Sunday, October 10

உதவும் கரங்கள் நாமவோம்!!

மீண்டும் மீண்டும் மொக்கை பதிவு முபாரக் 
எந்திரன் படம் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை
ஒரு வரியில் சொல்ல வேணும் என்றால் படம் பற்றி குறை சொன்னால் தமிழ் திரை உலகில் இதுவரை வந்த எல்லா படத்தையும் பற்றி குறை சொல்ல வேண்டும்
"திரை அரங்கில் மட்டுமே பார்க்க உகந்த படம் எந்திரன்

   இதுவரை பதிவு எதுவும் எழுத வில்லை இதனால் நீங்க ரொம்ப சந்தோசமா இருந்து இருப்பிங்க மீண்டும் மொக்கை பதிவுடன் உங்கள் அரும்பாவூர்




          "சந்தோசத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோசபடுத்தி  பார்ப்பது  நம்மால் முடிந்த அளவிற்கு தினமும் இல்லை, வாரத்திற்கு ஒரு முறை இல்லை மாதத்திற்கு ஒரு முறையாவது ஒரு ரூபாயாவது அடுத்தவருக்கு கொடுத்து சந்தோசபடுத்த முயற்சி செய்யுங்கள் "
   உலகத்தில் நூறு ருபாய் கொடுத்து செலவு செய்து படம் பார்ப்பதில் இருக்கும் சந்தோசத்தை விட அடுத்தவை சந்தோசபடுத்த முயற்சி செய்வோம் " தம்பி பிச்சை போடுங்க என்று சொல்பவருக்கு பிச்சை போட்டு உழைக்காமல் வாழும் இனத்தை ஆதரிக்க  சொல்ல வில்லை "
கடும் வெயில் அதில் செருப்பு தைத்து பிழைத்த வாழ நினைக்கும் அந்த மனிதர் அருகில் ஒரு நிமிடம் நின்று பாருங்கள்
சரியான நல்ல சூல்நிழை மாட்டாத காரணத்தால் செருப்பு தைக்கும் அவருக்கு நாம் கொடுக்கும் இரண்டு ருபாய் கூட பெரிய தொகை இல்லை அதில் நமக்கு கிடைக்கும் சந்தோசமே தனி "


     "ஏசி போட்ட கடையில் சென்று பேரம் பேசாமல் அதிக விலை கொடுத்து  பொருள் வாங்கும்  நாம் தெருவோர  கடை வியாபாரி இடம் பேரம் பேசுவது நம் வாடிக்கை "
அது மனித இயல்பு கூட ஆனால் அதே நேரத்தில் நாம் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் இது போன்ற வியாபாரிகளில் நேர்மையாக வியாபாரம் செய்யும் ஒரு நபருக்கு அவர் எதிர்பார்த்த பணத்தை விட அவர் மனம் சந்தோஷம் அடையும் வகையில் உதவி செய்யலாம்

உதவி செய்வது என்பதில் கடவுளுக்கு செய்யும் நேர்த்தி கடனை விட  கண்ணுக்கு எதிரில்  இருக்கும் உழைக்கும் மனிதருக்குக் அவர் எதிர்பார்த்த ஊதியத்தை விட  அதிகம்   கொடுத்து வச்சிக்க சும்மா டீ குடிக்க சாப்பிட வச்சிக்க என்று  சொல்லும் போது அவரின்  அந்த உழைப்பாளியின் முகத்தில் தெரியும் சந்தோஷம் உண்மையில் விலை மதிப்பற்றது "

                 தினமும் செய்யும் தீர்மானத்தில் இப்படி ஒரு தீர்மானம் செய்ய தீர்மானம் எடுப்போம் "






 

5 comments:

  1. சிந்திக்க வேண்டிய வார்த்தைகள் ...

    ReplyDelete
  2. சக்கையா ஒரு பதிவ போட்டுட்டு மொக்கைனு சொன்னா என்ன நியாயம்...

    ReplyDelete
  3. Hi,
    Good message. Helping needy people is the real tribute to god.

    Senthil

    ReplyDelete
  4. உதவி செய்வது என்பதில் கடவுளுக்கு செய்யும் நேர்த்தி கடனை விட கண்ணுக்கு எதிரில் இருக்கும் உழைக்கும் மனிதருக்குக் அவர் எதிர்பார்த்த ஊதியத்தை விட அதிகம் கொடுத்து வச்சிக்க சும்மா டீ குடிக்க சாப்பிட வச்சிக்க என்று சொல்லும் போது அவரின் அந்த உழைப்பாளியின் முகத்தில் தெரியும் சந்தோஷம் உண்மையில் விலை மதிப்பற்றது "

    .... a very nice message and thought. :-)

    ReplyDelete
  5. அற்புதமான பதிவு!

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை