Sunday, October 31

AR ரஹ்மானின் செய்தி துளிகள்(FACEBOOK,127 HOURS,ASIAN AWARDS)



இந்த பதிவுல ரஹ்மான் பற்றி சில செய்தி துளிகள்

இரண்டு மில்லியன் தொடர்பவர்கள் :

  ரஹ்மானின் சாதனைகள் பல இருந்த போதிலும் அவரின் பேஸ்புக் சாதனை இன்னும் சிறப்பு இந்தியாவில் அதிகம் தொடர்பவர்கள் இருக்கும் பேஸ்புக் ரஹ்மான் அவர்களுடைய பேஸ்புக் மட்டுமே
ரஹ்மான் ஆர்வத்துடன் தன்னுடைய ஒவ்வொரு புது செய்தியையும் அவர் தன்னுடைய் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது கூட இந்த அளவிற்கு அவருக்கு பேஸ்புக் தொடர்பவர்கள் வர காரணமாக இருக்கலாம்

சின்ன  விசயம் பெரிய விஷயம் என்று இல்லாமல் அவர் பேஸ்புக்  மூலம் கருத்துக்களை பரிமாறுவது  அவர் ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள்
புது படம் பற்றி அவருடன் வேலை செய்பவர்கள் பற்றி பரிமாறுவது என பேஸ்புக் சரியாகா அவர் பயன்படுத்துகிறார்

இந்த பதிவு எழுதும் பொது வரை அவரின் தொடர்பவர்கள் எண்ணிக்கை :  2,077,347
ரஹ்மானின் அடுத்த ஹாலிவுட் ஹிட்  127 hours 

    ஷ்லம்டாக் வெற்றிக்கு பின் அதே கூட்டணியில் ரஹ்மானின் வேறுபட்ட இசையில் நவம்பர் 5 இந்த ஹாலிவுட் படம் வருகிறது
இந்த் படத்தின் இசை நாளை வெளி வருகிறது இந்திய இசை சாயல் இல்லாமல் இதில் பின்னணி இசை சிறப்பாக இருக்கம் என எதிபார்க்கலாம்
டானி பாயல் ரஹ்மானின் இசையை சரியாக பயன்படுத்துவார் இதில் எப்படி என பார்க்கலாம்


ரஹ்மானின் asian awards 2010 

                                    Lebara Asian People’s Choice Award. லண்டன் நகரில் வழங்கப்பட  இந்த விருதை ரஹ்மான் டெண்டுல்கர் அமிதாப் மல்லையா ,சுனில் மிட்டல் ,ரத்தன் டாட்டா  போன்ற பிரபலங்கள் பெற்று கொண்டனர்
ரஹ்மானுக்கு இந்திய இசையை உலக அளவில் கொண்டு செர்த்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது   


  ரஹ்மானின் கையில் இப்போ இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன அவைகள் சுல்தான் தி வாரியார் மற்றும் ராக் ஸ்டார்


 மற்ற அதிகாரபூர்வ படங்கள் விரைவில் வரும்


Saturday, October 30

டியோட்ரன்ட் விளம்பரம் பெண்களும்

      
ஒரு விளம்பரம் என்பது ஒரு பொருளை விற்க எந்த அளவிற்கு முக்கியம் என்பது அனைவரும் அறிந்தது
ஒரு தீப்பெட்டி முதல் சேலை வரை எந்த பொருளும் விளம்பரம் இல்லாமல் விற்பது என்பது இப்போது குதிரை கொம்பு
அந்த விளம்பரம் படைக்கப்படும் விதத்தில் அனைவரையும் கவரும் ஆனால் நான் பார்த்த வரை அதிகமான  டியோட்ரன்ட் விளம்பரம்  சொல்லி வைத்த மாதிரி ஒரே மாதிரி பாருமுலவை பின்பற்றி வருவது ஏனோ எனக்கு தெரியவில்லை

                           பெண்களை அழாகாக காட்டி விளம்பரம் செய்யும் சோப்பு விளம்பரம் ஆகட்டும் குழந்தை பயன்படுத்தும் பொருள்களுக்கான விளம்பரம் ஆகட்டும் பெண்களை அழாகா காட்டும் முறை தான் உள்ளது
இதற்க்கு எத்தனையோ உதாரணம் சொல்லலாம் ஆனால் இதற்க்கு விதி விளக்கா உள்ளது டியோட்ரன்ட் விளம்பரங்கள்

எவனோ ஒருவன் குளித்தோ குளிக்காமலோ டியோட்ரன்ட் அடிக்க எங்கே இருக்கும் ஒரு பெண் அந்த வாசனைக்கு அடிமையாகி அவனை தேடி வருவது போன்ற கருத்துகளை கொண்ட விளம்பரம் இங்கு மட்டும் இல்லை வெளிநாட்டு டியோட்ரன்ட் விளம்பரம் கூட இதே பார்முலாவை பயன்படுத்துகிறது

   ஏன் இது போன்ற விளம்பரத்தை  மேல் நாட்டில் எதிர்க்க வில்லை 

     சின்ன சின்ன விசயத்திற்கு கூட எதிர்ப்பு செய்யும் நம் ஆட்கள் பெண்களை கேவலபடுத்தும் இது போன்ற விளம்பரம் பற்றி என்ன நினைக்கிறார்கள்

   டியோட்ரன்ட் என்பதே உடலில் வரும் துர்நாற்றத்தை வேர்வை நாற்றத்தை போக்க  என்ற கருத்தை கொண்டு இல்லாமல் டியோட்ரன்ட் அடித்தால் பெண்கள் மயங்குவார்கள் என்ற பாணியில்  செல்லும் சில விளம்பரங்களை என்னவென்று சொல்வது அழகிய சில விளம்பரங்கள் இருக்கும் அதே நேரத்தில் இது போன்ற சில விளம்பரங்கள் இருப்பதால் இந்த கேள்வி ?


          சில டியோட்ரன்ட் விளம்பரம் அந்த பொருள் பற்றி சொல்லமால் அந்த டியோட்ரன்ட் பயன்படுத்தினால் பெண்கள் மயங்குவார்கள்  என்று சொல்வதை என்னவென்று சொல்வது


               







ஒரு அழகிய முறையில் spinz விளம்பரம்





                *******     VOTE THIS ARTICLE   ******

        மறக்காமல் உங்கள் வாக்கை அளிக்கவும்



                                                  விரைவில்

                                 ஹாய் அரும்பாவூர் விருதுகள் 2010

Friday, October 29

IT இளைஞரின் "காதல் பீவர்" பாடல் விமர்சனம்


   சாய் சுதர்சன் இந்த ஐ டி  இளைஞரின் இசை ஆர்வத்தின்  முயற்சின் முதல் வெளியிடு  காதல் பீவர் இவரின் முதல் முயற்சியில் இவரே பாடல் எழுதி அதற்க்கு மெட்டமைத்து  பாடலையும் பாடி உள்ளார்

பாராட்ட மற்றும் கேட்கக்கூடிய  முயற்சி

இது இவரின் முதல் இசை முயற்சி என்பதால் கீ போர்ட் துணையுடன் இரண்டே இசை இணைப்புகள் வைத்து பாடல் வரிகளை அழகாக ஏற்ற இறக்கத்துடன் பாடி உள்ளார்
 
 அதிலும் பாடல் வரிகள் பாராட்ட வேண்டிய ஒரு முயற்சி காதலன் நகர பின்னணியில் பாடும் பாடல் போன்ற வரிகள் தெர்மா மீட்டர் ,ட்ரிக்னோ மெட்ரிக்   வளைவுகள் என பாடல் வரிகள் கேட்க்கும் விதமாக உள்ளன





இவர் சொல்லி உள்ளது போல் இது இப்போது ஆரம்பம் மட்டுமே வரும் காலங்களில் இன்னும் பல இசை கோர்ப்புகள் சேர்க்கும் போது பாடல் இன்னும் கேட்க்க சிறப்பாக இருக்கும்
அவர் எழுதிய வரிகள் சில கீழே





"ஏதோ  மாற்றம்  என்னை  வந்து  தாக்குதே !

என்னை  உந்தன்  கால்  அடியில்  கொண்டு  புதைக்குதே !
நீ  சிரித்தால்  என்  மேல்  மவுண்ட்  எவரெஸ்ட்  வந்து  உருகுதே !
கண்  அடித்தால்  எந்தன்  இதயம்  வெடித்து  சிதறுதே !
உன்  சென்டிமீட்டர்   பார்வையால்  அந்த  தெர்மோமீட்டர்  தெரிகுதே 
உன்  ட்ரிக்னோ மெட்ரிக்   வளைவுகள்  என்  தூக்கத்தை  திருடும்  பாவிகள் !
இதற்கு  பேர் தான் காதல்  பீவரா   ?
உன்  கண்கள்  ரெண்டும்  என்னை  சூறையாடி  சென்றதா !"

நிச்சயம் இவரின் இந்த முதல் முயற்சியில் குறை சொல்ல ஒன்றும் இல்லை இன்னும் சில இசை சந்தங்களை சேர்த்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்

ஒரு சில இடங்களில் கீபோர்ட் இசை ஒரே மாதிரி வருவது ஏதோ மாதிரி உள்ளது

ஆனால் இவர் இது சோதனை  முயற்சி என்று சொல்லி இருப்பதால்

பாஸ் மார்க் வாங்கிவிட்டார்

பாடல் வரிகள் பாடல் கேட்க கீழே



stand alone player



Quantcast


இவரும் ஷங்கர் மகாதேவன் போல சிறந்த இசை அமைப்பாளர்  பாடகராக வருவார் என எதிர்பார்க்கலாம்


இருவரும் கணினி  துறையில் இருந்து  இசை மீது ஆர்வம் கொண்டுள்ளவர்கள்


"இந்த பதிவிற்கு மறக்காமல் வாக்களித்து இந்த பாடல் பற்றி பலருக்கு தெரிய செய்யுங்கள் "


மறக்காமல் சாய் சுதர்சன் அவர்களின் இந்த முயற்சி பற்றி பின்னுட்டம் இடவும்

          இந்த பதிவை பதிவை படித்ததிற்கு  நன்றி 


 சாய் சுதர்சன் வருங்கால  இசை உலகில் சாதனை செய்ய வாழ்த்துவோம்
 


                        *********   vote the article **********
 
 

Thursday, October 28

தீபாவளி கலைஞர் குடும்ப திரைபடங்கள் (வேற வழி )

        
         தீபாவளி என்றால் பத்து படங்களுக்கு மேல் வருவது அந்த காலம் வர சில படங்களே ஒழுங்கா வருவதில்  சிக்கல்  அப்படியே வந்தாலும் திரை அரங்கில் ஓடுவது சில நாட்கள் அவற்றில் பாதி நாட்கள் காலியான திரை அரங்கு என தமிழ் திரை உலகின் போக்கே மாறிவிட்ட இந்த காலத்தில் தமிழ் திரை உலகம் முழுமையாக கலைஞர் குடும்பம் வசம் சென்று விட்டது என்பது சால சிறந்தது
                   ஒரு பக்கம் சன் பிக்சர்ஸ் ,உதயநிதி ஸ்டாலின் ,துரை தயாநிதி என இவர்களின் மூன்று பேருடைய கையில் தமிழ் திரைப்படம் முழுமையாக சென்று விட்டது .

 இந்த நிலையில் தீபாவளிக்கு அதிகமான படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று படங்கள் மட்டுமே வரும் என எதிர்பார்க்க படுகிறது
அதில் இரண்டு கலைஞர் குடும்ப படங்கள் 1 . மைனா       2 . வா குவாட்டர் கட்டிங் (என்ன புதுமை ?)

மற்ற படம் தெலுங்கு ரீமக் உத்தமபுத்திரன்

1  மைனா (உதயநிதி ஸ்டாலின் )
                           உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை பார்த்து தன்னுடைய தூக்காம் போய் விட்டது .இந்த படம் என் மனதை என்னவோ செய்து விட்டது என்று கூறிய படம் தனக்கு இந்த படம் மிகவும் பிடித்து விட்ட காரணத்தால் இந்த படத்தை அவரே வாங்கி இந்த தீபாவளிக்கு  வெளியுடுகிறார்
     கமல் இப்படத்தை பற்றி சிறப்பாக சொல்லி இருப்பது இப்படம் பற்றி ஒரு எதிர் பார்ப்பை உண்டாக்கி விட்டது மலை காடு பின்னணியில் ஒரு காதல் கதையாக இருக்கும் இப்படம் தமிழ் திரைபடங்களில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பது  மட்டும்   நிச்சயம் 


      இப்போது இருக்கும் நிலையில் புதுமை விரும்பும் தமிழ் ரசிகர்கள் இப்படத்தை பெரும் வெற்றி படமாக மாற்றுவார்கள் இல்லை என்றால் உதயநிதி டீம் அந்த வேலை செய்யும்

 2 . வா குவார்டர் கட்டிங் (துரை நிதி அழகிரி ) என்ன புதுமையான தலைப்பு                ஓரம் போ படத்திற்கு பின் அந்த இயக்குனர்களின் வித்தியாசமான படைப்பு .மாலை தொடங்கி காலைக்குள் ஒரு இரவில் நடைப்பெறும் கதை .சென்னை பின்னணியில் கதை
தமிழ்படம் வெற்றிக்கு பின் அதே நாயாகன் அதே தயாரிப்பாளர் என்று இப்படம் பற்றி ஒரு எதிர்பார்ப்பு உண்டாக்கி விட்டது .இப்படத்திற்கு தொலைக்கட்சிகளில் வரும் விளம்பரம் நிச்சயம் இப்படம் கொஞ்சம் சிரிக்கவும் வைக்கும் என  நம்ப வைக்கிறது


           மதுரை ஆள்பவரின் சென்னை களம் கொண்ட கதை தீபாவளிக்கு என்ன மாயம் செய்யும் என்று பார்க்கலாம்

3 .உத்தமபுத்திரன்
இப்படம் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை தனுஷ் நடித்த படங்கள் எல்லாம் இப்போ ரீமேக் படமாக இருப்பது அவர் தன்னுடைய  குறைந்த பட்ச வெற்றி தக்கவைத்து கொள்ள ரீமேக் படம் உதவி புரியும் என நினைது விட்டாரோ என்னவோ
                 "ரீமேக் படங்களில் நடிப்பதும் அதம் மூலம் வெற்றி பெறுவதும் எனக்கு என்னவோ உண்மையான வெற்றி இல்லை என சொல்வேன் "

              
                     கலைஞர் டிவியில் அடிக்கடி சிவாஜி திரைப்படம் காட்டி விரைவில் என விளம்பரம் வருகிறது எனவே தீபாவைல்க்கு கலைன்ஞர் டிவி அதிரடி படம் சிவாஜி என் நினைக்கிறேன்
         சன் டிவி அதற்க்கு என்ன ஆப்பு வைத்து உள்ளது என பொருத்து இருந்து பார்க்கலாம்  
                               விரைவில்
                               விரைவில்
                             
                "ஹாய் அரும்பாவூர் விருதுகள் 2010 " 
                          HAI ARUMBAVUR CINEMA AWARDS 2010



                           உங்கள் மேலான ஆதரவு தேவை    



 பேஸ்புக் மூலம் இந்த பதிவை பற்றி உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள் கருத்துக்களை கூறுங்கள்





             இதுவரை பொறுமையாக படித்ததிற்கு நன்றி

Wednesday, October 27

சிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்


 

                     நம்மிடம் சிறந்த மொபைல் போன் இருக்கலாம்  ஆப்பிள் ஐ போன் ,ஐ போட் ,ஐ பேட் , ப்ளே ஸ்டேஷன் . PSP  என பல இருந்தாலும் நமக்கு தேவையான பாடல் கேட்க்க வேண்டும் என்றால் நம்மிடம் இருக்கும் ஐ போட் பார்மட்  வீடியோ வேண்டும்
        இதற்கென தனியாக கன்வர்டர் ,வீடியோ வாங்க வேண்டும் என்றால் நாள் நேரமும் விரயம் ஆகும் நமக்கு தேவையான பாடல்கள் எல்லாம் இருக்கும் ஒரே இடம் you tube ஆனால் யு ட்யுப் பாடல்  டவுன்லோட் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் சிறந்தது மற்றும் எளிதானது "ரியல் பிளேயர்"  அதிலும் real player sp  இதை நம் கணினியில் (கம்ப்யூட்டர் ) எளிதாக நிறுவிக்கொள்ளலாம்
     நம் கணினில் ரியல் பிளேயர்  இருந்தால்  நாம் யு ட்யுப் செல்லும் போது தானாகவே பாடல் டவுன்லோட் ஆப்சன் வரும் அதை பயன்படுத்தி நமக்கு தேவையான  போல்டரில்   முதலில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்



        இப்போது தான் முக்கியமான  வேலை உள்ளது நம்மிடம் நோக்கிய மொபைல் உள்ளது என்றால் ரியல் வீடியோ பார்மட் ,இல்லை ஆப்பிள் ஐ போன் .போட் ,பேட்  உள்ளது என்றால் எம்பெக்  4  பார்மட் என நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றி பிறகு எளிதாக நம் ஆப்பிள் ஐ போன் .ஜுன்  போன்ற நமக்கு தேவையான பிளயரில் நாம் விரும்பிய நேரத்தில் பார்த்து கொள்ளலாம்

( என்னுடைய ஆப்பிள் ஐ போட் எம்பெக் 4  பார்மட்டில் பாடல் வேண்டி பல டோர்ரென்ட் மற்றும்  இணைய தளம் சென்று தேடி பயம் பூஜ்யம் ,இந்த ரியல் பிளேயர் பயன்படுத்திய பின்பு யு ட்யூபில் சென்று  எனக்கு தேவையான பாடலை டவுன்லோட் செய்து விரும்பிய நேரதில் கேட்க்கிறேன் இதுவரை 3 ஜி பி வீடியோ யு ட்யுப் மூலம்  டவுன்லோட் செய்து வைத்து உள்ளேன்")


  ரியல் பிளேயர் OPEN  செய்து MY LIBRARY RECORDINGS சென்று நாம் ஏற்கனவே  டவுன்லோட் செய்த பாடல்களை கன்வர்ட் செய்யலாம்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்

       பேஸ் புக் மூலம் உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும்

                 @@@  விரைவில் ஹாய் அரும்பாவூர் விருதுகள் 2010   உங்கள் ஆதரவோடு  @@@@               இறைவான் நாடினால்




                                         RealPlayer டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்



                                                          THANK YOUR FOR VISIT

Thursday, October 21

உண்மை ஹீரோவுக்கு வாக்களிப்போம்


               CNN  உலக புகழ் பெற்ற தொலைக்காட்சி நிறுவனத்தால் உலக அளவில் சிறந்த மனிதராக டாப் 10  வரிசையில் இடம்பெறுள்ளார் ஒரு தமிழர் தமிழர் என்னதை விட நல்ல மனிதர் என்று சொல்வதை சிறப்பு எனலாம்
நாராயணன் கிருஷ்ணன் :
             " கைநிறைய சம்பளம் வெளிநாட்டு வேலை என்றால் சராசரி இளைஞன் எல்லோருக்கும் கனவு ஆனால் அப்படி கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் விட்டு விட்டு
தன் மனதை பாதித்ட ஒரு விசயத்திற்காக தன்னுடைய வெளிநாட்டு வேலை  கைநிறைய சம்பலளம் எல்லாம் விட்டு விட்டு இன்று மன நிலை பாதித்த மற்றும் தன்னுடைய உணவை தன்னால் சம்பாதிக்க முடியாத நிலையில் உள்ள வயதானவர்களுக்கு உணவு வழங்குவதை ஒரு சேவையாக செய்வதை இவர் செய்கிறார்

பைவ்  ஸ்டார் ஹோட்டல் செப் மற்றும் அவரது வின்னிங் சமையல்  கலைஞர் சுவிட்சர்லாந்தில் கிடைக்க இருந்த வேலையை தான் பார்த்த ஒரு விஷயத்தால் அந்த வேலையை விட்டு முழு நேர சமுக சேவகர் ஆகி விட்டார்

    "ஒரு ருபாய் செலவு செய்து அந்த  விஷயத்தை தன் சொந்த செலவில்   பத்திரிக்கைகள்  எல்லாம்  கொடுத்து தான் கொடுத்த ஒரு ரூபாய்க்கு நூறு ருபாய் ஆதாயம் பார்க்க துடிக்கும் மக்கள் மத்தியில் "


  தன்னுடைய ஒரு வேலை உணவுக்கு கூட வழி இல்லாமல்  தன்னுடைய மலத்தை ஒரு முதியவர் உண்ணும் கோரமான கொடூரத்தை பார்த்த அவர் அன்றே முடிவு செய்தார் இது போன்று சம்பாதிக்க வழி இல்லாத மனநிலை குன்றிய   வயதானவர்களுக்கு  உதவுவதே குறிக்கோளாக தொடங்கி
இன்று அவர் செய்த அந்த செயல்கள் இன்று உலக அளவில் சிறந்த மனிதராக வர அவருக்கு ஒரு வாய்ப்பு உள்ளது
CNN  தொலைக்கட்சியில் சிறந்த மனிதர் வாக்கெடுப்பில் அவர் பெயரும் உள்ளது நம்மால் முடிந்தால் அவருக்கு  வாக்களிப்போம்

அவர் செய்த சாதனை துளிகளில் சில
 தினமும் 400 பேருக்கு சாப்பாடு
இதுவரை 1 .2  மில்லியன் பேருக்கு சாப்பாடு வழங்கியது
அக்சயா ட்ரஸ்ட் மூலம் இலவச உணவை மனநிலை பாதித்தவர்களுக்கு உதவுவது
 மறக்காமல் அவருக்கு வாக்களிக்கவும் அவருக்கு வாக்களிக்கும் பகுதில் அவரின் புகைப்படத்தை அழுதின் கீழே உள்ள விவரங்கள் கொடுத்து அவருக்கு வாக்களிக்கவும்


உங்கள் நண்பர்களுக்கும் சொல்லவும் .இந்த விஷயம் பற்றி உங்கள் வலைப்பதிவில் எழுதவும்
இவருக்கு வாக்களிக்க இதை கிளிக்கவும்


சினிமாக்காரன் விளயாட்டு பற்றி எழுதிய எனக்கு ஒரு நல்ல செயல் செய்யும் மனிதர் பற்றி எழுத வாய்ப்பு கிடைத்ததிற்கு சந்தோஷம்


இந்த விஷயம் நாலு பேருக்கு சென்றடைய மறக்கமால் இந்த் பதிவிற்கும் வாக்களிக்கவும்


                      இந்த பதிவை பற்றி உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள் பேஸ்புக் மூலம் பகிருங்கள் .

இவருக்கு உங்கள் வாக்கு கிடைக்க உதவி செய்யவும் 

 

*********************************************************************************************************


 
 

Tuesday, October 19

பசியுடன் தெரு நாய்

சும்மா திட்டாம படிக்கவும் ! இதன் தாக்கம் எங்கும் வேறு எங்கும் இருந்தால் நான் பொறுப்பல்ல


                      

சுட்டெரிக்கும் உச்சி வெயில் ,

பசியுடன் தெரு நாய்

வெயிலின் தாக்கம் வியர்வையில் நனைந்த உடம்பு

வெயிலின் எரிச்சலையும் மீறி சுட்டது அவனின் காம பார்வை ...
பசியுடன் அதே தெரு நாய்!

 

  "சும்மா டைம் பாஸ் அதான் ஹாய் அரும்பாவூர் "

 

ப்ளாக்கர் அப்லோட் செய்யும்போது இந்த தகவல் வந்ததது இரண்டு மணி நேரம் போட்டோ அப்லோட் செய்ய முடியாது என்று வருகிறது

 

Monday, October 18, 2010


Image Uploads will be disabled for about two hours while we perform routine maintenance on Wednesday, October 20th at 5:00PM PDT.  

We'll update this post as soon as the maintenance is complete.

Sunday, October 17

AR ரஹ்மானின் மன்னிப்பும் & சில நெருடல்களும்

காமன்வெல்த் போட்டிக்கு, தான் இசை அமைத்து கொடுத்த பாடல் பிரபலமாகமல் போனதற்கு மன்னிப்பு கேட்டார் ஏ.ஆர். ரஹ்மான்.
"இளைய தலைமுறையினரை மட்டும் குறித்து இந்தப் பாடல் வரிகள் இடம் பெற்று விட்டது. மற்றவர்களையும் அதில்சேர்த்திருக்க வேண்டும்.
இந்தப் பாடலும், ட்யூனும் மக்களைக் கவராமல் போய் விட்டது உண்மைதான். இதற்காக வருத்தப்படுகிறேன். எனது பாடலால் யாராவது ஏமாந்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். "



           இதில் ரஹ்மான் மன்னிப்பு கேட்டது அவரின் பெருந்தன்மை என்று பொதுபடியாக சொல்ல விரும்பவில்லை
ஏன் என்றால் இந்த பாடல் வந்த உடனே இந்த பாடல் பற்றி ஆதரவான கருத்துக்கள் அதே போல எதிர்மறையான கருத்துகள் வர தொடங்கியது

       இந்த பாடல் வெளிவந்த  அன்றே  இந்த பாடல் சரி இல்லை என்று 
மக்களவை எதிர்க் கட்சித் துணைத் தலைவர்   விஜயகுமார் மல்ஹோத்ரா சொன்னார் அதாவது ரஹ்மானின் ரசிகர்களே அவரின் பாடல் வந்த உடனே பிடிக்கமால் போய் கேட்க்க கேட்க்க எந்த பாடல் சரி இல்லை என்று சொன்னார்களோ அந்த பாடல் சூப்பர் என்று சொல்வது வாடிக்கை ஆனால் இந்த பாடல் அரசியல்வாதிகள் தங்கள் மீது இருந்த குறைகள் மக்கள் மறக்க உடனே திசை திருப்ப இந்த பாடல் சரி இல்லை என்ற கருத்தை பரப்பினார்கள்

         உலக கோப்பை பாடல் வக்கா வக்கா பாடல் உலக தொலைக்கட்சிகள் எல்லாவற்றிலும் ஆயரக்கனக்கான முறை ஒளிபரப்பட்டது ஆனால் காமன்வெல்த் பாடல் எத்தனை முறை நம் தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பட்டது
தூர்தர்சன் தொலைக்கட்சிகளில் கூட சில முறை மட்டுமே ஒளிபரப்பட்டது
அப்படி இருக்கும் போது இந்த பாடல் சரி இல்லை என்று சொல்வது எந்த வகையில் நியாயம்
அரசியல் முறையிலும் சரி மீடியாக்களும் சரி இந்த பாடல் பற்றி விடியோக்கள்    ஒளிபரப்பியது என்றால் மிகவும் குறைவே
அப்படி இருக்கும் போது ரஹ்மான் என்ற ஒருவரை மட்டுமே நம்பி ஹிட் கொடுப்பதில்லை அது எல்லோருக்கும் தெரியும்
ஒரு படத்தின் பாடலும் சரி படமும் சரி ஹிட் என்பது குழு சார்ந்த வெற்றியே தவிர தனி மனிதன் மற்றும் சார்ந்த விஷயம் இல்லை

         ரஹ்மான் இப்பாடல் சரி இல்லை என்று இப்போது மன்னிப்பு கேட்பதை  ஒத்துக்கொள்ள முடியாது இந்த நிகழ்ச்சி நடக்கும் முன் மன்னிப்பு கேட்டு இருந்தால்  அது பெருந்தன்மை

இவை எல்லாவற்றிக்கும் மேல் ரஹ்மான் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய விசயம் இனிமேல் அரசியல்வாத்கள் சம்பந்தப்பட்ட விசயங்களில் இசை அமைத்து பேரை கெடுத்துகொள்வதில் இருந்து  தப்பிக்க இனி அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இசை அமைக்காமல் இருப்பது சிறந்தது

ஒரு ரசிகனின் கருத்தாக சொல்வது என்றால்
இந்திய  பாணியில்  பாங்கரா ஸ்டைல் பாடல் கேட்க்க கேட்க்க சூப்பரா  இருக்கு  (daud  படத்திற்கு பிறகு ரஹ்மான் பாங்காரா ஸ்டைல் இந்த பாடலில் உள்ளது )

இதாவது நல்ல முறையில் இருக்குமா ?வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பாடலை உருவாக்குவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அனுகவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.எல்.குரேஷி கூறியுள்ளார்.

Saturday, October 16

சிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR

இப்போ இருக்குற விரைவான கணினி உலகில் .கணினியில் இணையம் பயன்படுத்துவது மட்டும் இல்லை இணையத்தில் பாதுகாப்பாக உலாவ நல்ல ஆண்டி வைரஸ் தேவை,
   நல்ல ஆண்டி வைரஸ் என்றால் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்னால் அப்படி முடியாது என்று சொல்பவர்களுக்கு இலவசமாக அதே நேரத்தில் மேக்சிமம்  பாதுகாப்பு வழங்குவதில் முன்னணியில் இருப்பது
இரண்டு ஆண்டி வைரஸ்கள் அவை பற்றி இன்று நாம் பார்ப்போம்

AVG ANTI -VIRUS 2011 (FREE )
CNET editors' rating :4.5

          உலக அளவில் அதிக அளவில் பயன்படுதபடுவதில் முதல இடத்தில் இருப்பது AVG மட்டுமே  குறைந்த பட்ச பாதுகாப்புக்கு சிறந்த ஆண்டி வைரஸ் இது antivirus   and antispyware   உள்ளது . லிங்க் ஸ்கேனர் மூலம் நாம் பார்க்க விரும்பும் இணையதளம் பற்றி விவரங்கள் தரும் ,ஆண்டி ரூட் கிட ,ஈமெயில் ஸ்கானர்,Social Networking Protection, போன்றவைகள் உள்ளது
மேக்சிமம் பாதுபாகாப்பு மட்டும் வழங்கும் இது

AVG டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்



AVAST FREE CNET editors' rating :5.0  

                   AVG  அண்டி வைரசுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிகம் பயன்படுத்த படும் ஆண்டி வைரஸ் avast  அண்டி வைரஸ் அண்டி வைரஸ் மற்றும் ஆண்டி ஸ்பைவேர் உள்ளது
இந்த இலவச ஆண்டி வைரஸ் பயன் முழுமையாக பெற நீங்கள் உங்கள் ஈமெயில் விலாசம் மற்றும் உங்கள் விவரங்கள் கொடுக்க வேண்டும்

அவாஸ்ட் இலவச ஆண்டி வைரஸ் டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்

பெஸ்ட் சைட் அட்வைசர்  McAfee SiteAdvisoR 




   வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கு ஏற்ற சிறந்த சாப்ட்வேர் இது ஸ்பைவேர் ,வைரஸ் உள்ள சைட் நீங்க சென்றால் இந்த சைட் அட்வைசர் சிகப்பு குறி இட்டு திறக்க விடாது

உங்கள் கணினியை வைரஸ் வரமால் இருக்கு தடுக்க சிறந்த சைட் அட்வைசர் இது
  

MCAFFE siteadvisor DOWNLOAD

Thursday, October 14

விஜய் ,அஜித் ,சிம்பு என்ன செய்ய போறாங்க ?

             தமிழ் ரசிகர்கள் என்றால் வித்தியாசமான படத்தை சூப்பர் ஹிட் ஆக்கமாட்டார்கள் என்ற கருத்தை தவிடு பொடி ஆக்கியது எந்திரன் படம் .
 பன்ச் வசனம் இல்லை ,டைட்டில் பாட்டு இல்லை அவன் இவன் என்ற ஏக வசனம் இல்லை அறிவியல் சார்ந்த் கதை தமிழ் சினிமாவின் இல்லை இந்தியாவின் சினிமா பாணியை மாற்றியது எந்திரன் படத்தின் வெற்றி


ஷாருக் கான் கூட ரா1  என்ற பெயரில் விளையாட்டை மையப்படுத்தி அறிவியல் கலந்த படத்தை தயாரிக்க முடிய செய்து தயாரிப்பு பணயில் இறங்கி விட்டார்

           "இல்லை என் ரசிகர்கள் டைட்டில் பாட்டு கேட்பார்கள் பன்ச் வசனம் கேட்பார்கள் என்று சொல்ல வில்லை கதை மட்டும் கேட்டு வந்தேன் ஷங்கர் எல்லாம் பார்த்து கொண்டார் என்று ரஜினி சொல்வது எவ்வளவு பெரிய நடிகன் கதைக்காக சிறப்பாக நடித்தார் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கு

             ரஜினிக்கே தெரியும் அவர் ஆரம்பத்தில் நடித்தது போன்ற ஆக்சன் படங்கள் நடித்தால் அவரின் ரசிகர்கள் பார்பார்கள் என்று ஆனால் அவர் அப்படி செய்ய வில்லை வித்தியாசமான படத்தில் நடித்தார்   இன்னும் அவர் ரசிகர்களின் முன்னிலையில் இன்னும் உயர்ந்த இடத்தில உள்ளார்

  ஆகா இனிமேல் நான் ஒருமுறை சொன்ன ,ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான் போன்ற வசனங்கள் பேசி ரசிகர்களை இன்னும் அதே நிலையில் வைக்க விரும்ப வில்லை
அவர் அப்படி நடித்தால் ரசிகர்கள் இன்னும் ரசிப்பார்கள் ஆனால் அவர் அதை விரும்ப வில்லை
ஆகா ரஜினினியே விரும்பாத இது போன்ற பன்ச் டயலாக்கை பேசி ரசிகர்களை ஏமாற்றாமல் ,டைட்டில் பாட்டு  இல்லாமல் நடித்தால் மட்டுமே படம் பார்ப்பவன் விரும்புவான் என்பதை புரிந்து அஜித் ,விஜய் ,சிம்பு போன்றவர்கள் இனிமேல் கதைக்கு மட்டும் நடிப்பார்களா இல்லை

     "எனக்கு பின்னாடி ஒரு கூட்டம் இருக்கு "


     "எனக்கு ஒண்ணுன்னா உசுரை கூட கொடுப்பாங்க "

இனி இது போன்ற வசங்கள் பேசினால் போதும் நிறுத்துடா அப்படின்னு சொல்வான் என்பதை மட்டும் நினைவில் வைத்தால் சரி இவர்கள்
இவனுங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உசுரை கொடுக்க மற்றவர்கள் பெற்று போட்டார்கள் என்ற நினைப்போ என்னவோ

               "தமிழ் ரசிகன் படத்தை மட்டும் ரசிப்பான் அவன் பொழுதுபோக்குக்காக "
                 "இவர்கள் பொழுதை போக்க இல்லை என்பதை மட்டும் நினைத்தால் சரி "

"பதிவு பிடித்து இருந்தால் மட்டும் வாக்களிக்கவும் "
"தவறு என்றால் மறக்காமல் தெரிவிக்கவும் "

       "பேஸ்புக் தொடரும் நண்பர்களுக்கும் தொடர போகும் நண்பர்களுக்கும் நன்றி நன்றி "

Tuesday, October 12

FACEBOOK LINK பட்டனை நீக்குவது எப்படி?

பேஸ்புக் சில சின்ன  விஷயங்கள்
  இப்போ பேஸ்புக் இந்தியாவில் இளைஞர்களின் தேசிய கீதம் என்றால் அது மிகை இல்லை  அப்படி பட்ட பேஸ்புக்கில்
நேரம் போவது தெரியாமல் உட்காருவது இப்போ வேலை ஆகி விட்டது


இப்போ ப்ளாக் எழுத கூட நேரம் இல்லை அப்படி பட்ட டைம் பாஸ் இந்த பேஸ்புக்
நிறைய நண்பர்கள் முகம் அறியா நட்புகள்
ஒரு முறை என்னுடைய பேஸ்புக் அக்கௌண்டில் மற்றும் ஒரு நண்பர் எனக்கு பிடிக்காத ஒரு படத்தை ஏற்றி விட்டார் அதற்க்கு காரணம் என் பேஸ்புக்கில் உள்ள அக்கௌண்டில் லிங்க் என்ற ஆப்சன் எல்லோருக்கும் தெரியுமாறு என் அக்கௌன்ட் செட்டிங்கில் இருந்தது காரணம்
இப்படி பட்ட லிங்க் ஆப்சன் எல்லோருக்கும் தெரியுமாறு வைத்தால் நமக்கு தெரியாமல் நம் அக்கௌண்டில் மற்ற நண்பர்கள் எதவும் புகைப்படமோ அல்லது இணையதள லிங்கோ கொடுக்க வாய்ப்பு உள்ளது இது வேண்டாம் என்றால் சுலபமாக அதை நீக்கி விடலாம்

 

நம் பேஸ்புக்கில் மற்றவர்கள் நம்ம profile வந்து தேவையற்ற link கொடுப்பதை தடுக்க முதலில் account >privacy settings >
Friends can post on my Wall Enable (/) remove the tick
என்று இருக்கும் பகுதியில்  இருக்கும் டிக் நீக்கவும் இப்போது நம்ம பகுதியில் எல்லா விசயமும் தெரியும் link பகுதி தவிர
இது மிகவும் முக்கியமான விஷயம் கூட
மற்றவர்கள் நம்ம அக்கௌன்ட் வந்து தேவையற்ற விஷயம் ஏற்றாமல்  இருக்க வசதி தேவை



பேஸ்புக்கில் நண்பர்கள் மறக்காமல் இந்த் ஆப்சனை நீக்கவும்
நம் பகுதியில் நான் ஏற்றும் கருத்துக்களுக்கு நாமே பொறுப்பு  நம் பேஸ்புக் கணக்கை சிறப்பாக பார்த்துகொள்வோம்

Sunday, October 10

உதவும் கரங்கள் நாமவோம்!!

மீண்டும் மீண்டும் மொக்கை பதிவு முபாரக் 
எந்திரன் படம் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை
ஒரு வரியில் சொல்ல வேணும் என்றால் படம் பற்றி குறை சொன்னால் தமிழ் திரை உலகில் இதுவரை வந்த எல்லா படத்தையும் பற்றி குறை சொல்ல வேண்டும்
"திரை அரங்கில் மட்டுமே பார்க்க உகந்த படம் எந்திரன்

   இதுவரை பதிவு எதுவும் எழுத வில்லை இதனால் நீங்க ரொம்ப சந்தோசமா இருந்து இருப்பிங்க மீண்டும் மொக்கை பதிவுடன் உங்கள் அரும்பாவூர்




          "சந்தோசத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோசபடுத்தி  பார்ப்பது  நம்மால் முடிந்த அளவிற்கு தினமும் இல்லை, வாரத்திற்கு ஒரு முறை இல்லை மாதத்திற்கு ஒரு முறையாவது ஒரு ரூபாயாவது அடுத்தவருக்கு கொடுத்து சந்தோசபடுத்த முயற்சி செய்யுங்கள் "
   உலகத்தில் நூறு ருபாய் கொடுத்து செலவு செய்து படம் பார்ப்பதில் இருக்கும் சந்தோசத்தை விட அடுத்தவை சந்தோசபடுத்த முயற்சி செய்வோம் " தம்பி பிச்சை போடுங்க என்று சொல்பவருக்கு பிச்சை போட்டு உழைக்காமல் வாழும் இனத்தை ஆதரிக்க  சொல்ல வில்லை "
கடும் வெயில் அதில் செருப்பு தைத்து பிழைத்த வாழ நினைக்கும் அந்த மனிதர் அருகில் ஒரு நிமிடம் நின்று பாருங்கள்
சரியான நல்ல சூல்நிழை மாட்டாத காரணத்தால் செருப்பு தைக்கும் அவருக்கு நாம் கொடுக்கும் இரண்டு ருபாய் கூட பெரிய தொகை இல்லை அதில் நமக்கு கிடைக்கும் சந்தோசமே தனி "


     "ஏசி போட்ட கடையில் சென்று பேரம் பேசாமல் அதிக விலை கொடுத்து  பொருள் வாங்கும்  நாம் தெருவோர  கடை வியாபாரி இடம் பேரம் பேசுவது நம் வாடிக்கை "
அது மனித இயல்பு கூட ஆனால் அதே நேரத்தில் நாம் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் இது போன்ற வியாபாரிகளில் நேர்மையாக வியாபாரம் செய்யும் ஒரு நபருக்கு அவர் எதிர்பார்த்த பணத்தை விட அவர் மனம் சந்தோஷம் அடையும் வகையில் உதவி செய்யலாம்

உதவி செய்வது என்பதில் கடவுளுக்கு செய்யும் நேர்த்தி கடனை விட  கண்ணுக்கு எதிரில்  இருக்கும் உழைக்கும் மனிதருக்குக் அவர் எதிர்பார்த்த ஊதியத்தை விட  அதிகம்   கொடுத்து வச்சிக்க சும்மா டீ குடிக்க சாப்பிட வச்சிக்க என்று  சொல்லும் போது அவரின்  அந்த உழைப்பாளியின் முகத்தில் தெரியும் சந்தோஷம் உண்மையில் விலை மதிப்பற்றது "

                 தினமும் செய்யும் தீர்மானத்தில் இப்படி ஒரு தீர்மானம் செய்ய தீர்மானம் எடுப்போம் "






 

Friday, October 1

ஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா? - ஒரு பார்வை




             தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் படம் எந்திரன் படம் பற்றி இனி விமர்சனம் எழுத ஒன்றும் இல்லை தமிழ் பதிவு  உலகில் அதிகம் எழுதப்பட்ட அதிகம் ஹிட் அடித்த விஷயம் எந்திரன் தவிர வேறு ஒன்றும் இல்லை
அதிலும் சன் டிவி இந்த படத்திற்கு செய்த சிறப்பான ப்ரோமாசன் நிச்சயம் பாராட்ட வேண்டிய  விஷயம்
ஒரு நாள் ரஜினி ,ஒரு நாள் ஷங்கர் ,ரஹ்மான் என அழாக பேச வைத்து சிறப்பான ஆரம்பம் கொடுத்தது
சரி தமிழ் எந்திரன் படம் பற்றி நான் பேச இனி ஒன்றும் இல்லை என்பதால் ஹிந்தி டப்பிங் படமான ஹிந்தி ரோபோ பற்றி
நான் இணையத்தில் பார்த்தது மற்றும் ETC  இசை சேனலில் ஹிந்தி வியாபாரம் பற்றி கோமல் நாத் வழங்கிய நிகழ்ச்சியில் இருந்து  இருந்து சில பகுதிகள்                      ஹிந்தி மொழியில் அக்டோபர் முதல் தேதி அன்று வந்த படங்கள் நான்கு அவைகள்
அஞ்சானா அஞ்சாணி (ரன்பீர் கபூர் ரவீனா ) ரோபோட் (ரஜினி ஐஸ்வர்யா )கிச்சடி (ஹிந்தி சீரியல் படம் )பென்னி அண்ட் பப்லு

                     இந்த நான்கு படங்கள்  மட்டுமே  இந்த வாரம் வந்தது .அதில் அஞ்சான அன்ஜானி படத்திற்கு ஆரம்பம் முதல் அதிக அளவில் இருந்த விளம்பரம் அதிலும் ரன்பீர் ரவீனா ஜோடி இந்த படத்திற்கு செய்த விளம்பரம் கொஞ்ச நஞ்சம் இல்லை எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் இவர்களின் குறிக்கோள் இந்த படத்திற்கு விளம்பரம் செய்வதில் இருக்கும் அதிலும் 20/20௦  கிரிக்கெட் விளையாட்டை கூட விடவில்லை இந்த ஜோடி
     ஹிந்தி மொழியல் வரும் படம் மற்றும் EROS  பிலிம் போன்ற காரணங்களால்  இந்த படத்திற்கு ரோபோட் (எந்திரன்) படத்தை விட அதிக அளவில் விளம்பரம் கிடைத்து

  ஆனால் பிரபல பத்திரிக்கை மாற்றும் செய்திதொலைக்கட்சிகளில்  ரோபோட் (எந்திரன் )படத்தை  குறைவான அளவில் ரேட்டிங்   பெற்றுள்ளது அஞ்சானா அன்ஜானி  . ஹிந்தி ரோபோட் திரை விமர்சனம் இந்த படத்தை மிகவும் உயர்வாக எழுதி உள்ளனர் .அதிலும் இந்த படத்தின் ஒலி/ ஒளிப்பதிவு அசந்து போய் உள்ளனர்
கோமல் நாத் சொன்னது போல  இது தமிழ் படம் என்று சொன்னால் நம்ப முடியவில்லை இது முழு ஹிந்தி படம் என்று சொல்லி உள்ளார் இப்படத்தை பற்றி வரும் விமர்சனங்கள்  ரசிகர்களின் கருத்துக்கள் வரும் நாட்களில் அஞ்சானா அன்ஜானி படத்தி முந்தி விடும் என்று சொல்லி இருப்பது இப்படம் ஹிந்தி மொழியிலும் ஒரு பெரும் வெற்றி பெரும் என்பது நிச்சயம்
அதாவது படம் வந்த இன்று அஞ்சானா அன்ஜானி படத்திற்கு திரை அரங்கம் முழுவதும் ஹவுஸ் புல் 
எந்திரன்  படம்  60 %  திரை அரங்கம் நிரம்பி இருந்ததது .
ஆனால் அது இன்றைய நிலை மட்டுமே ஹிந்தி தொலைக்கட்சிகள் மற்றும் செய்தி தாள்களில் வரும் விமர்சனம் சிறப்பான நிலையான வெற்றி படமாக மாறும் என்பது மட்டும் உண்மை 
 இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக மூன்று மல்டி ப்ளெக்ஸ் திரை அரங்கை சேர்ந்தவர்கள் போன் மூலம் சொன்ன கருத்து ஹிந்தி எந்திரன் வரும் நாட்களில் சூப்பர் ஹிட் ஆகும் என்பது மட்டும் நிச்சயம்
ஸ்பைஸ் மல்டி ப்ளெக்ஸ் (அமித் அவஸ்தி )
புனே
முதல் நாள் அஞ்சானா அன்ஜானி ஹவுஸ் புல் ஹிந்தி ரோபோ 60௦% மட்டுமே
ஆனால் அதே பேட்டியில் அவர் சொன்ன மற்றும் ஒரு கருத்து ரோபோட் படம் பற்றி இப்போது வந்து கொண்டு இருக்கும் சிறப்பான விமர்சனம் வரும் நாட்களில் படம் சூப்பர் ஹிட் ஆகும்
அதிலும் முக்கிய கருத்து ஸ்பைஸ் மல்டி ப்ளெக்ஸ் திரை அரங்கில் தமிழ் எந்திரன் அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை செய்து உள்ளது

பிரசாத் மல்டி ப்ளெக்ஸ் (t  ஸ்ரீ காந்த் )
ஹைதராபாத்
இந்த திரை அரங்கில் இதுவரை 18 ,000  டிக்கெட் விற்பனை ஆகி உள்ளது தெலுங்கு ரோபோ 17 ,தமிழ் எந்திரன் 3 , ஹிந்தி 1

SRS  சினிமா  (டிங்கு சிங் )
பரிதாபத்
இங்கும் அஞ்சானா அன்ஜானி ஹவுஸ் புல்  ஹிந்தி ரோபோட்  55% முதல் 60% வரை மட்டுமே  டிங்கு சிங் சொன்னது போல இது இன்றைய நிலை மட்டுமே ரோபோட் படம் பற்றி வரும் சிறப்பான கருத்துக்கள் வரும் நாட்களில் சூப்பர் ஹிட் படம் ஹிந்தி ரோபோட் ஆகும்


கிச்சடி & பென்னி அண்ட் பப்லு சொல்லும் படி வியாபாரம் இல்லை

மிக பெரும்  கருத்து :
           எந்திரன் படம் தயாரிக்க முடியாமல் கைவிட்ட நிறுவனம் தயாரித்த படம் தான் இந்த அஞ்சானா அன்ஜானி பார்க்கலாம் ரோபோட்  ஹிந்தி மொழியில் செய்யும் சாதனைகளை

ndtv movies

 ஹிந்தி மொழியில் எந்திரன் (ரோபோட் )சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்

மறக்காமல் படிப்பதுடன் உங்கள் வாக்கையும் இடவும்