்ற பொறமை பிடித்த இசை கலைஞர்கள் இன்னும் எத்தனை இருக்கிறார்கள் என்று தெரியவில்லை
ரொம்ப நாளாக இருந்த வயிற்று எரிச்சலை இப்படி கேவலமான கருத்துக்களை சொல்லி தன மீது புழுதி தெளித்து கொள்ளும் இவனை என்னவென்று சொல்வது
pirtam பற்றி அவன் சொன்ன வீடியோ இது
இதற்க்கு முன்பு இவன் இசை அமைப்பாளர் pritam பற்றி பிரதம் ஒரு இசை திருடர் என்று சொன்னவன் அப்படி பட்ட முட்டாள் இவன்
இவனை எல்லாம் ஆளாக மதித்து ரஹ்மான் ஒரு மறுப்பு வெளியுட்டுள்ளார்
ஆஸ்கர் விருது என்பது 3000 பரிசலனைக்கு பின்பு தருவது என்னாலாம் எல்லாம் எல்லோரையும் விலைக்கு வாங்க முடியாது என்று கூறி உள்ளார்
இவனை எல்லாம் மதித்து மறுப்பு வெளியிட வேணாம் ரஹ்மான்